Sunday, November 29, 2015

துப்புடையாரை அடைவதெல்லாம்....

பெரிய ஆளுங்களை ஐஸ் வச்சு அவங்க பின்னாடி போறதெல்லாம் கஷ்ட காலத்துல அவங்க துணை நமக்கு கிடைக்கும்ன்னு தானே!
நான் ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவன்னாலும், நீ யானைக்கு எல்லாம் அருள் செஞ்சு காப்பாத்துனதுனால, தைரியமா உன்னை வந்து அடைஞ்சேன்.
கடைசி காலத்துல இழுத்துக்கிட்டு கிடக்கிறப்ப உன்னை நினைக்க என்னால இயலாது.
அப்போதைக்கு இப்போதே சொல்லிவச்சுக்கிறேன், அரங்கத்துல பாம்புல படுத்துக்கிட்டு இருக்குறவனே!

துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்து துணை ஆவர் என்றே!
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன்! ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்!
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே!


5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மீள் நல்வரவு!
Welcome back, குமரன்:)

இப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
கூடல் குமரப் பள்ளியானே!:)

Gajapathy said...

நீண்ட நாட்கள் கழித்து ஒரு பதிவு.

மீண்டும் பதிவுகள் தொடர்ந்து வர வாழ்த்துக்கள்

HARIHARAN said...

வாழ்கை யதார்த்த உண்மை உணர்த்தும் பாடல்.

HARIHARAN said...

ஓம் நமோ நாராயணா.

Unknown said...

Sarvam krishnarppanam