Wednesday, July 14, 2010

ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டவில்லை!

நான் உண்மையைத் தான் சொல்கிறேன். இந்த இடுகை படித்து முடிக்கும் போது, ஏன் இடுகையின் நடுவிலேயே, நீங்கள் நான் சொல்வதை உண்மை என்று ஒத்துக் கொள்வீர்கள். சிறு வயதில் 'தாஜ்மகாலைக் கட்டியவர் யார்?' என்ற கேள்விக்குக் கேலியாக 'கொத்தனார்' என்று சொல்வோமே, அதைத் தான் சொல்லப் போகிறேன். ஏனென்றால் அந்தக் கேலியான பதிலில் தான் உண்மை இருக்கிறது. உண்மையில் கட்டியவர்கள் கட்டுமானத் தொழிலாளர்களே. அவர்களுக்குத் தான் அந்தக் கலை தெரியும். தாஜ்மகாலைக் கட்டுவித்தவன் தான் ஷாஜகான். அவன் ஆணையின் பேரில் கட்டப்பட்டதால் 'தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினான்' என்று வரலாற்று ஆசிரியர்களும் சொல்ல நாமும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டோம்.

சில வருடங்களாக வரலாற்றுச் செய்திகளைப் பற்றி (பதிவெழுத வந்த நாள் முதல் என்று சொல்லலாம். ஏறக்குறைய ஐந்தாண்டுகளாக) நிறைய ஆர்வம் தோன்றியிருக்கிறது. அந்த நோக்கில் இலக்கியம், கல்வெட்டு போன்றவற்றையும் அவற்றினைப் பற்றிய செய்திகளையும் படித்தும் எழுதியும் வருகிறேன். இந்த 'தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினார்' போன்ற செய்திகளை முன்னுக்குப் பின் முரணாக பலரும் எழுதியும் பேசியும் நம்பியும் வருவது போல் ஒரு தோற்றம் இப்போது எனக்குக் கிடைக்கிறது.

விளக்கமாகச் சொல்வதென்றால், கல்வெட்டுகளில் இருக்கும் செய்தியில் நேரடியாக ஒரு மன்னன் ஒரு செயலைச் செய்தான் என்று இருந்தால் தானே அந்த மன்னனின் செயலாக அதனை அறுதியிட்டுக் கூற முடியும். அவ்வாறின்றி அம்மன்னன் காலத்தில் வேறு யாரோ செய்ததை எல்லாம் அம்மன்னன் செய்ததாகச் சொல்லித் திரித்துக் கொண்டும் அதனைத் தாங்களே நம்பியும் திரிகிறார்கள் பல பேர். அவர்களில் பெரும் அறிஞர்கள் என்று பெயர் பெற்றவர்களும் இருக்கிறார்கள்.

கல்வெட்டுகளில் பெரும்பாலும் ஒரு மன்னனுடைய ஆட்சியாண்டு சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்லப்படுவது கல்வெட்டு எழுதும் முறைகளில் ஒன்று. மன்னன் எங்கோ தலை நகரில் இருக்கலாம். ஏதோ ஒரு கோவிலில் யாரோ ஒருவர் ஏதோ ஒரு தருமம் செய்திருக்கலாம். அதனைக் கல்வெட்டி வைத்திருக்கலாம். அப்போதும், நேரடியாக மன்னனுக்கு இந்த தருமத்தில் எந்த வித பங்கும் இல்லாவிட்டாலும், அந்த மன்னனின் பெயர், பெருமைகள், ஆட்சியாண்டு போன்றவற்றை தொடக்கத்தில் சொல்லுவது கல்வெட்டு எழுதும் முறையாக இருந்திருக்கிறது. இந்த மாதிரி கல்வெட்டுகளை எல்லாம் சில பேர் அந்த மன்னனே செய்ததைப் போல் திரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஷாஜகானாவது தாஜ்மகாலைக் கட்டுவித்தான். இங்கே மன்னனுக்கு அந்தக் கல்வெட்டுச் செய்தியில் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனாலும் முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் அவரவர் அரசியலுக்கு ஏற்ப நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஓரிரு எடுத்துக்காட்டுகள் சொல்கிறேன். அண்மையில் மாமல்லபுரத்தின் அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவர் கால முருகன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் பற்றிய ஒரு ஆங்கிலக் கட்டுரையைப் படித்தேன். அதனை எழுதியவர் ஒரு பெரிய கல்வெட்டறிஞர். அந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டே வரும் போது கீழ்கண்ட பகுதியைக் கண்டேன்.


