Tuesday, December 01, 2009

மக்கள் சேவையே மகேசன் சேவை

18 comments:

ஜீவி said...

நல்ல கருத்துக்களைக் கேட்கும் பொழுது அடையும் சந்தோஷமே அலாதியானது தான்;
அதையும் மீறி இயன்றவரை நாமும் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டு அது செயலாக வடிவம் பெறுகிறதே, அங்கு தான் கேட்டது பலனாக விளைந்து பூர்ணத்துவம்
பெறுவதாக உணர்ந்தேன்.

ஆக்கபூர்வமான இத்தகைய சேவைகளுக்கு மிக்க நன்றி, குமரன்!

Kavinaya said...

//நல்ல கருத்துக்களைக் கேட்கும் பொழுது அடையும் சந்தோஷமே அலாதியானது தான்//

ஆம் குமரா. மிக்க நன்றி.

Raghav said...

அருமையான விளக்கம். வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் பணி மிகச் சிறப்பானது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதையும் மீறி இயன்றவரை நாமும் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டு அது செயலாக வடிவம் பெறுகிறதே//

ஆமாம் ஜீவி ஐயா...

//அங்கு தான் கேட்டது பலனாக விளைந்து பூர்ணத்துவம்
பெறுவதாக உணர்ந்தேன்//

அடியேன்....

இத்தகைய நேர்காணல்கள் ஒரு உந்துசக்தி...
மனதில் தைக்க தைக்க, பூர்ணத்துவம்!

மாடல மறையோன் said...

கூடிய சீக்கிரம் வேளுக்குடியார் இந்துமதத்திலிருந்து வெளியேற்றப்படுவார். அவர் பேசுவது இந்துக்களுக்கு எதிராகயிருக்கிற்து.

மாடல மறையோன் said...

வேளுக்குடியார் சொன்னதென்ன? இப்படி குடம் குடமா பாலையும் வெண்ணையும் தயிரையும் கடவுளுக்குத் திருமஞ்சனம் செய்கிறோம் என வீண்டிக்கும் இந்துக்களே அவற்றை அருகில் வாழும் குடிசைவாசிகளின் பாலுக்கு அழும் குழந்தைகளுக்குக் கொடுத்தாலென்ன என்பதுதான்.

இதை ஒரு கழகத்துக்குக்காரன் சொல்லும்போது, இந்து எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு எனக்கூத்தடிக்கும் நீங்கள் என்ன எழுதுகிறீர்கள்?

ஜீவி - ‘நல்லகருத்துகள்’ சந்தோஷமடைகிறேன்.

கவிநயா - ஆம். நன்றி. யாருக்கு நன்றி. குமரனுக்கு. (குமரன் இதைப்பற்றி வாயே திறக்கவில்லை. பின் நன்றி எப்படி. அது போய்ச்சேரவேண்டியது வேளுக்குடிக்கு.)

ராகவ - வேளுக்குடியின் பணி சிறப்பானதாம். உங்கள் பணியைப்பற்றித் தெரிந்துகொள்ளலாமா?

ரவி - இத்தகைய நேர்காணல்கள் ஒரு உந்துசக்தி. எதற்கப்பா ரவி, தெரிய்வைல்லையப்பா ரவி?

நான் கேட்ட்பது இதைத்தாம் - இதை எழுதிய அனைவரும் தத்தம் வலைபதிவுகளில் வேளுக்குடி சொன்னதை தாமே சொன்னதாகப் போடமுடியுமா?

வேளுக்குடி இன்னொன்று ஆன்மிகம் என்பது மூடநம்பிக்கைகள் அல்ல.

மூடநம்பிக்கைகளை எதிர்த்து நீங்கள் எழுதமுடியுமா?

ஏன் சொல்கிறேன்? வேளுக்குடி சொன்னது போல எழுதுவதும், போராடுவதும் மற்றவரே! நீங்கள் இல்லை. இருந்தால் காட்டுங்கள்.

Coming as it does from Kumaran, it is dishonesty. You don't deserve to listen to Velukkudi.

