Saturday, January 28, 2006

137: *நட்சத்திரம்* - வெண்மதி வெண்மதியே நில்லு...

'மாம்ஸ். இந்தப் பாட்டைக் கேட்டியா?'

'எந்தப் பாட்டு ராம்ஸ்?'

'அதான். வெண்மதி வெண்மதியே நில்லு. நீ வானமா மேகத்துக்கா சொல்லு. வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்'

'அருமையாப் பாடறே. நானும் இந்தப் பாட்டு கேட்டுருக்கேன். நல்ல பாட்டு தான்'.

'என்ன நல்ல பாட்டுன்னு சொல்லி நிறுத்திக்கிட்டே. அருமையான பாட்டு இது'

'சரி. அருமையான பாட்டு தான். ஒத்துக்கறேன். ஏன் அருமையான பாட்டுன்னு சொல்றியா?'

'பாட்டோட அர்த்தத்தைப் பாரு. அந்த வரிகளோட அர்த்தம் தெரிஞ்சா இது எவ்வளவு அருமையான பாட்டுன்னு ஒத்துக்குவே'

'அப்டியா. சரி. வரிகளோட பொருளைச் சொல்லு. கேட்டுக்கறேன்'.

'ஒரு காதலன் காதலிக்கிட்ட சொல்ற மாதிரி இந்தப் பாட்டு வருது மாம்ஸ். அந்தப் பொண்ணை ரெண்டு பேரு காதலிக்கிறாங்க. இவனுக்கு அவ யாரைக் காதலிக்கிறான்னு தெரியல. அதான் அந்தப் பொண்ணை வெண்மதின்னு சொல்லி நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லுன்னு கேக்கறான். தன்னை மேகம்ன்னும் அடுத்தவனை வானம்ன்னும் சொல்றான்'.

'சரி. அப்புறம்'.

'நீ அவனைத் தான் காதலிக்கப் போற; என்னை இல்லைன்னா பரவாயில்லை. அத நான் பொறுத்துக்குவேன் அப்படின்னு சொல்றான்'.

'அப்படியா சொல்றான். எனக்கு அப்படி தோணலையே.'

'பின்ன வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் அப்படின்னா என்ன அர்த்தம்?'

'எனக்குத் தெரிஞ்ச மாதிரி பொருள் சொல்றேன் ராம்ஸ். கோவிச்சுக்கக் கூடாது'.

'கோவிச்சுக்க மாட்டேன். சொல்லு மாம்ஸ்.'

'தன்னை மேகம்ன்னும் அடுத்தவனை வானம்ன்னும் பொண்ணை நிலவுன்னும் சொல்றது தான். இந்தப் பாட்டை எழுதுன கவிஞர் ஒரு உட்பொருள் வச்சிருக்கார். நாம இங்க இருந்து பார்த்தா வானத்துல இருக்கிற வெண்மதியை மேகம் மூடுற மாதிரி தெரியுது இல்லையா?'

'ஆமாம்.'

'ஆனா உண்மையிலேயே மேகம் நம்ம பூமிக்கு மேல இருக்கிற காற்று மண்டலத்துல இருக்கு. மதி ரொம்ப தூரத்துல இருக்கு. வானம் என்கிறதோ இல்லவே இல்லை. அது அகண்ட வெட்ட வெளி. அதனால நிலா வானத்தைத் தான் பிடிக்கும்ன்னு சொன்னாலும் மேகத்துக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஏன்னா வானம் தான் உண்மையிலேயே இல்லையே. இல்லாத ஒரு பொருளை பிடிச்சாலும் அதை அடைய முடியாது இல்லியா. அது போல நீ அவனை விரும்பினாலும் எனக்குத் தான் சொந்தம்ன்னு சொல்றான்.'

'பரவாயில்லையே. இந்த அர்த்தம் நல்லாத் தான் இருக்கு'.

