பங்குனி உத்திரத்தை முன்னிட்டு!
கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி!
கையினில் வேல் பிடித்த, கருணைச் சிவ பாலனை!
(கண்ட நாள் முதலாய்)
வண்டிசை பாடும் எழில் வசந்தப் பூங்காவில்
வந்து, சுகம் தந்த, கந்தனை, என் காந்தனை!
(கண்ட நாள் முதலாய்)
நீல மயில் தனை, நெஞ்சமும் மறக்கவில்லை!
நேசமுடன் கலந்த, பாசமும் மறையவில்லை!
கோலக் குமரர், மனக் கோயிலில் நிறைந்துவிட்டார்!
குறுநகை தனைக் காட்டி, நறுமலர் சூட்டி விட்டார்!
(கண்ட நாள் முதலாய்)
1 comment:
அண்ணா.. எனக்கு மிகவும் மனதிற்குகந்த ராகம் மற்றும் வரிகள். ஆனால், குமரர் மற்றும் விட்டார் என்று வாத்சல்யம் கவிதையில் குறைகிறதே ?
Post a Comment