Thursday, August 20, 2009

ஆண்டாள்

கோயில் கந்தாடை நாயன் என்னும் அடியவர் அருளிச் செய்த பெரிய திருமுடியடைவு என்னும் நூலில் இருக்கும் ஆளவந்தாரின் வாழ்க்கைக் குறிப்புகளை நேற்று இட்டிருந்தேன். அதே நூலில் ஆண்டாளின் வாழ்க்கைக் குறிப்புகளும் இருக்கின்றன. அவற்றை இன்று இடுகிறேன். இதுவும் மணிப்பிரவாள நடையில் இருந்தாலும் வடமொழிச் சொற்கள் சிறிதளவே இருக்கின்றன. ஆனாலும் இது கடினம் என்று நினைப்பவர்களுக்காக தற்காலத் தமிழிலும் அந்த குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.

***

ஸ்ரீபூமிப்பிராட்டியார் திருவவதாரமான சூடிக்கொடுத்த நாச்சியாருக்குத் திருவவதாரஸ்தலம் பாண்டியமண்டலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர். திருவவதரித்தது பெரியாழ்வாருடைய திருநந்தவனத்தில் திருத்துழாயடியிலே. திருநக்ஷத்ரம் ஆடி மாஸம் பூர்வபக்ஷத்தில் சதுர்த்தி செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரம் வரீயாந்நாமயோகம் பத்ரகரணம் துலாலக்னம் மத்யாஹ்ந ஸமயத்தில். பூமியிலே இருந்து பெரியாழ்வார் திருமாளிகையிலே வளர்ந்தருளினார். திருநாமங்கள் சூடிக்கொடுத்தாள், கோதை, ஆண்டாள், ஆழ்வார் திருமகள். இவள் எழுந்தருளியிருக்கிறது நூற்றெட்டுத் திருப்பதிகளிலும். அதிலும் ப்ரதானம் ஸ்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் திருப்பாவை முப்பது பாட்டும், நாச்சியார் திருமொழி நூற்றுநாற்பத்து மூன்று பாட்டும். இவள் பாடின திருப்பதிகள் திருவாய்ப்பாடி, திருப்பாற்கடல், வடமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கோயில், திருமலை. இவளுக்குத் திருவாராதனம் நம்பெருமாள். ஆசார்யர் பெரியபெருமாள்.

இவளுக்குத் தனியன் (பராசரபட்டர் அருளிச் செய்தது)

நீளாதுங்க ஸ்தநகிரிதட ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவ அஸ்து பூய:

இதன் பொருள் - நப்பின்னை பிராட்டியின் ஸ்தனங்கள் என்னும் மலைகளின் சாரலில் கண்வளர்பவனும், இவளது மாலையை தனக்கு விலங்காகக் கொண்டு கட்டுப்பட்டு உள்ளவனும் ஆகிய க்ருஷ்ணனை திருப்பள்ளி உணர்த்தினாள். வேதங்களின் தலைப்பாகமாக உள்ள வேதாந்தங்கள் கூறும் தனது அடிமைத்தனத்தை கண்ணனிடம் அறிவித்தாள். தானாக வலியச் சென்று அவனை அனுபவித்தபடி இருந்தாள். இப்படிப்பட்ட ஆண்டாளின் விஷயமாகக் கூறப்படும் இந்த நமஸ்காரங்கள், காலம் என்ற தத்வம் உள்ளவரை விளங்க வேண்டும்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

நன்றி: நம்பெருமாள் விஜயம் ஆகஸ்ட் 1 - 2007 மின்னிதழ்

***

பெருமாளின் தேவியர்களில் ஒருவரான பூமிப்பிராட்டியாரின் திரு அவதாரமான சூடிக்கொடுத்த நாச்சியார் எனப்படும் ஆண்டாளின் பிறந்த இடம் பாண்டிய நாட்டில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் பிறந்தது பெரியாழ்வாரின் திருநந்தவனத்தில் துளசிச்செடியின் கீழே. இவருடைய பிறந்த நாள் ஆடி மாதம் வளர்பிறை நான்காம் நாள் செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரம் என்னும் நட்சத்திரத்தில் துலா லக்னத்தில் மதிய நேரத்தில். பூமியிலே பிறந்து பெரியாழ்வாரின் வீட்டில் வளர்ந்தார். இவருடைய திருப்பெயர்கள் சூடிக் கொண்டாள், கோதை, ஆண்டாள், ஆழ்வார் திருமகள். இவர் நூற்றியெட்டு திவ்விய தேசங்கள் என்னும் திருப்பதிகளிலும் பெருமாளுக்கு இடப்பக்கம் எழுந்தருளியிருக்கிறார். அவற்றில் முதன்மையான இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் இயற்றிய நூல்கள் திருப்பாவை முப்பது பாட்டும், நாச்சியார் திருமொழி நூற்றுநாற்பத்தி மூன்று பாட்டும் ஆகும். இவர் பாடிய திருப்பதிகள் திருவாய்ப்பாடி, திருப்பாற்கடல், வடமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கோயில் எனப்படும் திருவரங்கம், திருமலை (அழகர் கோவில் எனப்படும் திருமாலிருஞ்சோலையையும் பாடியிருக்கிறார். ஆனால் எப்படியோ அந்தத் திருப்பதியின் பெயர் இங்கே விடுபட்டிருக்கிறது). இவர் வணங்கியது நம்பெருமாள் என்னும் திருவரங்க நகர் வளர் அழகிய மணவாளன். இவருக்கு ஆசாரியர் பெரியபெருமாள் என்னும் திருவரங்கத்து மூலவர். (ஆண்டாளே பட்டர்பிரான் கோதை என்று தன்னை அழைத்துக் கொள்வதால் பெரியாழ்வாரே ஆண்டாளின் ஆசாரியர் என்று சொல்லுவதுண்டு. இங்கே பெரியபெருமாள் இவருக்கு ஆசாரியர் என்று சொல்லியிருப்பது வியப்பளிக்கிறது.)

தனியனுக்குத் தரப்பட்டுள்ள பொருள் தற்காலத் தமிழிலேயே இருப்பதால் மீண்டும் தரவில்லை.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

78 comments:

Radha said...

நன்றி குமரன்.
//ஆழ்வார் திருமகள் //
அருமையான பெயர்.
ராஜாஜியின் "சக்கரவர்த்தி திருமகன்" படித்து முடித்தப் பின்னர் ராமனின் அந்தப் பெயர் மிகவும் பிடித்துவிட்டது.
பி. ஸ்ரீ அவர்கள் ஆழ்வார்கள் பற்றி எழுதிய நூல் ஒன்றில் "ஆழ்வார் திருமகள்" என்று தலைப்பிட்டு இருப்பார்.படித்தபொழுதே பிடித்துவிட்டது.
//நாச்சியார் திருமொழி நூற்றுநாற்பத்தி மூன்று பாட்டும் ஆகும். //
கண்ணனுக்கு 143 சொல்லி இருக்கிறாள். :-)

Radha said...

//அழகர் கோவில் எனப்படும் திருமாலிருஞ்சோலையையும் பாடியிருக்கிறார். ஆனால் எப்படியோ அந்தத் திருப்பதியின் பெயர் இங்கே விடுபட்டிருக்கிறது //
"வடமதுரை" என்பது இரண்டு ஊர்களைக் குறிக்குமோ என்னவோ! :-)

குமரன் (Kumaran) said...

வடமதுரை என்றால் இரு ஊர்களையும் குறிக்குமா என்று 21ம் நூற்றாண்டின் இணைய உடையவரைத் தான் கேட்க வேண்டும் இராதா. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

தெரியத் தந்தமைக்கு நன்றிகள் குமரன்.

குமரன் (Kumaran) said...

வாங்க மௌலி. நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆழ்வார் திருமகளாராய்!

ஆகா! என்ன ஒரு வீச்சு இந்தச் சொற்றொடரில்!
போங்கய்யா! ஒங்களுக்கு ஒரு சக்கரவர்த்தி திருமகன்-ன்னா எங்களுக்கு ஒரு ஆழ்வார் திருமகள்! :)

ஆழ்வார் திருமகளே!
தோழனின் திருத்தோழியே!
இன்னும் பல நூற்றாண்டு இரு! நல்லா இருடீ ராசாத்தி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இவள் எழுந்தருளியிருக்கிறது நூற்றெட்டுத் திருப்பதிகளிலும்//

ஆகா! இது எப்படி குமரன்?
திருவதரி, திருச்சாளக்கிராமம் போன்ற திவ்ய தேசங்களில் ஆண்டாள் எழுந்தருளி இருக்கிறாளா? வாவ்! :)

//இவளுக்குத் திருவாராதனம் நம்பெருமாள். ஆசார்யர் பெரியபெருமாள்//

ஹிஹி! இதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்!
காதலனே ஆச்சார்யனாய் இருப்பது அவ்வளவு லேசுப்பட்ட விஷயம் இல்ல! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திருநக்ஷத்ரம்
ஆடி மாஸம்
பூர்வபக்ஷத்தில்
சதுர்த்தி
செவ்வாய்க்கிழமை
திருவாடிப்பூரம்

//வரீயாந்நாமயோகம்// ?
//பத்ரகரணம்// ?

துலாலக்னம்
//மத்யாஹ்ந ஸமயத்தில்// யூமீன் மத்தியான வேளையில்?

பூமியிலே இருந்து பெரியாழ்வார் திருமாளிகையிலே வளர்ந்தருளினார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கண்ணனிடம் அறிவித்தாள். தானாக வலியச் சென்று அவனை அனுபவித்தபடி இருந்தாள்//

வலியச் சென்று என்பதில் தான் எத்துணை வலிமை!

இப்படிப்பட்ட ஆண்டாளின் விஷயமாகக் கூறப்படும் இந்த நமஸ்காரங்கள், காலம் என்ற தத்வம் உள்ளவரை விளங்க வேண்டும்.

R.DEVARAJAN said...