'அப்டியா. இதுக்கும் மேல ஒரு பொருளும் கவிஞர் வச்சிருக்கார்'

'என்ன பொருள் அது?'

'அந்தக் காதலனுக்கும் தெரியாத ஒரு பொருளை மறைமுகமா கவிஞர் இந்தப் பாட்டுல வச்சிருக்கார். வானம் உண்மையில் வெட்டவெளிதான். அதனால் வானத்துக்கு வெண்மதி சொந்தமாக முடியாது. ஆனால் மேகமும் பூமியைச் சுற்றியுருக்கும் காற்று மண்டலத்தை விட்டு வெளியே இருக்க முடியாது. அதனாலும் நிலவை அடைய முடியாது. அதனால் அந்தப் பெண் இந்தக் காதலனுக்கும் கிடைக்க மாட்டாள் என்பதைத் தான் உட்பொருளா வச்சிருக்கார் கவிஞர்.'

'ஐயோ. மாம்ஸ். ஓவரா அர்த்தம் சொல்றியே. ரொம்ப எளிமையா இருக்கிற இந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல்ல ஒன்கிட்ட வந்தேனே. என்னைச் சொல்லணும்'.

'ஏன் ராம்ஸ்? இந்தப் பொருளுக்கு என்ன குறை?'

'என்ன குறை? ஒரு குறையும் இல்லை. அந்தப் பாட்டைப் பாடுன கவிஞரே இந்த அர்த்தத்தை யோசிச்சிருப்பாரோ இல்லையோ. நீ என்னடான்னா வெளிப்படையாத் தெரியுற அர்த்தத்தை விட்டுட்டு ஏதேதோ சொல்லிக்கிட்டுப் போற?'

'ராம்ஸ். நீ தமிழ்மணம் பாக்குறதில்லைன்னு நெனைக்கிறேன். அதுல குமரன்னு ஒருத்தர் பாட்டுக்கெல்லாம் பொருள் சொல்லிக்கிட்டு இருக்கார். அவர் எழுதுறதைப் படிச்சு படிச்சுத்தான் இந்த மாதிரி எல்லாம் தோண ஆரம்பிச்சிருச்சு.'

'ஐயோ. நல்லவேளை சொன்ன. நான் ஜன்மத்துக்கும் அவர் எழுதுறதப் படிக்க மாட்டேனே. பைத்தியம் புடிச்சிரும்'

22 comments:

இலவசக்கொத்தனார் said...

இப்போ புரிஞ்சா மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு. புரிஞ்சுதா? புரியலையா? தெரியலையே.
கடவுளே.

Karthik Jayanth said...

உள்ளேன் ஐயா!

Karthik Jayanth said...

உள்ளேன் ஐயா!

ஏஜண்ட் NJ said...

'ஐயோ. நல்லவேளை சொன்ன. நான் ஜன்மத்துக்கும் குமரன்னு ஒருத்தர் எழுதுறதப் படிக்க மாட்டேனே. பைத்தியம் புடிச்சிரும்'

Well said;
reading this post is an exception!
;-)

சிவா said...

குமரன்!

அடடா! என்ன ஒரு விளக்கம். ரெண்டு வரிக்கு ரெண்டு பக்கத்துக்கு விளக்கம் கொடுத்து கலக்கிட்டிய. ம்.. இப்ப சினிமா பாட்டுக்கு பொருள் கொடுக்க ஆரம்பிச்சிட்டீங்களா. இதை எழுதிய கவிஞர் இதை படித்தார்னா, ரொம்ப சந்தோச படுவார். வெயிட் பண்ணுங்க. 'சிவாஜி'க்கு பாட்டு எழுத கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க. :-))

கைப்புள்ள said...

உண்மையாகவே நீங்க சொல்ற அர்த்தத்தோட கவிஞர் யோசிச்சிருப்பாரா என்பது சந்தேகம் தான். ஆனால் உங்கள் விளக்கம் வெகு பொருத்தம்.

