Thursday, January 04, 2007

எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை?

நின்றால்
உட்காரச் சொல்கிறது,
உட்கார்ந்தால்
வயிறு மடிந்து
சாயச் சொல்கிறது,
சாய்ந்து கொள்ள நினைக்கையில்
காணாமல் போகிறது உன் தோள்.

நின்றும், உட்கார்ந்தும், சாய்ந்தும்
சரிப்படாத தருணங்களை
நடக்கத் தேர்ந்தெடுக்கிறேன்.
எடுத்துவைத்தது எட்டடியாகக் கூட இருக்காது,
நெற்றியில் வியர்வை,
ஒற்றி எடுக்க, எங்கே உன் உதடுகள்?

யாரோடோ பேச நினைக்கையில்
உள்ளுக்குள்
காலால் உதைத்து தன்னோடு
பேச அழைக்கிறது குழந்தை,
தடவிக் கொடுக்க எங்கே உன் கைகள்?

எப்படிக் கழியும் விநாடிகள்,
வேதனையில் இதயம் வெறுமை சுமக்க,
'உர்'ருனு உட்காராதே என
அறிவுரை கூறுபவையா உன் வார்த்தைகள்?

சாப்பிடும் சோறு,
பேசும் பேச்சு,
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து...

நாளை
உன்னோடு வண்டியில்
முன்நின்று சிரித்து வர,
உன் இனிசியல் போட்டுக் கொள்ள,
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்

கேட்டால் கிடைக்கும் தான்
உன் முத்தம்,
உன் அரவணைப்பு,
உன் ஆறுதல்.
பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்?

கரு சுமந்து
குழந்தைத் தவம் இருக்கும் பெண்களைச்
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை?

- வெண்ணிலா

('நீரிலலையும் முகம்' என்ற தொகுப்பிலிருந்து என்ற குறிப்புடன் 2002 ஆண்டு 'தினம் ஒரு கவிதை' யாஹூ குழுமத்தில் வந்த கவிதை. அப்போது முதல் குழந்தை உண்டான நேரம். சேமித்து வைத்திருந்தேன். இன்று தற்செயலாக வேறு ஏதோ தேடப்போக இது கிடைத்தது. படித்த போது இன்னும் சுட்டது. )

22 comments:

Merkondar said...

மலரும் நினைவுகளா?

ஷைலஜா said...

சாப்பிடும் சோறு,
பேசும் பேச்சு,
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து...

ம்ம்..தியாகமே பெண்ணுருவானதோ?
ஒன்றை இழந்து ஒன்றைப் பெறுவது வாழ்க்கையில் தவிர்க்க இயலாதது..
நல்ல கவிதை குமரன்
ஷைலஜா

Dharumi said...

//படித்த போது இன்னும் சுட்டது...//

இது நல்லா இருக்கு..

வல்லிசிம்ஹன் said...

எத்தனை ஆதங்கம், இந்தப் பெண்ணுக்கு.
ஆண்களுக்கு அருமை தெரியாது
என்றில்லை.கவலைப் படத் தெரீயும்.
அதை வெளியில் சொல்லத் தெரியாது.

பயம் வேற.
நல்ல்ல கவிதை குமரன்.

K.V.Pathy said...

vAzhtukkaL!
amre vattAm khobba likkasun?
Pathy.

இலவசக்கொத்தனார் said...

என்னங்க? கவுஜ எல்லாம் போட்டு பயமுறுத்தறீங்க. :)

Pradeep said...

beautiful one! kalakiteenga..

வெற்றி said...

குமரன்,
நல்லதொரு கவிதயைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

மலரும் நினைவுகள் இல்லை என்னார் ஐயா. நிகழும் நிகழ்வுகள் இப்போது. :-)

குமரன் (Kumaran) said...

நன்றி ஷைலஜா. இன்னும் ஓரிரு வாரத்தில் பெற வேண்டிய ஒன்றைப் பெற்றுவிடுவோம் போல் இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

//இது நல்லா இருக்கு..
//

உண்மை தருமி ஐயா. வீட்டுல பதிவைப் படிச்சுப் பாத்துட்டு 'சும்மா எழுதுறதோட சரி' என்று அலுத்துக் கொண்டார்கள். :-)

குமரன் (Kumaran) said...

ஒரு வார்த்தை சொன்னாலும் தெளிவா சொன்னீங்க வல்லி அம்மா. இது உண்மை தான். பல முறை நான் அனுபவித்தது பயம் என்ற உணர்வு தான். பெண்ணுக்கு என்ன நடக்கிறது என்று ஆணால் முழுமையாக உணர முடியாது என்றே நினைக்கிறேன். கூடவே இருக்க விருப்பம். ஆனால் ஒவ்வொரு முறையும் (கருவுற்றிருக்கும் போது) ஒவ்வொரு விதமாக எதிர்வினை (ரியாக்சன்) கிடைப்பதால் ஆண்களுக்குக் குழப்பமும் பயமும் தான் வருகின்றன என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி பதி ஐயா.

churum likkus aiyaanu. angun dhee theen dinnum dhiva nhuru ujuludai shOn sE. thego palchaadhuk kaam vEn hoyyaai.

குமரன் (Kumaran) said...

கவுஜ போட்டதே பயமுறுத்துதா? இல்லை கவுஜ பயமுறுத்துதா கொத்ஸ்?

குமரன் (Kumaran) said...

நன்றி பிரதீப்.

குமரன் (Kumaran) said...

நன்றி வெற்றி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மலரும் நினைவுகள் இல்லை என்னார் ஐயா. நிகழும் நிகழ்வுகள் இப்போது. :-) //

குமரன்
முதலில் வாழ்த்துக்கள்!
தங்கள் துணைவியாருக்கு!
பின்பு தங்களுக்கு! :-)

//காலால் உதைத்து
தன்னோடு பேச அழைக்கிறது குழந்தை
தடவிக் கொடுக்க எங்கே உன் கைகள்//

அருமையான வரிகள்!

//கரு சுமந்து குழந்தைத் தவம் இருக்கும் பெண்களைச்
சுமக்க எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை?//

பெண்ணைச் சுமக்க ஆணுக்கு
வேண்டாம் கருப்பை!
வேண்டும் விருப்பை!

செந்தில் குமரன் said...

கவிதை முகத்தில் பளிச்சென்று அறைந்தது.

அருமையான ஒரு கவிதை.

ஜெயஸ்ரீ said...

நல்ல கவிதை.

உங்கள் துணைவியாருக்கும் , உங்களுக்கும், அக்கவாகப்போகும் உங்கள் மகளுக்கும் நல்வாழ்த்துக்கள்.

All the best !!

குமரன் (Kumaran) said...

நன்றி இரவிசங்கர், செந்தில் குமரன் & ஜெயஸ்ரீ.

Anonymous said...

FANTASTIC POETRY..RIGHT WAY TO SAY RIGHT VIEWS..NICE
SOWPARNIKA

குமரன் (Kumaran) said...

நன்றி சௌபர்ணிகா.