Tuesday, October 03, 2006

ஆண்டொன்று போனால்...

ஆண்டொன்று ஆச்சுங்க. 2005ம் ஆண்டு இதே அக்டோபர் மூன்றாம் நாள் தமிழ் வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கினேன். இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. வலைப்பதிவுகள் எழுத ஊக்கம் கொடுத்த நண்பர் சிவபுராணம் சிவராஜாவின் பெயரைச் சொல்லாமல் இந்த மாதிரி பதிவுகள் எழுதியதே இல்லை. :-) அவருக்கு நன்றி.

என் விண்மீன் வாரத்தில் சொன்ன மாதிரி தமிழ்மணம் மட்டும் இல்லையென்றால், அடியேன் எழுதியதைப் படித்து நண்பர்கள் பின்னூட்டங்கள் இடாமல் போயிருந்தால், தொடர்ந்து எழுதியிருப்பேனா என்பது ஐயமே. ஊக்கத்தைத் தொடர்ந்து கொடுக்கும் நண்பர்களுக்கும் தமிழ்மணத்திற்கும் நன்றி.

எழுத வேண்டும் என்று நினைத்த போது என்ன எழுதுவது என்று தெரியவில்லை. இதனை எழுதலாமா, அதனை எழுதலாமா என்று பல விதயங்களைப் பற்றி மனம் அலைபாய்ந்தது. ஆனால் எதற்குத் தமிழ்மணத்தில் வரவேற்பு இருக்கும் என்ற புரிதல் இல்லாததால் மனம் குழம்பியது. அபிராமி அந்தாதிக்குப் பொருள் சொல்கிறேன் என்று பல நாட்களாக (வருடங்களாக) என் வீட்டம்மாவிடமும் ஒரு நெருங்கிய நண்பரிடமும் தொந்தரவு செய்து கொண்டிருந்தேன். இருவரும் என் தொல்லை தாங்காமல் தப்பித்துத் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தார்கள். :-) அதனால் முதல் பதிவாக அதைத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு இருந்தது. மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொன்றாக ஒவ்வொரு தலைப்பிலும் வலைப்பூ தொடங்கி இப்போது எல்லாவற்றிலும் எழுத நேரமின்றி போயிற்று. :-)

கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்மணம் ஒரு போதையைப் போல் ஆகியது. வலைப்பதிவுகளை விட்டால் உலகில் வேறெதுவும் இல்லாதது போல் தோன்றத் தொடங்கியது. எல்லா நேரங்களிலும் பதிவுகள் இடுவதிலும் படித்தவைகளைப் பற்றியுமே சிந்தனை எல்லாம் இருந்தது. வீடு, வேலை எல்லாம் இரண்டாம் நிலை பெற்றது.

பதிவுகள் தொடங்கிய மூன்றாம் மாதமே தமிழ்மண விண்மீன் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. அந்த விண்மீன் வாரம் மிக மிக மகிழ்ச்சியாய் சென்றது என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. நிறைய புது நண்பர்களையும் அந்த வாரம் அடையாளம் காட்டியது.

அந்த ஒரு வாரத்தில் உலகத்தில் உள்ள மற்ற எல்லாமே மறந்து போனது. வீடு, வேலை என்று எல்லா இடங்களிலும் தாறுமாறாய்ப் போனது. பணியிடத்தில் மீண்டும் பழைய நிலை திரும்ப ஏறத்தாழ ஒரு மாதம் ஆனது. வீட்டிலோ அந்த வாரத்தின் தாக்கம் இன்னும் இருக்கிறது. :-) வீட்டில் அந்த வாரம் ஏற்படுத்திய தாக்கம் நிலையானது என்று நினைக்கிறேன். தாக்கம் குறைய மாட்டேன் என்கிறது.

கடந்த இரு மாதங்களாக வலைப்பதிவுகள் இடுவதிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டேன். அப்படி விடுமுறை எடுத்துக் கொள்வதால் வீட்டிலும் வேலையிலும் எவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றன எனப் பார்க்க விரும்பினேன். அருமையான நன்மைகளைக் கண்டேன். பதிவுகள் இடாமல் இரண்டு மாதங்கள் இருப்பது கடினமாகத் தான் இருந்தது. மற்றவர் பதிவுகளைப் படிக்கவும் பின்னூட்டங்கள் இடவும் என்னை நானே அனுமதித்துக் கொண்டதால் பரவாயில்லாமல் இருந்தது. கிடைத்த நன்மைகளை அப்படியே தொடர விரும்புவதால் முன்பு போல் நிறைய பதிவுகள் இடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். பதிவுகள் இடாமலேயே இருப்பது தற்போதைக்கு என்னால் முடியாத ஒன்று. அதனால் வாரத்திற்கு அதிகம் மூன்று பதிவுகள் மட்டுமே என்று ஒரு முடிவில் என்னை நானே இட்டுக் கொள்கிறேன்.

