Monday, October 30, 2006

மாற்றம் எனது மானிடத் தத்துவம்

உண்மையறிந்தவர் நீர் மட்டுமே!
என்னைப் பார்க்கும் போதெல்லாம்
என் அளவுகளை மீண்டும் எடுக்கும்
தையல் காரரே
உண்மையறிந்தவர் நீர் மட்டுமே!

46 comments:

இலவசக்கொத்தனார் said...

அண்ணா, இது என்னது? கவுஜ? என்ன ஆச்சு உங்களுக்கு? :-D

குமரன் (Kumaran) said...

வேற ஒன்னுமில்லை கொத்ஸ். அண்மையில ஒரு பயிற்சி வகுப்புக்கு போயிருந்தேன். அங்கே இதை சொன்னாங்க. முதல்ல மொழி மாற்றம் மட்டும் தான் செய்யறதா இருந்தது. மடக்கி மடக்கிப் போட்டுப் பாப்போம் யாராவது கவிதைன்னு சொல்றாங்களான்னு பாப்போம்ன்னு நெனைச்சேன். நீங்க இதைக் கவிதைன்னு சொல்லிட்டீங்க. ரொம்ப மகிழ்ச்சி. :-)

அது சரி. இந்த கவிஜ என்ன சொல்லுதுன்னு சொல்லுங்க பாப்போம்? :-)

இலவசக்கொத்தனார் said...

அட அது ஒண்ணும் புரியாததுனாலதானே கவுஜ அப்படிங்கற முடிவுக்கே வந்தேன். நீங்க வேற.

ஹச்சூ! ஹச்சூ!

கோவி.கண்ணன் [GK] said...

//என்னைப் பார்க்கும் போதெல்லாம்
என் அளவுகளை மீண்டும் எடுக்கும்
தையல் காரரே//

கண்ணால் அளவெடுக்கும் கவிதையா ?

கலக்குங்க குமரன் !
:)

நாமக்கல் சிபி said...

எனக்கு அடிக்கடி
வைத்தியம் செய்யும்
வைத்தியரே
நீரும் என்னைப் பற்றி
உண்மையறிந்தவர்!

(ஹா ஹா நானும் ஒண்ணு எழுதிட்டேன்)

நாமக்கல் சிபி said...

எங்கள் வீட்டுக்கு
அரிசி சப்ளை செய்யும்
அரிசி கடைக் காரரே
நீரும் என்னைப் பற்றி
நன்கறிந்தவர்தான்!

நாமக்கல் சிபி said...

எனக்கு பாடம்
சொல்லிக்கொடுத்து
பாடாய் படுத்தப்பட்ட
எனதருமை ஆசிரியரே
நீரும் என்னைப் பற்றி
நன்கறிந்தவர்தான்.

கணக்கு வாத்தியார் said...

பிதாகரஸ் தேற்றத்தை
உமக்கு சொல்லிக் கொடுத்து
பித்துப் பிடித்தவனாய்
மாறினேனே!
நானும் உம்மைப் பற்றி
நன்கறிந்தவன்தான்!

- கணக்கு வாத்தியார்

கந்து வட்டி சேட்டு said...

கந்து வட்டிக்குக் கொடுத்துவிட்டு
வட்டியை வாங்கக் கூட
வாரக்கணக்கில் அலைகிறேனே
நானும் உம்மைப்பற்றி
நன்கறிந்தவன்தான்

சிவமுருகன் said...

அண்ணா,
கவிதை நல்லா இருக்குன்னு ஒரே வார்த்தையில சொல்ல மனசு வர்ல. அதனால் ஒரு (கேள்வி)கவிதை :),

பதிவுகளை பார்த்து அதன் தரமறியும் ஆன்மீக நட்சத்திரமே!
நீயும் ஒரு உள்ளகவர் பதிவரோ?
பதிவுலக பாகைக்கு தம்மை
திருப்பிகொள்ள ஒரு கவிதையோ?

நாமக்கல் சிபி said...

பதிவுகள் தோறும்
கலாய்க்க வழிதேடும்
நாமக்கல் சிபியே
நீரும் என்னைப்பற்றி
நன்கறிந்தவர்தான்.
- குமரன்

நாகை சிவா said...

