Tuesday, June 06, 2006

தி.ரா.ச.வின் அறுபதாம் ஆண்டு நிறைவு


இப்போது தான் தி.ரா.சந்திரசேகரன். அவர்களின் தனிமடல் பார்த்தேன். இன்று (06/06/06) ஐயாவின் அறுபதாம் ஆண்டு நிறைவு. வலைப்பதிவுலகில் அவர் எனக்குத் தொடர்ந்து காட்டும் வழிகாட்டுதலுக்கு அன்புடன் நன்றி கூறி அவருடைய அறுபதாம் ஆண்டு நிறைவான இன்று அவரை வணங்கி ஆசி வேண்டி நிற்கிறேன்.

17 comments:

SK said...

மணிவிழாக் காணும் மாமணிக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துகள்!!

நாமக்கல் சிபி said...

தி.ரா.சா அவர்களிடம் ஆசிகளை வேண்டுவதுடன், அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் முருகப் பெருமான் பரிபூரண மகிழ்ச்சியைத் தர வேண்டுகிறேன்.

மகேஸ் said...

அய்யா அவர்களின் ஆசியை வேண்டுகிறேன்.
----------
தி.ரா.ச ன்னு தலைப்பை தமிழ்மணத்தில் பார்த்தவுடனே, திராவிட ராஸ்கல்கள் சங்கத்தைப் பத்தி ஏதோ எழுதியிருக்கீங்கன்னு நினைச்சு வந்தேன். :))

தி. ரா. ச.(T.R.C.) said...

சமீபத்தில் நடந்த விபத்து காரணமாக விழாஎதுவும் நடைபெறவில்லை. காலையில் கோயிலுக்குச்சென்று என் குலதெய்வமான முருகனுக்கு அபிஷேகம் செய்வித்து இருகை கூப்பிவணங்கினேன்.இரு கை கூப்புமளவுக்கு இடது கையை ஓரளவுக்கு திருப்பி கொடுத்ததற்கு நன்றி கூறினேன்.என்னவிட பெரியவர்களிடம் ஆசிபெற்றேன். பல்லாவரதிலுள்ள ஒரு முதியோர் இல்லத்திலுள்ளவ்ர்களுக்கு சிறந்த விருந்துக்கு ஏற்பாடுசெய்தேன்.குமரன் தாங்கள் என்குலதெய்வம் முருகனின் படத்தைபோட்டு என்னை கொளரவித்து "நாய்சிவிகை ஏற்றிவைத்ததற்கு" நன்றி நீங்களும் என்பரிபூரண ஆசியுடன் உங்கள் குடும்பமும் எல்லாம் பெற்று இறைப்பணியை தொடர்ந்து செய்து கொண்டு வாழ்க வளமுடன்.நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் அன்பன் தி ரா ச

வல்லிசிம்ஹன் said...

நன்றி குமரன். நீங்கள் சொல்ல்வில்லை யானல் தெரிந்து இருக்காது. எங்கல் வாழ்த்துக்களை அவ்ருக்கும் குடும்பத்துக்கும் சொல்லுங்கள்,.

இலவசக்கொத்தனார் said...

ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

(துபாய்) ராஜா said...

இன்று (06/06/06) 60-ஆம் அகவை கொண்டாடும் தி.ரா.ச. ஐயாவை வாழ்த்தி வணங்குகிறேன்.

அன்புடன்,
(துபாய்)ராஜா.
http://rajasabai.blogspot.com/

முத்துகுமரன் said...

மணிவிழா காணும் அய்யாவிற்கு வாழ்த்துகள். விரைவில் பூரணமாக குணமடைய பிராத்தனைகள்

G.Ragavan said...

தி.ரா.ச அவர்களை இப்பொழுதுதான் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தேன். இறைவனுக்கும் எளிவர்களுக்கும் இந்த நல்ல நாளில் சேவையாற்றிய மகிழ்ச்சியில் இருந்தார். அன்பு நண்பர்களின் வாழ்த்தும் உறவினர்களின் உபசரிப்புமாய் மகிழ்ந்திருந்த அவரோடு சற்று பேச முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

முருகப் பெருமான் திருவருளால் சிறப்புகள் சேர வணங்குகிறேன்.

மலைநாடான் said...

மணிவிழாக்கண்ட பெருந்தகைக்கு,பணிவுகளையும், வணக்கங்களையும், தெரிவித்துக் கொள்கின்றேன்.

வவ்வால் said...

தி.ரா.ச அவர்கள் மிக பெரியவர்கள் என்பது தெரியாது.இளைஞர் என நினைத்தேன்! வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் இன்னாளில்!

johan-paris said...

வாழிய பல்லாண்டு!
அன்புடன்
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

வவ்வால். இணையத்தில் யார் பெரியவர்; யார் வயதில் சிறியவர் என்று அவ்வளவாகத் தெரிவதில்லை இல்லையா? :-) நீங்கள் வயதில் பெரியவரா இளைஞரா என்று எத்தனைப் பேருக்குத் தெரியும்? :-)

ஞானவெட்டியான் said...

அன்பு தி.இரா.சா,
மணிவிழாக் காணும் மணமக்களை, "எல்லாமும் எப்பொழுதும் பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறேன்."

தி. ரா. ச.(T.R.C.) said...

குமரன் வலைப்பதிவில் பெரியவர், சிறியவர், பணக்காரர்,ஏழை,ஜாதி,மதம்,இனம் எதுவுமேகிடயாது. எல்லோரும் முகமறியா அகம் மட்டும் அறிந்த நண்பர்கள். இவ்வளவு நலம் விரும்பிகளா. இவ்வளவு பெரிய குடும்பத்திலேயா நான் இருக்கிறேன். நன்றி குமரன். அனைவருக்கும் நன்றி.அன்பன் தி. ரா.ச
WHEN MY HEART IS FULL MY TONGUE IS STILL

முகமூடி said...

மணிவிழாக்காணும் தி.ரா.சா தம்பதியினருக்கு வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிவமுருகன் said...

மணி விழாகாணும் அய்யா அவர்களின் ஆசியை வேண்டுகிறேன்.

தி.ரா.ச. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.