Tuesday, March 22, 2011

அப்பாவும் சிக்கன் துண்டுகளும்....

அமெரிக்க வரலாற்றைப் பற்றிய கேள்வி பதில்களுடன் ஒரு குறுவட்டு இருக்கிறது. அதனை நேற்று மகிழுந்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். மகனும் மகளும் அப்போது வண்டியில் இருந்தார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பின் ஒரு சிறு இடைவெளி விட்டு பின்னர் பதில் வந்து கொண்டிருந்தது. அப்போது வந்த இரு கேள்விகளும் அதற்கு சேந்தன் சொன்ன பதில்களும்:

Who is the Father of our country?

Baabaa

இரு குழந்தைகளும் என்னை பாபா என்று அழைப்பார்கள். ஃபாதர் என்ற சொல்லைக் கேட்டவுடன் உடனே என்னைத் தான் கேட்கிறார்கள் என்று நினைத்து இந்த பதிலைச் சொல்லிவிட்டான். நானும் மகளும் இந்தப் பதிலைக் கேட்டு வாய் விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் போது அடுத்த கேள்வி வந்தது.

What territory did the United States buy from France in 1803?

Chicken Nuggets

Purchase என்ற சொல் மட்டும் புரிந்தது போல. உடனே அவனது விருப்ப உணவைச் சொல்லிவிட்டான். விழுந்து விழுந்து சிரித்தோம்.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

விழுந்து விழுந்து சிரித்தோம்.

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜராஜேஸ்வரி/
மணிராஜ்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா பாபா வா நீங்கள்!!:)
அருமை குமரன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் அம்மா. சௌராஷ்ட்ரத்தில் அப்பாவை அழைப்பதற்கு பா3பா4 என்ற சொல்லைப் பெரும்பாலும் குழந்தைகள் புழங்குகிறார்கள். பெரியவர்கள் போ4 என்று மட்டும் சொல்வார்கள்.