குமரன் (Kumaran) said...

இலவசக் கொத்தனார். எப்படி நம்ம திறமை? எளிதாகப் புரியுறதையும் இப்படி குழப்பிவிட்டு புரியாத மாதிரி செஞ்சுவோம். கடினமானதை எளிதாகப் புரியுற மாதிரி விளக்குவோம். :-)

அப்பப்ப கடவுளைக் கூப்புடுற மாதிரி தான இருக்கு நம்ம நெலமை? :-)

குமரன் (Kumaran) said...

வந்துப் படித்ததற்கு நன்றி கார்த்திக் ஜெயந்த்

குமரன் (Kumaran) said...

ஞான்ஸ். நீங்க என்னோட எல்லாப் பதிவுகளையும் படிக்கிறீங்கன்னு தெரியும். சும்மா சொல்றீங்க இது மட்டும் விதிவிலக்குன்னு. :-)

குமரன் (Kumaran) said...

சிவா. முதல்ல ஜோசஃப் சாரை திரைக்கதையோ இல்லை குறைந்த பட்சம் நகைச்சுவைப் பகுதியையோ எழுத அழைப்பு வரணும். அப்புறம் தான் நமக்கெல்லாம் பாட்டெழுத அழைப்பு வரும்.

அப்படி மட்டும் வரட்டும். அப்புறம் இருக்கு. இப்ப என்னைக் கவிஞன்னு கூட சொல்லிக்கிறதில்லை. மெதுவா 'நான் அடிப்படையில் ஒரு கவிஞன்'ன்னு சொல்லி அடுத்தவங்க கவிதை எல்லாம் எடுத்து விடுவேன். அப்புறம் 'கவிஞர்'ன்னு பேருக்கு முன்னால போட்டுக்குவேன். அப்புறம் 'கவியரசு'ன்னு போட்டுக்குவேன். திடீர்ன்னு ஒரு நாள் 'கவிப்பேரரசு'ன்னு போட்டுக்கத் தொடங்குவேன். கவிப்பேரரசுக்கும் கவியரசுக்கும் நிறைய பேருக்கு வித்தியாசம் தெரியலைங்கறதாலே கவிச்சக்ரவர்த்தின்னு போட்டுக்கத் தொடங்குவேன். இப்படி நிறையத் திட்டம் இருக்கு கைவசம். எதையுமே புதுசா யோசிக்கத் தேவையில்லை. ஏற்கனவே இப்படி செஞ்சவங்களைப் பாத்தாப் போதும். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி கைப்புள்ள. எல்லாம் சேர்க்கைத் தோசம். இராகவனோட சேர ஆரம்பிச்சதுல இருந்து இப்படி எல்லாம் தோண ஆரம்பிச்சிருச்சு. :-)

rv said...

அ.உ.ஆ.சூப்பு,

புல்லரிக்குதுபா..

இவ்வளவு பெரிய யோசனை பண்ண எத்தன நேரமாச்சு?

இதுல இராகவனோட சேர்ந்து கெட்டுப்போய்டீங்களா? ரிவர்ஸ் தான் சரின்னு நமக்கு தோணுது.

குமரன் (Kumaran) said...

இராம்ஸ்...சொன்னா நம்பவா போறீங்க. இவ்வளவு பெரிய யோசனை பண்ண அஞ்சு நிமிஷம் தான் ஆச்சுன்னு. எழுதத்தான் 1/2 மணி நேரம் ஆச்சு. :-)

இதுல ராம்ஸ்ன்னு வர்றது நீங்க தான். தெரியுதா? மாம்ஸ் தான் யாருன்னு தெரியல. அது நானா? இராகவனா? இல்லை எங்க ரெண்டு பேர் பதிவுகளையும் படிக்கிற வேற யாராவதான்னு... :-)

குமரன் (Kumaran) said...

