Tuesday, November 02, 2010

இன்னுமா சீருடை கொடுக்கிறீர்கள்?

இந்த வருடம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தியப் பயணம் மேற்கொண்ட போது இயன்ற வரையில் ஏழை மாணவர்களுக்கு உதவிகளைச் செய்து வந்தோம். அந்த உதவிகளைப் பற்றி 'மதுரைக்குப் போகலாமா', 'பாட்டி படித்த பள்ளி', 'கண்ணிழந்தார்க்கு ஒரு கைவிளக்கு' என்ற தலைப்புகளில் எழுதியிருந்தேன்.

அந்த உதவிகள் செய்வதற்கு சீனா ஐயா பெரும் துணை புரிந்தார். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், நான் கேட்ட ஒரே மாதத்தில், உதவி பெறத் தகுதியான பள்ளிகளையும் மாணவர்களையும் கண்டறிந்து நாங்கள் மதுரை சென்று சேருவதற்கு முன்னரே ஒரு பட்டியல் தந்தார். மதுரையில் இருக்கும் போது சீனா ஐயா தந்த பட்டியலில் உள்ள பலருக்கும் நேரில் சென்று உதவிகள் செய்ய முடிந்தது. வேறு பயணத்திட்டங்கள் இருந்ததாலும் பெங்களூருவில் இரு வாரம் பணிக்காகச் செல்ல வேண்டி இருந்ததாலும் பட்டியலில் இருந்த அனைவருக்கும் நேரில் சென்று உதவ முடியவில்லை. அதனால் எங்கள் சார்பாக சீனா ஐயா நேரம் கிடைக்கும் போது பட்டியலில் மீதமிருந்த பள்ளிகளுக்குச் சென்று உதவி புரிய வேண்டுமென்று வேண்டிக் கொண்டு பணத்தை அவரிடம் தந்தேன். பிறருக்கு உதவி செய்வதில் முன் நிற்கும் ஐயாவும் அப்படியே செய்தார்.

சென்ற செப்டம்பர் மாதம் ஐயாவின் திருமண நாளன்று உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லம்பட்டி, நடுமுதலைக்குளம் ஊர்களில் இருக்கும் பள்ளிகளுக்குச் சென்று ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு சீருடைகளும், இன்னொரு பள்ளிக்கு ஒலிப்பெருக்கி மின்னணுக்கருவிகளும் எங்கள் சார்பில் வழங்கியிருக்கிறார். ஐயாவிடம் இருந்து இந்தத் தகவல் எனக்கு வந்து வெகு நாளாகிவிட்டது. பதிவில் இடாமல் காலம் தாழ்த்தியது நான் தான். ஐயா சரியான காலத்திற்குள்ளாகவே சீருடை வழங்கிவிட்டார் - அதனால் இந்த இடுகையின் தலைப்பு தவறு! :-)

பதிவர் நண்பர் ஜெரி ஈசானந்தன் ஐயாவையும் அம்மாவையும் அழைத்துச் சென்று இந்தப் பணியில் உறுதுணையாக இருந்திருக்கிறார். அந்நிகழ்ச்சியில் அவர் எடுத்த படங்களை இங்கே பார்க்கலாம். சில படங்கள் இங்கே இடுகையிலேயே உங்கள் பார்வைக்காக.









ஐயாவிற்கும் அம்மாவிற்கும் நண்பர் ஜெரிக்கும் மிக்க நன்றி.

16 comments:

பாலாஜி சங்கர் said...

தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

S.Muruganandam said...

தங்கள் இந்தப் பணி வரும் காலங்களிலும் தொடர அந்த மீனாள் அருள் புரியட்டும் குமரன் ஐயா.

தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

Kavinaya said...

நல்ல பணிக்கு நன்றி குமரன். இந்தப் பணியைச் சிறப்புறச் செய்ய உங்களுக்கு உதவியோருக்கு வணக்கங்கள்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி பாலாஜி சங்கர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

thalaippai paarthathum, yaaro muthalaam naatil irunthu moondraam naattu makkaL pathi cholRaangaLo nu ninachen :)

cheer-udai ekkaalathilum kodukka vENdiya ondre!
nalla thuNikkE vazhi illaatha kudumbangaL paLLi thuNikku enna cheyyum?

nEsa naayanar kodutha aadai thaanam pola thaan ithuvum!
nEsan kumaran paNi vaazhga!

sury siva said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் வலைப்பதிவு படிக்கும் அத்தனை
பேருக்கும் சுப்பு ரத்தினத்தின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.

அப்பாதுரை said...

படிக்கவே பெருமையா இருக்கிறது சார்! வளமுடன் வாழ்க!

குமரன் (Kumaran) said...

நன்றி கைலாஷி ஐயா. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் இரவி. தீபாவளிக்கு புதுத்துணி வாங்குவதைப் பற்றி கூட எங்க தாத்தா அப்படித் தான் சொல்வார். 'நீ எப்ப வேணும்னாலும் போயி புதுத்துணி வாங்கிக்கலாம் குமரன். ஆனா இந்த ஏழை ஜனங்க வருஷத்துக்கு ரெண்டு தடவை தான் புதுத்துணி வாங்க முடியும். பொங்கலுக்கு ஒன்னு. தீபாவளிக்கு ஒன்னு'. அப்படி வருடத்துக்கு ஒன்னு ரெண்டு தடவை மட்டுமே துணி வாங்க முடியும்ன்னு இருக்கிறவங்க எப்படி சீருடை வாங்குவாங்க. அதனால அவங்களுக்கு எப்ப சீருடை குடுத்தாலும் சரி தான்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி சுப்பு ரத்தினம் ஐயா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

நன்றி அப்பாதுரை சார்.

SEKAR said...

PLEASE MAIL ME ROHA NIVARANA ASHTAGAM
THANK YOU
DR.S.SEKAR
sivaayam@gmail.com

walajabalaji said...

long live Mr.Kumaran and his family.

walajabalaji said...

Long LIVE Mr.Kumaran and his FAMILY.

குமரன் (Kumaran) said...

Thanks Balaji.