என்ன தளபதியாரே, இன்னிக்கு டேரா இங்கவா....

உம்மை நன்குறிந்தவர் எங்கு உள்ளாரோ?

Dharumi said...

இந்தக் கவிஜ பின்னூட்டங்களை நிறுத்தவாவது சீக்கிரம் உங்கள் அடுத்த பதிவை எதிர் நோக்கியுள்ளென். :(

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன் ஐயா. நான் என் நிலையிலிருந்து கவிதை எழுதினால் அதனை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து பார்த்துப் புரிந்து கொள்கிறீர்களே?! நிறைய கற்பனை வளம் உங்களுக்கு. :-)

உங்களையோ என்னையோ இந்தக் கவிதை சொல்பவராக எண்ணிக்கொண்டு இந்தக் கவிதையையும் தலைப்பையும் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்கள். கொத்ஸுக்கும் சிபிக்கும் புரியலை. உங்களுக்காவது புரிகிறதா என்று பார்க்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

சிபி. கவிதையில் சொல்லியிருக்கும் 'உண்மை' என்றும் மாறாத 'உண்மை'. என்னைப் பற்றிய 'உண்மை' இல்லை. அதனால் உங்கள் கலாய்த்தல் கவிதைகள் பட்டியலில் இன்னும் இரண்டைச் சேர்ப்பதற்கு முன்னால் பதிவில் இருக்கும் கவிதை எந்த 'உண்மை'யைச் சொல்கிறது என்று சொல்லுங்கள். :-)

SK said...

இந்த 'தையல்காரன்' நிச்சயமாய் ஆண்டவனோ, அல்லது ஆத்மாவோ அல்ல!

அவை இரண்டும் தான் எப்போதுமே நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற்னவே!

அப்போ வேற யார்?

மனசாட்சி!

அதுதான் இப்படிச் செய்ய வாய்ப்பிருக்கிறது!

ஆனால், ஒன்று நிச்சயம்.

மீண்டும் மீண்டும் அளவெடுப்பதால், நிறைய மாற்றங்கள் நிகழ்கிறது உங்களுக்குள் எனவும், ஒவ்வொரு முறையும் அளவெடுப்பதால், அது ஒரு மோசமான தையல்காரனாகத்தான் இருக்க முடியும் என்பதும்!!

நல்ல தையல்காரன் இப்படி அளவெடுத்துக் கொண்டே இருக்க மாட்டான்!

என்ன கொத்தனாரே! பணியை ஒழுங்கா செஞ்சிட்டேனா?
:))

ஒரு "பி. ந." மான விளக்கம்.

விரும்பினால் இதை விலக்கலாம்!

குமரன் (Kumaran) said...

எஸ்.கே. இந்தக் கவிதை சொல்வது ஆண்டவனோ, ஆத்மாவோ, மனசாட்சியோ இல்லை. தையற்காரரைத் தான் சொல்கிறது. நல்ல தையற்காரர் மீண்டும் மீண்டும் அளவெடுப்பார். அப்படி அளவெடுக்கவில்லையென்றால் தான் அவர் நல்ல தையற்காரர் இல்லை. மாற்றம் எல்லோரிடமும் நிகழ்கிறது. அப்படி நிகழவில்லை என்று நினைப்பது தான் மாயை, மயக்கம். கொஞ்சம் கண்களைத் திறந்தால் நம்மிலும் மற்றவரிலும் ஒவ்வொரு விநாடியும் மாற்றங்கள் ஏற்படுவதைக் காணலாம்.

Merkondar said...

ஏன் இந்த மாற்றம்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//என் அளவுகளை மீண்டும் எடுக்கும்//

இந்த வரி தான் பலரின் சிந்தனைக் குதிரையைத் தட்டி விட்டது :-)
//என் துணிகளின் அளவுகளை மீண்டும் எடுக்கும்// என்று போட்டுப் பாருங்கள்; கவிதைச் சுவையே போய்விடும் :-)

அதுசரி
"மாற்றம் எனது மானிடத் தத்துவம்" தானே? குமரனும் 'மாறுகிறாரோ' என்று எல்லாரையும் எண்ண வைத்து விட்டீர்கள்! :-))

உண்மை தான் குமரன்; நல்ல தையற்காரர் மீண்டும் மீண்டும் அளவெடுப்பார்; சின்ன வயதில், பாட்டி என்னை தையற்காரரிடம் அழைத்துச் செல்லும் போது, பழைய அளவுகளையே வைத்துக் கொள்ளுங்கள்; ஏன் மீண்டும் மீண்டும் அளவு எடுக்கிறீர்கள் என்று கேட்பார்கள்; ஆனால் அப்படி அளவெடுத்து கச்சிதமாகத் தைப்பது தான் அவர் speciality!

