Sunday, September 16, 2007

மகாபாரதப் போரில் இருந்து மேலாண்மைத் தத்துவங்களைக் காட்டமுடியுமா?

கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் எதிலிருந்தும் எந்தத் தத்துவத்தையும் எடுத்துக் காட்டமுடியும் போலிருக்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த ppt கோப்பு எனக்கு வந்தது. மகாபாரதப் போரிலிருந்து மேலாண்மைத் தத்துவங்களைச் சொல்கிறார்கள் இந்தக் கோப்பில்.

மகாபாரத விநாடி வினா நடத்தியவர்கள் இங்கே இருக்கிறார்கள். மகாபாரதத்தைக் கரைத்துக் குடித்து கேள்வி கேட்டவர்களையே திருப்பிக் கேள்வி கேட்டவர்கள் இருக்கிறார்கள். சில கேள்விகளில் பிராடு செய்துவிட்டார்கள் என்று போர்க்கொடி தூக்கியவர்களும் இருக்கிறார்கள். போரின் நடுவே கீதையை எத்தனை நாட்கள் சொன்னார்கள் என்று கேள்விக்கணைகள் வீசியவர்கள் இருக்கிறார்கள். எல்லாம் மறந்துவிட்டதே என்று வருந்தியவர்களும் இருக்கிறார்கள். அவர்களும் மற்றவர்களும் இதில் சொல்லியிருப்பவைகளைப் பார்த்து என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

21 comments:

கோவி.கண்ணன் said...

வருணா 'சிரம'த்திலிருந்தும் மேலாண்மைத் தத்துவங்கள் என்று கூட கோப்புகள் வரலாம். இது போன்று புதுப்'பித்து'க் கொள்ளும் டெக்னிக் அடிக்கடி நடக்கத்தான் செய்கிறது.
:)

அந்த கோப்பில் கடைசி ஓவியம் அருமை. அதற்கு பாராட்டுக்கள்.

குமரன் (Kumaran) said...
This comment has been removed by the author.
குமரன் (Kumaran) said...

ஹரிஹரனின் தாக்கம் உங்களிடம் மிக அதிகமாக இருக்கும் போலிருக்கிறது கோவி. கண்ணன். வருணா'சிரமம்' என்றும் புதுப்'பித்து' என்றும் சொற்களைப் பிய்க்கத் தொடங்கியிருக்கிறீர்கள். :-)

மொத்தமாக உங்கள் பின்னூட்டக் கருத்தில் ஒப்புதல் உண்டு. தன்னைத் தான் புதுப்பித்துக் கொண்டு தான் வருணாசிரமம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. தலைகீழாக ஆதிக்க நிலைகள் மாறினாலும் புதிதாக வந்த ஆதிக்கச் சக்திகள் அதே பழைய நிலையையே புதிய விதத்தில் நடத்திக் கொண்டு வருகின்றன.

வாழுவர் தாழுவர். தாழுவர் வாழுவர். மாற்றம் எனது மானிடத் தத்துவம். கண்ணதாசனின் வரிகள்.

கோவி.கண்ணன் said...

//ஹரிஹரனின் தாக்கம் உங்களிடம் மிக அதிகமாக இருக்கும் போலிருக்கிறது//

குமரன் ஓரளவு உண்மைதான், வருணா சிரமத்திற்கு முட்டுக் கொடுத்து ஏற்கனவே அவர் பாணி இடுகை எழுதி இருக்கிறார். அதாவது மனு என்ற சொல்லி இருந்தே 'மேனு'வல் என்ற சொல் வந்ததாகவும்... மனு உலக அளவில் போற்றப்படும் ஒப்பற்ற தத்துவம் என்றும் காட்ட முயன்றார். அந்த சொல்லின் மூலம் தேடியபோது அது வேறு ஒன்றாக இருந்தது :)

MANUVAL m. (L. manus, hand + valere, to be capable) தொடர்பில்லாதவற்றை வெட்டி ஒட்டி தைக்கப்பட்டதை 'ரத்தின கம்பளம்' என்று காட்ட முயல்வது எப்பொழுதும் நடைபெறுவதுதான். இப்படியும் இருக்கலாம் என்று ஏற்றுக் கொள்பவரும் இருப்பர் , ஆனால் இது எந்த அளவு உண்மை என்று எவரும் ஆராயமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நடந்தேறுவது இவை.

