Wednesday, November 08, 2006

ஆறு காசுக்காகாத அருமையான சூளை

இருவர் மண் சேர்த்திட ஓருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்தச் சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரை காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே!

28 comments:

ramachandranusha said...

குமரன், பத்தோடு இன்னொன்றாய் சித்தர் பாடல்களுக்கு என்று ஒரு தனி பதிவு ஆரம்பித்துவிடுங்களேன். கண்ணதாசன் நிறைய சுட்டு இருப்பார் :-)

செந்தில் குமரன் said...

சித்தர்கள் பொதுவில் ஒரு வித ஆர்வத்தையும், மனிதனுடைய mystic ஆர்வத்திற்கு இரை போடும் வகையில் விளங்குகிறார்கள்.

இது உடலை வளர்ப்பதால் ஒரு பயனும் இல்லை என்ற கருத்து வரும் வகையில் அமைந்த பாடல் என்று கருதுகிறேன்.

என்னிடம் சித்தர்கள் சம்பந்தமாக பல கேள்விகள் உண்டு.

star wars படத்தில் வரும் jedi knightsகளுக்கும் சித்தர்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளதாக சில சமயம் எனக்குத் தோன்றும்.

இது பற்றி எப்பொழுதாவது எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

Johan-Paris said...

அன்புக் குமரா!
இந்த "ஈரைந்து " மாதம் என்பது; சரியா??? மனித கற்ப்பகாலம் 10 மாதமா????; பத்தேனத்தான் கூறுகிறார்கள்.இது சரியா??
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

ஆகா. பல்லடுக்குத் தாக்குதல்களை வலுவாகச் செய்திருக்கிறீர்களே உஷா. நீங்களா நுனிப்புல் மேய்பவர்? :-)

1. பத்தோடு இன்னொன்றாய் - என் பதிவுகள் எல்லாம் பத்தோடு பதினொன்றாய் ஒப்புக்குச் சப்பாணியாய் ஒன்றுக்கும் உதவாமல் இருக்கின்றது என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே.

2. எல்லாரும் எல்லாவற்றையும் ஒரே வலைப்பூவில் எழுதிக்கொண்டிருக்க நான் மட்டும் அளப்பரைக்குத் தனித் தனி வலைப்பூக்கள் தொடங்குகிறேன் என்றும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே.

3. ஆன்மிகத்தைத் தவிர வேறு எதுவுமே எனக்குத் தெரியாது என்றும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே.

4. கண்ணதாசன் 'நிறைய சுட்டு' இருப்பார் என்றதன் மூலம் நான் ஏற்கனவே வேறு யாரோ சொன்னதை வைத்துத் தான் பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே. (யாருப்பா அது? இதைத்தானே நான் எப்பவும் சொல்லிக்கிட்டு இருக்கேன்னு சவுண்டு விடறது? ஓ விடாது கருப்பு அண்ணனா? :-) )

5. இத்தனையும் ஒரே வார்த்தையில் எழுதிய நீங்கள் தான் பெரும் எழுத்தாளர்; நானெல்லாம் ஜுஜுபி என்றும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே.

பின்குறிப்பு: உங்கள் பின்னூட்டத்தில் சில திருத்தங்கள். பத்திற்கும் மேற்பட்ட வலைப்பூக்களை தொடங்கியிருக்கிறேன். அதனால் பத்தோடு இன்னொன்றாய் என்பதைத் திருத்திக் கொள்ளவும். கண்ணதாசன் செய்தது 'சுட்டது' இல்லை. எடுத்தாளுதல். :-))

குமரன் (Kumaran) said...

செந்தில் குமரன். உடலை வளர்ப்பதால் பயன் இல்லை என்று இந்தப் பாடல் சொல்வதாகச் சொல்லலாம். ஆனால் அந்தக் கருத்தை விட நிலையாமை என்ற கருத்தையே இந்தப் பாடல் வலியுறுத்துகிறது என்று எண்ணுகிறேன்.

