Sunday, February 12, 2006

145: மதுரை - 1

அண்மையில் எனக்கு மின்னஞ்சலில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலின் பல பாகங்கள் அருமையான படங்களாய் வந்தன. ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் போது பல நினைவுகள் வந்தன. ஒவ்வொன்றாய் இங்கே பதிக்கலாம் என்று தோன்றியதால் இந்தத் தொடர்.


மேலே உள்ள படம் அண்மையில் எடுக்கப் பட்டது போலும். மின்விளக்குகளால் அன்னை மீனாக்ஷியின் திருக்கோயில் கோபுரங்கள் அலங்கரிக்கப்பட்ட காட்சி இது. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் கோவில் கோபுரங்களில் இரண்டு மூன்று தெரியும். அந்தக் காலத்தில் வண்ண மின் விளக்குகளால் இப்படி ஜெகத்ஜோதியாய்க் காட்சியளிக்காது கோபுரங்கள். முதலில் சித்திரைத் திருவிழா நேரங்களில் வண்ண வண்ண விளக்குகளால் கோபுரங்களையும் விமானங்களையும் அலங்கரிக்கும் பழக்கம் வந்தது. இப்போது எப்போதும் விளக்குக்களுடன் மதுரை நகரின் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும் கோவில் கோபுரங்கள் தெரியும் படி செய்து விட்டார்கள்.

மதுரை மாநகரில் எழுதப்படாத சட்டம் ஒன்று உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதும் அந்த மரபு பின்பற்றப் படுகிறதா என்று தெரியவில்லை. நகரின் எல்லைக்குள் எந்தக் கட்டிடமும் மீனாக்ஷி அம்மன் கோவிலின் கோபுரங்களின் உயரத்துக்கு மேலான உயரத்துடன் இருக்கக் கூடாது என்பது தான் அந்த எழுதப் படாத சட்டம். எனக்குத் தெரிந்து மதுரை நகருக்குள் உள்ள ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் எதுவும் கோபுரங்களை விட உயர்ந்தவை அல்ல என்று தான் நினைக்கிறேன். தெற்கு மாசி வீதியில் நிறைய உயர்ந்த உயர்ந்த கட்டிடங்கள் வந்துவிட்டன. ஆனாலும் இன்று கூட வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தால் கோவில் கோபுரங்கள் தெரிகின்றன.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.

35 comments:

நாமக்கல் சிபி said...

//கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.//

அதை அனைவரும் பெற நினைக்கும் தங்களுக்கும் புண்ணியம்.

சந்தோஷ் aka Santhosh said...

ஓ உயர்ந்த கட்டிடங்கள் பற்றிய தகவல் புதிய ஒன்று, தெடர்ந்து மதுரையைப்பத்தி எழுதுங்க.

தி. ரா. ச.(T.R.C.) said...

மிக அற்புதமான படம். கோபுர தரிசனத்தை படத்தில் தந்ததற்கு மிகவும் நன்றி.
காண வேண்டாமோ இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்.ஓட்டை சடலம் ஒடுங்கும் முன்னே இதை உணர வேண்டாமோ. தி. ரா. ச

இலவசக்கொத்தனார் said...

இப்படித்தான் மயிலையிலும் சொல்லுவாங்க. அதுவும் உண்மையான்னு தெரிஞ்சா சொல்லுங்களேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி சிபி. என்ன புண்ணியம் செய்தேனோ என்று இனிப் பாடத் தேவையில்லை. :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் சந்தோஷ். அது புதிய தகவலாகத் தான் பல பேருக்கு இருக்கும். ஆனால் அந்த மரபு இன்றும் பின்பற்றப் படுகிறதா என்று தெரியவில்லை. சட்டங்களையே மீறும் இந்தக் காலத்தில் மரபை மீற எவ்வளவு நேரம் ஆகப் போகிறது? விஷயம் தெரிந்த தருமி ஐயா போன்றவர்கள் தான் சொல்ல வேண்டும்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி தி.ரா.ச. இனிமேல் வரும் படங்களும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இலவசக் கொத்தனார். மயிலையிலும் அப்படி சொல்வாங்களா? எனக்குத் தெரியவில்லை. சென்னை/மயிலைவாசிகள் தான் சொல்ல வேண்டும்.

இராமநாதன் said...