64 comments:

மதுமிதா said...

தொடர்ந்து எழுதுங்கள் குமரன்

///
கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்மணம் ஒரு போதையைப் போல் ஆகியது. வலைப்பதிவுகளை விட்டால் உலகில் வேறெதுவும் இல்லாதது போல் தோன்றத் தொடங்கியது. எல்லா நேரங்களிலும் பதிவுகள் இடுவதிலும் படித்தவைகளைப் பற்றியுமே சிந்தனை எல்லாம் இருந்தது. வீடு, வேலை எல்லாம் இரண்டாம் நிலை பெற்றது.
///

உண்மை
அந்த அளவில் 2 மாதம் தப்பித்தீர்களே

ம் இருந்தாலும் தொடருங்கள் குமரன்
வாழ்த்துகள்

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி மதுமிதா அக்கா.

G.Ragavan said...

எப்படியோ திரும்பவும் வலைப்பூவுக்கு வந்துட்டீங்க...நல்லது. வாரத்துக்கு ரெண்டு மூனு போட்டா போதும். இது தொடரட்டும். என்னுடைய வாழ்த்துகள்.

அது சரி...வலைப்பூ பெறந்த நாளுக்கு இனிப்பு விநியோகம் இல்லையா?

ENNAR said...

///
கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்மணம் ஒரு போதையைப் போல் ஆகியது. வலைப்பதிவுகளை விட்டால் உலகில் வேறெதுவும் இல்லாதது போல் தோன்றத் தொடங்கியது. எல்லா நேரங்களிலும் பதிவுகள் இடுவதிலும் படித்தவைகளைப் பற்றியுமே சிந்தனை எல்லாம் இருந்தது. வீடு, வேலை எல்லாம் இரண்டாம் நிலை பெற்றது.
///
உண்மைதான் அப்படித்தான் குமரன்தங்களுக்கு எனதுவாழ்த்துகள்

கைப்புள்ள said...

வலைப்பூக்களில் ஒரு ஆண்டு நிறைவு செய்த தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

VSK said...

Wishing you many blogging returns!!

குமரன் (Kumaran) said...

நண்பர் நாமக்கல் சிபி தனிமடலில் அனுப்பியது...

Hello Mr.Kumaran,

Heartiest Wishes for your First Year Anniversary In
Blog world.

Vetri Nadai Pottu thodara endendrum muruganarul
munnirkum.

வெளிகண்ட நாதர் said...

குமரன், வாழ்த்துக்கள்! தமிழ்மண போதை யாருக்குத்தான் இல்லை! ஆண்டொண்று கழிந்ததை எனக்கும் ஞாபகப்படுத்தினீர்கள்! இருந்தாலும் இப்பொழுது வேலை பளுவின் காரணமாய் அதிகம் நேரம் எடுத்து கொள்ள முடிவதில்லை, தொடர்ந்து எழுத வேண்டும்! நீஇங்களும் அதே பணி தொடர்ந்து செய்யுங்கள், வாழ்த்துக்கள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
பத்துப் பதிவு போடுவதற்குள்ளே! என்பாடு;;;;;சொல்லிமாளாது. பலதடவை ஏன்? வாசிப்பு பின்னூட்டம் என இருக்காது,விட்டேன் என நோகிறேன். அதனால் உங்கள் நிலையைப் புரிகிறேன்.என் மனைவியும் என்ன?? கணனியைத் திறக்கவில்லையா???என கிண்டல் செய்வார்.
உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.
யோகன் பாரிஸ்

இலவசக்கொத்தனார் said...

வாங்க குமரன். இரண்டு மாசம் வீட்டில் எல்லா வேலையும் செஞ்சு குடுத்து நல்ல பேர் வாங்கிட்டீங்க. இப்போ அதையெல்லாம் பண்ணாம இங்க வந்த தாக்கம்(!) அதிகமா ஆகப் போகுது. :)

ஒரு வருடம் முழுமை அடைந்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மு.மு.

ramachandranusha(உஷா) said...

குமரன் ஒரு வருடம்தானா நம்ப முடியவில்லை. பல வருடங்களாய் படித்துக்கொண்டிருப்பதுப் போல் உணர்வு. நேரம் இருக்கும்பொழுது எழுதுங்கள்.
மொத்தமா ஜூட் விட்டுவிடாதீர்கள்.

Sivabalan said...

வாழ்த்துகள்.

ஜெயஸ்ரீ said...

நல்வாழ்த்துக்கள் குமரன்.

இராம்/Raam said...

வாழ்த்துக்கள் குமரன்.

சிவமுருகன் said...

ஒரு வருஷத்திலே எத்தனை, எத்தனை சாதனை என்னை போன்றவர்களுக்கு வழிகாட்டி, பல பேரை உருவாக்க வேன்டும்.

