Saturday, April 09, 2011

Murugalaya pattu Salem



முருகாலயாவின் இந்த விளம்பரத்தில் மூன்று மொழிகள் வருகின்றன. எந்த மொழிகள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்! :-)

8 comments:

குறும்பன் said...

தமிழ், தெலுங்கு, சொராசுட்டரம் .

தமிழ் இருப்பது உறுதியாக தெரிந்தது, மற்ற இரண்டும் நீங்க தான் சரியான்னு சொல்லனும் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குறும்பன், உங்களுக்கு சந்தேகம் எதுக்கு? நீவிர் சொன்னதே சரி!

1. கல்யாணமுலு, முத்துலு-ன்னு லு லு ன்னு வருதுல்ல? தெலுங்கே தான்! :)
2. அப்பறம் குமரனே ஒரு விளம்பரப் பாட்டை என்ன மொழின்னு கேட்டு இடறாரு-ன்னா, அது செளராட்டிரம் தான்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

விளம்பரப் பாட்டு ரொம்ப நல்லா இருந்துச்சி! பாக்யத லட்சுமி பாரம்மா-ன்னு கன்னடப் பாட்டின் மெட்டிலும், பழைய ராமாராவ் படம் சீதா கல்யாணமு சூசவே ராவண்டி-ன்னு தெலுங்குப் பட மெட்டிலும்...கலவையான நல்ல பாடல்!

பட்டு, முருகாலயா பட்டு!
பொண்ணு வீட்டுக்காரவுக நெற்றி ஃபுல்லா நாமம்! :)
எனக்கு வேறென்னமோ எல்லாம் ஞாபகம் வந்துரிச்சி, என் முருக வாரணமாயிரம் உட்பட! :))

குமரன் (Kumaran) said...

குறும்பன், சரி தான். :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவி. நானும் கவனிச்சேன். :-)

அது மட்டுமில்லாம சௌராஷ்ட்ரர் திருமணம் இப்படி நடக்காது மதுரையில். ஒரு வேளை சேலத்தில் இப்படி நடக்குமோ என்னவோ? அப்பா மடியில் உட்கார்ந்து தாலி கட்டிக் கொள்வது, மடிசார் கட்டிக் கொள்வது இதெல்லாம் மதுரை சௌராஷ்ட்ரர்களிடம் இல்லை; மஞ்சள் பட்டை வழக்கமான முறையில் கட்டிக்கொண்டு அப்பா அம்மா நடுவில் மனையில் உட்கார்ந்து கொண்டு மாப்பிள்ளை எதிரில் ஒரு முக்காலியில் அமர்ந்திருக்கத் தாலி கட்டிக் கொள்வார்கள். சேலம் சௌராஷ்ட்ரர்கள் தான் சொல்ல வேண்டும்.

பாடல் வரிகளை சிவமுருகன் ஃபேஸ்புக்கில் இட்டிருந்தார். இங்கும் வந்து இடுவார் என்று நினைக்கிறேன். :-)

adithyasaravana said...

பாட்டு தமிழ்ல வந்தாலும் அந்த மெட்டு தாசர் பாட்டை தானே ஞாபகப்படுத்துது? எங்க கன்னடத்தையும் சேத்துக்கங்கப்பா..
நான் போய் பார்த்த ஒரு சேலம் சௌராஷ்டிரா கல்யாணத்தில அப்பா மடியில எல்லாம் இருந்து தாலி கட்டின ஞாபகம் இல்லையே?? ஒரு வேலை காலையில one hour permission அரை நாள் விடுப்பாயிடுமோ என்ற அவசரத்தில் கவனிக்காம விட்டுட்டேன? கேட்டு சொல்றேன்..

குமரன் (Kumaran) said...

வாங்க ஆதித்ய சரவணா.

கன்னடத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான். நீங்க சொல்ற மாதிரி பாக்யத லக்ஷ்மி பாரம்மா மெட்டு தானே அந்தப் பாட்டு.

கேட்டு சொல்லுங்க. அப்பா மடியில உட்கார்ந்துக்கிட்டு தாலி கட்டுறதும் அப்போ அரக்கு நிறச் சேலை கட்டிக்கிட்டு இருக்கிறதும் அதுவும் மடிசாரா கட்டிக்கிட்டு இருக்கிறதும் புதுசா இருக்கு. இந்த விளம்பரத்துல தப்பா காமிச்சுட்டாங்களான்னு தெரியலை.

சிவமுருகன் said...

//பாடல் வரிகளை சிவமுருகன் ஃபேஸ்புக்கில் இட்டிருந்தார். இங்கும் வந்து இடுவார் என்று நினைக்கிறேன். :-)//


அண்ணன் சொல்லி நான் கேட்காமல் இருப்பதா?

எல்ல நொவ்ரி, அவ்ர நொவ்ரி, சௌராஷ்ட்ரா, மா..யி நொவ்ரி. மணக்கும் குங்கும் ஸெர பொரயி ஸெந்த அஸிலி, ஸொம்புகன் ஜிவத்த நொவ்ரி, முருகாலாயா ஸவ்ல பி2ல்லி ’மணமகள் பட்டும்’ ஸிங்காரு நொவ்ரி.

//அது மட்டுமில்லாம சௌராஷ்ட்ரர் திருமணம் இப்படி நடக்காது மதுரையில். ஒரு வேளை சேலத்தில் இப்படி நடக்குமோ என்னவோ? அப்பா மடியில் உட்கார்ந்து தாலி கட்டிக் கொள்வது, மடிசார் கட்டிக் கொள்வது இதெல்லாம் ....சேலம் சௌராஷ்ட்ரர்கள் தான் சொல்ல வேண்டும். //

கும்பகோணத்தில் இருக்கும் ஸௌராஷ்ட்ரர்கள் கல்யாணதில் இது போல தான் நடக்குமென கேள்வி பட்டுள்ளேன், ஆனால் அரக்கு நிற சேலை உடுத்துவார்களா அல்லது மஞ்சளாடை அணிவார்களா என்பது தெரியவில்லை!