Saturday, October 15, 2005

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!


எம். எஸ். பாடின இந்தப் பாட்ட கேட்டுருக்கீங்களா? ரொம்ப உருக்கமான பாட்டு. மூதறிஞர் இராஜாஜி எழுதினது.

கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, 'எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்'ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் 'ஏம்மா...எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்க...நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே'ன்னு கேட்டதுக்கு, 'கண்ணா. கஷ்டம் வர்ரப்பதான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்'னு சொன்னாங்களாம்.

இந்தப் பாட்டுல 'நீயிருக்கிறப்ப எனக்கு எந்த குறையும் இல்ல' அப்படின்னு இராஜாஜி எழுதியிருக்கார். மொதல்ல பாட்டை முழுசா குடுத்துட்றேன். அப்புறம் வரிகளோட அர்த்தம் பார்க்கலாம்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா...எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.

எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா...அதனால் என்ன...நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு...அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர...வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா...நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா...திருமலையில் நிற்கும் என் அப்பா...என்னைக் காப்பவனே கோவிந்தா...

மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா...உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்...என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா...நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்...அது போதும் எனக்கு...நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா...

வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது... அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்... அழகிய சுருள்முடியை உடைய கேஸவா... மலையப்பா...நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை...உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மஹாலக்ஷ்மி இருக்கும் போது...நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்...ஆனால் அன்னையோ அப்படி அல்ல...அவள் கருணைக்கடல்...என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்...அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா... மணிவண்ணா... மலையப்பா... கோவிந்தா...கோவிந்தா....

23 comments:

Anonymous said...

அருமையான பாடல். பொருள் சொன்னதற்கு நன்றி.

Anonymous said...

This is one of the best song i had ever heard. Although i can't deciper some words, your posting had clarified those lines. Thanks for the post.

Mahesh.C.V.

Unknown said...

nalla paathivu. Nandru. Avaraavar istta deivathai angey mattri kollalam. Villakathirku Nandri.

Anbudan,
nattu

Anonymous said...

This song is the best song that i have heard.Other songs are always about asking something to God.This is the only Positive Song which says i have everything.Thanks for the Meaning.

Anonymous said...

As Mahesh said this is the one of the best songs you can ever listen to. Thanks for posting the meaning...your style is very good, flowing naturally. You should have enjoyed this song very much.

குமரன் (Kumaran) said...

நன்றி விஷ்ணு பக்தன், மகேஷ், நடராஜன், லக்ஷ்மி, திருப்பதி...ஏதோ என்னால் ஆன சிறு தொண்டு.

G.Ragavan said...

நல்ல பாடல். கேட்டிருக்கிறேன். ஆனால் இன்றுதால் எழுத்திலும் படிக்கிறேன். அருமையான பாடலும் விளக்கமும். நல்ல முயற்சி.

குமரன் (Kumaran) said...

நன்றி ராகவன். எனது மற்ற பதிவுகளையும் படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

Dear kumaran
intha padalai thinamum naan verumbi ketbathundu.
enna azhuthamana anal elimayana varikal.thagkalathu oorai padalukku prumai serkirathu. ponmalar naatramudaithu. nandry oongal valaipathiven rasigan

குமரன் (Kumaran) said...

நன்றி TRC. உங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்ல முடியுமா? ஒவ்வொன்றாய் என் வலைப்பதிவுகளைப் படிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். ஆனால் உங்கள் profile போனால் உங்களைப் பற்றி மேல் விவரங்கள் இல்லை.

குமரன் (Kumaran) said...

திரு.TRC அவர்களே. 'பொன்மலர் நாற்றமுடைத்து' என்று சொல்லியிருக்கிறீர்கள். கொஞ்சம் விளக்கமுடியுமா?

தி. ரா. ச.(T.R.C.) said...