//எழுத வேண்டும் என்று நினைத்த போது என்ன எழுதுவது என்று தெரியவில்லை. //

இப்படி தான் எல்லோரும் நினைப்பார்களோ? :)

//கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்மணம் ஒரு போதையைப் போல் ஆகியது. வலைப்பதிவுகளை விட்டால் உலகில் வேறெதுவும் இல்லாதது போல் தோன்றத் தொடங்கியது. //

உங்களுக்குமா? ஹிஹி எனக்கும் தான். நட்சத்திரம் ஆகிவிட்டால் போதை எல்லாம் முடிந்துவிடும் என்று சொல்வார்களே?

//அதனால் வாரத்திற்கு அதிகம் மூன்று பதிவுகள் மட்டுமே என்று ஒரு முடிவில் என்னை நானே இட்டுக் கொள்கிறேன்.//

அப்போ 2 வருஷத்திற்க்கு எந்த புதிய வலை பூவும் வராது, இருப்பதை முடிக்க போகிறேன் என்று சொல்லுங்கள்.(அப்படி சொல்ல முடியாதுன்னு சொல்றீங்களா?). (:

(52 வாரம் X 3 பதிவு = 156 பதிவு, அபிராமி அந்தாதி - 79, திருநீரு பதிகம் - 20, மதுரையின் ஜோதி - குறைந்தது 50, திருவாசகம் - 25 முதல் 30, லிங்காஷ்டகம் - 9, சின்ன சின்ன கதைகள் - குறைந்தது - 75, இதுக்கே 258 பதிவு வந்துவிட்டது).

வெற்றி said...

குமரன்,
முதலில் முதலாவது ஆண்டுநிறைவுக்கு வாழ்த்துக்கள்.
குமரன், நான் சும்மா பம்மாத்துக்குச் சொல்லவேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. நீங்கள், இராகவன், இராம.கி ஐயா, தமிழ்சசி, மலைநாடான் ஆகியோர் தமிழுக்கு ஆற்றி வரும் பணி மிகவும் உன்னதமானது. உங்களின் ஒவ்வொரு பதிவுகளில் இருந்தும் நான் கற்றுக்கொள்வது ஏராளம் ஏராளம். வேலைப்பளுக்களால் நான் தமிழ்மணப்பக்கம் வராமல் இருந்து சில தினங்களின் பின் தமிழ்மணப் பக்கம் வரும் போது முதலில் தேடிப்பிடித்துப் படிப்பது உங்கள் ஐவரின் பதிவுகளையும் தான். வாரத்திற்கு 3 தருகிறீர்களோ 1 தருகிறீர்களோ , உங்களிடமிருந்து வரும் பதிவுகள் தரமானதாகவும் சுவையானதாகவும் இருக்கும் என்பதில் எனக்குச் சிறிதளவும் ஐயம் இல்லை.
உங்கள் பணி தொடர நான் வணங்கும் என் குல தெய்வம் முருகப்பெருமான் அருள்புரிவானாக.

குமரன் (Kumaran) said...

இனிப்பு விநியோகப் பொறுப்பே உங்களுடையது தானே இராகவன். நீங்கள் திருமலை திருவிழாவிற்கு பிரசாத விநியோகப் பொறுப்பிற்காக அங்கே போய்விட்டீர்கள். இங்கே யாருமில்லை. விரைவில் வந்து எல்லாருக்கும் இனிப்பு கொடுங்கள். நல்ல நண்பருக்கு அது தான் அழகு. :-)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி என்னார் ஐயா

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி மோகனா என்ற கைப்புள்ள. :-)

குமரன் (Kumaran) said...

Thanks SK. One of the many main blogging returns is getting to know you and read your postings. :-)

குமரன் (Kumaran) said...

Thanks Shibi. Thanks for including me in the 'MuruganaruL' blog.

குமரன் (Kumaran) said...

நன்றி உதயகுமார் ஐயா. அஞ்ஞானியான நான் தமிழ்மணப் போதையில் மயங்குவதில் வியப்பில்லை. விஞ்ஞானியான தாங்களுமா? :-)

உங்கள் ஆதரவுடன் தொடர்ந்து எழுதுகிறேன். நன்றி.

குமரன் (Kumaran) said...

உண்மை யோகன் ஐயா. பதிவுகளைப் படிப்பதும் பின்னூட்டம் இடுவதும் என்று இருந்து விட்டால் நிறைய நேரம் மிச்சம் ஆகிறது. ஆனால் நாமே பதிவு போடும் போது வந்தப் பின்னூட்டங்களை அனுமதிப்பது, பதில் சொல்வது, ஏதேனும் பின்னூட்டம் வருகிறதா என்று கணியும் கையுமாய் அமர்ந்திருப்பது என நிறைய நேரம் எடுக்கிறது. ஆனாலும் எழுதாமல் இருக்க முடியவில்லையே? :-)

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். எங்க வீட்டுல கொஞ்சம் ஐயத்தோடத் தான் இருக்காங்க. எங்கடா வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிடுச்சான்னு. நான் தான் வாரத்துக்கு 2 அல்லது 3 பதிவுகள் தான்னு சொல்லியிருக்கேன். அதுவும் அதிகாலை நேரத்துல மட்டும் தான் பதிவுகள் பக்கம் போவேன் என்று சொல்லியிருக்கிறேன். அதனால் சரி. இல்லை வருந்தியிருப்பார்கள். :-)

வாழ்த்துகளுக்கு நன்றி.