Only those who are bold enough to attack all social evils staged and managed in the name of God, can do that!

மாடல மறையோன் said...

குடம குடமா யமுனையில் கொட்டப்பட்ட போது எவன் வாயைத்திறந்தான்?

கடவுள் பெயரைச்சொல்லி, மண்சோறு தின்பதையும் பெண்ண அடிப்பதையும் தலையில் தேங்காய் உடைப்பதையும் கழுதைக்கும் மனிதனுக்கும் கலியாணம் பண்ணுவதையும் - எவன் கேட்டான்?

ஆனால், கேட்டவனை நீங்கள் இந்துமதத்துவேசி, பார்ப்பனத்துவேசி (முதலில் சொன்னது யாகத்தைச்சேர்ந்த்தால், அது பாப்பனரைபோய்த்தாக்கும் என்வே பார்ப்பனத்துவேசி)

குமரன் இந்த நாடகமெல்லாம் உமக்கெதற்கு. போய் தீமிதி பாரும். கழுதைக்கலியாணம் போய்வாரும். ஒரு சிறுமிக்கும் தவளைக்கும் கலியாணமாம். வருணபகவான் மகிழ்ச்சியடைந்து மழைதருவாராம். போய் மொய் எழுதிவிட்டு வாரும்.

Radha said...

:))))))))
Did you plan and choose this?
Btw, you didn't send me your photo.
Pls send it to my gmail.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் ஜீவி ஐயா. மிக்க நன்றி.

நன்றி கவிநயா அக்கா.

உண்மை இராகவ். வேளுக்குடி சுவாமிகளின் பணி மிக அருமையானது.

நன்றி இரவி.

குமரன் (Kumaran) said...

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ ஐயா! ஏன் வேளுக்குடியார் இந்து மதத்திலிருந்து நீக்கப்படுவார் என்று நினைக்கிறீர்கள்? இந்து மதத்தில் பல நூறு வருடங்களாக தொண்டு செய்யும் பாரம்பரியம் உண்டே. அந்த மரபில் வந்தோர் பல்லாயிரக்கணக்கானோர் இந்து மதத்தில் இருக்கிறார்கள். அது மட்டும் இன்றி எதிர் கருத்தைச் சொல்பவரையே மதத்தை விட்டு நீக்காத இந்து மதம் தன்னில் மரபாக வரும் ஒரு கருத்தைச் சொன்னதால் வேளுக்குடியாரை நீக்குமா? தாங்கள் வேறு எதையோ நினைத்துக் கொண்டு சொல்லுவது போல் தோன்றுகிறது. அவர் பேசுவது இந்துகளுக்கு எதிராக இல்லவே இல்லை! அவர் பேசுவது முழுக்க முழுக்க இந்து மரபின் கருத்தே! அதில் ஐயமே இல்லை!

குமரன் (Kumaran) said...

I did not plan and choose this Radha. I had some time available and wanted to listen to some of Velukkudi Swami's lectures. I searched in you tube and got it.

Are you in Orkut? if so, I will send my friend request to you. I have some of my pictures there.

குமரன் (Kumaran) said...

குடம் குடமாக பாலை அபிஷேகம் செய்யாமல் ஏழைக்குழந்தைகளுக்குத் தருமாறு சொல்கிறார் வேளுக்குடியார்! சரி தான்.

இதனை இந்து மத மரபில் வந்த இராமானுஜர் முதல் பலரும் சொன்னது தான். இராமானுஜர் வாழ்ந்தது 10ம் நூற்றாண்டில். அப்போது நீங்கள் சொல்லும் கழகத்துக்காரர்கள் இருந்தார்களா? அவர்களைப் பார்த்துத் தான் இராமானுஜரைப் போன்றவர்கள் இக்கருத்தினைச் சொல்லி செயலிலும் காட்டினார்களா? அண்மைக்காலத்தில் இராமகிருஷ்ணர், விவேகானந்தர், இராமலிங்க வள்ளலார், (இன்னும் நிறைய எடுத்துகாட்டுகள் தரலாம்) போன்றவர்கள் எல்லோரும் இந்து மரபில் வந்தவர்களா கழகத்துக்காரர்களா?