//திருநக்ஷத்ரம் ஆடி மாஸம் பூர்வபக்ஷத்தில் சதுர்த்தி செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரம் வரீயாந்நாமயோகம் பத்ரகரணம் துலாலக்னம் மத்யாஹ்ந ஸமயத்தில்/

திதி, வாரம், நக்ஷத்ரம், யோகம், கரணம் – ஐந்தும் சேர்ந்தது பஞ்சாங்கம்.

நாச்சியார் அவதாரம் :
திதி – சதுர்த்தி
வாரம் – செவ்வாய்
நக்ஷத்ரம் – பூரம்
யோகம் - வரீயன்
கரணம் - பத்ரம்

‘விஷ்கம்பம்’ முதலான யோகங்களில் 18ம் யோகம்
‘வரீயான்’ என்பது. வைதிக ஸங்கல்பத்தில் ஐந்தையும்
சொல்ல வேண்டும். யோகம், கரணம் இவற்றை மட்டும் சுப யோக, சுப கரண என்று சொல்லி விடலாம்.

ஆடிச் செவ்வாய் விசேட தினம்.
நாச்சியார் திருப்பிரதிஷ்டை இல்லாத திவ்ய தேசங்களில் மனத்தால் த்யானிக்க வேண்டும்.
மலை நாட்டுத் திருப்பதிகளில் (அனந்தபுரம் நீங்கலாக) தாயாருக்கு
தனி ஸந்நிதி இல்லை.

தேவ்

Kavinaya said...

மிக்க நன்றி குமரா.

ஆழ்வார் திருமகளின் படம் கொள்ளை அழகு!

Radha said...

ravi said...
//வலியச் சென்று என்பதில் தான் எத்துணை வலிமை! //
dei dagaalti ravi, :-)
from when did you start supporting self-effort? :-)
~
radha

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
dei dagaalti ravi, :-)
from when did you start supporting self-effort? :-)//

ha ha ha!
எம்பெருமானை அடைய எம்பெருமானே உபாயம் என்று வலிய வலிய வலியப் போய் அவனிடம் வலிந்து கொள்ளுதல் தப்பில்லை! உத்தமம் :)

அவனை அடைய அவன் இல்லாமல் இன்ன பிற உபாயங்களைக் கணக்கு போட்டு பண்ணுவது தான் அதமம்! :)

காதலனை அடைய காதலி ராதைக்கு உபாயங்கள் தேவை இல்லை!

பகவத் ப்ரவருத்தி விரோதி! ஸ்வ ப்ரவருத்தி நிவர்த்தி = ப்ரபத்தி!

Radha said...

ravi said...
//எம்பெருமானே உபாயம் என்று வலிய வலிய வலியப் போய் //
"ஆண்டாள் முயன்றாள்" என்றே தொனிக்கிறது.உண்டா இல்லையா ?

~
ராதா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆண்டாள் முயன்றாள்" என்றே தொனிக்கிறது.உண்டா இல்லையா ?//

முயற்சி திருவினை ஆக்கும்!
முயற்சி "திரு"-வானவளையும் ஆக்கும்! :)

ஆண்டாள் முயன்றாள் என்று தொனிக்கவில்லை! வசதிக்கேற்றாற் போல வெட்டி ஒட்டப்பிடாது! :)

* ஆண்டாள் முயன்றாள் என்று தொனிக்கவில்லை!
* ஆண்டாள் அடைய முயன்றாள் என்றும் தொனிக்கவில்லை!
* அவன், தன்னை அடைய வேணும், என்று அடைய முயன்றாள் என்றே தொனிக்கிறது ராதா! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பகவத் ப்ரவருத்தி விரோதி!
ஸ்வப் ப்ரவருத்தி நிவர்த்தி!
= ப்ரபத்தி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கொஞ்சம் அண்ணாந்து, பந்தலின் மேல் உள்ள வாசகத்தைப் பாருங்க ராதா! :)

* நின்னரு"ளே"
* "புரிந்து",
* "இருந்தேன்"
இனி என்ன திருக்குறிப்பே?

குமரன் (Kumaran) said...

வேறெங்கேனும் ஆழ்வார் என்று பொதுவாகச் சொன்னால் அது நம்மாழ்வாரைத் தானே குறிக்கும் இராதாரவி. ஆண்டாளைச் சொல்லும் போது மட்டும் ஆழ்வார் என்பது பெரியாழ்வாரைக் குறிக்கிறது போலும். அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையாள். :-)

குமரன் (Kumaran) said...

நூற்றியெட்டுத் திருப்பதிகள் மட்டும் இல்லாமல் உகந்தருளின திருப்பதிகளிலும் இவள் எழுந்தருளியிருக்கிறாள் இரவி. ஹ்ரீச்சதே லக்ஷ்மீச்ச பத்ன்யௌ என்று புருஷசூக்தம் பரம்பொருளுக்கு அடையாளம் கூறும் போது இவளைத் தானே முதலில் சொல்கிறது. அப்படியிருக்க அவன் இருக்கும் இடத்தில் இவள் இல்லாமல் எப்படி? இவளும் 'அகலகில்லேன் இறையும்' என்று தான் இருக்கிறாள். சரியா? :-)

கண்ணபிரான் இரவிசங்கர்! பட்டர்பிரான் கோதைக்கு ஆசாரியர் பட்டர்பிரானா பெரியபெருமாளா? என் குழப்பத்தைத் தீர்க்காமல் 'காதலனே ஆசாரியன்' என்று மெச்சிக் கொள்கிறீர்களே?!

குமரன் (Kumaran) said...

நான் எதிர்பார்த்தது போலவே தேவப்பெருமாளின் அருள் பஞ்சாங்க விளக்கமாக வந்துவிட்டது. நன்றி தேவ் ஐயா.

பூர்வ பக்ஷம் என்பதை சுக்ல பக்ஷம் என்று பொருள் கொண்டேன். அது சரி தானா ஐயா?

குமரன் (Kumaran) said...

நன்றி அக்கா. தேடிய போது ஓடி வந்து காட்சி தந்தாள். திருவடிகளைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டேன்.

குமரன் (Kumaran) said...

//பகவத் ப்ரவருத்தி விரோதி! ஸ்வ ப்ரவருத்தி நிவர்த்தி = ப்ரபத்தி!//

இதற்கு பொருள் என்ன இரவி?

//கொஞ்சம் அண்ணாந்து, பந்தலின் மேல் உள்ள வாசகத்தைப் பாருங்க ராதா! :)//

அதை அவர் ஏற்கனவே பாத்ததால தான் எப்பதில இருந்து தன்முயற்சியை ஆதரிக்கத் தொடங்கினீங்கன்னு கேட்டார்.

Raghav said...

மீனாக்ஷியைப் பார்க்க சென்றதில், ஆண்டாளை தரிசிக்க வரத்தாமதம் ஆகி விட்டது.

ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லியின் பலபெயர்களும் அருமை.

Raghav said...

குமரன், ஒரு ஐயம்..
ஆழ்வார்களைப் பற்றியும், அவர்களது வரலாறு, அவர்கள் இயற்றிய பிரபந்தங்கள் அனைத்தையும் நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு உபதேசித்தாரா?? அல்லது நம்மாழ்வார் பிரபந்தங்கள் மட்டுமே உபதேசித்தாரா? ஆழ்வார்களின் வைபவங்கள் எவ்வாறு உலகிற்குத் தெரிய வந்தன என்பதே என் சிறு கேள்வி.. அறியக் காத்திருக்கிறேன்.

Raghav said...

//ஆண்டாள் முயன்றாள்" என்றே தொனிக்கிறது.உண்டா இல்லையா ?//

தயங்காதீங்க ராதா :)
”அவனை அடைய, நமது கர்மாக்களும் அவசியம்ங்கிற தொனி ஒலிக்கிறது. உண்டா இல்லையா ? அப்புடின்னு கேளுங்க.. இன்னும் தெளிவா பதில் வரும் :)

Raghav said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அவன், தன்னை அடைய வேணும், என்று அடைய முயன்றாள் என்றே தொனிக்கிறது //

நல்லா குழம்பிட்டேன்..

//அவனை அடைய அவன் இல்லாமல் இன்ன பிற உபாயங்களைக் கணக்கு போட்டு பண்ணுவது தான் அதமம்! :)//

இப்போ புரிந்தது.

Radha said...

ravi said...
//அவன், தன்னை அடைய வேணும், என்று அடைய முயன்றாள் என்றே தொனிக்கிறது ராதா! :))
//
மீண்டும் "அடைய முயன்றாள்" அப்படின்னு சொல்றீங்க.
ஒன்னும் புரியலே.
உங்களுக்கு நானே பாயிண்ட் எடுத்து குடுத்துடறேன்.
"இறைவன் ஆண்டாளை தன்னை அடைய முயல்வித்தான்" அப்படின்னு ஒங்க "அடைய முயன்றாள்"க்கு பொருள் சொல்லிடுங்க.
அப்போ அங்கு ஆண்டாள் முயற்சியா எதுவும் இல்லை. "கர்த்ருத்வ த்யாகம்" அப்படின்னு ந்யாச தசகத்துல கவி தார்கிக சிம்ஹம் சொல்றதுக்கு பொருந்தி வந்துடும். குமரன் கொடுத்துள்ள அந்த மின்னிதழில் "தானாக வலியச் சென்று அவனை அனுபவித்தபடி இருந்தாள்." அப்படின்னு இருக்கு. இது கூட ஆண்டாள், "தானாக", தன்னோட முயற்சியினாலே ஏதோ கார்யம் செஞ்ச மாதிரி தொனிக்கிறது. ஆனா இதற்கு, "அரங்கன்/இறைவன் ஆண்டாளை தன்னை வலிந்து வந்து அனுபவிக்கும்படி செய்வித்தான்" என்பது தான் உண்மையான பொருள் அப்படின்னு அடிச்சு சொல்லிடுங்க. அதன் பின்னர் என்னை மாதிரி கிறுக்கன் வந்து இந்த மாதிரி கேள்வி கேக்க மாட்டான். :-)
~
ராதா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராகவ்
//தயங்காதீங்க ராதா :)
”அவனை அடைய, நமது கர்மாக்களும் அவசியம்ங்கிற தொனி ஒலிக்கிறது. உண்டா இல்லையா ? அப்புடின்னு கேளுங்க.. இன்னும் தெளிவா பதில் வரும் :)//

ஹா ஹா ஹா
பகவத் ப்ரவருத்தி விரோதி! ஸ்வ ப்ரவருத்தி நிவர்த்தி = ப்ரபத்தி!