ஹரிஹரன் திரா'விட' தெய்வமான முருகனுக்கு வயக்ரா வாங்கிக் கொடுக்கச் சொன்னபோதே அவரின் ஆத்திகம் அம்பலப்பட்டுபோனதும்... அவர் தாங்குவது எதுவென்றும் வெட்டவெளிச்சம் ஆகியது.

இது ஹரிகரன் பற்றிய பதிவு இல்லை. இதற்கு மேல் இங்கு ஹரிஹரனுக்கு முற்றுப்புள்ளி.

//
கோவி. கண்ணன்.

உங்களிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டம் வரும் என்று எண்ணினேன். ஆனால் அது இந்த இடுகையின் முதல் பின்னூட்டமாக இருக்கும் என்று எண்ணவில்லை. :-)
//

எதிர்ப்பார்பை பொய்யாக்கவில்லை என்ற மகிழ்வு இருந்தால் சரி. வேற என்ன சொல்வது ? எனது பின்னூட்டங்களை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் லாகின் ஐடி தருகிறேன்..
:)))))

//வாழுவர் தாழுவர். தாழுவர் வாழுவர். மாற்றம் எனது மானிடத் தத்துவம். கண்ணதாசனின் வரிகள்.//

மிகச் சரி...ஆனால் தாழ்ந்தவர் வீழ்வதற்கு முன்பு எத்தனை ஆண்டுகாலம் காலம் வாழ்ந்தார்கள் என்று கணக்கு கிடைக்கவில்லை. அது உறுதியாக தெரிந்தால் இதெல்லாம் நடப்பு என்று ஆறுதல் பட்டுக் கொள்ள முடியும்.

ச.சங்கர் said...

குமரன்

நன்றாக இருக்கிறது

ஒன்று திண்ணம்

நீ கல்லைப் பர்க்கிறாயா ..கடவுளைப் பார்க்கிறாயா என்பதைப் பொருத்து அதைப் பார்ப்பதும் அதிலிருந்து "நல்லவைகளை" கற்றுக் கொள்வதும்..எல்லாமே வெங்காயம்தான்...உரித்துப் பார்த்தால் உல்ளே ஒன்றும் இல்லை என்றால் அதுவும் சரிதான்..அவரவர் பார்வையில் :))

வெட்டிப்பயல் said...

நல்ல பதிவு குமரன்...

இதுல நிறைய விஷயங்கள் உண்மை தான்.

நான் பார்த்த வரை கூட அம்மாவிடம் வளரும் பிள்ளைகள் தான் போராளியாக இருக்கிறார்கள். அதற்கான காரணம் புரியவில்லை :-(

வெத்து வேட்டு said...

this analysis is amazing...wow..our ancient people were so great...I am proud of my heritage....

Kamalam said...

Excellant Analysis.. nalla akkaporuvamana view..

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன். தொடக்கம் முதலே ஹரிஹரனின் நோக்கம் திராவிடத்தைத் தாக்கி எழுதுவதாகத் தான் இருந்ததே ஒழிய ஆத்திகம் என்பதாக இருந்ததில்லை. அதனால் அவரின் ஆத்திகம் அம்பலபட்டுப் போனதென்று சொல்வது டெக்னிக்கலி தவறு. :-)

நீங்கள் சொன்னது போல் இது ஹரிஹரனைப் பற்றிய இடுகை இல்லை. அதனால் அவரைப் பற்றிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்வோம். :-)

கால ஓட்டத்தில் சில சுழற்சிகள் குறுகியக் காலச் சுழற்சிகளாக இருக்கின்றன; சில நீண்ட கால சுழற்சிகளாக இருக்கின்றன என்பதை காலத்தின் உரிமையாளரான நீங்கள் அறிந்தது தானே?! :-)

குமரன் (Kumaran) said...