குமரன்,
எங்க ஊர்லேயும் சொல்வாங்க. புதுசா கட்டிடம் எதுவும் வரலேயேங்கறதுக்கு சால்ஜாப்பா இல்லை நிஜமாவே வான்னு தெரியல! :)

படத்துக்கு நன்றி

G.Ragavan said...

மதுரைல வேணா உண்மையா இருக்கலாம். ஆனா மயிலைல இல்லை. உயரமான கட்டிடங்களை நான் பார்த்திருக்கிறேன்.

அங்கயற்கண்ணியின் திருக்கோயில் முகடுகளைக் காணத் தந்த குமரனுக்கு நன்றி. எழிலான காட்சி.

N. Rethinavelu said...

அன்று மதுரை கோபுர தெரிந்திட செய்தார் மருது பாண்டியர் இன்று குமரன்

N. Rethinavelu said...

அன்று மதுரை கோபுர தெரிந்திட செய்தார் மருது பாண்டியர் இன்று குமரன்

Dharumi said...

எனக்குத் தெரிந்தவரை குமரன் சொல்வது சரியே. அந்தக் காலத்திலேயே (40 ஆண்டுகளுக்கு முன்பே) ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டராக இருந்த தங்கம் தியேட்டரின் முகப்பு வாயில் அரைகுறையாகக் கட்டி விடப்பட்டது; அதற்கு காரணம், அப்படி கட்டினால் அது அம்மன் கோயிலைவிட உயரமாகிவிடும் என்பதால்.
அதற்குப் பிறகும் இன்னொரு வழிபடுதலம் உயரமாகக் கட்ட முயற்சி நடந்தபோது அரசு அதை தடுத்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். எல்லாம் செவி வழிச் செய்தி...

கால்கரி சிவா said...

குமரன் தம்பி, நேற்றுத் தொலைபேசிய பிறகு உங்களை தம்பி என்று அழைப்பதில் தவறில்லை என நினைக்கிரேன்.

கோபுரத்தைக் காட்டி என்னுடைய பச்சரிசிக்கார தெரு நினைவுகளை கிளப்பிவிட்டீர்கள். நன்றி. அடுத்த படங்களுக்காக தவமிருக்கிறேன்.

கால்கரி சிவா

Karthik Jayanth said...

//எப்போதும் விளக்குக்களுடன் மதுரை நகரின் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும்

எப்போது இருத்து.என்னோட அம்மா ஒன்னும் சொல்லவில்லை.

//கோபுர தரிசனம் கோடி புண்ணியம்//

இந்த ஊருக்கு வந்த அப்புரம் எல்லாம் foto ல தான் பர்க்கவேன்டி இருக்கு.முடிந்தால் எனக்கு மைல் fwd செய்யவும்

சிவமுருகன் said...

என்னிடம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் நிறைய உள்ளது, ஆனால் அதில் இந்த படம் இல்லை.

கோபுர தரிசனம் தந்தமைக்கு நன்றி.

பிரதீப் said...

அடடா...
எம்புட்டு நாளாச்சு ஊரப்பக்கம் போயி... அப்படியே நெஞ்சத் தொளைச்சுருச்சுய்யா எங்காத்தா கோவுரம்.. சீக்கிரம் போயிப் பாக்கணும்...

குமரன் (Kumaran) said...

இராமநாதன், உங்க ஊருன்னா? தஞ்சாவூரைச் சொல்றீங்களா? தஞ்சைப் பெரிய கோவிலை விட உயரமா கட்டிடம் வராம இருந்தா நல்லது தான். :-)

குமரன் (Kumaran) said...

படத்தை ரசித்ததற்கு மிக்க நன்றி இராகவன். எனக்கு மின்னஞ்சலில் வந்த வேறு படங்களையும் இந்தத் தொடரில் இடுவேன். அவையும் உங்களுக்குப் பிடிக்கும் என்று எண்ணுகிறேன்.

குமரன் (Kumaran) said...

என்னார் ஐயா. தங்கள் இரட்டைப் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

மருது பாண்டியர் மதுரை கோபுரத்தைத் தெரிந்திடச் செய்த கதையைக் கொஞ்சம் சொல்லுங்களேன். எனக்குத் தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா, தங்கம் திரையரங்கின் முகப்பு வாயில் அரைகுறையாய் இருக்கும்/இருந்த காரணம் இது தானா? இப்போது தான் புரிகிறது. இந்த செவிவழிச் செய்தியை உறுதிபடுத்தியதற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

சிவா அண்ணா, நீங்கள் நிச்சயமாக என்னைத் தம்பி என்று அழைக்கலாம். பச்சரிசிக் காரத் தெருவில் இருந்து கோபுரங்கள் நன்றாகத் தெரியும் என்று எண்ணுகிறேன். இல்லையா?