//
//அவனை அடைய அவன் இல்லாமல் இன்ன பிற உபாயங்களைக் கணக்கு போட்டு பண்ணுவது தான் அதமம்! :)//

இப்போ புரிந்தது
//

பகவத் ப்ரவருத்தி விரோதி! ஸ்வ ப்ரவருத்தி நிவர்த்தி = ப்ரபத்தி!

@ராதா
//உங்களுக்கு நானே பாயிண்ட் எடுத்து குடுத்துடறேன்.
"இறைவன் ஆண்டாளை தன்னை அடைய முயல்வித்தான்" அப்படின்னு ஒங்க "அடைய முயன்றாள்"க்கு பொருள் சொல்லிடுங்க. //

பகவத் ப்ரவருத்தி விரோதி! ஸ்வ ப்ரவருத்தி நிவர்த்தி = ப்ரபத்தி!

//குமரன் கொடுத்துள்ள அந்த மின்னிதழில் "தானாக வலியச் சென்று அவனை அனுபவித்தபடி இருந்தாள்." அப்படின்னு இருக்கு. இது கூட ஆண்டாள், "தானாக", தன்னோட முயற்சியினாலே ஏதோ கார்யம் செஞ்ச மாதிரி தொனிக்கிறது//

ஹிஹி!
பகவத் ப்ரவருத்தி விரோதி! ஸ்வ ப்ரவருத்தி நிவர்த்தி = ப்ரபத்தி!

//ஆனா இதற்கு, "அரங்கன்/இறைவன் ஆண்டாளை தன்னை வலிந்து வந்து அனுபவிக்கும்படி செய்வித்தான்" என்பது தான் உண்மையான பொருள் அப்படின்னு அடிச்சு சொல்லிடுங்க. அதன் பின்னர் என்னை மாதிரி கிறுக்கன் வந்து இந்த மாதிரி கேள்வி கேக்க மாட்டான். :-)//

ஹா ஹா ஹா
ஆழி போல் கிறுக்கி, வலம்புரி போல் தான் கிறுக்கி
தாழாதே சாரங்கம் கிறுக்கிய சரமழை போல்
வாழ உலகினிற் பெய்திடாய் ராதா
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல்! ஓர்! எம் ராதா! :)))

பகவத் ப்ரவருத்தி விரோதி! ஸ்வ ப்ரவருத்தி நிவர்த்தி = ப்ரபத்தி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இது கூட ஆண்டாள், "தானாக", தன்னோட முயற்சியினாலே ஏதோ கார்யம் செஞ்ச மாதிரி தொனிக்கிறது. ஆனா இதற்கு, "அரங்கன்/இறைவன் ஆண்டாளை தன்னை வலிந்து வந்து அனுபவிக்கும்படி செய்வித்தான்" என்பது தான் உண்மையான பொருள் அப்படின்னு அடிச்சு சொல்லிடுங்க. அதன் பின்னர் என்னை மாதிரி கிறுக்கன் வந்து இந்த மாதிரி கேள்வி கேக்க மாட்டான். :-)//

I was laughing & laughing at this comment of Radha
Radha - I like you so much! Sema jooper party neenga! En venduthal ellam, naan unga goshtiyil cheekirame cheranume-nu thaan :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
//பகவத் ப்ரவருத்தி விரோதி! ஸ்வ ப்ரவருத்தி நிவர்த்தி = ப்ரபத்தி!//

இதற்கு பொருள் என்ன இரவி?//

பகவத் ப்ரவருத்தி = விரோதி!
ஸ்வ ப்ரவருத்தி = நிவர்த்தி!
= = = ப்ரபத்தி!
:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அவன், தன்னை அடைய வேணும்,
என்று அடைய முயன்றாள் என்றே தொனிக்கிறது //

நல்லா குழம்பிட்டேன்.. //

ஹா ஹா ஹா
சரி, இப்போ புரியுதா பாருங்க ராகவ்!

அவன்,
தன்னை அடைய வேணும் என்று
அடைய முயன்றாள்
என்றே தொனிக்கிறது!

:))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராகவ்
இது புரியுதா பாரு! :))

* தலைவன் தன்னை அடைய வேணுமாறு,
* திருப்பள்ளித்தாமத்துக் கலவியிலே,
* தன்னைத் தானே தலைவி தளர்த்திக் கொள்ளுமா போலே,

* அத்தளர்த்தல் என்பது தன் முயற்சியோ, ஸ்வப்ருவர்த்தியோ ஆகாத படிக்கு,
* அங்காங்கே அவன் வந்து அடையுமாறு
* தன்னை அடைவித்துக் கொள்ளுதல் என்னும் வலிதலிற்
* ப்ரபத்தியே சேஷிப்பதாலும், விசேஷிப்பதாலும்,

* சேஷிக்கும் போது, சேஷனங்களின் அசைவு என்பது,
* சேஷனின் கர்மாந்தரம் ஆகாது நின்றாற் போலே,
* அவனிடம் ப்ரபன்ன ஜனங்கள் வலிதலும்,
* ஸ்வப்ருவர்த்தி ஆகா நின்றது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன்
//கண்ணபிரான் இரவிசங்கர்!//

என்ன குமரன் ஃபுல் நேம் எல்லாம் கூப்ட்டு மெரட்டறீங்க? :)

//பட்டர்பிரான் கோதைக்கு ஆசாரியர் பட்டர்பிரானா பெரியபெருமாளா? என் குழப்பத்தைத் தீர்க்காமல் 'காதலனே ஆசாரியன்' என்று மெச்சிக் கொள்கிறீர்களே?!//

உடையவருக்கு "ஆச்சார்யர்" என்றால் அந்த "ஆச்சார்ய அந்தஸ்து" உள்ள "ஒருவர்" யார்? = பெரிய நம்பிகள்!
அது போலத் தான், இங்கே தோழி கோதைக்கும்!

* பட்டர்பிரான் கோதை என்று இனிஷியல் போட்டுக் கொண்டாலும்,
* அவர் ஆச்சார்ய "ஸ்தானத்தில்" சொல்லிக் கொடுத்து இருந்தாலும்,
* ஆச்சார்ய "அந்தஸ்து" என்பது பெரிய பெருமாளுக்கே உரித்து!

ஏன்?
அதை என் தோழியே பாசுரத்தில் காட்டிக் கொடுக்கிறாள்!
பெரியாழ்வார் என்னும் "ஸ்தான அளவில்" உள்ள ஆச்சார்யன் சொல்லி மட்டும் கொடுப்பதில்லை! கேட்டும் இருப்பாராம்! எதைக் கேட்டு இருப்பார்?

செம்மை உடைய
திரு அரங்கர் தாம் பணித்த,
மெய்ம்மைப் பெரு வார்த்தை
விட்டு சித்தர் கேட்டி ருப்பர்!
********************************

லக்ஷ்மீ நாத சமாரம்பாம் என்னும் ஆச்சார்ய பரம்பரையிலே, கோதை என்னும் நம் தாயாருக்கு ஆச்சார்யர் பெரிய பெருமாளே! அவரே "ஆச்சார்ய அந்தஸ்து"!

வராக சரமமும் அவளுக்கு அவனால் அருளப்பட்டதே!

இப்படி மெய்ம்மைப் பெரு வார்த்தை முன்பே அறிந்தவள் கோதை!
அதான் பெரியாழ்வாரையும் மீறி, அனாச்சாரம் என்று கருதாது, சூடிக் களைகிறாள்! சூடிக் கொடுக்கிறாள்! பின்பு அவருக்கே சூடிக் களைதல் அனாச்சாரம் அல்ல என்று சாதித்துச் சொல்லிக் கொடுக்கிறாள்!

இப்படி பெரியாழ்வார், திரு அரங்கர் தாம் பணித்த, மெய்ம்மைப் பெரு வார்த்தையை, கேட்டு இருந்ததால்...அவர் கோதைக்கு "அந்தஸ்து ஆச்சார்யர்" ஆக மாட்டார்! "ஸ்தான" ஆச்சார்யர் என்றளவில் சரி!

அதனால் தான் மணவாள மாமுனிகளும்,
தம் செயலை "விஞ்சி நிற்கும் தன்மையளாய்" என்று காட்டிக் கொடுக்கிறார்!

அந்தத் "தன்மை" அவளிடம் முன்பே உள்ளது! அவள் மெய்ம்மைப் பெரு வார்த்தையை முன்பே கேட்டு இருக்கிறாள்! கேட்டு, சேனை முதலியார் முதலாக, அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தும் இருக்கிறாள்!

மேலும், ஆச்சார்யர் என்பவர், சீடனை, தாயாரிடம் ஒப்புவித்து, புருஷகாரத்துனுடனே, திருவடிகளைக் காண்பித்துக் கொடுப்பவர்!
பெரியாழ்வார், கோதையைத் தாயாரிடம் ஒப்புவிக்கவில்லை! அவளிடமே அவளை எப்படி ஒப்புவிப்பது? :)

அதனால்...
காதலி கோதையின் ஆச்சார்யர் = காதலன் பெரிய பெருமாளே!


லக்ஷ்மீ நாத சமாரம்பாம்
நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம்
வந்தே குரு பரம்பராம்!

ஹரி ஓம்!

குமரன் (Kumaran) said...