உண்மை சங்கர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொல்ல கொஞ்சம் பரந்த மனமும் வேண்டும். நாம் நமது என்று எண்ணுவதில் மட்டுமே நல்லதைக் காண்பது; மற்றதில் நல்லவை இருந்தாலும் காண மறுப்பது - இது யாராயிருந்தாலும் நட்டம் அப்படிப் பார்க்க மறுப்பவர்களுக்கே.

குமரன் (Kumaran) said...

நன்றி பாலாஜி. நீங்கள் சொல்வதை நான் சரியாகப் படிக்கவில்லை போலிருக்கிறது. மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.

குமரன் (Kumaran) said...

வாங்க வெத்துவேட்டு ஐயா. இந்த இடுகையில் இப்படி ஒரு பின்னூட்டம். சென்ற இடுகையில் வேறு மாதிரி பின்னூட்டம். சங்கருக்குச் சொன்ன பின்னூட்டத்தில் குறிக்கப்படும் ஆட்களில் ஒருவர் நீங்கள் என்பது திண்ணம்.

நல்லதை எல்லா இடங்களிலும் காண வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

குமரன் (Kumaran) said...

உண்மை கமல். நன்றி.

வெட்டிப்பயல் said...

Kauravas : Patriarchal structure. Bhishma, Drona, Kripa, Dhratarashtra, Vidur, Shakuni, Duryodhana, Karna, Duhsasana. No women in the decision making process.
Gandhari retreated to the Inner Chambers. Nobody listened to her.

Pandavas : Matriarchal Structure.
Kunti was the authority supreme for the Pandavas.
“Whatever my mother says is Dharma to me” : Yudhisthira.

Draupadi was a companion in whatever the Pandavas did. She had a big role in all the decision making. Without her the Pandavas would have most probably reclined to the forests.

Even the younger Pandavas : Ghatotkach, Abhimnanyu and Iravan were brought up by their mothers. So the female influence was huge.

Women = Better Half. Any team which doesn't have women is unbalanced, for the Masculine traits of Aggression and Dominance should be balanced by the Feminine traits of Harmony and Sustenance.

Unknown said...

சரி, இந்த வாதத்தில் விழலாமா வேண்டாமா..... (ஏதோ அதிசயமா 10/10 வாங்கிட்டேன், நம்ம பின்னூட்டம் இல்லாமயா???!!))

மகாபாரதம் பெரும் காப்பியம். தந்திரம், போர், உறவு, சூழ்ச்சி, காதல், கயமை இப்படிப் பல; 100% நல்லவர்களோ / கெட்டவர்களோ இதில் இல்லை.

எனவே,மேலாண்மை தத்துவங்கள் பல (அதாவது இன்றைக்கும் பயன் தருவது/ன) இல்லாமல் இருக்க சாத்தியம் இல்லை.. உண்மையும் வைராக்கியமும் கொண்ட (கதா)பாத்திரங்கள் வாழ்க்கையிலோ, கொள்கையிலோ வெல்வது நிச்சயம் (BTDT / க.வெ.). ஒவ்வொரு வாழ்விலும் (வீழ்விலும் னும் எழுதிடீன்னு தோணுது.... ஹிஹி) கற்க வேண்டியவை பல.

இவற்றைத் தொகுத்தவர் அரும்பணி செய்திருக்கிறார், பாராட்டுக்கள்.

குமரன் (Kumaran) said...

பாலாஜி. நீங்கள் எடுத்து இட்டிருக்கும் பகுதியை முன்பே படித்தேன். அதில் நல்லதாகத் தானே போட்டிருக்கிறார்கள். நீங்கள் :-( போட்டு வருத்தப்பட்டிருப்பதால் எனக்கு என்ன சொல்ல வந்தீர்கள் என்று புரியவில்லை.

குமரன் (Kumaran) said...

வாங்க கெக்கேபிக்குணி. இடுகையும் தொடக்கப் பின்னூட்டங்களும் இங்கே வாதம் நடப்பது போன்ற தோற்றத்தைத் தந்துவிட்டதா? இப்படித் தயங்கி தயங்கிச் சொல்றீங்க?!

நீங்கள் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. வடக்கத்தியர் காவியம் என்ற காழ்ப்பில்லாமல் கவனித்தால் நீங்கள் சொன்னது போல் கற்க வேண்டிய பலவற்றை மகாபாரதத்திலிருந்து கற்கலாம்.

