கேட்கும் தோறும் மனத்தை உருக்கும் பாடல்.
காணும் தோறும் வயிற்றைப் பிசையும் காட்சி.
***
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே!
பிண்டம் என்னும்
எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் (பிச்சை)
அம்மையும் அப்பனும் தந்ததா?
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?
இம்மையை நான் அறியாததா?
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட (பிச்சை)
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்!
நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்?
பெரும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்!
அதன் சூத்திரம் உள்ளதோ உன்னிடத்தில்!
ஒரு முறையா? இரு முறையா?
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்!
புது வினையா? பழ வினையா?
கணம் கணம் தினம் எனைத் துடிக்க வைத்தாய்!
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே!
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே !
அருள் விழியால் நோக்குவாய்!
மலர்ப் பதத்தால் தாங்குவாய்!
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனது அருள் பெற (பிச்சை)
11 comments:
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...அடிக்கடி கேட்பது...நன்றிங்க.
எழுதியது: வாலி;
பாடியது: மதுபாலகிருஷ்ணன்; சரியா?
பாட்டுக் கேட்க முடியலை, தலைப்பைப் பார்த்ததுமே ஓடி வந்தேன்! :((((((
அருமையான பாடல். இந்த பாடலை இளையராஜா ஏற்கனவே தனது சொந்த குரலில் ரமணமாலை எனும் albumல் பாடியுள்ளார். அந்த பாடலில் "பிச்சைப்பாத்திரம்" என்பதற்கு பதிலாக "பிட்சைப்பாத்திரம்" என்று பாடியிருப்பார்.வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பாடல் வந்துள்ளது.
நன்றி மௌலி.
எழுதுனது யாருன்னு தெரியலை தருமி ஐயா. குரலைக் கேட்டா பாடுனது ஜேசுதாஸ் மாதிரி இருக்கு.
//கேட்கும் தோறும் மனத்தை உருக்கும் பாடல்.//
உண்மைதான் குமரா. பகிர்தலுக்கு நன்றி.
இன்னொரு முறை முயன்று பாருங்கள் கீதாம்மா. பாட்டைக் கேட்க முடியலாம்.
ஆமாம் குரு. நீங்க சொன்ன பின்னாடி தான் நினைவுக்கு வந்தது.
இந்தப் படப் பாட்டை முதல்ல கேட்டப்ப ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்தது; அதுவும் இளையராஜா குரல்ல. ஆனா சரி இந்தப் படத்தைத் தான் மூன்று வருடமா எடுத்துக்கிட்டு இருக்காங்களே; பாட்டை முன்னாடியே வெளியிட்டிருப்பாங்க, அப்ப கேட்டிருப்போம்ன்னு விட்டுட்டேன். நீங்க சொன்ன பிறகு தான் ரமண மாலைன்னு நினைவுக்கு வந்து தேடினேன். கிடைச்சது. அதையும் இணைச்சிருக்கேன்.
நன்றி குரு.
பாடியது: மதுபாலகிருஷ்ணன்;
நன்றி Maru.
Post a Comment