அதென்ன மு.மு? புரியவில்லையே?

குமரன் (Kumaran) said...

ஆ... புரிஞ்சிருச்சு. புரிஞ்சிருச்சு.

நிற்கட்டும். நிற்கட்டும். :-)

குமரன் (Kumaran) said...

உஷா. சில நேரம் அப்படித் தான் தோன்றுகிறது. என்னவோ தமிழ்மணத்தில் காலம் காலமாக நாம் எழுதுவது வருகிறாற்போல் ஒரு மனத்தோற்றம் எனக்கே தோன்றுவதென்னவோ உண்மை தான்.

நீங்களே விரட்டிவிட்டாலும் தற்போதைக்குப் போகிற மாதிரி எண்ணம் இல்லை. :-)

தங்களின் மறைமுகப் பாராட்டிற்கு (பாராட்டியிருக்கீங்க தானே?) நன்றி. :-)

குமரன் (Kumaran) said...

நன்றி சிவபாலன் & ஜெயஸ்ரீ

குமரன் (Kumaran) said...

நன்றி இராமசந்திரப்பிரபு. :-)

rnatesan said...

வாழ்த்துக்கள் குமரன்!!
ஆனால் குழுமங்களில் இணைந்துவிட்டால் நம் வலைப் பதிவைக் கவனிக்க இயலாமல் போய்விடும்.வலை பதிவில் நீங்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது புரிகிறது!!
கலக்குங்க!!!

Unknown said...

வாரத்துக்கு மூணு முத்தான பதிவுகளை இடுங்கள் குமரன்.நானும் அதே போல் தான் முடிவெடுத்திருக்கிறேன்.போரடித்தபோது தினமும் பதிவுகளை இட்டுக்கொண்டிருந்தேன்.ஆனா இனி அப்படி செய்வதாக இல்லை.

எப்படியோ 365 நாட் அவுட்.தொடர்ந்து கலக்குங்கள்.இன்னொரு முறை நட்சத்திரமாகவும் ஆகுங்கள்.

வாழ்க அகுமுக.வளர்க அண்ணன் குமரனின் புகழ்

ஞானவெட்டியான் said...

அன்பு குமரன்,
வாழ்க! வளர்க!!

pathykv said...

nandinin!
amre vattaam khobba likkan?
Pathy.

சிறில் அலெக்ஸ் said...

வாழ்த்துக்கள் குமரன். என்னைப் போன்றவர்களை ஊக்குவித்து முன்னுக்கு கொண்டு வந்த சீனியர் நீங்க. வாழ்த்தும் இந்த நேரத்திலேயே நன்றியும் சொல்லிக்கிறேன்.

இன்னும் பல வருடங்கள் போகவேண்டியிருக்கே.

:)

கால்கரி சிவா said...

முதல் வருடம் போல் அடுத்தடுத்த வருடங்களிலும் பக்தி மணத்தை கமழவிடுங்கள்

╬அதி. அழகு╬ said...

நீங்கள் எழுதும் தமிழுக்காக உங்கள் பதிவுகளைப் படித்திருக்கிறேன்.

வாரத்திற்கு ஒன்று போட்டாலும் நன்றாய்ப் போடுங்கள்.

வாழ்த்துகளுடன்,
அதி. அழகு

இலவசக்கொத்தனார் said...

//அதென்ன மு.மு? புரியவில்லையே?//

உங்களுக்கு விஷயமே தெரியாதா? மு.மு. அப்படின்னா முருகனருள் முன்னிற்கும். நம்ம எஸ்.கே.தான் கத்துக் குடுத்தாரு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்

ஆண்டொன்று போனால்,
வயதொன்று போகலாம்...ஆனால்
வலைப் பூ பெருகிப் பூத்துத் தானே குலுங்கும்!

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
முருங்கை மரம் ஏற மீண்டும் வாழ்த்துக்கள்! :-))))

"வாரம் மும்மாரி பொழிகிறதா" என்று உங்களுக்காக பழமொழியை மாற்றிவிட்டோமே!

சிவமுருகன் கணக்குக்கு விடை இன்னும் சொல்லலையே! 156 vs 258! சொல்லாம நாங்களும் உங்கள விடறாதா இல்லையே :-)))

கோவி.கண்ணன் [GK] said...

அப்பாடா...குமரன் பதிவு போட்டுவிட்டார் மிக்க மகிழ்ச்சி...!

அப்பறம் ஓராண்டை வெற்றிகரமாக ஆக்கியதற்கு வாழ்த்துக்கள் !