விரைவில் சித்தர்கள் பற்றிய உங்கள் கேள்விகளை எழுதுங்கள். உங்களுக்கு இருக்கும் கேள்விகள் எனக்கும் இருக்கலாம். அதனால் அவற்றிற்கும் நண்பர்களிடமிருந்து விடை பெற வழியுண்டாகும்.

ஸ்டார் வார்ஸ் பார்த்ததில்லையாதலால் நீங்கள் சொல்லும் ஒப்பிடல் புரியவில்லை/தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. தாயின் கருப்பையில் குழந்தை வளர்வதென்னவோ 36 முதல் 39 வாரங்களே. ஒரு மாதத்திற்கு நான்கு வாரங்கள் என்ற கணக்கை வைத்துக் கொண்டு இங்கேயும் (அமெரிக்காவிலும்) மருத்துவர்கள் பத்து மாதங்கள் என்று தான் சொல்கின்றனர். குழந்தை உண்டாவதற்கு முன்பாக கடைசியாக் மாதச்சுழற்சி வந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிட்டு பத்து மாதங்கள் என்று சொல்வார்கள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். நாலாறு மாதம், ஈரைந்து மாதம் என்று பத்து மாதங்களாகக் குறிப்பதே நம் மரபாகவும் இருந்து வந்திருக்கிறது.

எனக்குத் தெரிந்து இரண்டு மருத்துவர்கள் வலைப்பதிவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இந்தப் பதிவினைப் படிப்பதற்கு நான் கொடுத்து வைத்திருந்தால் அவர்களின் கருத்தையும் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

எத்தனை சினிமாக்களில் பத்து மாசம் சுமந்து பெற்ற மகனே என்று அம்மாவும், என்னைப் பத்து மாசம் சுமந்து பெத்த அம்மா உனக்கு நான் என்ன கைமாறு செய்வேன் எனக் கதாநாயகனும் உருகி இருக்கிறார்கள், இதைவிடவா நமக்கு சான்று வேண்டும்.

ஹிஹிஹி. :-D

வல்லிசிம்ஹன் said...

குமரன், நிலையாமை உண்மை. அது புரியத்தான் நமக்கு ஞானம்
இல்லை.
எர்த் டு எர்த் சொல்லுகிறார்கள் இல்லையா.

பத்து என்பதில் பற்று வைப்பதால்தான் உலகம் ஓடுகிறது.
உங்கள் பதிவுகள் மேலும்
வளர்ந்து, இன்னும்
நிறைய சொல்ல வேண்டும்.
நீங்கள்.
எங்கள் தெருமுனையில் இருக்கிறது
ஆழ்வார் என்ற பெரியவரின் புத்தகப் பொக்கிஷம். வருடத்தில் இரண்டு நாட்கள் போயிருப்பேன்.
நீங்கள் பின்னூட்டம் இட்ட, பொருனைக்கரையிலே'' பதிவைப் பீட்டா ப்ளாகருக்குக் கொடுத்துட்டேன்.P:-))

நன்றி.வாழ்த்துக்கள்

G.Ragavan said...

// இருவர் மண் சேர்த்திட ஓருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்தச் சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரை காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே! //

எனக்கொரு கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வருகிறது.
"இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தாம் விளையாட
அந்த இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட"

அதென்ன......அத்தன உள்குத்துகளையும் நீங்களே குத்திக்கிட்டீங்க :-))))))))

உஷா, கண்ணதாசன் சுடவில்லை. குமரன் சொன்னது போல எடுத்தாளல். சுடுவது என்பது எது தெரியுமா? "ஞாயும் யாயும் யாராகியரோ
எவ்வழி வரினும் உறவு சேர்ந்ததென்ன"தான்.

ramachandranusha said...