//தன்னைத் தானே தலைவி தளர்த்திக் கொள்ளுமா போலே, //

இந்த முழு விளக்கமும் மிக அருமை இரவி. தலைவி சேஷி ஆகும் போது தலைவன் இப்படி தளர்த்திக் கொள்வதும் உண்டு.

பெரிய நம்பிகள் ஸமாச்ரயணம் செய்ததால் ஆசார்ய பதவி பெறுகிறாரா இரவி? அவரைத் தவிர்த்து உடையவருக்கு இன்னும் நான்கு/ஐந்து ஆசாரியர்கள் உண்டல்லவா?

பெண்ணுக்குக் கணவனே ஆசாரியன் என்ற வைதிக மரபுப்படியும் திருவரங்கநாதன் கோதைக்கு ஆசாரியன் போல.

குமரன் (Kumaran) said...

//குமரன், ஒரு ஐயம்..
ஆழ்வார்களைப் பற்றியும், அவர்களது வரலாறு, அவர்கள் இயற்றிய பிரபந்தங்கள் அனைத்தையும் நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு உபதேசித்தாரா?? அல்லது நம்மாழ்வார் பிரபந்தங்கள் மட்டுமே உபதேசித்தாரா? ஆழ்வார்களின் வைபவங்கள் எவ்வாறு உலகிற்குத் தெரிய வந்தன என்பதே என் சிறு கேள்வி.. அறியக் காத்திருக்கிறேன்.//

நல்ல கேள்வி இராகவ். ஆனால் பந்தலில் கேட்க வேண்டியதைக் கூடலில் கேட்டால் எப்படி? :-)

விடை எனக்குத் தெரியவில்லை இராகவ். எல்லா பிரபந்தங்களையும் நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு உபதேசித்தார் என்று தெரியும். ஆனால் ஆழ்வார்களின் வரலாற்றையும் அவர் தான் சொன்னாரா என்று தெரியவில்லை. இராதாரவிகளுக்குத் தெரிந்திருக்கும்.

Raghav said...

//இராதாரவிகளுக்குத் தெரிந்திருக்கும்//

ஹா ஹா.. என்ன குமரன்.. அவங்களை வில்லனாக்கிட்டீங்களே :)

Raghav said...

//நல்ல கேள்வி இராகவ். ஆனால் பந்தலில் கேட்க வேண்டியதைக் கூடலில் கேட்டால் எப்படி? :-) //

எல்லாம் ஒரு ஊர்ப்பாசம் தான் :)

அவர் தான் எங்கும் இருப்பாரே.. எங்கு கேட்டால் என்ன :)

Raghav said...

//அதனால்...
காதலி கோதையின் ஆச்சார்யர் = காதலன் பெரிய பெருமாளே!//

அடடா.. அருமையா இருந்துச்சுண்ணா.. உங்க விளக்கம்.

Radha said...

Ravi said...
//I was laughing & laughing at this comment of Radha
Radha - I like you so much! Sema jooper party neenga!//
ரவி, கிட்டதிட்ட proposal மாதிரி இருக்கு. :-) என்னோட profile-la gender, age எல்லாம் clear-a போட்டு இருக்கேன்.
உங்களுக்கு வேற ஒரு ராதா கிடைக்க
வாழ்த்துக்கள். :-)

Ravi said...
// En venduthal ellam, naan unga goshtiyil cheekirame cheranume-nu thaan :))) //
அப்போ நான் இது நாள் வரை உங்க கோஷ்டியில் இல்லையா ? :-((
நான் தானே கூடல் கோஷ்டியிலும் பந்தல் கோஷ்டியிலும் வந்து சேர்ந்தது. நீங்க என்ன புதுசா என் கோஷ்டியில் வந்து சேரணும்னு சொல்றீங்க ?:-)
raghav said...
//ஹா ஹா.. என்ன குமரன்.. அவங்களை வில்லனாக்கிட்டீங்களே :)//
குமரன்,
உங்களுக்கு என் மேல் தனிப்பட்ட விரோதம் இருந்தால் நேரடியாக திட்டி விடுங்கள். :-)
ராதாவின் பின் கிருஷ்ணன் வருவதே என்றும் பொருத்தமானது. வேண்டுமானால் "கண்ணபிரான் ராதா", "ராதா கண்ணபிரான்" என்று சொல்லிவிடுங்கள். இந்த மாதிரி கேலிகளுக்கு ஆளாகாமல் தப்பிப்பேன். :-)
~
ராதா

குமரன் (Kumaran) said...

இராதா, எல்லா பெயர்களும் நாராயணனைக் குறிப்பவையே. இரவி: என்ற திருப்பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில பார்த்ததில்லையா? அதனால இராதா கண்ணபிரான்னு சொன்னாலும் சரி இராதாரவின்னு சொன்னாலும் சரி எல்லாம் ஒன்னு தான். இராகவுக்கு அது தெரியலை. அம்புட்டு தான். கவலைப்படாதீங்க. :-)

உங்க கோட்டின்னு இரவி சொன்னது 'கிறுக்கனுங்க' கோஷ்டியை. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
ரவி, கிட்டதிட்ட proposal மாதிரி இருக்கு. :-) என்னோட profile-la gender, age எல்லாம் clear-a போட்டு இருக்கேன்.
உங்களுக்கு வேற ஒரு ராதா கிடைக்க
வாழ்த்துக்கள். :-)//

அடச்சே! அடச்சே! அடப் பாவிங்களா! :)
உங்க நக்கல் கமெண்ட் சூப்பரு! அதுக்காக Likeன்னு சொன்னா இப்படியா? அடிங்க! :)

எந்நாள் எம்பெருமானுக்கு அடியோம் என்று எழுதப்பட்டேன் அந்நாள்...
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்
அவன் அந்தமில் சீர்க்கு அல்லால் வேறெங்கும் அகம் குழைய மாட்டேனே! :)

குமரன் கரீட்டாச் சொல்லி இருக்காரு பாருங்க //உங்க கோட்டின்னு இரவி சொன்னது 'கிறுக்கனுங்க' கோஷ்டியை. :-)//

//அப்போ நான் இது நாள் வரை உங்க கோஷ்டியில் இல்லையா ? :-((//

ஹிஹி! அது எப்பமே உண்டு தான்! எப்பமே மாதவிப் பந்தல் கீழ் உங்களுக்கு குயில் கானம் பாடப்படும் தான்!

ஆனாலும் Self Effort கோஷ்டியில் எப்படி என்ன தான் கிறுக்குத்தனம் இருக்கு-ன்னு தெரிஞ்சிக்க ஆசை! அதான் உங்க கோஷ்டியில் "அதிரப் புகுத" விழைந்தேன்! :))

என்ன தாழாதே சாரங்கிய கிறுக்கிய சரமழை போல்..ன்னு ராதா பாசுரம் படிச்சீங்க-ல்ல? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
//அதனால்...
காதலி கோதையின் ஆச்சார்யர் = காதலன் பெரிய பெருமாளே!//

அடடா.. அருமையா இருந்துச்சுண்ணா.. உங்க விளக்கம்.//

அடப் பாவி! அது ஆச்சார்ய விளக்கம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
//நல்ல கேள்வி இராகவ். ஆனால் பந்தலில் கேட்க வேண்டியதைக் கூடலில் கேட்டால் எப்படி? :-) //

எல்லாம் ஒரு ஊர்ப்பாசம் தான் :)
அவர் தான் எங்கும் இருப்பாரே.. எங்கு கேட்டால் என்ன :)//

நோ நோ! ஊர்ப்பாசத்துல மதுரையம்பதியில் கேட்டா? அங்கெல்லாம் நான் பேசக் கூட மாட்டேன்! எனக்கு அழகிரி அண்ணா-ன்னா கொஞ்சம் பயம்! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
//தன்னைத் தானே தலைவி தளர்த்திக் கொள்ளுமா போலே, //

இந்த முழு விளக்கமும் மிக அருமை இரவி//

:)
நன்றி குமரன்!
அதுக்கு விளக்கமா ஏதும் நான் சொல்லப் போயி...அது வம்பாப் போயி.... :))))
அதான் வரிகளை மட்டும் கொடுத்துட்டேன்! :))

//தலைவி சேஷி ஆகும் போது தலைவன் இப்படி தளர்த்திக் கொள்வதும் உண்டு//

எக்ஜாக்ட்லி!
அதான் தளர்த்துதல் என்பது "முயற்சி"யாகப் பார்க்க முடியாது என்று சொல்ல வந்தது!

நின்னருளே புரிந்து "இருந்தேன்" - இருத்தலே ஒரு கர்மம் தானே-ன்னு கூட "கிறுக்குத்தனமா" பேசலாம் அல்லவா? :)))
அதான் கர்மம் வேறு! கர்ம யோகம் வேறு!-ன்னும் முன்பு எப்போதோ சுட்டிக் காட்டிய ஞாபகம்!

//பெரிய நம்பிகள் ஸமாச்ரயணம் செய்ததால் ஆசார்ய பதவி பெறுகிறாரா இரவி? அவரைத் தவிர்த்து உடையவருக்கு இன்னும் நான்கு/ஐந்து ஆசாரியர்கள் உண்டல்லவா?//

ஆம்
1. பெரிய திருமலை நம்பி
2. திருக்கச்சி நம்பி
3. திருக்கோட்டியூர் நம்பி
4. திருமலை ஆண்டான்
5. திருவரங்கப் பெருமாள் அரையர்
என்று ஐந்து ஆச்சார்யர்கள்!
கூடவே ஸ்தான அளவில் 6. யாதவப் பிரகாசர்

இருந்தாலும் குரு பரம்பரையில் ஆளவந்தார்->பெரிய நம்பிகள்->இராமானுசர்!
பெரிய நம்பிகள் மட்டுமே உடையவருக்கு ஆச்சார்யர் "அந்தஸ்து"! - பூர்ணாச்சார்ய ஸமாஸ்ரயா: மகாபூர்ணரை ஆஸ்ரயிக்கக் கடவது!