குமரன் (Kumaran) said...

வழிகாட்டி எல்லாம் இல்லை சிவமுருகன். யாரிடம் சொல்வதற்கு செய்திகள் இருக்கின்றதோ அவர்கள் எல்லாரையும் பதிவுகள் எழுதச் சிறு ஊக்கம் கொடுத்தேன். அவ்வளவு தான். பதிவுகள் எழுதத் தொடங்கிய பின் 200 பதிவுகளுக்கு மேலும் சில மாதங்களுக்குள் போடும் அளவிற்கு வேகம் உங்களிடம் இருந்ததே. அதற்கு நான் என்ன செய்தேன்? :-)

நீங்கள் சொன்னது போல் விண்மீன் ஆகிவிட்டால் போதை எல்லாம் முடிந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால் போதை கொஞ்சம் குறைவது என்னவோ உண்மை தான். விண்மீன் ஆன சிறிது நாளிலேயே மூட்டை கட்டிவிடலாம் என்று தோன்றத் தொடங்கியது என்னவோ உண்மை. :-) ஆனால் மிச்சமிருக்கும் போதை தான் மீண்டும் மீண்டும் இழுத்துக் கொண்டு வருகிறது. :-)

எந்த முடிவையும் முடிந்த முடிவாக அடியேன் எடுப்பதில்லை. :-) அது ஒரு வழிகாட்டும் நியதியாகத் தான் வைத்துக் கொள்வது. அவ்வப்போது அவற்றை மீறுவதுண்டு. :-) அதனால் புதிய வலைப்பூ தொடங்க வேண்டிய கட்டாயம் வந்தால் தொடங்கத் தயங்கப் போவதில்லை. அண்மையில் 'முருகனருள்' என்ற வலைப்பூவை நாமக்கல் சிபி தொடங்கி அழைப்பு அனுப்பினார். சிறிது தயக்கத்தின் பின்னர் சேர்ந்துவிட்டேன்.

வாரத்திற்கு மூன்றே பதிவு என்றேன். எங்கே? முதல் வாரத்திலேயே மீறியாயிற்று. இந்த வாரம் 4 பதிவுகள் ஆகிவிட்டன. :-) காரணம் சொல் ஒரு சொல்லில் பதிவுகள் இட்டு வெகு நாட்களாயிற்று. ஏற்கனவே எழுதிவைத்தப் பதிவு இருந்தது. பதிப்பிக்கும் நேரம் மட்டும் தான் இந்த வாரத்தில் எடுத்துக் கொண்டேன்.

நீங்கள் இப்படி பதிவுகளை எண்ணிச் சொல்வீர்கள் என்று நினைக்கவில்லை சிவமுருகன். :-) நீங்கள் சொன்னதெல்லாம் சரி தான். வருடத்திற்கு ஏறத்தாழ 156 பதிவுகள் தான் வரும். ஆனால் நீங்கள் சொன்ன வலைப்பூக்களில் அவை வருமா என்று தெரியவில்லை. கேட்டதில் பிடித்தது, கோதைத் தமிழ், விஷ்ணு சித்தன் வலைப்பூக்களிலும் எழுத எண்ணம் உண்டு.

இருக்கும் வலைப்பூக்களில் எல்லாம் எழுதி முடிக்க இன்னும் ஐந்து வருடங்கள் ஆனாலும் ஆகும். :-) இறைவன் அருள் முன்னிற்கட்டும்.

குமரன் (Kumaran) said...

தங்களின் அன்பான சொற்களுக்கு நன்றி வெற்றி. தாங்கள் எஸ்.கே. அவர்களின் பதிவுகளையும் படிக்கிறீர்கள் என்றெண்ணுகிறேன். அவர் நம் குலதெய்வம் முருகப்பெருமானின் திருப்புகழைப் பாடிக் கொண்டிருக்கிறாரே.