தொகுத்தவர் நல்ல பணியைச் செய்திருக்கிறார் என்பதும் உண்மை தான். சில இடங்களில் கொஞ்சம் உயர்வு நவிற்சி இருக்கிறதோ என்று தோன்றினாலும் மொத்தத்தில் நல்ல ஒரு தொகுப்பு.

உண்மையில் நீங்கள் பின்னூட்டத்தில் சொன்னவற்றைச் சொல்லி இடுகையை இட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. நன்றி.

வெட்டிப்பயல் said...

//நீங்கள் :-( போட்டு வருத்தப்பட்டிருப்பதால் எனக்கு என்ன சொல்ல வந்தீர்கள் என்று புரியவில்லை.//

எனக்கு புரியலைனு ஒரு வருத்தம்... அப்படியே ஆண்கள் வளர்க்கும் பிள்ளைகளுக்கு ஏன் இந்த சாமர்த்தியம் இல்லைனு ஒரு கேள்வி மனசுல இருக்கு...

Unknown said...

//இங்கே வாதம் நடப்பது போன்ற தோற்றத்தைத் தந்துவிட்டதா?
ஆமாம்ம்.....

///வடக்கத்தியர் காவியம் என்ற காழ்ப்பில்லாமல் கவனித்தால் நீங்கள் சொன்னது போல் கற்க வேண்டிய பலவற்றை மகாபாரதத்திலிருந்து கற்கலாம்.
இந்தி்ய காப்பியம். சேர மன்னர் சோறு கொடுத்தார்... அத்தோடு, ராமாயணம், சிலப்பதிகாரம் இன்ன பிறவற்றிலும் கூட கற்க வேண்டிய பல உண்டு.... இதைத் தான் குறிப்பிட்டு காட்ட விரும்பினேன்.

//தொகுத்தவர் நல்ல பணியைச் செய்திருக்கிறார் என்பதும் உண்மை தான். சில இடங்களில் கொஞ்சம் உயர்வு நவிற்சி இருக்கிறதோ என்று தோன்றினாலும் மொத்தத்தில் நல்ல ஒரு தொகுப்பு.
எனக்கும் உயர்வு நவிற்சி சில இடங்களில் பட்டது. எனவே தான் அரும் பணி என்றேன்;-)

கோப்பை அறியத் தந்தமைக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

பாலாஜி. கொஞ்சம் மனோதத்துவ ரீதியா சிந்திச்சுப் பாக்கலாம். ஆணாதிக்க உலகத்துல பெண்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் ஆணாத்திக்கத்தால் தங்கள் தாய்மார்கள் படும் துன்பத்தைக் கண்டு தாங்கள் அவர்களைக் காக்க வேண்டும் என்ற உந்துதல் பெறுகிறார்கள்; அந்த உந்துதல் அவர்களைச் சிறுவயதிலிருந்தே கொடுமையை எதிர்க்கும் போராளிகள் ஆக்குகின்றன. ஆண்களால் மட்டுமோ அல்லது ஆண், பெண் இருவராலுமோ வளர்க்கப்படுபவர்களுக்கு இந்தக் காரணிகள் குறைவாக இருப்பதால் அந்த உந்துதல் அந்தக் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. ஆணாதிக்க உலகில் தாய்மார்களைப் பாதுகாக்க தந்தைமார்கள் கட்டாயம் தேவைப்படுகிறார்களே. அந்தத் தந்தைமார்கள் இல்லாத நேரத்தில் போராளிகளாகக் குழந்தைகள் உருவாகிறார்கள். இது சும்மா சிந்தித்ததில் சொல்வதே. அறிவியல்பூர்வமானதா என்று தெரியாது. :-)

குமரன் (Kumaran) said...

மீண்டும் வந்து விளக்கியதற்கு நன்றி கெக்கேபிக்குணி. நீங்கள் எந்த புத்த மடத்தில் பிக்குணியாக இருக்கிறீர்கள்? உங்களை கோவி.கண்ணன் அறிவாரா? அவருக்கு பௌத்தம் என்றால் பிடிக்கும்.