அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்
ஐம்பூதங்களில் ஒன்றான காற்றின் மகன் அனுமன். ஐம்பூதங்களில் ஒன்றான நீரைத் (கடலைத்) தாவி, ஐந்தில் ஒன்றான விண்ணகமே வழியாக நல்லவர்களான இராம இலக்குவருக்காகச் சென்று, ஐந்தில் ஒன்றான பூமி பெற்ற பெண்ணான சீதையை கண்டு, அயலவர் ஊரான இராவணன் ஊரில் ஐந்தில் ஒன்றான நெருப்பை வைத்தான். அவன் நம்மை காப்பான்.
இன்று (20-Dec-2006) அனுமன் பிறந்த நாள்.
28 comments:
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஹனுமான்.
ஜெய் பஜ்ரங்க பலி.
ஆஞ்சநேய வீரா ஹனுமந்த சூரா
வாயுகுமாரா வானர வீரா
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜயராம்
சீதாராம் ஜய ராதே ஷ்யாம்!
[திரும்ப நாளைக்கு கண்ணனைப் பாட வசதியாகக் கொண்டு வந்து விட்டேன்!]
:))
அனுமனுக்கு பிறந்தநாளா? பேஷ் பேஷ். படம் ரொம்ப நல்லா இருக்கு குமரன்.
அஞ்சனா நந்தனம் வீரம்
ஜானகி ஸோக நாஸனம்
கபீச மஷஹந்தாரம்
வந்தே லங்கா பயங்கரம் !
வாழ்க வளமுடன், குமரன் !
Very Nice picture !
//அவன் நம்மை அளித்துக் காப்பான்//
ராம தூதன் ராமனை நமக்கு அளித்துக் காப்பான்!
சீதையின் அன்பன் அன்னை அருளை நமக்கு அளித்துக் காப்பான்!
Happy Birthday My Dear Hanuman!
கைங்கர்ய நாயகா, கைகொடுத்து காக்க!
அஸாத்ய சாதகஸ்வாமின் அஸாத்யம் தவகிம் வதா,
ராமதுத கிருபா சிந்தோ மத்கார்யம் சாதயா ப்ரபோ...
மெளலி........
//புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரொகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத்//
இத்தனையும் அனுமன் கொடுக்க
நாம் அவனை நினைக்க,
இராமன் அருள் நமக்குக் கூட வேண்டும்.
ஒரு குளத்தைக் கடப்பதுபோல்
கடலைக் கடந்து ஜானகியின்
சோகம் தணித்த ஆஞ்சனேயா
நீ ராமாயண மஹாமாலையின் ரத்தினம்.
உன்னை ,மறவாத மனசைக் கொடு.
நன்றி குமரன்.
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஹனுமான்.
ஜெய் பஜ்ரங்க பலி.
நன்றி சிவமுருகன்.
ஒரு அருமையான பஜனைப் பாடலைச் சொன்னதற்கு நன்றி எஸ்.கே.
நன்றி கொத்ஸ்.
நன்றி பாலா.
அஞ்சனா நந்தனம் - அஞ்சனையின் மகன்; அஞ்சனைக்கு ஆனந்தம் தருபவன்;
வீரம் - வீரன்
ஜானகி ஸோக நாஸனம் - ஜனகரின் மகளான ஜானகியின் சோகத்தை அழிப்பவன்
கபீசம் - வானரங்களின் தலைவன்
அக்ஷஹந்தாரம் - அறியாமை இருளை நீக்குபவன்
வந்தே லங்கா பயங்கரம் - அப்படிப்பட்ட இலங்கைக்கு எமனான அனுமனை வணங்குகிறேன்.
கைங்கர்ய நாயகா, கைகொடுத்து காக்க!
நன்றி இரவிசங்கர்.
நன்றி திரு.மௌலி.
அசாத்ய சாதக ஸ்வாமின் - செயற்கரிவற்றைச் செய்யும் என் தலைவா
அசாத்யம் தவ கிம் வத - தங்களுக்கு செயற்கரியதென்று ஏதெனும் உண்டா சொல்லுங்கள்
ராம தூத - இராமபிரானின் தூதரே
க்ருபா சிந்தோ - கருணைக்கடலே
மத் கார்யம் சாதய ப்ரபோ - என் செயல்களும் நன்கு அமைய அருள வேண்டும் இறைவா.
ஒரு குளத்தைக் கடப்பதுபோல்
கடலைக் கடந்து ஜானகியின்
சோகம் தணித்த ஆஞ்சனேயா
நீ ராமாயண மஹாமாலையின் ரத்தினம்.
ஆகா. மிக நன்றாகச் சொன்னீர்கள் வல்லி அம்மா.
