Sunday, March 05, 2006

154: நாலு பேர் நல்லா இருக்கணும்

உலகத்துல எதுங்க ரொம்ப முக்கியம்ன்னு கேட்டா நாலு பேர் நல்லா இருக்கணும்; அதுக்கு நம்மால முடிஞ்சது செய்யணும்ன்னு நெனைக்கிற நல்ல நெனப்பு தான்னு சொல்லலாங்க. இல்லியா? நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் அப்படின்னும் நம்ம முன்னோர்கள் சொல்லிட்டுப் போயிருக்காங்க. நல்லது செய்ய எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கிறதில்ல; அதனால வாய்ப்பு கிடைச்சா நல்லது செய்யுங்க; வாய்ப்பு உருவாக்கிக்க முடிஞ்சா உருவாக்கிக்கிட்டு நல்லது செய்யுங்க; அப்படி முடியலையா, அடுத்தவனுக்கு கெட்டதாவது செய்யாம இருங்கன்னு நறுக்குன்னு சொல்லிவச்சிருக்காங்க. எத்தனை உண்மை அதுல? அதாங்க நான் அடிக்கடி எனக்கு நானே சொல்லிக்கிறது. சரி இப்ப எதுக்கு இத எல்லாம் சொல்றேன்னு கேக்கறீங்களா? ஒன்னுமில்லேங்க. இந்த 'நாலு' சங்கிலியில நாமக்கல் சிபியும், சிங். செயகுமாரும் என் பெயரைச் சொல்லி ரொம்ப நாளாச்சு. நானும் எழுதலாம் எழுதலாம்ன்னு யோசிச்சு யோசிச்சு ஒன்னும் ஓட மாட்டேங்குது. நாம கூப்புடலாம்ன்னு நெனச்சவங்களை எல்லாம் மத்தவங்க கூப்புட்டு அவங்களும் இந்த 'நாலு' பதிவைப் போட்டுட்டாங்க. அதனால இனிமே தாமதிக்க வேணாம்ன்னு இந்தப் பதிவைப் போட்டுட்டேங்க.

நமக்கு புடிச்ச நாலு விஷயத்தைப் பத்தி எழுதணும்ன்னு இதுல ஒரு எழுதாத சட்டம் இருக்கும் போல இருக்கு. எனக்கு எது புடிக்கும் புடிக்காதுன்னு ஒரு தெளிவான கருத்து கிடையாது. ஆத்திகமும் பிடிக்கும். பல நேரங்கள்ல பெரியார் சொன்னதும் படிக்கப் பிடிக்கும். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். அதனால புடிச்ச விஷயத்தைப் பத்தி இதுல எழுதாம சும்மா எனக்கு அடுத்து இந்த சங்கிலித் தொடரை யார் எடுத்துக்கிட்டுப் போகணும்ன்னு ஒரு நாலு பேரைச் சுட்டிக் காட்டிட்டு விட்டுடலாம்ன்னு இருக்கேன். எழுதுன சட்டத்தையே நம்ம ஊருல யாரும் மதிக்கிறதில்லை. இது எழுதாத சட்டம் தானே. :-)

நிறைய பேரைக் கூப்பிடணும்ன்னு நெனைச்சேன் - இராகவன், சிவா, இராமநாதன், இலவசக் கொத்தனார், ஜோசஃப் சார், துளசியக்கா,மதுமிதா அக்கா, சிங். செயகுமார், செல்வன், கார்த்திக் ஜெயந்த், சந்தோஷ், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். எல்லாரையும் எனக்கு முன்னாடி வேற யாரோ கூப்புட்டுட்டாங்க. ஞானவெட்டியான் ஐயாவைக் கூட கூப்பிடலாம்ன்னு நெனைச்சேன். நான் இந்த விளையாட்டுக்கு வரலை குமரன்னு சொல்லிடுவார்ன்னு அவரைக் கூப்பிடலை. நான் அழைக்கும் நான்கு பேர்

1. ஜீவா (புதிதாய் தமிழ்மணத்திற்கு வந்திருக்கிறார். இரண்டு நல்ல வெண்பாக்களை அவருடைய பதிவில் படித்தேன். அவருக்கு யார் ஆன்மிகச் சூப்பர் ஸ்டார்ன்னு தெரியாது. யாரும் போய் சொல்லாதீர்கள்) :-)

2. வெளிகண்டநாதர் (பாலக்கரை பாலனுக்கு அறிமுகம் தேவையில்லை. அவருடைய அரிதாரம் தொடரை நிறைய பேர் படித்திருப்பீர்கள்)

3. ரங்கநாதன் (நல்ல கவிதைகள் எழுதுவார். அவர் தனது தந்தையார் எழுதிய கதைகளை 'பிதாவின் கதைகள்' என்ற வலைப்பூவில் வலையேற்றியிருந்தார். அருமையான கதைகள். அவற்றைப் படித்த போது தான் அவர் அறிமுகம் ஆனார்.)