தாயார் புருஷகாரத்துடனே, திருவடிகளைக் காட்டிக் கொடுப்பவர் தான் ஆச்சார்யர் என்பதால் ஸமாச்ரயணம் செய்து வைத்த பெரிய நம்பிகள் மட்டுமே "அந்தஸ்து" விசேடமாக உடையவர் ஆச்சார்ய அந்தஸ்து பெறுகிறார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...
This comment has been removed by the author.
Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
//பகவத் ப்ரவருத்தி விரோதி! ஸ்வ ப்ரவருத்தி நிவர்த்தி = ப்ரபத்தி!//

இதற்கு பொருள் என்ன இரவி?//

* நாம் எம்பெருமானை அடைவதற்குச் செய்யும் எந்த முயற்சியும் = "ஸ்வ ப்ரவருத்தி"

* எம்பெருமான் நம்மை அடைவதற்குச் செய்யும் முயற்சிக்கு அந்த ஸ்வ ப்ரவருத்தி, தடையாய் இருக்கிறது = எனவே அது "பகவத் ப்ரவருத்தி விரோதி"

* ஆகையால் அத்தகைய நமது "உபாயங்களை"க் கைவிட்டு இருத்தலே = ப்ரபத்தி!

பகவத் ப்ரவருத்தி விரோதியான,ஸ்வ ப்ரவருத்தி நிவர்த்தியே=ப்ரபத்தி!

பகவத் ப்ரவருத்தி விரோதி
ஸ்வ ப்ரவருத்தி நிவர்த்தி
= ப்ரபத்தி

Radha said...

குமரன் என்னும் ஞானவடிவான உத்தவரே, ச்சே உத்தமரே, :-)
ரவிர்...ரவிலோசநஹ எல்லாம் விஷ்ணு தானே. அந்த விஷ்ணு தான் கையிலே புல்லாங்குழல் வெச்சிகிட்டு தலையிலே மயிற்பீலி வெச்சிகிட்டு ஆயர் வீட்டுல எல்லாம் வெண்ணை திருடி தின்ற கிருஷ்ணனா? ;-)
நீங்க வேணும்னா "இராதாரவி" அப்படின்னு பலுக்கிக்கொங்க. கடல் சூழ்ந்த இந்த வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் "ராதா கிருஷ்ணா" , "ராதே கிருஷ்ணா" என்று தான் பொதுவாக உரைக்கின்றனர். சொல்கின்றனர். வழங்கி வருகின்றனர். "ராதே கிருஷ்ணா" என்பதை மந்திரமாகவும் ஓதுகின்றனர். "இராதாரவி" என்ற இந்த பலுக்கல் ஆட்டத்துக்கு நான் வரவில்லை. :-) எனக்கென்னவோ அது இருக்காதா ரவின்னு கேள்வி கேக்கற மாதிரி இருக்கு. :-)
~
ராதா

Radha said...

அடேங்கப்பா ! சும்மா ரெண்டு கையா தூக்கி "நீ தான்பா என்னை பார்த்துக்கணும்னு" சொல்றதக்கு பின்னாடி இவ்வளோ மேட்டர்-ஆ ?? எனக்கு ஒரு சந்தேகம். இந்த சரணாகதி தத்துவம் தமிழ்நாட்டில இல்லையா ரவி ? இதை தமிழ்-ல விளக்க முடியாதா ரவி ? அன்னைக்கும் வடமொழி ஸ்லோகங்களை எல்லாம் கொண்டு வந்து என்னை பயபடுத்திநீங்க. இன்னைக்கும் அதே மாதிரி தான். எனக்கும் வடமொழிக்கும் ரொம்ப தூரம். கொஞ்சம் புரியும்படியா கொஞ்சும் தமிழ்ல சொல்லுங்களேன். :-)

Radha said...

அப்புறம், இந்த கிறுக்கன் "self-effort" கோஷ்டில்யில மட்டும் இல்ல, கண்ணன் எந்த எந்த கோஷ்டியில் எல்லாம் இருக்கானோ அதுல எல்லாம் ராதாவும் உண்டு.

Radha said...

ravi said...
//அடச்சே! அடச்சே! அடப் பாவிங்களா! :)
உங்க நக்கல் கமெண்ட் சூப்பரு! அதுக்காக Likeன்னு சொன்னா இப்படியா? அடிங்க! :)//

ரவி, நீங்க "like" அப்படின்றதோட நிறுத்தி இருந்த நான் ஒன்னும் பேசாம போயிருப்பேன். "Sema jooper party" அப்படி இப்படின்னு சொன்னதாலே கொஞ்சம் ஆடி போயிட்டேன் :-)

Radha said...

ரவி,
நீங்க தமிழ்ல விளக்கம் தரும் பொழுது அப்படியே "நம்மகிட்ட இருக்கற எல்லாத்தையும் கொடுத்திட்ட பிறகு" எதைக் கொண்டு முயற்சி செய்யறது அப்படின்னு சொன்னீங்கன்ன நல்லா இருக்கும்.
நிறைய தட்டச்சுப் பிழைகளுடன் இருந்தாலும், இந்த சுட்டியுள் உள்ள கதை உங்களுக்கு விளக்கம் தர பயன்படலாம்.
http://www.tamilhindu.com/2009/07/bhrathiar_stories_06/
~
ராதா

Radha said...

ரவி,
நீங்க சொல்ற விளக்கத்தை பொறுத்து அடுத்த அடுத்த கேள்விகள் இருக்கு.
"சரணாகதி செஞ்ச பின்னாடி ஒருத்தர் சொந்தமா முயற்சி செய்யற மாதிரி தெரியறது எல்லாம் வெளி உலக பார்வையாளர்களுக்கு தான்" அப்படின்னு சொல்லிட்டீங்கன்னா அதோட என்னோட எல்லா கேள்விகளுக்கும்/சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்தது அப்படின்னு ஒரு பெரிய வணக்கத்தை சொல்லிட்டு போயிடறேன்.
இல்லாட்டி இதோ இன்னும் கேள்விகள்/சந்தேகங்கள். சரணாகதி செஞ்சிட்ட பின்னாடி "முயற்சி செய்தார்"னு சொன்னா அங்க அன்னார் இன்னும் ஒரு "அகங்காரத்தோட" திரியறார் அப்படின்ற மாதிரி தான் தொனிக்கிது. அப்போ பகவான் அன்னார் செய்த சரணாகதியை ஏற்றுக் கொள்ளவில்லையா? இது போன்ற சந்தேகங்களை எல்லாம் நீங்க தான் தீர்க்க போறீங்க.
~
ராதா

Radha said...

ரவி,
அப்பறமா சரணாகதி சம்பந்தமா இந்த சந்தேகம் எல்லாம் தீர்ந்த பின்னாடி, "செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்" அப்படின்ற நம்மாழ்வார் பாசுர வரிக்கு விளக்கம் என்ன அப்படின்னு ஒண்ணு ஒண்ணா அடுத்தடுத்த சந்தேகங்கள் எல்லாம் தீர்க்க போறீங்க.
~
ராதா

Radha said...

குமரன்,
என்னடா இந்த கிறுக்கன் பிதற்றலை நிறுத்த மாட்டான் போல இருக்கேன்னு கோபப்பட்டீங்கன்னா, ஒங்க பதிவிலே இந்த கிறுக்கன் பிதற்ற காரணமான அந்த கண்ணபிரானையே திட்டுங்க. :-) கண்ணபிரானே ஆதி காரணம். முழு முதல் காரணம்.
ராதா வெறும் கரணம் மட்டுமே. :-)
~
ராதா

Raghav said...

// கண்ணபிரானே ஆதி காரணம். முழு முதல் காரணம்.
ராதா வெறும் கரணம் //

உங்கள் முன் நான் சரணம் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடியேனை இப்படிக் கேள்விகளால் விளாசினால் பச்சைக் குழந்தை தாங்குவேனா? :)
பச்சைக் குழந்தைக்கு என்ன தெரியும்? கால் கட்டை விரலைச் சூப்ப மட்டுமே தெரியும் :)

ராதா மனதில் ராதா மனதில் என்ன ரகசியமோ?
கண் ரெண்டும் தந்தியடிக்க!
கண்ணா வா கண்டுபிடிக்க! :)

குழந்தை இன்னும் ரெண்டு ஓம் நமோ Dash வேற போட வேண்டியிருக்கு! அதனால் இக்கேள்விகளை பந்தலின் மேனேஜர் குமரனிடமோ, இல்லை, பந்தலின் டேமேஜர் பிறைமகுடனிடமோ வைப்பது அல்லவோ தர்மம்? :)

போலோ ராதா கிருஷ்ண ரகுமாயீ கீ...ஜே!
போலோ ராதா மானச சித்சோர கீ...ஜே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆங்..மறந்துட்டேனே!
போலோ...ப்ரவஸ்து ராகவாச்சார்ய மகராஜ் கீ...ஜே! :)

Radha said...

ரவி என்னும் பச்சிளம் குழந்தாய் ! :-)
ராதாவின் மனதில் என்றும் நிலையாக இருக்கற ரகசியம் உலகுக்கே வெளிச்சத்தை தரும் கிருஷ்ண ரகசியம். :-) இங்க கேள்வி எல்லாம் கிருஷ்ணன் தான் கேக்கறான். ;-)
சரணாகதி ஒன்று தான் வழின்னு அன்னைக்கு சொன்னப்புறம் இன்னைக்கு "ஆண்டாள் வலிய முயன்றாள்" அப்படின்னா....அதுக்கு இந்த பச்சிளம் குழந்தை என்ன சமாதான மொழி சொல்ல போகுதுன்னு என் கிரிதாரிக்கு ஆவல் பொங்கிற்று. அதான் கேள்வி எல்லாம் கேக்கறான். :-)
சரி, நீங்க வேற நிறைய வேலை எல்லாம் வெச்சிட்டு இருக்கீங்க போல..... இன்னொரு நாள் நிதானமா பேசிக்கலாம். :-)

Radha said...