குமரன் (Kumaran) said...

கழகத்துக்காரர்களும் இக்கருத்தினைச் சொன்னார்கள். உண்மை தான். அதற்கு அவர்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும். அப்படி அவர்கள் சொன்ன போது அதனை இந்து எதிர்ப்பு என்றோ பார்ப்பன எதிர்ப்பு என்றோ நான் எப்போது கூத்தடித்தேன்? என் பதிவுகளில் ஒன்றையேனும் நீங்கள் படித்ததில்லை என்பதே நீங்கள் இப்படி சொல்வது காட்டுகிறது! தயவு செய்து என் பதிவுகளைப் படித்துவிட்டு பின்னர் நான் என்ன கருத்துகளைச் சொன்னேன்; என்ன கூத்துகள் அடித்தேன்; என்ன நேர்மையின்மையை என்னிடம் கண்டீர்கள் என்று சொல்லுங்கள்.

கவிநயா அக்காவின் நன்றி இக்கருத்தினை நான் சொன்னேன் என்று எண்ணியில்லை! இக்கருத்தினை இன்னொரு முறை கேட்கும் வாய்ப்பு தந்ததற்காக மட்டுமே! கருத்திற்கான நன்றி வேளுக்குடியாருக்கும் அதனைப் பகிர்ந்ததற்கான நன்றி அடியேனுக்கும் எங்கள் எல்லோருடைய நன்றி நம் அனைவரையும் உள்ளிருந்து இயக்கும் இறைக்கும்! :-)

குமரன் (Kumaran) said...

//Coming as it does from Kumaran, it is dishonesty. You don't deserve to listen to Velukkudi.
//

ஏன் என்று சொல்லுங்கள்? இந்தக் குமரன் வேளுக்குடியாரின் கருத்தினைக் கேட்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் தகுதியில்லாதவனாக நேர்மையில்லாதவனாகக் குறிக்கப்படுவதற்கு என்ன செய்தான்? ஐயாவின் கற்பனையில் ஏதேனும் தீங்கு செய்தவன் போலும் நான்.

என் தனிப்பட்ட வாழ்க்கையில் என் நேர்மை கேள்விக்கே இடமில்லாதது என்று சொல்லமாட்டேன். பலவிதமான முகமூடிகளை ஒவ்வொரு இடத்திலும் எல்லோரையும் போல் அணிந்து கொள்பவன் தான் நான். ஆனால் இங்கே நீங்கள் குற்றம் சாட்டுவதில் என் நேர்மைக்கு எந்த குறைவும் இல்லை என்று என்னால் உறுதியாகக் கூற இயலும்.

'இருந்தால் காட்டுங்கள்' என்று சவால் விட்டிருக்கிறீர்கள்! தேவையே இல்லாத சவால்! உங்களுக்கு உண்மையிலேயே நாங்கள் எழுதுவது என்ன என்று அறியும், உண்மை தெளியும் எண்ணம் இருந்தால் எங்கள் பதிவுகளைப் படித்துப் பாருங்கள்!

maddy said...

http://sites.google.com/site/vedicsevents/sri-velukkudi-swamis-usa-and-canada-visit--2008/consolidated-recordings-from-the-2008-usa-and-canda-tour

Here is a collection of lectures given by Velukkudi swamin during his USA visit last year.

குமரன் (Kumaran) said...

Thank you very much Maddy

R.DEVARAJAN said...

கடுமையான சொற்களையும்
பணிவுடன் நிலைகுலையாமல்
எதிர்கொள்கிறீர்கள், குமரன் !

’த்ருணாதபி ஸுநீசேந
தரோரிவ ஸஹிஷ்ணுதா’

மரம்போல் பொறுமை காக்க வேண்டுமாம்; இத்தகைய ஆத்ம குணங்கள் அபூர்வம்.

பாராட்டுக்கள்

தேவ்

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு நன்றி தேவ் ஐயா. உங்களைப் போன்ற பெரியவர்கள் ஆசிகளும் கூட்டுறவும் தான் காரணங்கள்.