The second inscription engraved on another pillar found near the previous one in the same trench belongs to Pallava king Kampavarman, son and successor of Nandivarman III. It is dated in the 17th regnal year of the king (A.D. 813). It refers to the gift of gold and land to the temple of Subramanya at Tiruvilichchil by a brahmin lady namely Vasantanar wife of Sivacarman alias Sri Kampa bhattan of Sandalya gotra, a resident of Manaiyir in Manaiyir Kottam.

....

The third inscription also belongs to Kampavarman is dated in his 18th regnal year (A.D. 887). It refers to the gift of 10 kalanju of gold by a lady Nangaipperuman, another wife of Sivacarman. ...

பார்த்தீர்களா? ஒரு அரசனின் ஆட்சிக்காலத்தில் அவனுக்குச் சம்பந்தேயில்லாத இரு பெண்கள் கொடுத்த கொடையினைக் குறித்து வைத்த கல்வெட்டுகள் அந்த அரசனுக்கு உரிமையானதாகப் பேசப்படுவதை! இக்கட்டுரையாசிரியர் மிகத் தெளிவாக யார் கொடை கொடுத்தார்கள் என்று சொல்லிவிடுவதால் அவரே இக்கல்வெட்டுகள் அரசனைச் சேர்ந்தவை என்று சொன்னாலும் அவை அரசனைச் சேர்ந்தவை இல்லை என்று நமக்குப் புரிந்துவிடுகிறது. இப்படி எல்லா தகவல்களும் சொல்லாமல் போகிற போக்கில் நிறைய கல்வெட்டுகளை ஏதோ ஒரு அரசனுக்குச் சொந்தமானவை என்று சொல்லிச் செல்லும் ஆய்வுக்கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். அங்கே எல்லாம் படிப்பவர்கள் அவை உண்மையிலேயே அவ்வரசனைச் சேர்ந்த, அவ்வரசனால் எடுப்பிக்கப்பட்ட கல்வெட்டுகள் என்று எண்ணிக் கொள்வார்கள்.

வேண்டுமென்றால் யாராவது கல்வெட்டறிஞர் ஒருவரிடம் சென்று முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டுகள் என்று கேளுங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை அவனுக்குரியவை என்று காட்டுவார்கள். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலானவை முதலாம் குலோத்துங்க சோழனுக்குச் சற்றும் தொடர்பே இல்லாத கல்வெட்டுகளாக இருக்கும். ஆனால் அவை அனைத்தும் அவனது ஆட்சியின் போது நடந்தவை; அதனால் அவன் பெயரும், புகழும், ஆட்சியாண்டும் பேசுபவை. ஆனாலும் அவ்வறிஞர்களும் அந்த இயலைக் கற்றுக் கொண்டு இருப்பவர்களும் அவை முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டுகளே என்று சாதிப்பார்கள். அவர்கள் நம்மை ஏமாற்ற அப்படி சொல்லவில்லை. அவர்கள் சொல்வதே உண்மை என்று அவர்கள் முழுக்க முழுக்க நம்புகிறார்கள். அவ்வளவு தான்.

நீங்கள் இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா? நான் இங்கே சொன்னவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏற்றுக் கொள்கிறீர்களா? மறுக்கிறீர்களா? நீங்கள் நினைப்பதைத் தயங்காமல் சொல்லுங்கள்!

12 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

oru mudivOda thaan irukeenga pOla :)

//அவற்றில் பெரும்பாலானவை முதலாம் குலோத்துங்க சோழனுக்குச் சற்றும் தொடர்பே இல்லாத கல்வெட்டுகளாக இருக்கும். ஆனாலும் அவ்வறிஞர்களும் அந்த இயலைக் கற்றுக் கொண்டு இருப்பவர்களும் அவை முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டுகளே என்று சாதிப்பார்கள்//

ithai eppovO engEyO min tamizh-la padichaa pOla irukke! :))

வவ்வால் said...

Kumaran,

nalama, net illai, mobile than kai kodukuthu, so no tamil typing,porutharulka!