4. இராமபிரசாத் (பச்சோந்தி) (அண்மையில் தமிழ்மண நட்சத்திரமாய் இருந்தவர். அதனால் அறிமுகம் தேவையில்லை)

4a. சிவமுருகன் (இவரும் தமிழ்மணத்திற்கு புதியவர். எங்க ஊர்க்காரர். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலைப் பற்றி வண்ண வண்ண புகைப்படங்களுடன் ஒரு தொடரை எழுதிக் கொண்டு இருக்கிறார்).

அப்பாடா கடமை முடிஞ்சது.

கடமை புரிவார் இன்புறுவார்
என்னும் பண்டை கதை பேணோம்
கடமை அறியோம்; தொழில் அறியோம்
கட்டென்பதனை வெட்டென்போம்
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவும் தொலைத்திங்கு
களியுற்றென்றும் வாழ்குவமே

இப்படி பாட நானென்ன பாரதியா? :-)

40 comments:

Unknown said...

பின்னூட்ட வாரம் முடிந்து குமரன் பதிவு வாரத்துக்கு வந்திருப்பது சூப்பர்ஸ்டார் ரஜினி இமயமலை பயணத்தை முடித்துகொண்டு படம் எடுக்க வந்தது போல் மகிழ்ச்சி தருகிறது

வாழ்க எங்கள் ஆன்மிக சூப்பர்ஸ்டார்

Unknown said...

ஜீவா பதிவில் சற்றுமுன் நான் இட்ட பின்னூட்டம்
----------------


அன்பு ஜீவா,

குமரன் தான் ஆன்மிக சூப்பர்ஸ்டார் என்பதை உங்களிடம் யாரும் சொல்ல கூடாது என குமரன் சொன்னார்.அதனால் குமரன் தான் ஆன்மிக சூப்பர்ஸ்டார் என்ற ரகசியத்தை நான் உங்களிடம் சொல்ல போவதில்லை.

இலவசக்கொத்தனார் said...

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. எல்லாருமே ஒரு கலவையாய்தானே எழுதி இருக்காங்க. நீங்களும் இன்றைக்கு பிடித்தவை, நேற்று பிடித்தவை,நாளை பிடிக்கும் என எதிர்பார்ப்பவை, எப்படி எதையாவது எடுத்து வைக்க வேண்டியதுதானே. (எவ்வளவு வைன்னு வையாதீங்க.)

மற்றபடி என்னை கூப்பிட நினைத்தமைக்கு நன்றி. நான் ஆள் பிடிக்கும் பொழுது நீங்கள் ஏற்கனவே பிடிபட்டு விட்டதால்தான் அழைக்கவில்லை.

இலவசக்கொத்தனார் said...

நீங்களும் எதாவது சொன்னாதானே நானும் வந்து பதில் மரியாதை செய்ய முடியும். இப்படி கஷ்டப்படுத்தறீங்களே.

இலவசக்கொத்தனார் said...

//நானும் எழுதலாம் எழுதலாம்ன்னு யோசிச்சு யோசிச்சு ஒன்னும் ஓட மாட்டேங்குது.//

என்ன இப்படி சொல்லறீங்க? நான் முதலில் போட்ட நாலு பதிவுகள், போடவிருக்கும் நான்கு பதிவுகள், போட விரும்பும் நாலு பதிவுகள், நான் ரசித்த (என்னுடைய) நாலு பதிவுகள்ன்னு கலக்க வேண்டியதுதானே. இந்த மாதிரி நாலு பதிவு போடற அளவு பிளாக் வச்சிருக்கீங்களே.

இலவசக்கொத்தனார் said...

அப்பாடா கஷ்டப்பட்டு நாலு பின்னூட்டம் போட்டு பதில் மரியாதை செஞ்சாச்சு. ஓக்கேவா? :)

சிவமுருகன் said...

