Tuesday, April 20, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 9

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் ஒன்பதாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் எட்டு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

காற்றே வா. மெதுவாக வா. ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே. காயிதங்களையெல்லாம் எடுத்து விசிறி எறியாதே. அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே. பார்த்தாயா? இதோ, தள்ளிவிட்டாய். புஸ்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய். மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய். வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்.

நொய்ந்த வீடு. நொய்ந்த கதவு. நொய்ந்த கூரை. நொய்ந்த மரம். நொய்ந்த உடல். நொய்ந்த உயிர். நொய்ந்த உள்ளம். இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான். சொன்னாலும் கேட்கமாட்டான். ஆதலால், மானிடரே வாருங்கள். வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம். உடலை உறுதி கொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம். உள்ளத்தை உறுதி செய்வோம். இங்ஙனம் செய்தால் காற்று நமக்குத் தோழனாகி விடுவான். காற்று மெலிய தீயை அவித்துவிடுவான். வலிய தீயை வளர்ப்பான். அவன் தோழமை நன்று. அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.

----------

படிப்பவர்கள் விளக்கம் சொல்லுங்கள்.

1 comment:

குமரன் (Kumaran) said...

4 comments:

G.Ragavan said...
குமரன், பாரதியின் இந்தக் கவிதைகளைப் படிக்கையில் பாரதி ஏதோ சொல்ல முயன்றிருக்கின்றான் என்று தெரிகின்றது. முழுமையாகப் படித்தால் கண்டிப்பாக தெரிய வரும்.

January 09, 2006 1:47 AM
--

குமரன் (Kumaran) said...
இராகவன். இந்த வசன கவிதையை 15 பாகமாக எழுதியிருக்கிறார். இன்னும் சில பதிவுகளில் 15ம் எழுதி முடித்துவிடுவேன். அப்போது நீங்கள் அனைத்தையும் சேர்த்துப் படிக்க முடியும். காத்திருக்க முடியாது என்றால் Project Madurai வலைப்பக்கத்தில் தேடிப் பாருங்கள். இந்த வசன கவிதை கிடைக்க வாய்ப்புள்ளது.

January 09, 2006 5:51 AM
--

Kumaresh said...
Nam illam matrum udal nalamaga irukka katri thevai. Anal, nam somberiyaga irunthal viraivil noi vanthu katru nammai vittu sendru vidum. Illamum athe polaththan, valuvaga illavittal katru nanmai kodukkathu.

Nan purinthu kondathu sariya?

Kumaresh

January 09, 2006 10:52 AM
--

குமரன் (Kumaran) said...
சரியாகச் சொன்னீர்கள் குமரேஷ். நன்றி.

January 09, 2006 3:52 PM