குமரன், ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்திருப்பீங்க. அதுல எம்.ஜி. ஆரிடம், தன் காதலை ஜெயலலிதா சொன்னதும்,
"உன்னோட அடிமைகள் ஆயிரக்கணக்குல இருக்காங்க. நா அதுல ஒருத்தன். எனக்கு என்ன தகுதி இருக்கு உன்னை மணக்க?"
என்று பொருளில் சோகப்பாட்டு பாடுவார். ஆனா படத்தோட தலைப்புக்கு அதுவா பொருள்? ஆயிரத்துல நம்பர் ஒன் என்றல்லா
பொருள்!
அதுப் போல தாங்க நான் சொன்னதும், இத்தனை பதிவு வெச்சியிருக்கீங்களே, பத்தோட பதினென்னாய் இன்னொன்று
ஆரம்பிக்கக்கூடாதா என்று யதார்த்தமாய் கேட்டேன் - நல்லா பார்த்துக்குங்க எங்கையும் ஸ்மைலி போடவில்லை :-)

ஜிரா, அப்படியா :-))))))))))))))

ஞானவெட்டியான் said...

அன்பு குமரன்,
இப்பாடல் உடலின் (நிலையாமை) குணம் பற்றி விளக்குதலேயாம்.

ஓட்டாஞ்சல்லிக்குக் கூடப் பயனில்லையாம்.
"வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வரையோட்டுக்கும் ஆகாதென்று ஆடுபாம்பே!"

இதுபோல் இன்னும் எவ்வளவோ பாடல்கள் உண்டு!

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். ஆக திரைப்படங்கள் தான் நம் அறிவிற்கு ஆதாரம். அப்படித்தானே?! :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

முட்ட முட்ட முந்நூறுநாட்ச் சுமந்தே வட்டிலிலும் தொட்டிலிலும் மார்போடுன் என்னை இட்டு ...... என்கிறாறே நம் பட்டிணத்துஅடிகளார் அவர் கணக்கும் தப்பா.நம் முன்னோர்கள் ஏற்கனவே ஆராய்ந்து தீர்மானமாக கூறியவற்றை ஒப்புக்கொள்வதில் நமக்கு என்ன இழுக்கு? ஏன் சர்ச்சை?

குமரன் (Kumaran) said...

இராகவன். இந்தப் பதிவை போடலாமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டே பதிவை இட்டுவிட்டு சிறிது நேரத்திற்குள் உஷாவின் பின்னூட்டம் வந்தது. பின்னூட்டம் படித்தவுடன் லேடரல் சிந்தனைகள் பரந்து திரியத் தொடங்கிவிட்டது. இந்தப் பின்னூட்டம் படித்துவிட்டு வேலைக்குச் செல்ல பேருந்து ஏறினேனா. மனம் வேறு எதையும் சிந்திப்பதற்கு இன்றி இதையே சிந்தித்தது. பேருந்தில் இருந்த 40 நிமிடமும் புன்சிரிப்புடன் இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதான் அப்போது தோன்றியதை எல்லாம் இங்கே எழுதிவிட்டேன். பாவம் உஷா. அவர்களின் பின்னூட்டம் இப்படிப் பிய்த்துப் பார்க்கப்படும் என்று எண்ணியிருக்க மாட்டார். :-)

இராகவன். நீங்க சொன்ன எடுத்துக்காட்டும் எடுத்தாளல் தான். அதுவும் சுட்ட வகையைச் சேராது. எங்காவது அந்தக் கவிஞர் அந்த வரிகள் தானே எழுதியது என்று எங்கிருந்து எடுத்தாரோ அதனை மறைத்தாரா? நீங்கள் எடுத்துக் காட்டியது அதே வரிகளை எடுத்தாளாமல் கருத்தை மட்டும் எடுத்தாள்வது; எடுத்தாளல் இல்லை என்று எடுத்துக் காட்டியது அதே வரிகளை அப்படியே கருத்துடன் எடுத்தாண்டது. கவியரசர் செய்தால் சரி; கவிப்பேரரசு செய்தால் தவறா? மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம். :-)

குமரன் (Kumaran) said...

உஷா. :-)

குமரன் (Kumaran) said...