‘நாலுபேர் நல்லா இருக்கனும்’ என்ற உங்கள் கண்ணோட்டத்திற்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்நால்வரில் எம்மையுன் ஒருவனாய் ஆக்கியதை கண்ட சமயத்தில் கண்கள் எனோ பனித்தது. அதன் காரணத்தை சிறு அனுவையும் அசைவிக்கும் அவனுக்கே வெளிச்சம்.

உங்களின் ஊக்கம் உற்சாகமளித்தது, ஆலோசனை பல நன்பர்களையும், பெரியோர்களின் அறிமுகமளித்தது. நன்றிகள் பல.

தொடரட்டும் உங்கள் பணி.

பரவட்டும் உங்களின் தமிழோசை உலகெலாம்.

Iyappan Krishnan said...

என்னையும் இந்த ஆட்டைக்கு கூப்பிட்டதுக்கு நன்றி குமரன் .. எழுத ஆரம்பிக்கனும்.. அப்புறம் பேசலாம்

அன்புடன்
ஜீவா

சிங். செயகுமார். said...

ஆன்மீக குமரன் என்ன இப்பிடி ஏம்மாத்திடேள்!

rnatesan said...

தாங்கள் எங்களை பார்க்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி!!
ஏதோ மறுபடியும் விருந்து வைக்கப் போறீங்கன்னு நினைக்கிறேன்!!ஜமாய்ங்க!!
உங்க நண்பரும் மதுரையை பத்தி சூப்பரா எழுதியிருக்கார்!!\வாழ்த்துக்கள்!!

குமரன் (Kumaran) said...

செல்வன். நல்ல ஐடியா கொடுத்திருக்கிறீர்கள். அடிக்கடி இமயமலை போய் வரலாம் போல் இருக்கிறது. முடிந்தால் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பின்னூட்ட வாரமாய் அறிவிக்க வேண்டியது தான் போல. :-)

குமரன் (Kumaran) said...

அது சரி. போய் ஜீவா பதிவுல போட்டுக் குடுத்துட்டீங்களா செல்வன். பட்டத்தைக் குடுத்ததே நீங்க தானே. அதனால நான் சொல்லச் சொல்லக் கேக்காம போய் போட்டுக்குடுத்திட்டீங்க போல. :-)

குமரன் (Kumaran) said...

என்ன கொத்ஸ். கலவை கிலவைன்னுக்கிட்டு. :-) கலவைன்னாலே காஞ்சிபுரம் தான் நினைவுக்கு வருது. :-)

நீங்க எத்தனை வை தான் வைத்து எழுதுங்கள். நான் வையமாட்டேன். ஏன்னா நான் வைகைக் கரைக்காரன். :-)

குமரன் (Kumaran) said...

பதில் மரியாதை செய்ய நினைத்ததற்கு நன்றி கொத்ஸ்.

குமரன் (Kumaran) said...

//நான் முதலில் போட்ட நாலு பதிவுகள், போடவிருக்கும் நான்கு பதிவுகள், போட விரும்பும் நாலு பதிவுகள், நான் ரசித்த (என்னுடைய) நாலு பதிவுகள்ன்னு கலக்க வேண்டியதுதானே//

அங்க தான பிரச்சனையே. எல்லாப் பதிவும் பிடிக்குதே. :-)

குமரன் (Kumaran) said...

பதில் மரியாதை செஞ்சதற்கு நன்றி கொத்ஸ்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்கள் நன்றிகளுடன் சிவமுருகன். சீக்கிரம் உங்க 'நாலு' பதிவையும் போடுங்க.

குமரன் (Kumaran) said...

அடடா...புள்ளைன்னா இப்படி இல்ல இருக்கணும். கருமமே கண்ணாயினார் மாதிரி பேசக் கூட நேரம் இல்லாம எழுதுறதுக்காக ஓடிப் போறீங்களே ஜீவா...

குமரன் (Kumaran) said...

செயகுமார். ஏற்கனவே என் நட்சத்திர வாரத்துலயே நிறைய என்னைப் பத்தி உளறியாச்சு. இன்னும் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. அதனால சங்கிலியை உடைக்காம அடுத்த லெவலுக்குக் கொண்டு போயிட்டேன். என்னை சங்கிலியில இணைத்து இந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி, மீண்டும் ஒரு முறை. :-)

குமரன் (Kumaran) said...

//ஏதோ மறுபடியும் விருந்து வைக்கப் போறீங்கன்னு நினைக்கிறேன்//

நடேசன் சார். நான் எங்கே சார் அப்படி சொன்னேன். நம்ம பதிவெல்லாம் விருந்தா? தொடர்ந்து எழுதுவதைத் தான் எழுதிக் கொண்டு இருக்கப் போகிறேன். தொடர்ந்து நீங்களும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

Karthik Jayanth said...

