'வர வர நம்ம தலைவருக்கு எது எதுக்குத் தான் போராட்டம் நடத்தறதுன்னு விவஸ்தையே இல்லாம போயிடுச்சு!'
'ஏன்...என்ன பண்றார்?'
'தேசிய நெடுஞ்சாலையை திராவிட நெடுஞ்சாலைன்னு மாத்தச் சொல்லி போராட்டம் நடத்தப் போறாராம்!'
***
இந்த வார விகடனில் வந்திருக்கும் நகைச்சுவைத் துணுக்கு. இது போல் நடக்காதா என்ன? விரைவில் நடக்க வாழ்த்துகள். :-))))
23 comments:
:-)))))
கருணாநிதி சாலை,ஜெயலலிதா சாலை என பெயர் மாற்றாமலிருந்தால் சரி.
:)))
குமரன், விரைவில் நடக்க வாழ்த்துக்களாஆஆஆஆ!!
நல்லா இருங்கடே!
ஏன் குமரா?
ராசாத்தி அம்மா நெடுஞ்சாலையென வைத்தால் என்ன?
பாவம் அவங்களுக்கு ஒண்னுமே செய்யல!
இதையாவது செய்யக் கூடாதா??
Oru mile kallukk oru peyar vaikkalaam.:))
appadivaiththaalum......
இருக்குற பிரச்சனை போதாதா? இது வேறயா? ஏற்கனவே எம்.ஜி.ஆரு நகரு. கருணாநிதி நகரு, ஜெயலலிதா நகருன்னு அரசியல் அநாகரீகம் நகருது. இதுல இந்தப் பிரச்சனையும் சேந்துச்சுன்னா...அவ்ளோதான்.
எனக்கு சிரிப்பு வரவில்லை குமரன்....இதெல்லாம் இங்கு நடக்க கூடியவைதான் என்ற வகையில்...
தேசிய, திராவிட என்று தலைப்பிட்டாலே முதல் ஆளாக வந்து நிற்கிறீர்களே செல்வன்?! :-)
கருணாநிதி சாலை, ஜெயலலிதா சாலை என்று பெயரிட்டாலும் தவறில்லை செல்வன். என்ன அடுத்து வருபவர்கள் அந்தப் பெயரை மாற்றி இடுவார்கள். அவ்வளவு தான். நாம் தான் பழகிவிட்டோமே. :-)
நடப்பதெல்லாம் நடந்தே தீரும். இல்லையா கொத்ஸ். அப்படி இருக்க வாழ்த்துகள் சொல்லிவிட வேண்டியது தானே. :-)
யோகன் ஐயா. யார் பெயரை வேண்டுமானால் வைக்கலாம். தவறே இல்லை. :-)
என்ன வல்லியம்மா? அப்படி ஒரு மைல் கல்லுக்கு ஒரு பெயர் வைத்தாலும் எல்லார் பெயரும் வைத்து முடியாது என்று சொல்கிறீர்களா? உண்மை தான். :-)
இராகவன். இங்கே அமெரிக்காவுல வீட்டிற்கு முன் காரை நிறுத்தும் இடத்திற்கு 'ட்ரைவ் வே'ன்னு பேரு; நெடுஞ்சாலைக்கு 'பார்க் வே'ன்னு பேரு. இப்படி இங்க தான் மாத்தி வச்சிருக்காங்கன்னு பாத்தா நம்ம ஊருலயும் அப்படியா? எங்கே நகராம வாழ நினைக்கிறோமோ அந்த இடத்துக்கு நகருன்னு பேரு. :-)
நகராத இடத்துக்கே இப்படி நகரு நகருன்னு பேரு வச்சிருக்கிறப்ப நகர வேண்டிய இடமான சாலைகளுக்கு அந்தப் பெயர்களை வைத்தால் தான் என்ன? :-)
நடக்கும் போல இருக்கிறதைச் சொல்றதுனால தான் எனக்கெல்லாம் சிரிப்பு வந்தது மௌலி. :-)
குமரன்,
திராவிடம் என்பது தேசியம் என்பதன் எதிர்பதம் என்று பொருள் கொள்கிறீர்களா ? அப்படியென்றால் ,திராவிடம் இந்த தேசத்திற்கு வெளியே உள்ளதா ? தேசியம் என்பது திராவிடத்தை உள்ளடக்கியது இல்லையா?
ஜோ, நல்ல கேள்வி.
இந்த நகைச்சுவைத் துணுக்கைப் படித்தவுடன் எனக்குச் சிரிக்கத் தோன்றியது. அதனை இங்கே எடுத்து இட்டேன். அவ்வளவு தான். மற்றபடி தேசியம் vs. திராவிடம் என்று அடித்துக் கொள்பவர்கள் நடுவில் எங்கும் கருத்து சொன்னதில்லை.
நீங்கள் கேட்டவற்றை அப்படி அடித்துக் கொள்ளும் மக்களிடம் கேட்கவேண்டும். தேசியத்திற்கு எதிர்ப்பதமாகத் திராவிடத்தை வைக்கும் மக்களிடம் நாம் இருவரும் இணைந்தே இந்தக் கேள்விகளைக் கேட்போம். தேசியம் என்பது திராவிடத்தை உள்ளடக்கியது என்று சொல்வோம்.
Post a Comment