Monday, October 10, 2005

கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு?

சின்ன வயசிலெ இந்த மகாபாரதம் படிக்க ஆரம்பிச்சிட்டா போதும், சோறு தண்ணி வேணாம் எனக்கு. அவ்வளவு சுவாரசியமா போய்க்கிட்டு இருக்கும். நல்லவனா எப்படி வாழ்றதுன்னு கத்துக்கற அதே நேரத்துல ஊர எப்படி எப்படி எல்லாம் ஏமாத்தலாம்ங்கறதையும் அதுல கத்துக்கலாம். அப்பப்ப விடுகதை, கேள்வி பதில், துணுக்குகள், புதிர்கள், கதைக்குள் கதை அப்படின்னு வந்துக்கிட்டே இருக்கும். அதுல இருக்கிற எல்லா புதிர்களிலும் நான் இப்பொ எழுதப்போற புதிருக்குத் தான் எனக்கு இன்னும் பதில் தெரியல.

உங்ககிட்ட யாராவது வந்து 'கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு?'ன்னு கேட்டா என்ன சொல்வீங்க? டக்குன்னு 'அண்ணன் தம்பி'ன்னு தானே? நானும் அப்படித்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன். ஒரு நாள் எங்க பாட்டிக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிறப்ப, 'யமன் சூரியனோட மகன்'ன்னு சொன்னாங்க. உடனே எனக்கு கர்ணனும் தருமனும் தான் ஞாபகத்துக்கு வந்தாங்க.

மகாபாரத்தின் படி, கர்ணன் சூரிய தேவனின் 'அருளால்' குந்தி தேவிக்குப் பிறந்தவன்; தருமன் யம தரும ராஜனின் 'அருளால்' குந்தி தேவிக்குப் பிறந்தவன். அப்படின்னா கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு? அண்ணன் தம்பியா? இல்லியே...கர்ணனும் யமனும் சூரிய தேவனின் மக்கள். அப்படின்னா, கர்ணனுக்கு அண்ணன் மகன் தானே தருமன்...தம்பி இல்லியே? சரியா?

இந்த கேள்விக்கும இன்னும் எனக்கு யாரும் சரியா பதிலே சொல்லல...உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களே!!!!

33 comments:

சிவா said...

குமரன், இப்படி எல்லாம் எடக்கு மடக்கா யோசிக்க கூடாது. யோசிச்சிட்டு எங்களை கேள்வி வேற கேக்கறீங்க. பதிலை நீங்களே சொல்லிருங்க

Anonymous said...

Yaar arrulal piranthal innanga? Kundhi devi thanney pettrargal.Appa Annan and Thambi thaan.

குமரன் (Kumaran) said...

சிவா, எனக்கு நிஜமாவே இதுக்கு பதில் தெரியாது.

நடராஜன், ஒரே அம்மாங்கறதாலே கர்ணனும் தருமனும் அண்ணன் தம்பின்னா, தருமனும் நகுலனும் அண்ணன் தம்பி இல்லியா? அவங்களைப் பெத்தது ஒரே அம்மா இல்லியே? குந்தியும் மாத்ரியும் (இருவரும் பாண்டுவின் மனைவியர்) தானே? அப்ப ஒரே அப்பாங்கறதாலே அண்ணன் தம்பின்னு சொல்வீங்களா?

சகோதர உறவு அம்மாவைப் பொறுத்தா? அப்பாவைப் பொறுத்தா?

எது நமக்கு வசதியா இருக்கோ அதை எடுத்துக்க வேண்டியது தான் போல....

Unknown said...

Innanga Kumaran?Orrey thai allathu orrey thanthai irrunthallum annan thambi thaan.

Sagathara urravu rendu perryum porauthathu.

Muthalili, intha mathiri confusion kondu vara kalyanangallai niruthanum.

Anbudan,
Nattu

Anonymous said...

sagotharan = saga + utharan endraal orae vayittril piranthavarkaL (utharam enRaal vayiru).
appadiyendraal amma vazhi thaan kanakku aagum.

endrendrum anbudan
Seemachu

குமரன் (Kumaran) said...

