Friday, September 18, 2009

நவராத்திரித் திருவிழா

அன்னையைப் போற்றிப் பாடுவதற்கு எல்லா நாட்களும் ஏற்ற நாட்களே. அந்த வகையில் தொடர்ந்து வருடம் முழுக்க அன்னையின் புகழினைப் பாடல்களாக எழுதி வருகிறார் கவிநயா அக்கா. அதே போல் அன்னையின் புகழினைப் போற்றும் ஆதிசங்கர பகவத்பாதர் இயற்றிய சௌந்தர்யலஹரி சுலோகங்களுக்கு வருடம் முழுக்கவும் பொருள் எழுதிக் கொண்டிருக்கிறார் மதுரையம்பதி சந்திரமௌலி அண்ணா.

வருடம் முழுக்க அவர்கள் செய்யும் நற்பணியில் நாமும் கொஞ்சம் கலந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களின் ஆசை. அதனால் இந்த நவராத்திரி நேரத்தில் ஒவ்வொரு நாளும் 'அம்மன் பாட்டு' வலைப்பதிவில் ஒவ்வொரு பாடலாக இட்டு அன்னையை வணங்க வேண்டி அழைத்திருக்கிறார் கவிநயா அக்கா. அவருடைய வழிகாட்டுதலின் படி அங்கே வரும் பாடல்களைப் படித்து அன்னையின் அருளைப் பெற வேண்டுகிறேன்.

இதே நேரத்தில் தொடர்ந்து மௌலி அண்ணா எழுதி வந்த சௌந்தர்யலஹரி பொருளுரை நிறைவு பெறுகிறது. அதனைத் தொடர்ந்து நவராத்திரிச் சிறப்பு இடுகைகளாக அன்னைக்கு 64 உபசாரங்கள் என்னும் தலைப்பில் கவிநயா அக்கா மொழிபெயர்த்துத் தந்தவற்றை இட எண்ணியிருக்கிறார். அந்த இடுகைகளை சௌந்தர்யலஹரி பதிவில் படித்து அன்னையை வணங்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

சென்ற வருடம் மதுரையம்பதி பதிவில் மௌலி அண்ணா எழுதிய நவராத்திரி சிறப்பு இடுகைகளை மீண்டும் ஒரு முறை அதே பதிவில் மறுபதிவு செய்யவும் எண்ணியிருக்கிறார். அவற்றையும் படிக்க வேண்டுகிறேன்.

6 comments:

Radha said...

(இந்த பதிவை படிக்கும் முன்பே) கூடல் மூலமாக அறிமுகம் கிடைத்த அருமையான இரண்டு பதிவாளர்கள்.
நன்றி குமரன். தகவலுக்கும் நன்றி.

Kavinaya said...

நன்றி குமரா. நவராத்திரி நன்னாளில் உங்க எழுத்தையும் படிக்க காத்திருக்கிறோம்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நயகவி அக்கா, நவராத்திரியின் போது நவகவி அக்காவா ஆயிருவாங்க தானே! :))

செளந்தர்யலஹரி நிறைவுக்கு மெளலி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!
64 சிறப்புப் பதிவுக்கு வெயிட்டிங்ஸ்!

மெளலி (மதுரையம்பதி) said...

பதிவுக்கு நன்றி குமரன். :).

நான் முன்பு ஒருமுறை (சென்ற வருஷ நவராத்ரி?) தமிழிலக்கியத்தில் அம்பிகை தொடராக எழுத கேட்டேன்...நீங்களும் ஒரு பாகம் எழுதினீர்கள்...முடிந்தால் இந்த 6-7 நாட்களில் இன்னொரு பாகம் எழுதுங்களேன்?

குமரன் (Kumaran) said...

மன்னிச்சுக்கோங்க மௌலி. இந்த நவராத்திரியில் எழுத நேரம் கிடைக்கவில்லை. பின் ஒரு முறை எழுதுகிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

அச்சோ, இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம். நேரம் கிடைக்கையில் எழுதுங்க.

இந்த விஷயம் உங்களால்தான் சிறப்பாகச் செய்ய முடியும், அதனாலேயே அவ்வப்போது நினைவுட்டுகிறேன். :)