ரவி,
அப்புறம், வேற எப்பவாவது எங்கயாவது சரணாகதி செஞ்சா மோக்ஷம் உறுதி அப்படின்னு சொல்லும்போது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு சரம ஸ்லோகத்தை மட்டும் பிரமாணமா எடுத்துட்டு போகாதீங்க. கூடவே வேற எதனாச்சும் சேர்த்தியே வெச்சிகோங்க. ராதா மாதிரி வடமொழி தெரியாத கிறுக்கனா இருந்தா அப்படியே கேட்டுட்டு போயிடுவான். கொஞ்சம் மொழி தெரிஞ்ச ஆளா இருந்தா இந்த ஸ்லோகத்துல "இந்த பிறவியின் முடிவிலேன்னு" எங்க சொல்லி இருக்குன்னு கேக்க ஆரம்பிச்சிருவான். மோக்ஷம் உறுதி ஆனா எப்பன்னு சொல்ல முடியாதுன்னா....(கீதை உபதேசம் பண்ண) கண்ணபிரான் மாதிரி ஒன்னாம் நம்பர் டகால்டி பார்ட்டிய பார்க்க முடியாது. :-)
விசார மார்க்கம் அந்த மார்க்கம் இந்த மார்க்கம் எல்லாத்துலயும் இருக்கற நிச்சயமற்ற தன்மை இதுலயும் இருக்கேன்னு கேள்வி கேட்டுட்டான்னு வைங்க....ஒரேடியா எல்லா பிரமாணங்களையும் கைலையே வெச்சிட்டு இருந்தா இந்த மாதிரி சமயத்துல நல்லா பயன்படும். :-)
~
ராதா

Radha said...

raghav said...
***
// கண்ணபிரானே ஆதி காரணம். முழு முதல் காரணம்.
ராதா வெறும் கரணம் //
உங்கள் முன் நான் சரணம் :)
***
சரணமாகும் தனதாள் அடைந்தார்க் கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் எம் ராகவா ! :-)
இது மாதிரி அரசியவாதிகள்ட்ட இருந்து என்னை காக்க விரைந்து ஓடி வா !! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

/....(கீதை உபதேசம் பண்ண) கண்ணபிரான் மாதிரி ஒன்னாம் நம்பர் டகால்டி பார்ட்டிய பார்க்க முடியாது. :-)//

ஓ....ராதா ரொம்ப ஓவராப் பேசுறாரு-ல்ல?
இன்னிக்கு இருக்குடி அவருக்கு ஆப்பு! :)

நமோ ராகவாய நமோ நமஹ! களத்தில் குதிக்கிறேன்! ராதாவின் கேள்விகள் எல்லாம் பொடிப் பொடி ஆக்கீறலாம்! :)

குதஸ்த்வா "கஸ்மலம்" இதம்?
...அகீர்த்தி கரம் ராதா?

Radha said...

அடேங்கப்பா ! ரவி நீங்க தலைகீழா நின்னாலும் என் கிரிதாரிக்கு தான் எல்லா சேதமும். ராதா வெறும் கரணம் மட்டுமே. :-)

சரணாகதி தவிர வேற மார்க்கம் கெடயாதுன்னு நிறுவும்போது , அப்படியே (கீதை கர்ம யோகம்-19, 20) ஸ்லோகங்களுக்கு என்ன அர்த்தம் அப்படின்னு சொல்லிடுங்க.
"கர்ம யோகம் செஞ்சே ஜனகர் முதலானோர் முக்தி அடைந்தனர்" அப்படின்னு எங்கிட்ட இருக்கற ராம க்ருஷ்ணா மடத்தினரின் பல்வேறு உரைகளிலும் இருக்கிறது.பாரதி ராஜாஜி இன்னும் நிறைய பேர்களின் உரைகளிலும் காணப்படுகிறது. எல்லோருமெ எப்படி தப்பா சொல்லிட்டு போனாங்கன்னு என் கிரிதாரிக்கு ஆவல். :-)
ஸ்லோகங்கள் உள்ள சுட்டி இதோ:
http://acharya.iitm.ac.in/cgi-bin/show_gita_ch.pl?3_3

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இராம.கி ஐயாவின் நாரணம் பதிவில் நனைந்து கொண்டிருந்தேன்!
அதான் ராதாவை ஏளப் பண்ணுவதில் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது! :)

விவாதக் களத்துக்குள் குதிப்பதற்கு முன்....
//ஒங்க பதிவிலே இந்த கிறுக்கன் பிதற்ற காரணமான அந்த கண்ணபிரானையே திட்டுங்க. :-) கண்ணபிரானே ஆதி காரணம். முழு முதல் காரணம்//

இதற்கு எனது கடுமையான மறுப்புரைகள்! :)

எதுக்கு என் கண்ணபிரானைத் திட்டணும்?
அவன் என்ன செஞ்சான்? அவன் மேல ஒரு திட்டு விழ விட மாட்டேன்! பாவம்! அவனே எவ்ளோ-ன்னு தான் சுமப்பான்! அதுவும் அத்தனையும் Thanksless Job!

இந்த மாதிரி கர்ம மீமாச்கர்களுக்கு திட்டறத்துக்கு மட்டும் அவன் தேவைப்படுகிறான்! மற்ற முயற்சிகளுக்கு எல்லாம் தாங்களே முயன்றுகிடுவாங்களோ?

போற்றுவார் போற்றல் வேணும்ன்னா என் கண்ணனுக்குப் போகட்டும்!
ஆனால் தூற்றுவார் தூற்றல் எல்லாம் அவனுக்குப் போக விட மாட்டேன்! எனக்கே வரட்டும்!

கண்ணா, ஜாக்கிரதையா உட்கார்ந்து, பாப் கார்ன் சாப்பிட்டுக்கிட்டே, கோக் குடிச்சிக்கிட்டே வேடிக்கை பாரு! உன் மேல தூசி கீசி விழப் போவுது! இவிங்கள ஒரு வழி முடிச்சிட்டு, உன் கிட்ட வாரேன்! அப்பறம் நம்ம வீக் எண்ட் ஜாலியா ஊர் சுத்தப் போவலாம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அடேங்கப்பா ! சும்மா ரெண்டு கையா தூக்கி "நீ தான்பா என்னை பார்த்துக்கணும்னு" சொல்றதக்கு பின்னாடி இவ்வளோ மேட்டர்-ஆ ??//

:)
இது மேட்டரே இல்லை!
மேட்டரே இல்லை என்பது தான் சரணாகதி!

இருக்காத மேட்டரை, இருக்குறா மாதிரி, ஏதோ "ஞானபரமா" பேசுறதா நினைச்சிக்கிட்டு, பேசிப் பேசியே, உயிரை எடுக்குற யோகங்கள் இரண்டு! :))

ரெண்டு கையைத் தூக்கியது முயற்சி அல்ல! அது அனிச்சை!
அதான் முன்பே தலைவி தன்னைத் தானே தளர்த்திக் கொள்ளுமா போலே-ன்னு சொன்னேனே! அதுக்க்குப் பதிலைக் காணோமே?
பதில் சொல்லாம, பட்டு பட்டு-ன்னு அடுத்த கேள்விக்குத் தாவினா என்ன அர்த்தம்? :)

//எனக்கு ஒரு சந்தேகம். இந்த சரணாகதி தத்துவம் தமிழ்நாட்டில இல்லையா ரவி ? இதை தமிழ்-ல விளக்க முடியாதா ரவி ? அன்னைக்கும் வடமொழி ஸ்லோகங்களை எல்லாம் கொண்டு வந்து என்னை பயபடுத்திநீங்க//

நான் சுலோ+கம், ஃபாஸ்ட்+கம் எல்லாம் ஒன்னு சொல்லலையே!
உரைநடை தானே கொடுத்தேன்! மணிப்பவழமா தமிழ்-ல் தானே இருக்கு? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
அப்புறம், இந்த கிறுக்கன் "self-effort" கோஷ்டில்யில மட்டும் இல்ல,//

கண்ணன் எல்லாக் கோஷ்டியிலும் இருக்கிறான்!
ஆனால் ஆனந்தமா இருக்கானா? அதான் முக்கியம்!
"self-effort" கோஷ்டில்யில பாவம் சோகமா, ஒரு மூலையில், கன்னத்தில் கை வச்சிக்கிட்டு உட்கார்ந்து கிட்டு இருக்கான்!

அதைப் பார்க்காம, இதுகள், தங்கள் விடிவினை மட்டும் சுயநலமாப் பாத்துக்கிட்டு....
ஞான பரம், கொல்லைப் புறம்-ன்னு பேசிக்கிட்டு திரியறதுகள்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
"நம்மகிட்ட இருக்கற எல்லாத்தையும் கொடுத்திட்ட பிறகு" எதைக் கொண்டு முயற்சி செய்யறது அப்படின்னு சொன்னீங்கன்ன நல்லா இருக்கும்//

அட, முயற்சியே வேணாம்-ன்னு சொல்லிக்கிட்டு இருக்கப்போ,
எல்லாத்தையும் கொடுத்திட்ட பிறகு எப்படி முயற்சி செய்யறது-ன்னு கேட்டாக்கா என்னா அர்த்தம்? :)

Unlimited Meals & Buffetல போயி உட்கார்த்தி வச்சாச்சி!

* அப்பறமும் கத்திரிக்கா தொக்குக்கு எங்க காசு கட்டணும்?
* தக்காளி குருமாக்கு எங்க கர்மா பண்ணனும்?
* எப்படி முயற்சி பண்றது-ன்னு கேட்டுக்கிட்டு இருந்தா என்னாத்த சொல்லுறது?

"போயா வெண்ணை"-ன்னு வேணுமின்னா சொல்லலாம்! :)))))

Radha said...