I think ,neenga dinamalar editor kichnamoorthy's tamil brahmi kalvettu book padichitinga pola :)

kings illama palar kodai alikkalam.

But king sollama oru sengal vaithu kuda chinna buildinga katta mudiyathu.

Yaar enna maathiri veedu kattalam ena rules undu,vari undu.kal veedu anaivarum katta mudiyathu.

East india vara varai, entha kudi maganukkum nilam sontham illai.land trade ellam whites kondu vanthathu.

All land and natural resources belongs to king.athanai payanpadutha mattume anumathi, king ok sonna than athuvum.

Pathilaga vari katta vendum.

Ithu east india vantha piragum "zamindhar" aga thodarnthathu.

Zamin = land,

enave yaro oruvar ethuvum kattividamudiyathu, king "go ahead" sollamal.

Melum third person aga oru peyar kalvettil illatha pothu eppadi sollamudiyum.

Kings nick namela ellam kalvettu pottu irukanga, eg. Mahenravarma pallavan peyar, chithirakara puli, visithira chithan enru kuda irukku.

Fyi:

samrat ashoka ena entha kalvettilum peyar kidaiyathu. "Devanampiyasa priyadharshan" enre anaithu kalvettukalum irunthathu.

19 century la oru white historian than athu ashokarnu sonnar, then school bookla maram nattar, kulam vettinar padikka aarampithom!

Geetha Sambasivam said...

கல்வெட்டைப் பார்த்துட்டு ஓடியே வந்தேன், வவ்வால் சொன்னது சிந்திக்க வைக்கிறது. மற்றபடி ஷாஜஹான் தாஜ்மஹாலைக் கட்டினாரா என்பதில் சந்தேகம் நிச்சயமா உண்டு! :)))))))))))))))))

Geetha Sambasivam said...

தொடர

நாடி நாடி நரசிங்கா! said...

tajmahaalai katti mudindavudan kattiyavargalin kattai viralgalai shajagaan vettiyadaaga enakku terinda muslim nanban koorinaan,

(because avargal athe pola innoru taajmahaal kattakoodaathu enbadarkaaga)

ithil entha alavukku unmai enru teriyavillai.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவி! நீங்க கூட அடாவடியா பேசி சில பெரியவங்ககிட்ட திட்டு வாங்கினீங்களே! அது தான்!

- இப்படிக்குப் பஜனை கோஷ்டியில் ஒருவன்! :-)

குமரன் (Kumaran) said...

வாங்க வவ்வால்! என்னடா காலத்துல தலையைக் காட்டுறாரு, இந்தப் பக்கம் காணலையேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால் எல்லாத்துக்கும் சேத்து மொத்தமா பெரிய பின்னூட்டமா போட்டுட்டீங்க. :-)

நீங்க சொல்ற புத்தகத்தைப் படிக்கலை வவ்வால். அப்படி ஒரு பொத்தகம் இருக்கிறதே இதுக்கு முன்னாடி தெரியாது.

நீங்க சொல்றது ஓரளவு சரி தான். ஓரளவு மட்டுமே. :-) இந்த இந்த சாதிக்காரங்க தான் குடை வச்சுக்கலாம்; பல்லக்கு வச்சுக்கலாம்; மாடி வீடு கட்டலாம்; கல்வீடு கட்டலாம்; அது இதுன்னு நிறைய சட்டங்கள் மன்னர்கள் காலத்துல இருந்ததுன்னு படிச்சிருக்கேன். ஆனால் அதே நேரத்துல கணவன், மனைவின்னு ஒரே வீட்டுலயே தனித்தனியா பொன், பொருள்ன்னு அசையும் சொத்துகள் மக்கள் வைத்திருந்தார்கள்ன்னும் படிச்சிருக்கேன். சரி தானா? எடுத்துக்காட்டா 'யான் கொடுத்தவையும் அக்கன் கொடுத்தவையும் பெண்டுகள் கொடுத்தவையும் மற்றும் கொடுப்பார் கொடுத்தவையும்'ன்னு ஒரு புகழ்பெற்ற பேரரசனின் கல்வெட்டு சொல்லுதுல்ல. அங்கே அந்த அரசன் கொடுத்திருந்தாலும் மற்றவர்களுக்கும் அசையும் சொத்துகள் இருந்து அவர்களும் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறதே. அது மட்டும் இல்லாமல் அசையா சொத்துகளும் மக்கள் தானம் கொடுத்து அவையும் கல்வெட்டுகள் இருந்திருக்கிறதே. அப்படியென்றால் உரிமையில்லாத ஒன்றையா தானம் கொடுத்தார்கள்? கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்க அக்காலத்து மன்னர்கள் விட்டிருப்பார்களா என்ன?