இராம்ஸ். ஒன்னு சொல்லாம விட்டுட்டேன். இராகவனோட சேர்ந்து நான் கெட்டுப் போனேனா இல்ல ரிவர்ஸாங்கறது அவ்வளவு சுலபமா கண்டுபிடிக்க முடியாது - திராவிடம் தமிழ்ச்சொல்லா வடமொழிச் சொல்லான்னு சொல்றதை விட கஷ்டம் ;-)

நாமக்கல் சிபி said...

சிறு வயதில் தமிழ் பாடத்துக்கு கோனார் உரை மட்டுமே வாங்இயிருக்கிறேன். குமரன் உரை என்று ஒன்று இருப்பது தெரியாமலேயே போய்விட்டது.

நாமக்கல் சிபி said...

குமரன் ஐயா அவர்களே!

அப்படியே காதலன் திரைப்படத்தில் வரும் "முக்காலா முக்காபுலா" பாடலுக்கும் விளக்கம் கிடைக்குமா?

(குமரன் ஐயா கோவித்துக் கொள்ள மாட்டார் என்ற உரிமையில்)

குமரன் (Kumaran) said...

சிபி, இப்பத்தான் தெரிஞ்சிருச்சுல்ல. சீக்கிரம் குமரன் உரையை வாங்கி எல்லா முடியும் உதிர்ந்து பெருவாழ்வு வாழ்க. உதிர்ந்த முடியைப் பத்திப் பேசுனாத் தான் ஐந்து வருடம் நிலையா ஆட்சியில இருக்க முடியும். தெரியுங்களா?

முக்காலா முக்காபுலா பாட்டுக்கு இராகவனும் மயிலாரும் தான் விளக்கம் எழுதணும். ரைட்ஸ நம்மகிட்ட இருந்து அவங்க வாங்கிட்டாங்க. :-)

அதென்ன குமரன் ஐயா...33 வயசுன்னு பத்துத் தடவை சொன்னாலும் ஐயான்னு சொல்றத விடமாட்டேங்கறிங்களே

rv said...

குமரன் ஐயா,
//33 வயசுன்னு பத்துத் தடவை சொன்னாலும் ஐயான்னு சொல்றத விடமாட்டேங்கறிங்களே
//
முப்பதிரண்ட கடந்தாலே ஐயா தானுங்க நம்மூர்ல..

அப்பாடா, இன்னும் எட்டு வருஷத்துக்கு நான் குட்டிப்பையன்! :)

குமரன் (Kumaran) said...

எங்க ரஷ்யாவுலயா? இருக்கும் இருக்கும். நீங்க எல்லாம் அங்க இருக்கீங்களே!!!

அமெரிக்காவுல 80 வயசானாலும் குமரன் தான். :-) அதனால நோ ஐயா பிசினஸ். :-)

Anonymous said...

Neyar Viruppam:

"Snehithane Snehithane rahasiya snehithane" pattula - 'netru munniravil eera nilavil katru ...' atharkku mel enna varthai endru puriyavillai, therinthal sollavum.

Kumaresh

மதுமிதா said...

சொன்னா நம்ப மாட்டீங்க குமரன்
இதே விதமா இந்தப் பாடலைக் கேட்கையில் யோசித்திருக்கிறேன்.
ஆனால் நான் சொல்றது உண்மை
நேர்மைக்கு சாட்சியம் வேணுமின்னா பெனாத்தல் சுரேஷ் பதிவில 100% வாங்கியிருக்கிறேன்.
போதுமா?

அப்படத்தின் மற்ற பாடல்களும் நன்றாகயிருக்கும்
கௌதம் இயக்க,ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தாமரை எழுதிய பாடல்கள் அருமையாக இருக்கும்.

குமரன் (Kumaran) said...

நீங்களும் யோசிச்சிருக்கீங்களா அக்கா...அப்ப எனக்கு மறை தான் கழண்டிருச்சோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன். :-)