ஹா ஹா ஹா !! ஹா ஹா ஹா !!
அனிச்சையா செய்யறது தான் "வலிய முயன்றாள்" என்பதற்கு பொருள்-னு தெளிவா சொன்ன என் இனிய நண்பரே!! உமது விளக்கங்கள் வாழ்க வாழ்க !! :-))))
யப்பா !! இந்த மாதிரி சிரிச்சி ரொம்ப நாளாகுது !! வயிரு வலிக்குது டா சாமி !! ஹா ஹா ஹா !!
இது மாதிரி super entertainment கொடுக்க காரணமான என் கிரிதாரி வாழ்க!! ஹா ஹா ஹா !! :)))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த சுட்டியுள் உள்ள கதை உங்களுக்கு விளக்கம் தர பயன்படலாம்.
http://www.tamilhindu.com/2009/07/bhrathiar_stories_06///

அதெல்லாம் ஒரு சுட்டியும், குட்டியும் வேணாம்! :))

இங்கு பாரதியார் கதையில் காட்டப்படுவது, உலக வாழ்க்கைக்குத் தேவையான கடமைகளைச் செய்யல் = கர்மம்! அதுல சோம்பேறித்தனம் காட்டக் கூடாது!

ஆனா கர்மம் வேறு! கர்ம யோகம் வேறு!

மொத்தம் பதின்மூன்று விதமான கர்ம யோகம் இருக்கு!
யக்ஞம், இந்திரிய ஜயம், மனோ ஜயம், காய கியேசம், நாடி சுத்தி இன்னும் என்னென்னமோ...

சினிமாத் தியேட்டருக்குள் காசு கொடுக்காம போவ முடியாது! கலை தானே? எல்லாருக்கும் பொதுவானது தானே? அப்பறம் என்னா-ன்னு கேக்கறோமா?
கர்மம் செஞ்சி, பொருள் ஈட்டி, காசு கொடுத்து போறோம்! = கர்மம்! கர்ம வாழ்வு! செயல் செய்யாம உலகியலில் இயங்க முடியாது!

ஆனால்...
எம்பெருமான் அருளைப் பெற, காசு குடுத்து போறோமா?
எம்பெருமான் சினிமாத் தியேட்டரில் காசுக்கு மதிப்பில்லை-ன்னு அயோக்கியனுக்குக் கூடத் தெரியும்! ஆனா அவன் உணரலை! தெரிதல் வேறு! உணர்தல் வேறு!

சாதாரண சினிமாத் தியேட்டருக்குள் நுழைய, வாழ்வியல் கர்மங்கள் ஆற்ற வேண்டி இருக்கு!
எம்பெருமான் சினிமாத் தியேட்டரில் நுழைய அது போல கர்மங்கள் ஆற்றிப் பொருளீட்டித் தான் நுழையணும் என்பதில்லை!

இந்த பாரதியார் கதை அன்றாட வாழ்வியலுக்கு! சோம்பேறித்தனம் கூடாது என்பதற்காக!
ஆனால் அக வாழ்வியலுக்கு அல்ல!

உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி போலும், சூழ் புனல் அரங்கத்தானே!

அம்மா ஆசை ஆசையாக நமக்குன்னு சமைக்கும் போது,
உள்ளே புகுந்து, கேலரி கணக்கு வாசிப்பதும்,
ஞான பரமா யோசிச்சி சமையல் தெர்மா மீட்டர் அளவையால் சரியான கொதி நிலை பாக்கலாம்-ன்னு எல்லாம் தங்களோட "வித்வத்"-ஐக் காட்டுவதும்...

பசியை அழிக்காது
ருசியை அழிக்கும்
பசியும் அப்படியே இருக்கும்!

பகவத் ப்ரவருத்தி விரோதியான,ஸ்வ ப்ரவருத்தி நிவர்த்தியே=ப்ரபத்தி!

பகவத் ப்ரவருத்தி விரோதி, ஸ்வ ப்ரவருத்தி நிவர்த்தி = ப்ரபத்தி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
ரவி,
அப்பறமா சரணாகதி சம்பந்தமா இந்த சந்தேகம் எல்லாம் தீர்ந்த பின்னாடி, "செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்" அப்படின்ற நம்மாழ்வார் பாசுர வரிக்கு//

செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்
செய்வானின் றனகளும் யானே என்னும்,
செய்து முன் இறந்தனவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்,

செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத்தீர்க்கு இவையென் சொல்லுகேன்
செய்ய கனி வாய் இளமான் திறத்தே

இதுக்கான விளக்கம் தானே வேணும்? அடுத்த பத்திலேயே வருகிறது...இதோ, இது தான்...

* நோற்ற நோன்பிலேன்
* நுண் அறிவிலேன்
* இனி உன்னை விட்டு,
* "ஓன்றும்"
* "ஆற்ற கின்றிலேன்"
* அரவின் அணை அம்மானே!

* புகல் - "ஓன்று" இல்லா அடியேன்
* உன் அடிக் கீழ் அமர்ந்து, புகுந்தேனே!

Radha said...

யப்பா ! கண்ணபிரான் ரவிசங்கர் ! எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிரு வலிக்குது இங்க.
இதொட தயவு செஞ்சு விளக்கங்கலை எல்லாம் நிறுத்திக்கோப்பா !! இனிமெ தாங்காது.
உன் வழிக்கே நான் வாரேன். கடவுளுக்கு கருணை கெடயாது.
எல்லாரையும் தன் கால்ல விழ வெச்ச பின்னாடி தான் அருள் புரிவார்.
அது வரைக்கும் அருள் புரியமாட்டாரு. ஆதி சங்கரர், ராமானுஜர், ராம க்ரிஷ்ண பரமஹம்சர், ரமண மஹரிஷி எல்லாரும் தப்பா தான் சொல்லிட்டு போயிட்டாங்க. சரணாகதி ஒன்னு தான் வழி. :))))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு சரம ஸ்லோகத்தை மட்டும் பிரமாணமா எடுத்துட்டு போகாதீங்க. கூடவே வேற எதனாச்சும் சேர்த்தியே வெச்சிகோங்க.//

பிரமாணமா? அது எதுக்கு எங்களுக்கு? :)

//கொஞ்சம் மொழி தெரிஞ்ச ஆளா இருந்தா இந்த ஸ்லோகத்துல "இந்த பிறவியின் முடிவிலேன்னு" எங்க சொல்லி இருக்குன்னு கேக்க ஆரம்பிச்சிருவான். மோக்ஷம் உறுதி ஆனா எப்பன்னு சொல்ல முடியாதுன்னா....(//

அட, போங்கய்யா!
நாங்க மோட்சத்தைக் கேட்டாத் தானே, அப்பறம் இந்தப் பண்டித சிகாமணிப் பேச்செல்லாம்?

நாங்க தான் மோட்சமே வேணாம்-ன்னு சொல்றோமே! கைங்கர்யம் தானே கேக்குறோம்?


* உன் தன்னோடு-உறவேல்-நமக்கு
இங்கு ஒழிக்க ஒழியாது!
* எற்றைக்கும், ஏழேழ் "பிறவிக்கும்"
உற்றோமே ஆவோம்!
* உனக்கே நம் ஆட் செய்வோம்!
* மற்றை நம் காமங்கள் மாற்று!

//விசார மார்க்கம் அந்த மார்க்கம் இந்த மார்க்கம் எல்லாத்துலயும் இருக்கற நிச்சயமற்ற தன்மை இதுலயும் இருக்கேன்னு கேள்வி கேட்டுட்டான்னு வைங்க....//

எந்த மாங்கா மடையன் (alias) பண்டித சிகாமணி கேள்வி கேட்டா எங்களுக்கென்ன? :)))

நிச்சயமற்ற தன்மையா? அப்படீன்னா?

* மாம் "ஏகம்" சரணம் வ்ரஜ,
* அஹம், த்வா, சர்வ பாபேப்யோ,
* மோக்ஷ இஸ்யாமி
-ன்னு தானே சொல்லி இருக்கான்? ஆனா எப்போ மோட்ச இஸ்யாமி-ன்னு இங்கேயும் சொல்லலையே? அதானே உங்க கண்டு பிடிப்பு? :)))

ஹா ஹா ஹா
கணக்கு போட்டுக்கிட்டே இருங்கய்யா! கணக்கு போட்டுக்கிட்டே!
சும்மாவா? ஞான யோகமும், கர்ம யோகமும் சொல்லிக் கொடுத்துருக்குல்ல? கணக்கு போட்டுக்கிட்டே இருங்க!

நாராயண"னே", நமக்"கே", பறை தருவான்! ஆனா என்னிக்குத் தருவான்-ன்னு சொல்லலைப்பா அந்தப் பொண்ணு! ஹா ஹா ஹா :)))

ஆனா
* மோக்ஷ இஸ்யாமி-ன்னு சொன்ன அந்த பேக்கு பய புள்ள,
* என் ஆசைக் கண்ணன்,
* அடுத்து, இன்னொன்னும் சொல்லுறான்!
* மா, சுசஹ = கவலைப் படாதே!

இப்படி அவனே கவலைப்படாதே-ன்னு சொல்லிட்டாப் பொறவு,
அப்பறம் நாங்க எதுக்கு நோண்டி நோண்டி யோசிக்கப் போறோம்? அதான் சொல்லிட்டான்-ல!
மா, சுசஹ = கவலைப் படாதே!
மா, சுசஹ = கவலைப் படாதே!

அதெல்லாம் ஞான பரமா, கர்மா-குர்மா வைக்கிறவங்க கவலைப்பட்டுப்பாய்ங்க!

மா, சுசஹ = கவலைப் படாதே!-ன்னு பகவானே சொன்ன பொறவு கூட......
என்னிக்கி அடைவோமோ, எங்கே அடைவோமோ, எப்படி அடைவோமோ?????-ன்னு விதம் விதமா பேசிக்கிட்டுத் திரிவானுங்க!

அவ்ளோ தான் பகவத் நம்பிக்கை?
அதான் நம்பிக்கை எல்லாம்
* தங்களோட ஞானத்து மேலயும்
* தங்களோட கர்மத்து மேலயும்
இருக்கே? அப்பறம் எப்படி? :)))

மா, சுசஹ = கவலைப் படாதே!
நாங்க பட்டுக்க மாட்டோம்!
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது! அவ்ளோ தான்!
நீ ஒன்னியும் எங்களுக்கு குடுக்க வேணாம் கண்ணா! நாங்க ஒனக்கு கொடுக்கறோம்! எங்க கைங்கர்யம்! அதை வாங்கிக்க! அது போதும்!