இந்தக் காலத்தில் தான் எல்லாம் ரெடிமேட் ஆயிற்றே (இதுவும் மாற்றம் தான்);
ஆக மாறிக் கொண்டே இருக்கும் நாம் தான், இனி நம்மை நாமே அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்! :-)

'கவுஜை'யின் உட்பொருள் இப்படித் தான் தோன்றுகிறது. ஆக SK சொல்வதும் ஒரு வகையில் பொருத்தமே!

ramachandranusha said...

முருகா, குமரனுக்கு நல்ல புத்தியைக் கொடுப்பா :-)

குமரன் (Kumaran) said...

சிபி. என்ன பதில் சொல்லலாம் உங்கள் கவிதைத் தொடருக்குன்னு சிந்திச்சுக்கிட்டு இருந்தா நீங்களே பதிலும் எழுதி வச்சுட்டுப் போயிருக்கீங்க. :-) அதனால அதையே உங்களுக்குப் பதிலாக இடுகிறேன். :-)

பதிவுகள் தோறும்
கலாய்க்க வழிதேடும்
நாமக்கல் சிபியே
நீரும் என்னைப்பற்றி
நன்கறிந்தவர்தான்.

குமரன் (Kumaran) said...

வாங்க நாகை சிவா. விண்மீன் வாரம் நல்லா போகுது போலிருக்கு? நாமக்கல் சிபியைத் தொடர்ந்து வந்தீர்களா? :-)

அவரை நன்கறிந்தவரைப் பற்றி அவரே வந்து சொல்லட்டும்.

உங்களை நன்கறியப் போகிறவர் எங்கே உள்ளாரோ? :-)

குமரன் (Kumaran) said...

எஸ்.கே. /ஒரு "பி. ந." மான விளக்கம்./ இதன் பொருள் என்ன? புரியவில்லையே?

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். உங்கள் கேள்விக் கவிதையை கொஞ்சம் விளக்குங்கள். :-))

குமரன் (Kumaran) said...

என்னார் ஐயா. அதான் கவியரசர் தெளிவா சொல்லிட்டாரே.

மாற்றம் எனது மானிடத் தத்துவம்.
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்.
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்பதறிந்தே ஏகுமென் சாலை
வாழுவர் தாழுவர் தாழுவர் வாழுவர்
போனபின்னால் இவண் ஆவதோர் பொருளிலை
அறிவை நீ நிச்சயம்

மாற்றம் என்னில் மட்டும் இல்லை ஐயா.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் இரவிசங்கர். நானும் கோவி.கண்ணன் ஐயா பின்னூட்டத்தைப் படித்தவுடன் நினைத்தேன். அளவுகள் என்றவுடன் தப்பாக நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று.

குமரனும் மாறுகிறாரோ என்பது கேள்வியே இல்லை இரவிசங்கர். எல்லோரும் விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டே தானே இருக்கிறோம். அதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் நாம்.

கவிதையை நன்கு புரிந்து கொண்டு விளக்கியதற்கு நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

சரி. கவிதையின் விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று எண்ணுகிறேன்.

அண்மையில் ஒரு பயிற்சி வகுப்பிற்குச் சென்றேன். அங்கே கற்ற பாடத்தையே இங்கே சொன்னேன்.

