Monday, August 20, 2007

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

இந்த உலகில் எத்தனையோ வகை மனிதர்கள் இருக்கிறார்கள். சிலர் தெய்வ நம்பிக்கை நிறைய உடையவர்களாக இருக்கிறார்கள். சிலர் இறை நம்பிக்கை கொஞ்சமும் இல்லாமல் இருக்கிறார்கள். இரண்டு வகைகளுக்கும் நடுவில் பல தரங்களில் உலக மக்கள் பெரும்பான்மையினர் இருக்கிறார்கள். இந்தப் பெரும்பான்மையினர் தங்கள் தங்கள் புரிதலின் படி இறை நம்பிக்கை பக்கமும் சாய்வார்கள்; அவநம்பிக்கை பக்கமும் சாய்வார்கள்.

இந்த இடுகையின் தலைப்பில் இருப்பது வைணவம் தனது குல முதல்வன் என்று போற்றும் தமிழ் வேதமாம் திருவாய்மொழியைத் தந்த மாறன் சடகோபன் நம்மாழ்வாரின் அமுத மொழி. யாராக இருந்தாலும் இந்த உலகத்தில் இருக்கும் உயிர்கள் எல்லாம் இறைவனின் திருவடி நிழலை அடைவது திண்ணம்; அது உறுதி என்கிறார். அவர்கள் இன்று இறைவனை நம்பவில்லை என்று சொல்லலாம்; இறைவனை நம்புகிறேன் ஆனால் எம் இறைவனை - உங்கள் இறைவனை இல்லை என்று பிரித்துப் பேசலாம். என்ன செய்தாலும் ஏதோ ஒரு பிறவியில் இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாகி வைகுந்தம் புகுவது மண்ணவர் விதி.

அண்மையில் கபீரன்பன் அவர்களின் பதிவினைப் படிக்கும் போது சுவாமி விவேகானந்தரின் கூற்றினைப் படித்தேன். எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

'பூமியில் விழும் ஒவ்வொரு மழை துளியும் கடலை சென்றடைவது போல, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கையின் படைப்பில் எல்லாம் இறைவனை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றன'. ஆத்ம சிந்தனையைப் பெருக்கிக் கொள்ளும் போது வெள்ளத்தின் வேகம் போல் பயணம் துரிதமாகிறது. அதற்கான முயற்சியில்லாமல் பொருள் ஈட்டுவதிலும் சுக போகங்களுக்காக தேடி அலைவதிலும் நேரம் போனால் நிலத்திலே வடிந்து பலகாலம் காத்திருக்க வேண்டிய தரையடி நீராகவோ, குட்டை நீராகவோ, ஏன் சாக்கடை நீராகவோ கூட மாறிப் போய் விடுகிறது நமக்கு கொடுக்கப்பட்ட பிறவி. - சுவாமி விவேகானந்தர்'

14 comments:

வெட்டிப்பயல் said...

அருமை அருமை!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பலகாலம் காத்திருக்க வேண்டிய தரையடி நீராகவோ, குட்டை நீராகவோ, ஏன் சாக்கடை நீராகவோ கூட மாறிப் போய் விடுகிறது நமக்கு கொடுக்கப்பட்ட பிறவி//

விவேகிகள் அவசியம் படிக்க வேண்டிய விவேகானந்தரின் வைர வரிகள், குமரன்!

நாத்திகனோ, ஆத்திகனோ,
அசுரனோ, தேவனோ,
மேல் சாதி என்று சொல்லப்படுவதோ, கீழ் சாதி என்று சொல்லப்படுவதோ,
ஆறறிவோ, ஐந்தறிவோ...

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
அது எப்படியோ ஒரு நாள் மனித அறிவுக்குக் கிட்டித் தான் ஆகும்!

பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகிறது!
இனி ஒரு "விதி" செய்வோம்!
அதை எந்த நாளும் காப்போம்!

வைகுந்தம் புகும் விதியை மானுடம் என்று செய்யுமோ? ஆனால் ஒரு நாள் செய்தே தீரும்! :-))

Unknown said...

அனைத்தும் அவனே எனும்போது அவனையன்றி எதை அடைவோம்?

அவனை இன்றே அடைவதா அல்லது பலஜென்மம் தாண்டி அடைவதா என்பதே நமக்கு முன் இருக்கும் கேள்வி.

இந்த பதிவு எனக்கு fate vs freewill விவாதத்தை நினைவுபடுத்துகிறது.

வடுவூர் குமார் said...

அங்கு பின்னூட்டம் போட்டுவிட்டேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

விரைவாக (குறைந்த ஜென்மங்களில்) அடைய வழியே இறைவழிபாடு. அவ்வழிபாடு இல்லையென்றாலும் அவன் கைவிட மாட்டான், ஆனால் சிறிது-சிறிதாக பல ஜென்மங்களில் முதிர்ச்சி கொடுத்துப்பின் ஆட்கொள்வான்.....அவ்வளவே....

குமரன் (Kumaran) said...

நன்றி பாலாஜி.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். நீங்கள் சொன்னதை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். மேல் சாதி என்று சொல்லப்படுவதோ கீழ் சாதி என்று சொல்லப்படுவதோ இறைவனை வணங்கும் யாவருக்கும் அவனருள் கிட்டும்; அது தான் விதி என்று தெளிவாகச் சொல்லிவிடுங்கள். இல்லையேல் இந்தப் பிறவியில் கீழ் சாதியாகக் கருதப்படுபவர்கள் அடுத்தப் பிறவியில் மேல் சாதியாகக் கருதப்பட்ட பின்னரே வைகுந்தம் புகமுடியும் என்று சில மேதாவிகள் திரித்து விடுவார்கள்.

நம்மாழ்வார், திருப்பாணாழ்வார், திருமழிசை ஆழ்வார் என்று பலரும் கீழ் சாதி எனக்கருதப்படும் பிரிவுகளில் பிறந்து தான் ஆழ்வார்கள் ஆனார்கள் என்பதை மறந்துவிடுவார்கள்.

குமரன் (Kumaran) said...

செல்வன்,

நீங்கள் சொல்லும் Fate vs. Freewill விவாதத்தை நானும் படித்திருக்கிறேன். I think everyone has freewill within the confines of fate. :-)

குமரன் (Kumaran) said...

அங்கும் இங்கும் பின்னூட்டம் இட்டதற்கு நன்றிகள் குமார்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் மௌலி. ஆனால் சில நேரம் ஜய விஜயர்களின் கதையையும் மறந்துவிடக்கூடாது. அவர்கள் மூன்றே பிறவிகளில் எதிரிகளாய் இருந்து மீண்டும் வைகுந்தம் அடைந்தவர்கள். :-)

pathykv said...

aara amara pala piRavigaL naaraayaNanai bhakti seydu, pin vaikundam senRaal nalam enbadu en karuttu.
pathy.

வல்லிசிம்ஹன் said...

Vaikuntham adaivathu vithiye
enil vithiyum nallathe.
intha eNNam irunthaal pothum.
nanRi Kumaran.

குமரன் (Kumaran) said...

உண்மை பதி ஐயா.

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே

குமரன் (Kumaran) said...

ஆமாம் அம்மா. எல்லொருக்கும் கடைசியில் சென்றடையும் இடம் (destination - destiny) வைகுந்தமே என்கிறார் மாறன் சடகோபன்.