சீமாச்சு, அப்படியென்றால் பாண்டவர் ஐவரும் சகோதரர்கள் அல்ல என்கிறீர்களா? ராம லக்ஷ்மண பரத சத்ருக்னர்கள் சகோதரர்கல் அல்ல என்கிறீர்களா? அப்புறம் எதற்கு அவர்களை ஒற்றுமையான சகோதரர்களுக்கு உதாரணமாக சொல்கிறார்கள்?

குமரன் (Kumaran) said...

நடராஜன், அதைதான் நானும் சொல்றேன். ஒரே தந்தைக்குப் பிறந்தால் சகோதரர்கள் என்றால், யமனும் கர்ணனும் சூரியனுக்குப் பிறந்தவர்கள் தானே? அப்போது அவர்கள் சகோதரர்கள் தானே? அப்ப கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு? தருமன் கர்ணனுக்கு அண்ணன் மகன் தானே?

Anonymous said...

Ennai poratha varaikkum sagothara murai thandai vazhi thaan.IF two peole belong to the same kothram they are brothers.And this Kothram rule comes via ur father.Thatz why if two brothers are there,and they have sons.Now these sons are brothers because they are under one gothram.But if we one sister and one brother z there,their sons are not brothers because they dont belong to one gothram.(beacuse the lady after marriage falls under diffrent gothram).At the outset if we see thandai vazhiya base panni thaan ellam varathu.

Anonymous said...

Morever sagotharargal definition does not hold good in this scenario.Yen endraal they are born not by the normal way but theivak kuzhaindagal.Normalaa Ganeshwarum murugarum annan thambighalnu solrom.Aana Ganeshwarar paarvathikku theiva arulaala pirandavarnu kevipattu erukken.appadina murugarum ganeshwarum annan thambi ellaya?

We are calling Rama ,lakshmana,bharatha sathrukanaa as brothers because they belong to one gothram.(all following dasarathaas gothram).

Anonymous said...

and morever,even now if two people belong to the same gothram(irrespective of their parents are diffrent) they are brothers.
Ennai porathvaraikkum karnanum dharmanum ore gothrama erukadarnaala avangha brothers.
FYI Gothram is the particular spritual way u follow.For example Kashyapa gothram ,Bharathwaaja Gothram etc We follow the path of rishis like vishwamira,kashyapa etc.).
Even now we assume if a gal and guy belongs to the same gothram,they are brother and sister and thatz y for marriage the first thing they look is that the guy and gal shud be of diff gothram.

குமரன் (Kumaran) said...

லக்ஷ்மி...சகோதரன் அப்படிங்கற சொல்லுக்கு 'சக உதரன்' - 'ஒரே வயிற்றில் பிறந்தவர்' என்று தான் பொருள்...அதன் படி தாயைப் பொறுத்துத் தான் சகோதர முறை வரும் என்னும் வாதத்தை ஒத்துக்கொள்ளலாம்.

அதே நேரத்தில் நீங்கள் சொல்வது போல் 'கோத்திர முறை' தந்தை வழியில் தான் வந்து கொண்டிருக்கிறது.

இந்த வழக்கில் எது முதன்மைப் பெறுகிறது என்பது தான் புரியாத புதிராய் இருக்கிறது.

Anonymous said...

Nalla kelvi kettenga ponga...namma puranathula innum intha maathiri kuzhappam innum neraiya irukku...

G.Ragavan said...

பழந்தமிழ்ச் சமூகம் தாய்வழிச்சமூகமாக இருந்திருக்கிறது. கர்ணனும் தருமனும் தமிழர்கள் இல்லையே.

சரி. பிரச்சனைக்கு வருவோம். இந்த உறவு மாறாட்டங்கள் இன்றும் பல இடங்களில் பார்க்கலாம். ஊர்ப்பக்கம் போனால் தெரியும். ஒருவர் வழியில் அவருடைய அக்கா மாமா தாத்தா அண்ணன் என்று பெரிய ரவுண்டு அடித்து முறைப்பெண்ணாக வருவார். அதே வழியில் பாதியில் திசை மாறி இன்னொரு பெரிய ரவுண்டு அடித்து தமக்கை முறை வருவார். ஆனாலும் நமக்குத் தோதாக எது இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்வார்கள். அப்படித்தான் இங்கும் எடுத்துக் கொள்ள வேண்டும். கதையில் சூரியனையும் கூற்றுவனையும் விட குந்தி முக்கியம் என்பதால் இருவரையும் அண்ணன் தம்பிகள் என்றே எடுத்துக் கொள்ளலாம் என்பது எனது கருத்து.