இந்த இடுகையில எடுத்துக்காட்டா தந்த இரண்டு கல்வெட்டுகளும் சக்களத்திகள் இருவர் தந்த கொடையைத் தான் சொல்கின்றன. கல்வெட்டிக்கொள்ள அவர்களுக்கு அரசன் உரிமை வழங்கியிருக்கலாம். பரம்பரை பரம்பரையாக அவர்கள் வம்சத்திற்கு இருக்கும் அனுமதியாக அது இருக்கலாம். ஆனால் அவர்கள் செய்த இந்த கொடையில் நேரடியாக அரசனின் தொடர்பு இல்லாத போது அந்தக் கல்வெட்டை அந்த அரசனுக்கு உரியதாகச் சொல்வது ஒன்று மொத்தமாகத் தவறாக இருக்க வேண்டும்; அல்லது வெறும் ஊகமாக இருக்க வேண்டும். (ஊகங்களை வைத்துத் தானே வரலாறே எழுதப்படுகிறதுன்னு சொல்றீங்களா? அதுவும் சரி தான். உறுதியான உண்மையைப் போல இவங்க எல்லாம் எழுதுறதைப் படிச்சா 90% எல்லாம் ஊகமா தான் இருக்கு! :-) )

அன்று முதல் இன்று வரை நிலத்திற்கு இரண்டு நிலைகளில் உரிமையாளர்கள் இருக்கிறார்கள். முதல் நிலை நேரடியான நில உரிமையாளர்கள்; இரண்டாம் நிலை அரசு. இன்றும் இதே நிலைமை தான். ஏதாவது காரணம் அரசுக்கு இருந்தால் தனியார் சொத்துகளைப் பணம் கொடுத்தோ கொடுக்காமலோ அரசு கையகப்படுத்த முடியும்! அமெரிக்காவில் எங்கள் ஊரில் அது சட்டம்! இந்தியாவிலும் அதே போல் தான் என்று நினைக்கிறேன் - பெரிய பெரிய நிறுவனங்களுக்காக அரசு நிலம் கையகப்படுத்தும் போது அந்தச் சட்டம் தான் பாய்கிறது என்பது என் எண்ணம். இந்த இருநிலை நில உரிமையில் நிலத்தில் விளையும் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு (அல்லது ஏதோ ஒரு பங்கு) வரியாக அரசுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் அன்று இருந்தது. இன்று கொஞ்சம் மாறி நிலத்தின் அளவு, இடம், வகைப்பாடு போன்றவற்றைக் கொண்டு வரியை நிர்ணயிக்கிறார்கள்.

அதனால் அரசுக்கே நிலம் சொந்தம்; தனிமனிதருக்குச் சொந்தமில்லை என்று சொல்வது முழுக்க முழுக்க உண்மையில்லை! எந்தக் காலத்திலும்!

குமரன் (Kumaran) said...

அரசனின் பட்டப்பெயரைச் சொல்லி தானே கல்வெட்டினை வெட்டச் சொன்னதாக எழுதியிருந்தால் அந்தக் கல்வெட்டு அந்த அரசனுக்கு உரியது என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அந்தப் பட்டப்பெயர் எந்த அரசனுக்கு உரியது என்பதில் வேண்டுமானால் குழப்பம் இருக்கலாம்; ஆனால் அது ஏதோ ஒரு அரசனுக்கு உரியது என்பதில் குழப்பம் இருக்காது. தேவனாம்பியனின் கல்வெட்டுகளை அசோகனின் கல்வெட்டுகள் என்று சொன்னவர் எந்த அடிப்படையில் சொன்னாரோ? அதுவும் ஊகம் தானா இல்லை மற்றவர் அதனை மேலும் ஆய்வு செய்து உறுதிபடுத்திவிட்டார்களா தெரியவில்லை. :-)