* உன் தன்னோடு-உறவேல்-நமக்கு
இங்கு ஒழிக்க ஒழியாது!
* எற்றைக்கும், ஏழேழ் "பிறவிக்கும்"
உற்றோமே ஆவோம்!
* உனக்கே நம் ஆட் செய்வோம்!
* மற்றை நம் காமங்கள் மாற்று!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சரணாகதி தவிர வேற மார்க்கம் கெடயாதுன்னு நிறுவும் போது//

இங்கிட்டு அப்படி நிறுவல், வறுவல் எல்லாம் ஒன்னும் செய்யலையே! :)
ஆதலால் சரணம் செய்யுங்கள் என்று மட்டுமே சொல்லப்படுகிறது! :)

//"கர்ம யோகம் செஞ்சே ஜனகர் முதலானோர் முக்தி அடைந்தனர்" அப்படின்னு எங்கிட்ட இருக்கற ராம க்ருஷ்ணா மடத்தினரின் பல்வேறு உரைகளிலும் இருக்கிறது.பாரதி ராஜாஜி இன்னும் நிறைய பேர்களின் உரைகளிலும் காணப்படுகிறது.//

எத்தினியாம் எத்தினியாம் பக்கத்தில் போட்டிருக்கு-ன்னு குறிச்சி வச்சிக்கோங்க! ரொம்ப பயன்படும்! :)

//ஆதி சங்கரர், ராமானுஜர், ராம க்ரிஷ்ண பரமஹம்சர், ரமண மஹரிஷி எல்லாரும் தப்பா தான் சொல்லிட்டு போயிட்டாங்க. சரணாகதி ஒன்னு தான் வழி. :))))))))))//

ஹிஹி!
இந்தப் பம்மாத்துக்கு எல்லாம் ஒன்னும் கொறைச்சல் இல்லை! :)

ரமணர் சரணாகதி பத்தி என்ன சொல்லி இருக்காரு-ன்னு தனியாச் சொல்லிட்டாப் போச்சி! :)

இங்கே பேசுவது யோகிகளுக்கோ, தியாகிகளுக்கோ அல்ல!
ராதா, சோதா போன்ற சிறு மா மனிசருக்கு மட்டுமே! :)

ஒடனே ரமணர் பத்தாம் பக்கத்துல சொன்னாரு, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பதினெட்டாம் பக்கத்துல சொன்னாரு-ன்னு கணக்கு போட நல்லாக் கத்துக் கொடுத்து இருக்குப்பா "யோகம்"! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
அனிச்சையா செய்யறது தான் "வலிய முயன்றாள்" என்பதற்கு பொருள்-னு தெளிவா சொன்ன என் இனிய நண்பரே!!//

வலிதல்-ன்னா என்னா-ன்னு சொன்ன பிறகும், கும்மியடிக்கும் இனிய நண்பரே :))

அனிச்சையாச் செய்யும் செயல்களுக்கு வலி இல்லை, வலிமை இல்லை-ன்னு யாரு சொன்னா?
ஒரு அபாயத்தில், அனிச்சையா குஞ்சை அணைத்துக் கொள்ளும் கோழியைப் பிரிக்கப் பாருங்கள்! அப்போ அதன் "வலி/வலிவு" தெரியும்!

"வலிய முயன்ற" ஆண்டாள் திருவடிகளே சரணம்! :)

//இந்த மாதிரி சிரிச்சி ரொம்ப நாளாகுது !! வயிரு வலிக்குது டா சாமி !! ஹா ஹா ஹா !!
இது மாதிரி super entertainment//

பாத்தீங்களா?
இம்புட்டு நேரம் அந்த யோகமா, இந்த போகமா-ன்னு எல்லாம் பலமா யோசிச்சிக்கிட்டு இருந்தீங்க!
மா-சுசஹ-ன்னு உங்க கவலையெல்லாம் தீர்த்து, சிரிக்க வச்சிருச்சி பாத்தீயளா ப்ரபத்தி?

ஹா ஹா ஹா

ராதா ஆட்டோ வ-ராதா? :))

Radha said...

ஹா ஹா ஹா ஹா !
கண்ணபிரான் ரவிசங்கர் ! நாராயணா, நாரணா ன்னு எல்லாம் மொழி ஆராய்ச்சி செஞ்சி பகுதி பகுதியா பதிவு போடற ஒரு அதிமேதாவியொட நண்பன் நான். :-)
அவங்கிட்ட இருக்கற மேதாவித்தனம் இங்கயும் கொஞ்சம் தொத்திகிச்சி. :-)

அப்பறம் உங்களை குமரனை எல்லாம் எப்பாவாச்சும் நேர்ல பார்த்தா நல்லா இருக்கும்னு நெனெச்சென். ஆனா "மாங்கா மடையன்" "போட வெண்ணை" எல்லாம் படிக்கும் போது நேர்ல பார்த்தா வன்முறையில இறங்கிடுவீங்கலொன்னு இப்பொ ஒரு சந்தெகம் வந்துடுச்சி. :-)))

அப்பறம் ராதா ஆட்டோ கொஞ்ச நாளைக்கு வராது. (உண்மையாவே சேவை பண்ண ஒரு வாய்ப்பு கெடைச்சு இருக்கு.)
சில மாதங்கள் கழிச்சி வரென்.
நம்மோட எல்லா பிதற்றலயும் மழலை மொழியா ரசிச்ச பித்தன் அடி வாழ்க !!
ராதே கிருஷ்ணா !!
ராதே கிருஷ்ணா !!

குமரன் (Kumaran) said...

அடடா. இதென்ன சில மாதங்கள் கழிச்சு வர்றேன்னு குண்டு போடறீங்க. எங்கே போனாலும் என்ன செய்தாலும் தொடர்ந்து வர வேண்டும். வர வேண்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராதா
சேவையா? முதற்கண் வாழ்த்துக்கள்! கைங்கர்யம் என்பது என்னாளும் இனிப்பது! தனி மடல்ல முடிஞ்சா சொல்லுங்க! :)

//நாராயணா, நாரணா ன்னு எல்லாம் மொழி ஆராய்ச்சி செஞ்சி பகுதி பகுதியா பதிவு போடற//

இதெல்லாம் இராம.கி.ஐயா! நான் இல்ல! :)

//ஒரு அதிமேதாவியொட நண்பன் நான். :-)
அவங்கிட்ட இருக்கற மேதாவித்தனம் இங்கயும் கொஞ்சம் தொத்திகிச்சி. :-)//

ஹிஹி! எனக்கு பத்தர் ஆவியைத் தான் தெரியும்! பத்தராவியின் பாதாவியை மேதாவி-ன்னு, நீங்க ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு பண்ணலாமா?

//அப்பறம் உங்களை குமரனை எல்லாம் எப்பாவாச்சும் நேர்ல பார்த்தா நல்லா இருக்கும்னு நெனெச்சென்//

ஹிஹி! இன்னும் சிறிது நாளில் சென்னை வருவேன்! அப்போ மீட்டலாம்! ராகவ் போல இன்னும் சில நண்பர்களையும் சேர்த்துப் பாக்கலாம்!

//ஆனா "மாங்கா மடையன்" "போட வெண்ணை" எல்லாம் படிக்கும் போது நேர்ல பார்த்தா வன்முறையில இறங்கிடுவீங்கலொன்னு இப்பொ ஒரு சந்தெகம் வந்துடுச்சி. :-)))//

ஹிஹி! கிரிதாரிக்குப் புடிச்சமான வெண்ணைய்-ன்னா சும்மாவா?
தாயாரே மட்டையடி உற்சவம் பண்ணுறா! அவ கோஷ்டி நாங்க! :)

//சில மாதங்கள் கழிச்சி வரென்//

கைங்கர்யம் முக்கியம்! அப்பப்ப எட்டிப் பாருங்க!
முக்கியமா உங்க வலைப்பூவில் அமலனாதிப் பிரான் பாசுரங்களை நிறைவு செய்யப் பாருங்க ராதா! நாங்களும் எத்தினி வாட்டி தான் எட்டியெட்டிப் பாக்குறது? :)

//நம்மோட எல்லா பிதற்றலயும் மழலை மொழியா ரசிச்ச பித்தன் அடி வாழ்க !!//

:)
குழல் இனிது! அவன் குழல் இனிது-ன்னு சொன்னாலும்...
குழலினிதை விட மழலை இனிதல்லவா அவனுக்கு?

ராதா மன மோஹன
ராதா நவ தேஹன
ராதா மன வாகன
ராதா குண போகன
கண்ணா அவள் வாழியே!
கண்ணா அவள் வாழியே!

ஹரி ஓம்!

Radha said...

//தொடர்ந்து வர வேண்டும். வர வேண்டும்.//
உங்களுக்கு சகிப்பு தன்மை நிறைய இருக்கிறது. :-) இங்கே எல்லாம் வராமல் எங்க போயிட போறேன். :-)
ரொம்ப நாளா பதிவு ஏதும் இடவில்லையா?
இல்லை கோதை தமிழ் நம் பாரதி என்று வேறு எங்காவது இடுகிறீர்களா ?
ரவி தனி மடலில் மிரட்டினார்....சென்னை வரும்போது சந்திப்பதாக ! :-)

குமரன் (Kumaran) said...

கோதைத் தமிழ், நம்பாரதி இரண்டிலும் எந்த இடுகையும் அண்மையில் இடவில்லை இராதா. இன்னொரு பதிவில் சில இடுகைகள் இட்டிருக்கிறேன். படித்து எழுத்துப்பிழைகளோ வேறு ஏதேனும் குறைகளோ இருந்தால் சொல்லுங்கள்.

http://emperumaanaar.blogspot.com/