நான் தான் நான் பதிவுகள் இடும் போதெல்லாம் தனிமடலில் சுட்டியை அனுப்புகிறேனே. சில நாட்கள் தமிழ்மணப்பக்கம் வராமல் இருந்தாலும் தனிமடல்களில் இருக்கும் சுட்டிகளைப் பிடித்துப் படித்துவிடலாமே. அப்படி செய்கிறீர்கள் என்று நம்புகிறேன். நீங்களும் பதிவுகள் இட்டவுடன் எனக்குத் தனிமடல் அனுப்புங்கள். உங்கள் பதிவின் சுட்டியைச் சேர்த்துவைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் மடல் அனுப்பினால் உடனே வந்து படிக்க உதவியாக இருக்கும். இந்த வேண்டுகோள் வெற்றிக்கு மட்டும் இல்லை. எல்லா நண்பர்களுக்கும்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி சதயம். வட்டங்கள் என்பவை தானே உருவாகுபவை. என்னுடைய பல தரப்பட்ட வலைப்பூக்களையும் அவற்றில் வரும் பதிவுகளையும் படிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். வட்டங்களில் மாட்டாமல் அவற்றை விட்டு வெளியே வந்து எழுதவேண்டும் என்ற உந்துதல் எனக்கு எப்போதும் கிடையாது. எல்லாவற்றிலும் கருத்து இருக்கலாம்; ஆனால் சிலவற்றில் மட்டுமே ஆளுமை இருக்கும் (Core Competency). எனக்கு எவற்றில் ஆளுமை இருக்கிறது என்று நானும் (நண்பர்கள் கூற்றின் மூலம்) நண்பர்களும் எண்ணுகிறார்களோ அவற்றில் அதிகப் பதிவுகள் இடுகிறேன். சில நேரங்களில் வட்டங்களை விட்டும் சில பதிவுகள் வரும். ஆனால் வட்டங்களை விட்டு வெளியே வந்து எழுத வேண்டும் என்ற உந்துதலுடன் எழுதுவதில்லை. அப்படி எழுதும் எண்ணமும் இல்லை. எதிர்பார்ப்பினை மறுத்ததற்கு மன்னிக்கவும். :-)

குமரன் (Kumaran) said...

உண்மை தான் நடேசன் ஐயா. ஆனால் நான் இன்னும் என்னை முழுமையாகக் குழுமத்தில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. வாரத்திற்கு ஒரு முறையே முடிந்த அளவிற்கு குழுமத்தில் இருந்து வரும் மடல்களைப் படிக்கிறேன். 'நம்பிக்கை' குழுமத்தில் நான் அறியாத ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துகள் மிக அதிகமாகத் தென்படுகின்றன. நல்ல முயற்சி அது.

குமரன் (Kumaran) said...

இன்னொரு முறை நட்சத்திரமா? ஆசையாகத் தான் இருக்கிறது செல்வன். :-) ஆனால் மற்றவர்களும் அந்த வாய்ப்பினை அடைய வேண்டுமே. :-) அது தான் உண்மைக் காரணம் என்று தானே நினைக்கிறீர்கள். இல்லை ஐயா இல்லை. என்னை வீட்டில் இருந்து துரத்தி விடுவதற்கு மிக எளிதான வழி ஒன்று இருக்கிறதென்றால் என்னை மீண்டும் விண்மீன் ஆக்குவது தான். :-)

நீங்களும் நல்ல முடிவெடுத்திருக்கிறீர்கள். இந்த முடிவினால் இன்னொரு நன்மையும் உண்டு. நான் உங்கள் எல்லாப் பதிவுகளையும் படித்துவிடலாம். நீங்கள் அதிகமாகப் பதிவுகள் இட்டால் அதே வேகத்தில் படிப்பவர்களும் படிக்க வேண்டுமே. எல்லோரும் என்ன கோவி.கண்ணன் ஐயாவைப் போல் தூங்கா வரம் பெற்றா வந்திருக்கிறோம்? :-) இல்லை சிவபாலனைப் போல் எல்லாப் பதிவுகளையும் நொடிப்பொழுதில் படித்து முடிக்கும் வரம் பெற்றா வந்திருக்கிறோம்? :-) (கோவி.கண்ணன் ஐயா, சிவபாலன்.. ச்சும்மா. கோவிச்சுக்காதீங்க...)

குமரன் (Kumaran) said...

தங்கள் வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா.

குமரன் (Kumaran) said...

கே.வி. பதி ஐயா. நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கப் போகிறீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். தொடங்கிய சௌராஷ்ட்ரப் பதிவிலும் இனிமேல் தொடர்ந்து எழுதுகிறேன். யார் படிக்கிறார்களோ இல்லையோ நீங்கள் மட்டுமாவது படித்து உங்கள் கருத்துகளைச் சொல்வீர்கள் என்று தெரியும்

nandinin aiyaanu. amrE vaththaam churum likkus.

குமரன் (Kumaran) said...

என்ன சிறில் சீனியர் அது இதுன்னுட்டீங்க. ஒரு மாதம் முன்னால் வலைப்பதிவுகள் எழுதத் தொடங்கியதாலே சீனியர் ஆயிடுவேனா என்ன? :-)

இப்ப எடுத்துக்கிட்டதை எழுதி முடிக்கவே இன்னும் பல வருடங்கள் போகும். :-)

குமரன் (Kumaran) said...

ரொம்ப நாளைக்கப்புறம் என் பதிவுகள் பக்கம் வந்திருக்கீங்க சிவாண்ணா. மிக்க நன்றி. நீங்க தொடர்ந்து படிக்கிறீங்க; ஆனா பின்னூட்டம் இடுவதில்லை என்று நினைக்கிறேன். சரிதானே?! :-)

குமரன் (Kumaran) said...

