
மணியான ஒரு பாடல் வேண்டும்! - அது
மணிகண்டன் மீதிருக்க வேண்டும்! (மணியான)
துணையாக அவன் இருக்க வேண்டும்! - சபரி
மலை ஏற அருள் செய்ய வேண்டும்! (மணியான)
நடுக்காட்டில் துணையாக வேண்டும்! - நல்ல
வழிகாட்டியாய் இருக்க வேண்டும்!
அவன் நாமம் நான் சொல்ல வேண்டும்! - ஐயப்பா என்று
அவன் நாமம் நான் சொல்ல வேண்டும்! - மனம்
அருள் தேட வழி செய்ய வேண்டும் (மணியான)
3 comments:
நல்ல
வழிகாட்டியாய் இருக்க வேண்டும்! //
அருமையான பாடல்.பாராட்டுக்கள்.
மனம் எல்லாம் இனிக்கும் பாடல்
நன்றி இராஜராஜேஸ்வரி & திகழ்.
Post a Comment