Monday, May 17, 2010

வந்தே மாதரம் - நிறைவு - விளக்கம்

த்வம் ஹி துர்கா தஷ ப்ரஹரணதாரிணீ
கமலா கமலதல விஹாரிணீ
வாணீ வித்யாதாயினீ நமாமி த்வாம்

நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
ஸுஜலாம் ஸுபலாம் மாதரம்!

ஸ்யாமளாம் சரளாம் சுஸ்மிதாம் பூஷிதாம்
தரணீம் பரணீம் மாதரம்!

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல்லிதழ்களில் களித்திடும் கமலை நீ!
வித்தை நன்கருளும் வெண்மலர்த் தேவி நீ!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

போற்றி வான்செல்வி! புரையிலை, நிகரிலை!
இனிய நீர்ப்பெருக்கினை இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!
இனிய புன்முறுவலாய்! இலங்கு நல்லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!


பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத்திதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

திருநிறைந்தனை, தன்னிகர் ஒன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளம் சார்ந்தனை!
மருவு செய்களின் நற்பயன் மல்குவை!
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை!
பெருகுமின்பம் உடையை குறுநகை
பெற்றொளிர்ந்தனை பல்பணி பூண்டனை
இருநிலத்து வந்து எம்முயிர் தாங்குவை
எங்கள் தாய் நின் பதங்கள் இறைஞ்சுவாம்!

இந்தப் பகுதி தான் பலர் வந்தே மாதரத்தைப் பாடமாட்டோம் என்று மறுப்பு சொல்லக் காரணம்.

த்வம் ஹி துர்கா தஷ ப்ரஹரணதாரிணீ - நீயே துர்கை. பத்துவிதமான படைக்கலங்களைத் தாங்கியிருப்பவளே!

கமலா கமலதல விஹாரிணீ - தாமரை மலரில் மகிழ்வுடன் வசிப்பவளே! கமலை எனும் திருமகளே!

வாணீ வித்யாதாயினீ - வித்தைகளை அருள்பவளே! கலைமகளே!

நமாமி த்வாம் - உன்னை வணங்குகிறேன்

நமாமி - போற்றி

கமலாம் - திருமகளே!

அமலாம் - குற்றமற்றவளே!

அதுலாம் - நிகரற்றவளே!

ஸுஜலாம் - நன்னீரை உடையவளே!

ஸுபலாம் - நற்கனிகளை உடையவளே!

மாதரம்! - அன்னையே!

ஸ்யாமளாம் - பயிர்களின் பச்சை நிறம் உடையவளே

சரளாம் - இயல்பாய் இருப்பவளே!

சுஸ்மிதாம் - இனிய புன்முறுவல் உடையவளே!

பூஷிதாம் - அணிகலன்களை அணிந்தவளே!

தரணீம் - எங்களைத் தாங்குபவளே!

பரணீம் - வெற்றியுடையவளே!

மாதரம்! - அன்னையே!



ஒருபது படை - ஒரு பத்து படை

புரையிலை - குற்றமற்றவள்

மருவு செய் - வளர்ந்த பயிர்

1 comment:

குமரன் (Kumaran) said...

Sivabalan said...
நல்ல விளக்கம்.
November 14, 2006 5:49 PM

--
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.
November 14, 2006 7:29 PM
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத்திதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ!//

அட
இது தான் வந்தே மாதரம் பற்றி நடுவில் வந்த சர்சைக்குக் காரணமா? பொருள் புரிஞ்சு படிக்கிறதுல இது தான் போல ரிஸ்க்:-))

இப்ப நல்லா புரியுதுங்க குமரன்!
இதுக்குப் போய் முதல் பாடலை வேணாமுன்னு சொல்வாங்களா? அதுல இந்த மாதிரி reference எல்லாம் ஒண்ணும் இல்லையே! சரி விடுங்க!!

பாடல் அருமை! பதிவும் அருமை! நம் பாரதியும் அருமை! தமிழும் அருமை!
வந்தே மாதரம் - நிறைவு - விளக்கம்!
வந்தே மாதரம் - நிறைவான - விளக்கம்!!
November 14, 2006 8:45 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி இரவிசங்கர்.
November 15, 2006 5:50 AM
--

Merkondar said...
நல்ல தெளிவான விளக்கம்
November 15, 2006 7:16 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி என்னார் ஐயா.
November 15, 2006 9:15 AM