புத்திர் பலம் - வலிமையான அறிவு
யசோ - புகழ்
தைர்யம் - மன உறுதி
நிர்பயத்வம் - அஞ்சாமை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - கர்வமின்மை
வாக்படுத்வம் - வாக்கு வன்மை
ச - மற்றும் / இவையெல்லாம்
ஹனுமத் ஸ்மரணாத் - அனுமனை நினைத்தால்
பவேத் - உண்டாகும்
அனுமனைப் பற்றிய பல சுலோகங்களைப் பின்னூட்டத்தில் இட்டு அவற்றிற்குப் பொருளுரைக்க அடியேனுக்கு வாய்ப்பளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.
அனுமனை நாள் முழுதும் நினைக்க வைத்துவிட்டீர்கள்
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலீம்
பாஷ்ப வாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
உண்மை . அனுமனை நாள் முழுக்கத் தான் நினைக்க வைத்துவிட்டார்கள் நண்பர்கள்.
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் - எங்கெங்கு இரகுநாதனின் பெருமைகள் பாடப்படுகின்றனவோ
தத்ர தத்ர க்ருதம் ஹஸ்தக அஞ்சலீம் - அங்கெல்லாம் கூப்பிய கரங்களோடு வணங்கிக் கொண்டு
பாஷ்ப வாரி பரிபூர்ண லோசனம் - கண்ணீர் மழை நிறைந்த கண்களோடு
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் - (நிற்கும்) ராக்ஷசர்களின் எமனான, காற்றின் மகனை வணங்குகிறேன்.
"அஞ்சனை மைந்தா போற்றி !
அஞ்சினை வென்றாய் போற்றி !
வெஞ்சினக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி!
மஞ்சன மேனி ராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி!
நெஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி! "
"சுந்தர வில்லி யேவ சூழ்கடல் இலங்கை மேவி
அந்தமில் வீடு நல்கும் ஆயிழை தன்னைக் கண்டு
வந்தவெவ் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட
நந்தலில்லாத தூதன் நம்மையும் அளித்துக் காப்பான்"
ஐயா ! அனுமன் படம் மிக அருமை!
ஆக்ரோஷமான படம்!
அஞ்சிலே ஒன்றை வைக்கும் காட்சி நடுக்கத்தை தருகிறது...
தங்களிடம் அனுமன் படங்களின் தொகுப்பு இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்!
மிக்க நன்றி!
இதுவரை நான் அறிந்திராத இரு பாடல்களைக் கொடுத்திருக்கிறீர்கள் ஜெயஸ்ரீ. மிக்க நன்றி.
இரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
இராமா. தங்களுக்கு நம்பிக்கை குழுமத்திலும் பதில் சொல்லியிருக்கிறேன். இந்தப் படம் மட்டுமே அடியேனிடம் இருந்தது. கூகுளில் நிறைய கிடைக்கிறது.
தான் பிறந்ததால் தன் நக்ஷ்த்திரத்தினால்( மூலம் )ஹனுமான் அதற்கு பெருமை சேர்த்தவர் அதோடு மட்டுமல்லாமல் உலகை ஆண்டவர்.அவர் எந்த நாட்டையு ம் ஆளவில்லையே என்று கேட்கலாம்.மண்ணரசு ஒரு அரசா? ராமபக்தி என்ற சாம்ராஜ்யத்திற்கு இன்றளவும் ஏன் என்றைக்கும் அவர்தானெ ஏகபோக சக்ரவர்த்தி.
அவருக்கு இருக்கும் பட்டங்களப் பாருங்கள்.
கியதச்ரி ரமதூத:
பவனத்னுபவ:
பிங்கலாக்ஷ்ன்
சிகாவன்
சீதாசோகாபஹாரி
தஸமுகவிஜய்கி
லக்ஷ்மனப்பிராண்தாதா
அநேதா பேஷஜாத்ரேஹே
லவணஜரனிதேஹே
லங்கனேவீக்ஷ்தோயக:
வீரஸ்சிரிமான்
ஹனுமான்
மம(ஸ்ர்வ) மனசிவஸ்ன்னு;
கார்ய சித்திம் கரோது
மிக நன்றாகச் சொன்னீர்கள் தி.ரா.ச. ஆண்மூலம் அரசாளும் என்றது இவரைப் பார்த்து தானோ? இராமபக்தி சாம்ராஜ்யத்தின் ஏக சக்ராதிபதி இவர் தானே? அந்த அரசை ஆள முடிந்தால் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவையும் தேவையில்லையே!!
நீங்கள் அனுமனின் பட்டங்களை அடுக்கியிருக்கிறீர்கள். ஆனால் அவற்றில் பல அடியேனுக்குப் புரியவில்லை. கொஞ்சம் தமிழிலும் விளக்கம் சொல்கிறீர்களா?