Anonymous said...

vellaiya paarungayya.....

குமரன் (Kumaran) said...

நிச்சயமா நம்ம வேலையப் பார்க்க வேண்டியது தான். எப்படியும் இந்த புதிருக்குப் பதில் தெரியப்போவதில்லை.

தி. ரா. ச.(T.R.C.) said...

Kumaran avargale karnanum darumarum sooriyan matrum yamadhrmarajanin arulal piranthavargal avargalukku piranthavargal allar.indrum silaperkalukku rameswaram sendrapennum allathu shashti viratham iruntha pen makkal pakiyam oundakirathu. antha kuzhanthaykal avarkalukku piranthavarkala?

குமரன் (Kumaran) said...

திரு.TRC

நீங்கள் சொல்வதை நானும் ஏற்றுகொள்கிறேன். கர்ணன் சூரியதேவன் அருளாலும் தருமன் யமதருமராஜன் அருளாலும் பிறந்தவர்கள் தான். அதை சஷ்டி விரதம் இருந்தும் ராமேஸ்வரம் சென்ற பின்னும் பிறக்கும் அருட்குழந்தைகளைப் போல் எண்ணலாம் தான். ஆனால், மகாபாரதம் முழுவதும் கர்ணன் சூதபுத்திரன் என்று சொல்வதைப் போலவே சூரிய குமாரன் என்றும் அழைக்கப் படுகிறானே? அர்ச்சுனன் இந்திர குமாரன் என்பதால் தானே அவனுக்கு தேவலோக இளவரசுப் பட்டம் கட்டுகிறார்கள்? அர்ச்சுனன் இந்திரன் 'அருளால்' பிறந்தவன் என்றால் இளவரசுப் பட்டம் ஏன் கட்டவேண்டும்? சாதாரண மானிடனுக்கு இந்த பதவி கிடைக்குமா? அதனால் இவர்களை தேவர்களின் மைந்தர்கள் என்று சொல்வது சரியே.

இந்தப் பதிவு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. அதனால் இதனைத் தாங்கள் கடுமையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னியுங்கள்.

யாத்ரீகன் said...

ரொம்ப முக்கியமான பிரச்சனை பாருங்க ;-)

Ganesh Gopalasubramanian said...

குழப்பங்கள் மகாபாரதத்திலும் இருக்கா.... நான் இந்த மாதிரி யோசிச்சதே இல்ல குமரன்

Ganesh Gopalasubramanian said...

நான் சொன்னது இந்த மாதிரி உறவு குழப்பங்கள்

தி. ரா. ச.(T.R.C.) said...

Thru Kumaran

ungal pathilukku nandri. En manam varuthapadavellai.sama karuthukal konda rasanay oolla nanban kidaithathukku kadavulukku nandri TRC

குமரன் (Kumaran) said...

யாத்திரீகன்...இது ரொம்ப முக்கியமான பிரச்சனைன்னு சொல்லமுடியாதுங்க...

குமரன் (Kumaran) said...

ஆமாம் கணேஷ்...இந்த மாதிரி உறவுக் குழப்பங்கள் எல்லா இடத்திலயும் இருக்கு...மகாபாரதத்துல கூட...

குமரன் (Kumaran) said...

நன்றி TRC. அடிக்கடி வந்து போங்க. ஒரு நாளுக்கு ஒரு பதிவுன்னு என் எல்லா வலைப்பக்கங்களிலும் வாரத்திற்கு ஒன்றாவது எழுதுவதாய்த் திட்டம்.

Anonymous said...

hahahaha nalla kathaiyaa irukkE

குமரன் (Kumaran) said...

பாராட்டிற்கு நன்றி அனானிமஸ் நண்பரே.

Unknown said...

குமரன்,

விக்ரமாதித்தனிடம் வேதாளம் கேட்ட முறை தெரியா கேள்விக்கு பதில் என்னவோ அதுதான் இதற்கும் பதில் போல:)

குமரன் (Kumaran) said...