அதி.அழகு (ஜமில்). மிக்க நன்றி. தொடர்ந்து பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். உங்க பின்னூட்டத்திற்கு பதில் சொன்ன பின்னூட்டத்தை மட்டும் படிச்சா எப்படி? அடுத்தப் பின்னூட்டத்துலேயே புரிஞ்சதுன்னு சொன்னேனே?! ஒரு நொடி புரியலை மு.முன்னா என்னன்னு. அப்புறம் புரிஞ்சது; அதனால தான் நிற்கட்டும் நிற்கட்டும்ன்னு சொன்னேன். :-)

குமரன் (Kumaran) said...

முருங்கைமரம் ஏறியாச்சு ரவிசங்கர். பாருங்கள் இந்த வாரத்திலேயே நான்கு பதிவுகள் போட்டாயிற்று. :-)

பழமொழியை நீங்க மாத்துனா நான் அதையே மாத்திட்டேனே! :-)

சிவமுருகன் கணக்குக்கு விடை சொல்லிட்டேன். அதை அவர் கணக்குன்னு சொல்றத விட அவரோட ஆசைன்னு சொல்லலாம். மதுரையின் ஜோதியில் 50 பதிவுகள் எதிர் பார்க்கிறாரே. :-)

குமரன் (Kumaran) said...

எங்கே போயிருந்தீங்க கோவி.கண்ணன் ஐயா? இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்? :-) தூங்கா வரம் பெற்ற நீங்களே இப்படி தாமதமா வந்தா யாரோட பின்னூட்டத்தை நம்பி நான் பதிவுகள் போடறது? :-) (ச்சும்மா..)

வாழ்த்துகளுக்கு நன்றி கோவி.கண்ணன் ஐயா.

ரங்கா - Ranga said...

குமரன்,

உங்கள் பதிவுகளை வெகு நாட்களாகப் படித்து வருகிறேன். வீடு, மனைவி/மக்கள், வேலை என்று நிறைய பொறுப்புகள் இருக்கும் போது, அதற்குண்டான நேரம் போக தொடர்ந்து எழுதுவது மிகவும் சிரமமான விஷயம். இத்தனை பதிவுகள் எழுதியிருக்கிறீர்களே என்று எனக்கு மிகவும் வியப்பாகத்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

ரங்கா.

பி.கு. உங்கள் பதிவுகளைப் படிக்கவே எனக்கு இத்தனை நாட்கள் தாமதமாகிறது - எழுதுவதற்கு நேரம் இருப்பதில்லை என்பதுதான் உண்மை.

சிவமுருகன் said...

50 பதிவு எதிர்பார்ப்பது அதிகமல்ல ஜென்டில்மேன் ஒரு ஆசை ஒரே ஒரு ஆசை.

சிவமுருகன் said...

அண்ணா,
//வழிகாட்டி எல்லாம் இல்லை சிவமுருகன். யாரிடம் சொல்வதற்கு செய்திகள் இருக்கின்றதோ அவர்கள் எல்லாரையும் பதிவுகள் எழுதச் சிறு ஊக்கம் கொடுத்தேன்.//

அதற்க்கு பெயர் தான் அண்ணா வழிகாட்டி என்று பெயர்.

//அவ்வளவு தான். பதிவுகள் எழுதத் தொடங்கிய பின் 200 பதிவுகளுக்கு மேலும் சில மாதங்களுக்குள் போடும் அளவிற்கு வேகம் உங்களிடம் இருந்ததே. அதற்கு நான் என்ன செய்தேன்? :-) //

வேகம் என்னுடையது அல்ல எல்லாம் அந்த மீனாட்சியின் 'சித்தம்', சித்தர்களின் ஆசி. என்(ம்) தாய் மொழியின் களஞ்சியம்.

(மீண்டும் விரைவில் வருகிறேன் :), திருக்குறள் பதிவுகளை செய்து வருகிறேன், எல்லாவற்றையும் தொகுத்து விரைவில் முடிக்கவுள்ளேன். )

//கேட்டதில் பிடித்தது, கோதைத் தமிழ், விஷ்ணு சித்தன் வலைப்பூக்களிலும் எழுத எண்ணம் உண்டு. //

மண்ணிக்கனும் விட்டுவிட்டேன்.

நன்றி.

enRenRum-anbudan.BALA said...

குமரன்,

வாழ்த்துகள்

தொடர்ந்து எழுதுங்கள் குமரன்

பக்தி மணத்தை கமழவிடுங்கள்

I am your senior, please remember that :)

குமரன் (Kumaran) said...

ரங்கா அண்ணா. நான் சொன்ன மாதிரி தமிழ்மணப்போதையில் இருக்கும் போது எழுதித் தள்ளியவை அவை. இப்போதெல்லாம் குறைவாக எழுத வேண்டும் என்ற எண்ணமே இருக்கிறது.