படம் அருமை.
//அஞ்சிலே ஒன்று பெற்றான்.....................//
இதில் //அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி//
இதுக்கு விளக்கம் சொன்னால் கேட்டுக்கொள்வேன்.
இபோதுதான் 'சுந்தரகாண்டம்' சில குடும்பங்களாகச் சேர்ந்து வாரம் ஒரு நாள்
என்று படித்துவருகிறோம். இது இரண்டாம் தடவை.
துளசி அக்கா. இடுகையிலேயே விளக்கம் சொல்லியிருக்கிறேனே. சரி என் வழக்கப்படி ஒவ்வொரு வரியாகச் சொல்லிவிடுகிறேன்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் - ஐம்பூதங்களில் ஒன்றான காற்று பெற்ற மகன்
அஞ்சிலே ஒன்றைத் தாவி - ஐம்பூதங்களில் ஒன்றான கடலைத் (நீரைத்) தாவித் தாண்டி
அஞ்சிலே ஒன்று ஆறாக - ஐம்பூதங்களில் ஒன்றான விண்ணகமே (ஆகாயமே) வழியாக (ஆறு என்றால் வழி; ஆற்றுபடை என்றால் அடையும் வழி சொல்லுதல்)
ஆரியர்க்காக ஏகி - நல்லவர்களான, சிறந்தவர்களான இராம இலக்குவர்களுக்காக சென்று
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு - ஐம்பூதங்களில் ஒன்றான மண் (பூமி) பெற்ற பெண்ணான சீதையைக் கண்டு
அயலார் ஊரில் - அயலவர் ஊரான இராவணன் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் - ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான் - அவன் நம்மை பாதுகாப்பான்.
I looked, in vain, for this stanza in "kaDal tAvu paDalam" of kambarAmAyaNam. Can you tell me in which paDalam does it come in or is it one of the "migaip pADalgaL"?
Also "Ariyar" can be interpreted as is just like Bharathi used that word to mean the northerners.
I have seen a variation of the word as "AruyirkAga Egi". Which is correct?
சேதுராமன் ஐயா,
தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு வருகிறீர்கள் போலிருக்கிறதே.
ஆரியர் என்ற சொல்லுக்கு பல பொருள் சொல்லப்படுகிறது. சங்க காலத்தில் தமிழகத்திற்கு வடக்கே இருப்பவர்கள் எல்லாரையும் ஆரியர் என்று அழைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வடுகரான தெலுங்கரையும் ஆரியர் என்று அழைப்பதைக் கண்டிருக்கிறேன். அதனால் நீங்கள் சொல்வது போல் ஆரியர் என்ற சொல்லிற்கு வடக்கத்தவர் என்ற பொருளைத் தாராளமாகக் கொள்ளலாம்.
ஆரியர் என்ற சொல்லை பாரதியார் வடக்கத்தவர் என்ற பொருளிலா புழங்கியிருக்கிறார்? 'சிறந்தவர்' என்ற பொருளில் அவர் புழங்கியிருக்கிறார் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆரிய தேவி என்றும் ஆரிய பூமி என்றும் அவர் சொல்லும் போது வடக்கத்தவர் பூமி என்றும் தேவி என்றும் பொருள் வரவில்லை; சிறந்தவர் என்ற பொருள் பொருந்துகிறது.
இப்பாடல் கம்பராமாயணத்தில் தான் வருகிறது என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் எங்கே எந்த சருக்கத்தில் வருகிறது என்று தெரியாதே ஐயா. ஹரிகிருஷ்ணன் ஐயாவைத் தான் கேட்கவேண்டும். மின் தமிழ் குழுமத்தில் கேட்டுப் பார்க்கிறேன்.
சுப்பிரமணியன் ஐயா. இதோ ஹரியண்ணாவின் பதில்:
இது கம்பனுடைய பாடல் இல்லை. கம்பராமாயணத்துக்கு வாழ்த்தாகப் பெயர் தெரியாத புலவர்கள் பாடி அளித்த 20 பாடல்களில் ஒன்று இந்த 'அஞ்சிலே ஒன்று பெற்றான்'. பொதுவாக 'காப்புச் செய்யுள்'பகுதியில் இடம்பெற்றிருக்கும். கம்பராமாயண புத்தகத்தில் இருப்பதால், இது கம்பன் பாடல் என்று பலர் எண்ணிவிடுகிறார்கள். ஒவ்வொரு பதிப்பிலும் 'இவை கம்பன் இயற்றியவை இல்லை' என்ற குறிப்பும் இருக்கும். அஞ்சிலே ஒன்று பெற்றானும் கம்பன் பாடல் இல்லை; கடன் கொண்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தனும் கம்பன் இயற்றியதில்லை.
Post a Comment