உண்மை தான் செல்வன். :-)

நாமக்கல் சிபி said...

குமரன்,
பாண்டவர்கள் யாரும் பாண்டுவின் மைந்தர்கள் என எனக்கு தோன்றவில்லை.

பாண்டு ஒரு முறை வேட்டையாட செல்லும் போது அங்கு ஒரு முனிவரும் அவர் துணைவியாரும் மாண் வேடத்தில் உறவு கொண்டிருக்கும் வேளையில் பாண்டு ஆண் மான் மேல் அம்பு எய்ய, அந்த முனிவர் சுய ரூமம் கொண்டு, பாண்டுவை சபித்தார்.

சாபம் என்னவென்றால் இனி பாண்டு எந்தவிதமான சுகங்களிலும் ஈடபடக்கூடாது.

இதனால் பாண்டு, நாட்டை பிதாமகர் மற்றும் விதுனரின் பொருப்பில் விட்டு தன் இரு மனிவியுடனும் காடு செல்கிறான். அப்பொழுது பாண்டுவிற்கு பிள்ளைகள் இல்லை.

காட்டிற்கு சென்றவுடன் தன் மனைவிகளிடம் நடந்ததை சொல்ல, குந்தி துருவசர் அவளுக்கு சொல்லிய மந்திரத்தை பற்றி சொல்கிறாள். அந்த மந்திரத்தை பயன்படுத்தி தன் இரு மனைவிகளையும் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுமாறு பாண்டு சொல்கிறான்.

அந்த மந்திரத்தை பயன்படுத்தி பிறக்கும் குழந்தைகள்தான் பாண்டவர்கள்.

எமதர்மன் அம்சத்தில் யுதிஷ்டிரன்
வாயுவின் அம்சத்தில் பீமன்
இந்திரன் அம்சத்தில் அர்ச்சுனன்.
அஸ்வினி குமாரர் அம்சத்தில் நகுலம்/சகாதேவன் இரட்டையர்கள்.

இவர்கள் அனைவரும் தெய்வ அருளால் பிறந்தவர்கள் என்பதே கதை.

ஒரே தாயின் வயிற்றில் பிறந்ததால் கர்ணனும் தருமனும் சகோதரர்களே!!!

குமரன் (Kumaran) said...

கதையைச் சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள் பாலாஜி. ஆனால் கடைசி வரியில் திரும்பவும் என் கேள்விக்கே வந்துவிட்டீர்கள். அன்னை ஒருவர் என்பதால் அவர்கள் இருவரையும் சகோதரர் என்னலாம்; சரி. ஆனால் ஒருவர் தந்தையின் பிள்ளை; இன்னொருவர் பிள்ளையின் பிள்ளை - அப்போது அவர்களுக்கு இடையே ஆன உறவு என்ன என்பது தானே என் கேள்வி?

நாமக்கல் சிபி said...

உதரம் என்றால் வயிறு...
சக உதரன் என்றால் ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் என்று பொருள்... இப்பொழுது நீங்களே சொல்லுங்கள்!!!

நாமக்கல் சிபி said...

//Kumaran said...

லக்ஷ்மி...சகோதரன் அப்படிங்கற சொல்லுக்கு 'சக உதரன்' - 'ஒரே வயிற்றில் பிறந்தவர்' என்று தான் பொருள்...அதன் படி தாயைப் பொறுத்துத் தான் சகோதர முறை வரும் என்னும் வாதத்தை ஒத்துக்கொள்ளலாம்.

அதே நேரத்தில் நீங்கள் சொல்வது போல் 'கோத்திர முறை' தந்தை வழியில் தான் வந்து கொண்டிருக்கிறது.

இந்த வழக்கில் எது முதன்மைப் பெறுகிறது என்பது தான் புரியாத புதிராய் இருக்கிறது.//

ஆஹா... இந்த பின்னூட்டத்தை படிக்காமல் நானும் அதையே சொல்லிவிட்டேன்... மன்னிக்கவும்

குமரன் (Kumaran) said...

பாலாஜி. வருகைக்கும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சதுக்கும் நன்றி. :-)