மக்கள் எல்லா நேரங்களிலும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாம் மற்றவரிடம் பழகும் போது போன முறை பார்த்த போது ஒருவரைப் பற்றி என்ன கருத்தாக்கம் நம்மிடம் ஏற்பட்டதோ என்ன புரிதல் நம்மிடம் ஏற்பட்டதோ அதே கருத்தாக்கம், புரிதல் அடிப்படையாகவே இப்போது அவரைப் பார்க்கும் போதும் நாம் பழகுகிறோம். ஒவ்வொரு விநாடியும் எல்லோரும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் ஒவ்வொரு விநாடியும் மாறிக் கொண்டே இருக்கிறோம் என்று நமக்குத் தெரியும். புதிய புதிய புரிதல்கள்; தவறான எண்ணங்கள் சரியாதல் - என்று எத்தனையோ நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படியே மற்றவர்களிடமும் நடந்து கொண்டு இருக்கிறது. போன முறை பார்த்தவரைத் தான் இந்த முறையும் பார்க்கிறோம் - ஆனால் போன முறைக்கும் இந்த முறைக்கும் அவரிடம் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். இதனை மனதில் கொள்ள வேண்டும்.

இதனைச் சொல்லிக் கொண்டு வரும்போது அந்த வகுப்பின் ஆசிரியர் இதனைச் சொன்னார் 'My Tailor is the only sensible person that I know of. He measures me every time I see him'.

குமரன் (Kumaran) said...

உஷா. :-)))

Sivabalan said...

குமரன் சார்,

மிக அருமையான விளக்கம். நல்ல கவிதை.

உங்கள் விளக்கத்திற்கு பிறகு கவிதை ஆழம் அதிகமாகிவிட்டது.

நன்றி

SK said...

//எஸ்.கே. /ஒரு "பி. ந." மான விளக்கம்./ இதன் பொருள் என்ன? புரியவில்லையே?//


ஒரு பின்நவீனத்துவமான விளக்கம்.
:))

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா. அம்புட்டு கொடுமையாவா இருக்கு? அடுத்தப் பதிவைப் போட்டுர்றேன்.

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

அட அது ஒண்ணும் புரியாததுனாலதானே கவுஜ அப்படிங்கற முடிவுக்கே வந்தேன். நீங்க வேற.//
கொத்ஸீ ஒத்துக்கிட்டாரு...
வேற வழியில்ல நானும் ஒத்துக்கிறேன்...
இது கவுஜதான்... (எனக்கும் பிரில :-))

நாமக்கல் சிபி said...

//My Tailor is the only sensible person that I know of. He measures me every time I see him'.//

super :-))

Johan-Paris said...

குமரா!
உம்மையறிந்தவர்!
உண்மையறிந்தவர்!
உங்கள் அளவுகளை மீண்டும் எடுக்கும் தையல்காரர்!!
பயிற்சி வகுப்பில் இதெல்லாம் சொல்லித் தாறாங்களா??? நன்று!!!
மேலும் மாற்றம் ஒன்றுதான் நிரந்தரமானது. எனினும் மனதில் பதியும் கருத்துக்கள்; இலகுவில் மாறுவதில்லை.இதைத் தான் எச்சரிக்கை உணர்வு என்கிறாங்களோ!!!!
யோகன் பாரிஸ்

வல்லிசிம்ஹன் said...

குமரன்,
நாம் மாறுவதை சரியாய் அளவெடுக்கும் ஒருத்தர் நம் அன்னை.
அடுத்தவர் மனைவி.
கணவர்களைச் சொல்லமாட்டேன்.
அவர்கள் பூரணமாகப் புரிந்து கொள்ளுகிறார்களா என்பது தெரியாது.
எஃபெக்டிவ் லிசனிங் ரொம்ப முக்கியம்தான்.

நாமக்கல் சிபி said...

//குமரன்,
நாம் மாறுவதை சரியாய் அளவெடுக்கும் ஒருத்தர் நம் அன்னை.
அடுத்தவர் மனைவி//

ஒருவர் அன்னை. இரண்டாமவர் அவரவர் மனைவி என்று தெளிவாக/விளக்கமாகச் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

பாலாஜி. புரியலைன்னு சொல்லிட்டு அடுத்தப் பின்னூட்டத்திலேயே புரிஞ்சிடுச்சு போல இருக்கே?! :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் யோகன் ஐயா. பலவிதமான பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன. அதில் ஒருவருடன் ஒருவர் பழகிக் கொள்ளும் விதங்களைப் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