//நானும் எழுதலாம் எழுதலாம்ன்னு யோசிச்சு யோசிச்சு ஒன்னும் ஓட மாட்டேங்குது //

படிக்கலாம்னு ஆசையா வந்தா இப்படி பண்ணிடேங்களேப்பு :-(

சும்மா இந்தன பதிவு வச்சி கலக்குறிங்க. நான் எல்லாம் சும்மா ட்ரயைலர் அப்புறம் பதிவுனு உங்க நோட்ஸ வச்சி பிளேடு போடுறேன். என்னமோ போங்க :-)

குமரன் (Kumaran) said...

என்னப்பு பண்றது....நிறைய வலைப்பூக்களைத் தொடங்கியாச்சு. அதுல எல்லாம் எழுதுறதுக்கே நிறைய விஷயம் இருக்கு. ஆனா ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் பதிவு போடறதுன்னு முடிவு பண்ணியாச்சு, நடுவுல பின்னூட்ட வாரம் வேற விட்டாச்சு. யோசிச்சா நிறைய எழுதலாம் தான். மொதல்ல 'நாலு' பதிவே போட வேணாம்ன்னு தான் நினைச்சேன். ஆனால் நம்மளை மதிச்சு பேரச் சொன்ன செயகுமாரும், சிபியும் வருத்தப் படுவாங்க; இன்னும் நாலு (சரி அஞ்சு) பேரைக் கைகாட்டற வாய்ப்பும் போயிடும்ங்கறதால குயிக்கா ஒரு பதிவு போட்டுட்டேன். இந்தப் பதிவைக் கணக்குல சேத்துக்காம இன்னைக்கி இன்னொரு பதிவு போட்டுறலாம்ன்னு இருக்கேன். அதையும் வந்து படிங்கப்பு.

Ram.K said...

//உலகத்துல எதுங்க ரொம்ப முக்கியம்ன்னு கேட்டா நாலு பேர் நல்லா இருக்கணும்; அதுக்கு நம்மால முடிஞ்சது செய்யணும்ன்னு நெனைக்கிற நல்ல நெனப்பு தான்னு சொல்லலாங்க.//

இப்படிச் சொல்லிவிட்டு நாலு பேரைக் காண்பித்துவிட்டீர்களே. அந்த நாலு பேர் நிம்மதி போச்சே.

:))

குமரன் (Kumaran) said...

என்ன இராமபிரசாத் அண்ணா. இப்படி சொன்னா எப்படி? இன்னொரு பதிவு போட்டு இன்னும் ஒரு நாலு பேரைக் கை காட்டி விட உங்களுக்கு ஒரு வாய்ப்புன்னு நினைச்சுக்கோங்களேன். :-)

வெளிகண்ட நாதர் said...

நம்மலையும் நாலு சங்கலியில கோத்து வுட்டுட்டீங்களா,குமரன். போடறேன், உங்களுக்காக பிடிச்ச நாலு போடறேன்.

நன்றி

வெளிகண்ட நாதர்

குமரன் (Kumaran) said...

ரொம்ப நன்றி வெளிகண்டநாதர் சார்.

Unknown said...

அது சரி. போய் ஜீவா பதிவுல போட்டுக் குடுத்துட்டீங்களா செல்வன். பட்டத்தைக் குடுத்ததே நீங்க தானே. அதனால நான் சொல்லச் சொல்லக் கேக்காம போய் போட்டுக்குடுத்திட்டீங்க போல. :-) ///

நான் ஒண்ணும் போட்டு குடுக்கலை குமரன்.

நீங்க சொன்னதை அப்படியெ பின் பற்றியிருக்கிறேன்.நீங்க சூப்பர்ஸ்டார் என்பதை ஜீவாவிடம் சொல்லக்கூடாது என்றீர்கள்.அதனால் அவர் பதிவில் போய் "குமரன் தான் சூப்பர்ஸ்டார் என்ற ரகசியத்தை சொல்ல மாட்டேன்" என சொல்லிவிட்டு வந்தேன்:-))

Ram.K said...

பதிவு போட்டாச்சு.

http://tamiltheni.blogspot.com/2006/03/4.html

குமரன் (Kumaran) said...

ரொம்ப நன்றி இராம்பிரசாத் அண்ணா. வந்து படிச்சுப் பின்னூட்டமும் போட்டுட்டேன்.

