அங்கண்
மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய்
வந்து நின் பள்ளிக்கட்டில் கீழே
சங்கம்
இருப்பாற் போல் வந்து தலைப்பெய்தோம்!
கிங்கிணி
வாய் செய்த தாமரைப்பூ போலே
செங்கண்
சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ?!
திங்களும்
ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண்
இரண்டும் கொண்டு எங்கள் மேல்
நோக்குதியேல்
எங்கள்
மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!
அழகு நிறைந்த மிகப்பெரிய இந்த
பூமியின் அரசர்கள் பலரும் உன் பெருமையின்
முன்னர் தங்கள் கருவம் தொலைந்து
போக, மிகப்பணிவுடன் உன்னைக் காண வந்து
உனது இருக்கையின் அருகில் கூடி இருப்பதைப்
போல் நாங்கள் கூடி நிற்கின்றோம்!
சிறிதே
திறந்து கிண்கிணி (சதங்கை) போல் தோன்றும்
உன் தாமரைப் போன்ற சிவந்த
திருக்கண்களை இன்னும் சிறிது சிறிதாகத்
திறந்து எங்கள் மேல் நோக்காதா?
சந்திரனும்
சூரியனும் ஒரே நேரத்தில் உதித்ததைப்
போல் உன் இரண்டு அழகிய
திருக்கண்களாலும் எங்களை நீ பார்த்தால்
எங்கள் குறைகள் எல்லாம் உடனே
நீங்கிவிடும்!
No comments:
Post a Comment