Tuesday, March 11, 2008

நான்கே ரூபாய்க்குப் பிள்ளையை வாங்கலாம்!!

நேற்றைய தமிழகத்தில் இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்ததும் நம்ப முடியவில்லை. தத்து கொடுத்திருப்பார்கள்; அதனைத் தான் அப்படி விலைக்கு விற்றார்கள் என்று சொல்லிவிட்டார்கள் என்று தோன்றியது. ஓலைச்சுவடியில் இருக்கும் கிரய பத்திரத்தை வைத்து இது நடந்திருக்கிறது என்று இந்த ஒளிக்கோவை காட்டுகிறது. நான்கு ரூபாய்க்கு விற்றோம் என்றும் ஆண்டு அனுபவித்துக் கொள்ள வேண்டியது என்றும் ஓலை சொல்வதால் இது தத்து இல்லை; விற்றல் தான் என்பது உறுதியாகிறது. எந்த நூற்றாண்டு என்று தெரியவில்லை. மொழிநடையை வைத்துப் பார்க்க 19ம் நூற்றாண்டு அல்லது 20ம் நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

நன்றி: தமிழ் மரபு அறக்கட்டளையின் முதுசொம்

10 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
இதில் அதிசயப்பட என்ன உண்டு. இலவசமாகவே கிடைக்குமே..
தொட்டில் பிள்ளை தான்...
இந்த நூற்றாண்டில்....

அந்தப் பிள்ளைக்கு ,அதிகம் கொடுத்து விட்டார்களே!
நாலு ரூபாய்.

Unknown said...

எங்க ஊருல, இது மாதிரி ஓரளவு வேலை செய்யுற வயசு வந்துட்டா (சில சமூகத்தைச் சேர்ந்த) பெற்றோர்கள், (இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த) 'குடியானவர்களுக்கு' ஒப்பந்த முறையில் கொடுத்து விடுவார்கள். 30 வருடம், 50 வருடம் என்று நாயாக உழைப்பார்கள், சொற்ப தொகைக்கு.

இப்போது அது மாறிவிட்டது. குழந்தை விற்பனை கொடுமைதான்... :( தத்து கூட ஒரு வகையில் கொடுமைதான்.

வடுவூர் குமார் said...

நல்ல!!! கிரயம்

சேதுக்கரசி said...

இப்போதும்தான் விற்கிறார்கள்... traficking முறையில்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரூ.1,500 கொடுத்தால் அனாதை குழந்தை வளர்ப்பு
பெங்களூருவில் பரவும் வாடகை குடும்ப கலாசாரம்

நேற்றைய தினமலர் செய்தி
http://www.dinamalar.com/2008mar12/general_imp4.asp

:-((((((

சேதுக்கரசி said...

கே.ஆர்.எஸ்...

நீங்க கொடுத்த தினமலர் செய்தியைப் படித்தேன். நல்லதுதானே? அமெரிக்காவில் foster care, foster parents, foster homes போலத்தானே இதுவும்? அநாதை விடுதிகளில் கிடைப்பதைவிட நல்ல கவனிப்பு கிடைக்கலாமல்லவா?

ஒரேயொரு நெருடல்: அந்த 1500 ரூபாயை வாங்கிக்கொள்கிறார்கள் சரி... ஆனால் அவர்கள் நன்றாக கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது.

குமரன் (Kumaran) said...

சரியா சொன்னீங்க யோகன் ஐயா. தொட்டில் பிள்ளை கிடைக்கும் தான்.

ஆனால் இந்த 'ஆண்டு அனுபவித்துக் கொள்ள வேண்டியது' என்ற சொற்கள் தான் கொஞ்சம் கலக்கத்தைக் கொடுத்துவிட்டது.

குமரன் (Kumaran) said...

தஞ்சாவூரான்.

இந்த நூற்றாண்டுலயும் இருக்கு. அந்தக் காலத்துல ஓலையில கிரயப்பத்திரம் எழுதுன மாதிரி இப்பவும் எழுதுறாங்களா?

நீங்கள் சொல்வது சரி தான். பெற்றவர்கள், தத்து பெற்றவர்கள் என்று இரு இடங்களிலும் முழு உரிமை இல்லாமல் தத்து சென்றவர்கள் அல்லாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இல்லையா பின்ன வடுவூர் குமார்?!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சேதுக்கரசி said...
கே.ஆர்.எஸ்...
நீங்க கொடுத்த தினமலர் செய்தியைப் படித்தேன். நல்லதுதானே?//

சேதுக்கரசி யக்கா...
குடும்பத்தில் வளர்வது நல்லது தான்!

ஆனால் செய்தியின் அடுத்த பாகம் பாருங்கள். ஏழைக் குடும்பங்கள் ரூ1500.00 க்காக இதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதுவே ஒரு தொழிலாகப் போகும் அபாயம் தான்! மாசம் 6000 கிடைக்க நாலு குழந்தைகளை வளர்க்கலாம்-ன்னு எல்லாம் நிலை வர ஆரம்பிச்சா, அது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல!

இதை அரசு, தொடக்கத்திலேயே விதிகள் போட்டு முறைப்படுத்த வேண்டும். இல்லீன்னா நாளை புற்றீசல் போல பெருகி விடும்!