நீங்கள் சொன்னது போல் மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றமில்லாதது; ஆனாலும் மனதில் ஒருவரைப் பற்றியோ ஒன்றைப் பற்றியோ பதியும் கருத்துகள் எளிதில் மாறுவதில்லை. இதனை உணர்ந்து கொள்ளுதலே பல தொடர்பு இடைவெளிகளைக் (Communication Gaps) குறைத்துவிடும் என்று எண்ணுகிறேன்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் வல்லி அம்மா. அன்னையாரும் மனைவியாரும் நம் மாற்றத்தை அளவெடுக்கிறார்கள். ஆனாலும் மிகச்சரியாகவா என்பதில் எனக்கு ஐயம் உண்டு. எத்தனை குழந்தைகள் பெற்றோர்களுக்குத் தெரியாமல் தவறுகள் செய்கிறார்கள்; அந்த மாற்றங்கள் தொடக்கத்திலேயே அன்னைக்குத் தெரிவதில்லையே. அப்படித் தெரிந்தால் தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும் இல்லையா? மனைவியும் அப்படியே. கணவனிடம் பெரிய மாற்றம் இருந்தால் தான் மனைவிக்குத் தெரியும். மற்றபடி எல்லா மாற்றங்களும் மனைவிக்குத் தெரிந்துவிடுவதில்லை.

மனைவியிடம் தோன்றும் சிறு மாற்றத்தையும் கவனித்துவிடும் கணவன்மார்களைக் கண்டிருக்கிறேன்; என் மனைவியும் அப்படி என்னைப் பற்றி சொல்லியிருக்கிறார். (நான் அதனை எல்லா நேரங்களிலும் செய்வதாக நான் எண்ணவில்லை)அவருக்கே இன்னும் புலப்படாத அவரது சில மாற்றங்களைச் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் பொதுவாக பெண்களுக்கு மாற்றங்களைக் காணும் கண்ணோட்டம் ஆன்களை விட மிகுதி என்பதை ஒத்துக் கொள்கிறேன். எல்லாம் அவரவர் அனுபவங்களையும் கண்ணோட்டத்தையும் பொறுத்தது.

குமரன் (Kumaran) said...

சிபி. வல்லியம்மா சரியாகத் தான் சொல்லியிருக்கிறார். 'நம்' என்பதை அன்னைக்கு முன்னர் மட்டுமே சொல்லியிருக்கிறார். மனைவிக்கு முன்னர் சொல்லவில்லை. நீங்கள் தான் கலாய்த்தல் மனநிலையில் மாற்றிப் படித்துவிட்டீர்கள். :-)

நாமக்கல் சிபி said...

//நீங்கள் தான் கலாய்த்தல் மனநிலையில் மாற்றிப் படித்துவிட்டீர்கள்//

பின்னே! இந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் நீங்களாயிற்றே குமரன். அதனால் உங்கள் பதிவில் எதைப்படித்தாலும் கலாய்த்தலுக்கு எங்கேனும் இடமிருக்கிறதா என்றே பார்க்கிறேன்.

:))

நாமக்கல் சிபி said...

இதற்கு முன்பெல்லாம் கலாய்த்தலுக்கு இடமளிக்காமல் ஆன்மீகப் பதிவுகளாகவே இட்டு வந்தீர்கள்.

:) இப்போதுதானே நமக்கு (நல்ல) நேரம் கிடைத்திருக்கிறது.

ஜெயஸ்ரீ said...

உண்மை. Change is constant and perhaps the only one that is.

மாறிக்கொண்டேயிருப்பதால் நம்மையும், மற்றவர்களையும் ஒவ்வொரு முறையும் அளவெடுத்துக்கொண்டேயிருப்பது நலம்.

இது மனிதர்கள் மட்டுமல்லாது சூழ்நிலைகள், வரையரைகள் மதிப்பீடுகள், கொள்கைகள் போன்றவற்றுக்கும் பொருந்தும். காலமும் நம்முடைய அனுபவங்களின் தாக்கங்களும் அவ்ற்றிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

குமரன் (Kumaran) said...

உண்மை ஜெயஸ்ரீ. நன்கு சொன்னீர்கள். நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவபாலன்.

குமரன் (Kumaran) said...

சிபி. கலாய்த்தலுக்கு நல்லாத் தான் தேடிப்பாக்கறீங்க. :-)