குமரன் (Kumaran) said...

கார்த்திக் ஜெயந்த், அம்மாவிடம் கேட்டுப் பாருங்கள். நான் ஜூன் 2005 மதுரை போயிருந்த போது கூட கோபுரங்களில் விளக்குகள் பார்த்ததாய் நினைவு. அது எல்லா நேரங்களிலும் உள்ளதா இல்லையா என்று கேட்டுப் பாருங்கள்.

கொஞ்சம் பொறுத்தீர்களானால் எல்லாப் படங்களையும் இங்கேயே பதித்துவிடுவேன். உடனே படங்களைப் பார்க்கவேண்டும் என்றால் சொல்லுங்கள். தனிமடலில் அனுப்புகிறேன்.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன், உங்களிடம் இருக்கும் படங்களை தனிமடலில் அனுப்புங்கள். அவற்றையும் இங்கு பதித்து விடலாம்.

குமரன் (Kumaran) said...

பிரதீப், நீங்க ஹைதராபாதில் இருக்கீங்க. அதனால நினைச்சா ஆத்தாவை பாக்கணும்ன்னா போயிரலாம். எங்களுக்கு எல்லாம் படங்கள் தானே. :-)

Merkondar said...

சிவகங்கைச் சீமையில் என்ற கவியரசுவின் படத்தில்,'மதுரை கோபுரம் தெரிந்திட செய்த மருதுபாண்டியவர் வாழ்கவே' என பாடுவார்கள்.
பிறகு உங்களுக்கு தொடுப்பு கொடுக்கிறேன் அல்லது ஒரு சின் பதிவு போடுகிறேன்.

வெளிகண்ட நாதர் said...

'கோபுரங்கள் சாய்வதில்லை' ஆனா கட்டிற வீடு என்னைக்கும் சாஞ்சுடும். மதுரை மாட்டுத்தாவணியிலருந்து கோபுரம் தெரிய மாட்டங்கதே, அதெப்படி?

குமரன் (Kumaran) said...

நானும் அந்த பாடல் வரிகளைக் கேட்டிருக்கிறேன் என்னார் ஐயா. உங்கள் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

உதயகுமார் சார். பூமியின் Curvature மாட்டுத் தாவணியில் இருந்து கோபுரங்களை மறைத்து விடுகின்றன என்று எண்ணுகிறேன். கோரிப்பாளையம் வரும் போது (அந்த மேம்பாலத்தில்) கோபுரங்கள் நன்றாகத் தெரியுமே.

Karthik Jayanth said...

குமரன்,
அம்மா ஒரு வாரம் கவனித்து சொல்லுவதாக சொல்லிருக்கிரர்கள்.[எனக்கும் மதுரை படம்னு சொல்லி என்னொட நண்பன் fwd செய்தான். ஆனால் படம் சரியாக அட்டாச் ஆகவில்லை] fwd செய்தால் சந்தோசம்.

குமரன் (Kumaran) said...

இன்று மாலை வீட்டிற்கு போன பின் fwd பண்ணுகிறேன் கார்த்திக்.

சிங். செயகுமார். said...

மின்னொளியில் மீனாட்சி ! படமும் பதிவும் கடந்த முறை மதுரை சென்று வந்த ஞாபகம் நெஞ்சில்..

குமரன் (Kumaran) said...

வருகைக்கு நன்றி இளங்கவி சிங்காரகுமரன்.

சிவா said...

குமரன்! மதுரைய சுத்திக் காட்டுறீங்களா..காட்டுங்க..நானும் மதுரைக்கு போனதே இல்லை..இந்த தடவை ஊருக்கு போய் மதுரை, பிள்ளையார்பட்டி என்று அப்பாவுடன் செல்ல திட்டம். உங்கள் கட்டுரை படித்துவிட்டு போனால் பயனுள்ளதாக இருக்கும். தொடருங்கள்

குமரன் (Kumaran) said...

ஆமாம் சிவா. அவசியம் எல்லாப்பதிவுகளும் படித்துவிட்டு பின்னர் மதுரைக்கும் பிள்ளையார்பட்டிக்கும் செல்லுங்கள்.