தாமதமானாலும் தொடர்ந்து பதிவுகளைப் படிப்பதற்கு நன்றி. நானும் அப்படித் தான். உங்கள் பதிவுகளைத் தாமதமாகவாவது படித்துக் கொண்டே இருக்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

சிவமுருகன், உங்கள் ஆசை நிறைவேற நாயகி சுவாமிகளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். :)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி 'என்றென்றும் அன்புடன் பாலா'. நீங்க எங்க கல்லூரி சீனியரா? சொல்லவே இல்லை? :-)

ஓ. வலைப்பதிவு சீனியர்ன்னு சொல்றீங்களா? ஆமாம. அதை மறந்திடுவேனா? ஆமா. அதை எதுக்கு இப்ப சொன்னீங்க? புரியலையே? எதாவது உ.கு., வெ.கு.ன்னு இருக்கா? எனக்குத் தான் புரியலையா?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வாழ்த்துக்கள் குமரன். தங்களின் ஆன்மீகம் குறித்த பற்று தங்களின் தமிழ் அறிவு ஆகியவைகளைக் கண்டு வியப்பு மற்றும் பொறாமை கொண்டிருக்கிறேன். தங்களின் அறிவியல் அறிவும் சிறப்பானது என்பதை தாங்கள் என்னுடைய பதிவிற்கு வந்து இடும் பின்னூட்டம் மூலம் அறிகிறேன். தமிழ் வலைப் பதிவுகளில் உங்களுக்கு என்று ஒரு முத்திரை பதித்துக் கொண்டு ஆன்மீகமா நம்ம குமரனைக் கேட்டா சொல்லுவார். இது வட மொழியா தமிழ் மொழியா குமரனைக் கேட்க வேண்டும் என்று உங்கள் பதிவு அல்லாத இடங்களில் கூட உங்களைப் பற்றி சொல்லும் அளவுக்கு தனி தன்மை கொண்டுள்ளீர்கள்.

இந்த பணி மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். எனக்கு ஆன்மீகத்திற்கும் பல மைல் தூரம் ஆகவே தங்களின் பதிவுக்கு அடிக்கடி வருவதில்லை ஆகவே இந்த சமயத்தில் பல சமயங்களில் சொல்ல நினைத்த வாழ்த்துக்களை தங்களுக்கு கூறிக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.

Sud Gopal said...

தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படித்து வந்தாலும்,ஒரு முகமறியா வழிப்போக்கன் போல இது வரை பின்னூட்டியதில்லை.(வேறென்ன சோம்பேறித்தனம்தான் காரணம்)

Wishing you many blogging returns!!!

குமரன் (Kumaran) said...

குமரன் எண்ணன் செந்தில் குமரன். உங்கள் பின்னூட்டங்கள் இரண்டு விதமாக இருப்பதைக் கவனிக்கிறேன். ஒரு விதம் என்னை மிக உயர்த்திப் பாராட்டிப் பேசுவது. பாராட்டுகளுக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் அந்தப் பின்னூட்டங்கள் என்னை சங்கடத்தில் நெளிய வைக்கின்றன. உயர்வு நவிற்சி அணி மிக அதிகமாகப் புழங்கும் பின்னூட்டங்கள் அவை. :-) இரண்டாவது வகை உங்களை மிக அதிகமாகத் தாழ்த்திப் பேசிக் கொள்வது. மந்த புத்தி என்றெல்லாம் சொல்லிக் கொள்வது. இதுவும் தேவையில்லாதது. தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வது இறைவனின் முன்னரும் நம் பெரியவர்கள் முன்னரும் தான் நடக்கவேண்டும். சமமானவர்கள் முன்பு தேவையில்லை. அது கெடுதலும் கூட. அதனால் இரண்டுவகைப் பின்னூட்டங்களையும் இடுவதை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

தங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

சுதர்சன் கோபால்.

நீங்கள் அறிமுகம் இல்லாதவர் இல்லை. இராகவன் பதிவுகளில் பார்த்திருக்கிறேன். உங்கள் படத்தை துளசியக்கா பதிவில் பார்த்திருக்கிறேன். என்னைப்பற்றி நீங்கள் அறிந்ததை விட உங்களைப் பற்றி நான் அறிந்தது அதிகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். :-)

அந்த வகையில் நீங்கள் என் பதிவுகளைப் படித்துக் கொண்டிருப்பீர்கள் என்றே எண்ணியிருந்தேன். இப்போது முதன்முறையாகப் பின்னூட்டமும் இட்டதற்கு மிக்க நன்றி. பின்னூட்டம் இடாவிடினும் இனிமேலும் தொடர்ந்து என் பதிவுகளைப் படித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். :-)

bala said...

குமரன் அய்யா,

நீங்க ஒரு பதிவு போட்டா நூறு பதிவு போட்ட மாதிரி..

தொடர்ந்து எழுதுங்க..

உங்கள் பதிவுகளை உன்னிப்பாக படிக்கும்,

பாலா

குமரன் (Kumaran) said...

பாராட்டிற்கு நன்றி பாலா. தொடர்ந்து படித்து வாருங்கள். நன்றி.