உங்கள் பதிவுகளின் மூலம் அந்தப் பாடல்களைப் படிக்க தருகின்றீர்கள். மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா.

குமரன் (Kumaran) said...

சர்ச்சை எதுவும் இல்லை தி.ரா.ச. ஐயா. விளக்கம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம். பட்டினத்தடிகள் முந்நூறு நாட்கள் என்றா சொல்லியிருக்கிறார். அது பத்துமாதங்கள் என்பதற்கு ஒத்துப் போகிறது. ஆனால் வாரக் கணக்கில் பார்த்தால் 42 வாரங்கள் வருகிறதே.

ramachandranusha said...

குமரன், உங்க பதிலைப் பார்த்ததும் என்னடா யாராவது சீரியசா பதிவுப் போட்ட நாமதானே அங்க போயி நக்கல் அடிப்போம், இப்ப கதை மாறிட்டுச்சே, இதுதான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதா என்று என்னை நானே சமாதான்பப்டுத்திக்கொண்டேன்.
போதாக்குறைக்கு கடைசி பாரா -அதுதாங்க நான் பெரிய எழுத்தாளர் என்ற பட்டம் எல்லாம் தந்திருந்தீங்களே, அதைப் படிச்சிட்டு, , ரெண்டு வரிக்கு, ஒரு பக்கத்துக்கு விளக்கம் கண்டுப்பிடிக்கிறார் குமரன் ஏதாவது நவீன கவிதை புத்தகம் வாங்கிப் படிக்கிறாரா போல இருக்கு என்று முடிவே செய்துவிட்டேன் :-))))

கண்ணதாசன் தத்துவ பாடல்கள் பலவற்றில் சித்தர், பட்டினத்தார் பாடல் வரிகள் தென்படும், ராகவா, இன்சிபிரேஷன்னு வெச்சிக்கலாமா?

Sivabalan said...

மிக பெரிய தத்துவம்..

மிக மிக எளிமையாக..

இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு(4+6) மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தாண்டி ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி
இதுவும் சித்தர் பாடல்தான்

Merkondar said...

சந்திரமதி புலம்பலில் ஓராம் மாதம் ஒடலது தளர்ந்து ...... என்று ஆரம்பித்து பத்தாம் மாதம் உனைப்பேற்றேனடாபாலகா என அழுவாள்

குமரன் (Kumaran) said...

உஷா. தமிழ்மணம் படிச்சா பத்தாதா? நவீன கவிதை வேற படிக்கணுமா? ஊனக்கண்களும் ஞானக்கண்களும் நிறைந்த உலகம் அல்லவா தமிழ்மணம்? :-)

குமரன் (Kumaran) said...

நன்றி சிவபாலன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் தி.ரா.ச. மேலே ஒரு பின்னூட்டத்தில் நாலாறு மாதம் என்று குறித்தது இந்தப் பாடலை நினைத்துத் தான்.

குமரன் (Kumaran) said...

என்னார் ஐயா. அந்தப் பாடலை இதுவரைப் படித்ததில்லை/கேட்டதில்லை. இணையத்தில் தேடிப் படிக்கிறேன்.

மதுமிதா said...

/// இருவர் மண் சேர்த்திட ஓருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்தச் சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரை காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே!///

நன்று குமரன்.

ஆனால் அரைகாசுக்காகா அந்தச்சூளை இன்றேல் உலகே இல்லையே

குமரன் (Kumaran) said...

உண்மை மதுமிதா அக்கா. இந்தப் பாடலைப் பாடிய சித்தர் பெருமானைக் கேட்டிருந்தால் 'கால் காசுக்காகாத காசினி' என்று பாடியிருப்பாரோ?

ஞானவெட்டியான் said...

அன்பு குமரன்,
"காசினி"யை வைத்துக் காசு பண்ணுபவர்களைக் கேளுங்கள். காசு இனி வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் இக்காசினியில்.

கசினியின் மகிமை சொல்லவும் மாளுமோ!