***

ஊகங்கள் தவறில்லை. அறிவியல் சோதனைகளும் முதலில் ஊகங்களில் தான் தொடங்குகின்றன. ஆனால் சோதனை முடிவுகள் ஊகங்களை உறுதி செய்ய வேண்டும்; மாற்றாக இருந்தால் ஊகங்களை விட்டுவிடுவார்கள். ஆனால் மற்ற துறைகளில், குறிப்பாக வரலாற்றுத் துறையில், ஊகங்களில் தொடங்கி ஒருவர் ஊகங்களை வைத்து மற்றவர் ஊகங்களை எழுப்பி, மாற்றி மாற்றி ஒருவர் ஊகங்கள் மற்றவர்களுக்குச் சான்றாகக் கொண்டு, மொத்தத்தில் ஒரு ஊகத்தாலேயே எழுப்பிய பெரிய பெரிய கட்டடங்கள் தான் வரலாற்றில் பல நேரங்களில் தென்படுகின்றன! அந்த ஊகங்களால் ஆன வரலாற்றை நம்பி மக்கள் பெருமிதம் மட்டுமே கொள்கிறார்கள் என்றால் பிரச்சனையில்லை; ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கும் ஒருவரை ஒருவர் அழிப்பதற்கும் அதே ஊகங்களால் ஆன வரலாறுகள் தான் வகை செய்கின்றன என்பதைப் பார்க்கும் போது இந்த ஊகங்களால் பெரும் கட்டடங்கள் கட்டுபவர்களைக் கண்டு பெரும் வெறுப்பு தோன்றுகிறது!

குமரன் (Kumaran) said...

வாங்க கீதாம்மா. உங்களை வரவழைக்க வழி என்னன்னு இப்ப தெரிஞ்சிருச்சு. இனிமே நிறைய கல்வெட்டுகளா போட்டுட வேண்டியது தான்! :-)

குமரன் (Kumaran) said...

இராஜேஷ், நீங்க சொல்ற மாதிரி அர்பன் மிய்த் நிறைய இருக்கு. :-) எட்டுக்குடி முருகன் சிலையைப் பத்தி கீதாம்மாக்கிட்ட கேளுங்க அந்த சிலையை வடிச்ச சிற்பிக்கு என்ன நிலை வந்ததுன்னு சொல்லுவாங்க. :-)

admin said...

நண்பரே...
தாஜ்மஹாலை ஷாஜஹான் தான் கட்டினார் என்று எந்த முஸ்லீமும் தலையில் தூக்கி வைத்து ஆடவில்லை... காரணம் இஸ்லாம் இது போன்ற செயல்களை ஆதரிக்கவும் இல்லை... இதை உங்களுக்கு முன்பு பலபேர் நிரூபணம் செய்து விட்டனர்... நண்றி

குமரன் (Kumaran) said...

ஜன்னத் மைந்தன் ஐயா, நீங்கள் இடுகையைப் படித்தீர்களா இல்லையா என்று தெரியவில்லை. உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால் இடுகையில் ஒரு வரி கூடப் படிக்காமல் தலைப்பை மட்டும் படித்துவிட்டு நீங்களாகவே நான் என்ன சொல்லியிருப்பேன் என்று கற்பனை செய்து கொண்டு அதற்கு எதிர்வினையாக எழுதியது போல் இருக்கிறது.

தாஜ்மகாலை யார் கட்டினார்கள்; முஸ்லீம்கள் தாஜ்மகாலையோ அதனை ஷாஜகான் தான் கட்டினார் என்றோ தலையில் வைத்து ஆடுகிறார்களா இல்லையா; இஸ்லாம் இது போன்றவற்றை ஆதரிக்கின்றதா இல்லையா; என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு நான் இஸ்லாமையும் அறியேன்; முஸ்லீம்களையும் அறியேன்; தாஜ்மகாலையும் அறியேன்; வரலாற்றையும் அறியேன். இப்படி இருக்க நான் எங்கே எதையாவது அறுதியிடுவது? அப்படி நான் ஏதேனும் அறுதியாகச் சொல்லியிருந்தால் தானே எனக்கு முன்னரே பலரும் அறுதியிட்டுவிட்டார்கள் என்று நீங்கள் சொல்வதில் அருத்தம் இருக்கும்?

தலைப்பை மட்டுமே படித்துவிட்டு என்னையும் கட்டம் கட்டிவிட்டீர்கள் போலும்! :-(

நீங்கள் சொன்னதைப் போலவே உங்களுக்கும் ஒரு நண்றி.