G.Ragavan said...

கழுவுற மீன்ல நழுவுற மீனுன்னு சொல்வாங்க.....குமரன் அந்த வகையறா போல இருக்கு.....ம்ம்ம்....கூப்பிட்டதெல்லாம் சரி..ஏமாத்திட்டீங்களே........

துளசி கோபால் said...

நம்ம கொத்ஸ்,என்ன அருமையான( மெய்யாலுமே) ஐடியாவெல்லாம் கொடுத்துருக்கார் பாத்தீங்களா?
அதைப் புடிச்சுக்கிட்டு மளமளன்னு எழுதித் தள்ள வேண்டியதுதானே!

குமரன் (Kumaran) said...

ஏமாத்துனதுக்கு மன்னிக்கணும் இராகவன். அதான் நம்மளைப் பத்தி சொல்லாத நாளே இல்லையே! தனியா இந்தப் பதிவுல வேற சொல்லணுமான்னு விட்டுட்டேன். :-)

குமரன் (Kumaran) said...

நீங்க வேற துளசியக்கா. ஏற்கனவே என் வலைப்பூக் கணக்கைப் பாத்துட்டு அவங்கவங்க அடிக்க வர்றாங்க. முடிஞ்ச வரைக்கும் எல்லாரையும் நம்ம கைப்புள்ளயைப் பாக்க அனுப்பிக்கிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா கொத்ஸ் சொன்ன ஐடியாவைப் பாத்து மளமளன்னு எழுதச் சொல்றீங்க. இன்னொரு கைப்புள்ளயை இந்தத் தமிழ்மணம் தாங்காது. நான் நல்லவனில்லை. இந்த உலகத்துல ஒரே ஒரு நல்லவன் தான். அது கைப்புள்ள தான்.

வெட்டிப்பயல் said...

//இன்னொரு கைப்புள்ளயை இந்தத் தமிழ்மணம் தாங்காது. நான் நல்லவனில்லை. இந்த உலகத்துல ஒரே ஒரு நல்லவன் தான். அது கைப்புள்ள தான்.
//

ஓ நீங்களும் கைப்புள்ளைக்கு சப்போர்ட்டா? வந்து வெச்சிக்கறேன்.

நாமக்கல் சிபி said...

//சூப்பர்ஸ்டார் ரஜினி இமயமலை பயணத்தை முடித்துகொண்டு படம் எடுக்க வந்தது போல் மகிழ்ச்சி தருகிறது//

பின்னூட்ட வாரத்தை வெற்றிகரமாக முடித்து வந்து எனது+சிங்.செயகுமாரின் சங்கிலியில் இணைத்துக்கொண்ட குமரன் அவர்களுக்கு நன்றி.

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

Iyappan Krishnan said...

குமரன் அண்ணாச்சி.. எங்கிட்டு போனீய ஆளையே காணல..


அன்புடன்
ஜீவா

குமரன் (Kumaran) said...

என்ன பார்த்திபன் சார். வந்து பாத்துக்கறேன்னு சொல்லிட்டுப் போய் ரொம்ப நாள் ஆகுது. இன்னும் ஆளைக் காணோம்? குண்டக்க மண்டக்கன்னு ஏதாவது எழுதித் தள்ளப் போயிட்டீங்களா என்ன? :-)

குமரன் (Kumaran) said...

தாமதமான பதில் பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் சிபி. இமயமலைக்கு இன்னொரு தடவை சுற்றுலா சென்றுவிட்டதால் உடனே பதில் எழுத முடியவில்லை. :-)

குமரன் (Kumaran) said...

ஜீவா....ஒரு ரெண்டு வாரம் லீவுல போயிருந்தேன். அதான் பார்க்க முடியலை. இப்ப திரும்பி வந்தாச்சு. வெண்பா எழுத உங்ககிட்ட கத்துக்கிட்டு எழுதித் தள்ளிடலாம்ன்னு இருக்கேன். முடிஞ்சா சுஜாதாவுக்கும் அனுப்பலாம். அவர்தான் படிக்காமலேயே கிழிச்சுப் போட்டுடுவார் - போய்யா இப்ப எல்லாம் எல்லாருமே வெண்பா எழுதுறாங்கன்னுட்டு. ;-)

குமரன் (Kumaran) said...

அப்பாடா....நாலு பேரு நல்லா இருக்கணும்ன்னு எழுதுன பதிவுக்கு நாப்பது பின்னூட்டம் வந்தாச்சு. இது போதும். :-)