Wednesday, October 26, 2011

நல்லதை நினை மனமே!

நல்லதை நினை மனமே! - வீணாய்
பொல்லாததை நினையாதே! நீ (நல்லதை)

கணக்கிலா பொறாமை வைத்து காலத்தை நீ கழித்தால்
அடக்க முடியா கோபம் அடைந்திடுவாய்! நீ (நல்லதை)

தந்தையாம் பொறாமையும் தாயான கோபமும்
தவறாமல் பிறக்க வைக்கும் குழந்தைகள் எது மனமே?!
தீமை தந்திடும் பயமும் தீராத கவலையும்
அதுவே உலகினில் பொல்லாத வாழ்வைத் தரும்! (நல்லதை)



அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

8 comments:

வவ்வால் said...

குமரன்,

நல்லா சொல்லி இருக்கிங்க சிந்தனை செய் மனமே ...போல (டிஎமெஸ்)

ஹி ..ஹி...இனிமே உங்க பேச்சுப்படி நல்லதையே நினைக்கிறேன்...(இனிமே நல்ல பிகராக பார்க்கணும், நல்ல சரக்காக அடிக்கணும்,நல்ல சினிமா பாக்கணும்(இது நடக்காது))

அப்புறம் நினைச்சாமட்டும் போதுமில்ல நல்லது எதுவும் செய்யணும்னு கட்டாயமில்லையே?

தீபாவளி வாழ்த்துகள்!(டப்பாசு இல்லாம சைலண்ட் டிவாளி!)

Kavinaya said...

தீபாவளி வாழ்த்துகள், குமரா!

(நான் மதச் சார்பான விஷயங்கள் எழுதறேன்னு தமிழ்மணம் என் வலைப்பூவை reject பண்ணிட்டாங்க! how come you are still there?! :)

குமரன் (Kumaran) said...

நீங்க பட்டியல் போட்டதெல்லாம் பார்த்தா நினைக்கிறது மட்டும் போதும்; செய்ய வேண்டாம்ன்னு தோணுது வவ்வால். :)

எங்க ஊர்ல பட்டாசு வெடிக்கலாம். அதனால இன்னைக்கு கொஞ்சமா பட்டாசு வெடிச்சுட்டு மிச்சமிருக்கிறதெல்லாம் ஞாயித்துக்கிழமை தீபாவளி பார்ட்டியில வெடிக்கலாம்ன்னு இருக்கேன்.

குமரன் (Kumaran) said...

ரொம்ப நாளா நான் எழுதலை. அதனால இன்னும் அவங்க கண்ணுக்குப் படலைன்னு நினைக்கிறேன் அக்கா. விரைவில் கூடலையும் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிடுவார்கள் முதல் பக்கத்திலிருந்து.

அவங்க விளக்கத்தின் படி உங்க பதிவு இன்னும் தமிழ் மணத்துல தான் இருக்கு; ஆனா முதல் பக்கத்துல வராது - அவ்வளவு தானே?!

Kavinaya said...

இல்லப்பா; தமிழ் மணத்திலிருந்து totally out. அம்மன் பாட்டும் தான். cannot submit entries any longer.

குமரன் (Kumaran) said...

அப்படியா? கூடலும் அப்படி ஆகலாம் விரைவில். :-)

ப.கோபாலகிருஷ்ணன் (p.gopalakrishnan) said...

வணக்கம் , இந்த பாடலை யார் இயற்றியது என்று தெரிந்தால் எனக்கு சொல்லவும் . நன்றி
ப.கோபாலகிருஷ்ணன்
www.tamilisaiamutham.blogspot.com

K G Rajendran said...

அருமையான பாடல் என்பதை விட , நம் மனித இனத்திற்கே ஒரு நல்ல மந்திரம் .

தினம் தினம் அர்த்தம் அறிந்து பாடவேண்டிய மந்திரம்.