THIRU KUMARAN AVARKALE EN blog is uma108trc.blogspot.com 'Kaucicome'

Thangathil seiyapatta poovilirunthu
iyarkaiyana vasanaiyum serthal antha malar elloralum vasikarikkapadumo appadi kurai oondrum illai oongal oorayal elloralum verumbapadukirathu Nandri oongal pathiluraikku TRC

குமரன் (Kumaran) said...

விளக்கத்திற்கு நன்றி TRC

Anonymous said...

Very Sweet Song.

SP.VR. SUBBIAH said...

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா.... என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்

இங்கே கோவையில் பாடுபவர்கள் ஆலாபனையில்
இப்படிப் பாடுவார்கள்:

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா ,மணிவண்ணா

எது சரியானது - ராஜாஜி அவர்கள் எழுதியதா? இல்லை இங்கே பாடப் படுவதா
இரண்டுமே நன்றாக உள்ளது. அந்த மாலவனின் புகழைச் சொல்வதுதான் என்றாலும் - ராஜாஜி அவர்கள் எழுதியது இருந்தால் ஒத்துப் பார்க்க வேண்டுகிறேன்
அன்புடன்
SP.VR. சுப்பையா

குமரன் (Kumaran) said...

வாத்தியார் ஐயா. நான் கேட்டவரையில் மணிவண்ணா என்பது பல்லவியில் வருவதில்லை. ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் வருகிறது. அப்படித்தான் இராஜாஜி அவர்களும் எழுதியிருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

Anonymous said...

என் மனம் கவர்ந்த எம்.எஸ். அம்மாவின் "குறை ஒன்றும் இல்லை"
பாடலை இந்த தளத்தில் பார்த்த பொழுது பாடல் வரிகளில் மனம் லயித்தேன்
நான் தினந்தோறும் கேட்டு ரசிக்கும்
மிக அருமையான பாடல்

Nagai.S.Balamurali.Chennai.
nagaisbalamurali@yahoo.co.in

குமரன் (Kumaran) said...

நன்றி திரு. நாகை பாலமுரளி. அடிக்கடி வருகை தாருங்கள்.

Subbiah Veerappan said...

குந்தியின் கதையுடன் பாட்டையும் கொடுத்துள்ளீர்கள். ஆனந்தமாக உள்ளது
அடித்துப்போடும் தன்மையுடையதாகவும் இருக்கிறது
இது வேறு விதமான அடி
இன்பமான அடி.
மனதை வருடிக்கொடுக்கும் அடி!
வாழ்க நீவிர்!
(ப்திவை மிண்டும ஒருமுறை படித்து இதை எழுதுகிறேன்)

வடுவூர் குமார் said...

எனக்கும் பிடித்த பாடல் இது.அப்படியே யூடியுப்/இ ஸ்னிப் தொடுப்பு கொடுத்திருக்கலாமே??

குமரன் (Kumaran) said...

தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி வாத்தியார் ஐயா. இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய இந்த இடுகையைப் பரணில் பார்த்து வந்தீர்கள் என்று நினைக்கிறேன். சரியா?

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை யூட்யூப் பற்றி எல்லாம் தெரிவதற்கு முன்னர் எழுதியது வடுவூர் குமார். இந்த இடுகையின் கீழே (பின்னூட்டங்களுக்குக் கீழே) பாருங்கள். என்னுடைய 'கேட்டதில் பிடித்தது' வலைப்பதிவில் இந்தப் பாடலின் யூட்யூப் தொடுப்பு கொடுத்த இடுகைக்குத் தொடுப்பு இருக்கிறது. இரவிசங்கரும் இந்தப் பாட்டைப் பற்றி ஒரு இடுகை இட்டார்.

RAJARISHI said...

எத்தன வாட்டி கேட்டாச்சு, அலுக்கலையே, கண்ணா..பெரியவர் ராஜாஜி, பாட்டில், தேனையும்,வசிய மருந்தையும் குழைச்சு..தோய்ச்சி.. எழுதியிருப்பாரோ...இதை யார் பாடினாலும் கேட்க மனம் லயிக்கற்து...ஆஹா..என்ன சுகம்..என்ன சுகம்...