Monday, April 10, 2006

168: பங்குனி உத்திரம் - 3

பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்... நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்....

என்ன திடீரென்று இந்தப் பாடலைப் பாடுகிறேன் என்று கேட்கிறீர்களா? இன்று யாருக்குப் பிறந்த நாள் என்பதை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன். மெதுவாக முழுமையாக இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். :-)

***

தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோவில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோவில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவு தான் நமக்கு வருகிறது. எனக்கும் அப்படித் தான். ஆனால் நாள் செல்லச் செல்ல நம் சமயத்தில் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் இந்த திருநாளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் தான் இந்தப் பதிவைத் தொடராக எழுதினேன். எனக்கு உடனே நினைவுக்கு வந்த விஷயங்களை இந்த மூன்று பதிவுகளிலும் எழுதியிருக்கிறேன். இதற்கும் மேலாக பல பெருமைகள் இந்தத் திருநாளுக்கு இருக்கலாம். படிப்பவர்கள் நான் எதையாவது விட்டிருந்தால் தயைசெய்து சொல்லுங்கள்.

***

எந்த காரணத்தினால் பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்ததாகக் கொண்டாடப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் குல தெய்வமான பழனியாண்டி அன்று தான் திருத்தேர் விழா கண்டருள்கிறான். முடிந்த வரை ஒவ்வொரு ஆண்டும் என் பெற்றோர் என் சிறு வயதில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவிற்காக எங்களை (என்னையும் என் தம்பியையும்) பழனிக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அதனால் பழனி தண்டாயுதபாணியின் மேல் எனக்குத் தனியொரு பாசம். இன்றும் ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போது பழனிக்குச் செல்லத் தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கும் போது கண் பனி சோரும்.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்(து)
உருகும் செயல் தன்(து) உணர்(வு) என்(று) அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே

கூகா என என் கிளை கூடியழப்
போகா வகை பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

இந்தப் பாடல்களின் பொருளினை இராகவன், இராமநாதன் இவர்களின் பதிவில் பாருங்கள்.

***

இப்போது இதுவரை சொன்னதைப் பற்றியத் தொகுப்புரை:

1. திருவரங்கத்தில் திருவரங்கநாதனும் திருவரங்கநாயகியும் சேர்த்திச் சேவை அருளும் நாள்
2. வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் காட்சி தரும் நாள்
3. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள்
4. ஜனக ராஜ குமாரி ஜானகி இராகவனை மணந்த நாள்
5. நாமக்கல் இலட்சும் நரசிம்மப் பெருமாளும் நாமகிரித் தாயாரும் தேரில் பவனி வரும் நாள்
6. அன்னை திருமகள் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள்
7. மோகினி சுதனான ஐயன் ஐயப்பன் தோன்றிய நாள்
8. பார்வதி பரமேஸ்வரனை மணந்த நாள்
9. முருகனின் திருவருளால் மதுரை மாநகரில் உங்கள் அன்பிற்கினிய அடியேன் பிறந்த நாள்
10. முருகன் அருள் முன்னிற்க அடியேனின் அன்புத் திருமகள் பிறந்த நாள்

வணங்கி நிற்கிறோம். வாழ்த்துங்கள்.

75 comments:

VSK said...

பலவும் பெற்று பல்லாண்டு நீவிர் இருவரும் நீடூழி வாழ,
அனைத்து தெய்வங்களையும் வேண்டுகிறேன்!

ஜெயஸ்ரீ said...

Happy b'day to you and your daughter Kumaran !!

Many many more happy returns of the day

இலவசக்கொத்தனார் said...

இவ்வளவு விஷயங்கள் இருப்பது தெரியாது போயிற்றே. இந்த விபரங்களை அளித்தமைக்கு நன்றி குமரன்.

உங்களுக்கும் இளையவளுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

(ட்ரீட் எல்லாம் கிடையாதான்னு கேட்க வந்தேன். அப்புறம்தான் இந்த 3 கோர்ஸ் விருந்து கொடுத்து விட்டீர்களே எனத் தோன்றியது!)

மீண்டும் நன்றி.

மதுமிதா said...

பிறந்த நாள் வாழ்த்துகள் குமரன்
உங்களுக்கும்,மகளுக்கும்

பழனியாண்டவன் எல்லா வளங்களையும்,நலங்களையும்,உடல் ஆரோக்கியத்தையும்,நிறைந்த புகழையும் மனமுவந்து அளிக்கட்டும்

அப்பா,மகள் இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வருகிறதென்றால் ரெட்டிப்பு மகிழ்ச்சி தானே

வீட்டில சொல்லுங்க நாத்தனார் விருந்து கேக்கறாங்கன்னு.

தென்காசியில் தாத்தா(எனது அம்மாவின் அப்பா)தினமும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து பாடல்கள் பாடுவார்.
அதில்

///செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே///

இந்தப்பாடலும் உண்டு.
நல்லா இருங்கம்மா

Unknown said...

wowwww

father and daughter born on same day?very very rare thing.

I pray to lord rama that he blesses your family with the very best.

Karthik Jayanth said...

வாழ்த்துக்கள் (உங்களுக்கும் & உங்க மகளுக்கும்) .. நல்லா இருக்க சாமிகிட்ட வேண்டிகிறேன்

சரி பிறந்த நாள் சாப்பாடு எப்ப போடபோறிங்க ? . எப்படி இருந்தாலும் நான் 2 தடவை சாப்பிடுவேன். :-)

சிறில் அலெக்ஸ் said...

வாழ்த்துக்கள் குமரன் உங்கள் குழந்தைக்கும் சேர்த்து

தருமி said...

குமரனுக்கும் அவர்தம் செல்ல மகளுக்கும் இனிய அன்பார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வெளிகண்ட நாதர் said...

குமரன், பங்குனி உத்திரத்தன்னைக்கு பொறக்கிறதுக்கு எல்லா பாக்கியமும் செஞ்சு வச்சுருக்கினும். இந்தாங்க பிடிங்க என்னோட வாழ்த்துக்களை. இவ்வையகத்தில எல்லாம் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்!

நாமக்கல் சிபி said...

அட! ரொம்ப விஷேசமான நாள்தான்!

உங்களுக்கும் உங்கள் புதல்விக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு....

நீங்கள் உங்கள் குடும்பத்தினரோடு சிறப்புற்று வாழ எம்பெருமான் முருகப் பெருமானை வணங்குகிறேன்!

உங்கள் ஆன்மீகப் பணியும் தொடர்ந்து சிறக்கட்டும்!
நல்லதொரு நாளில் வாழ்த்தைத் தெரிவிக்க வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி.

pathykv said...

prEvu Kumaran,
tumgo, tumre betik uje dinnu nandinin!
Pathy.

Unknown said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், தங்களுக்கும், குமரனின் குமாரத்திக்கும். வாழ்க, வளர்க...

rnatesan said...

best wishes to u and yur daughter!! hope she will also start writng in blogs!!!!!!
srry no tamil in my office!!!

G.Ragavan said...

பங்குனி உத்திரமாம் இன்பத் திருநாளில் சத்திரமாம் நெஞ்சத்தில் இன்பம் தங்க வந்த சிவக்கொழுந்துச் சிறுமிக்கு எனது உளமும் உணர்வும் மகிழ்ந்த வாழ்த்துகள். முருகன் அருள் பெருகி, எங்கும் நலன் பெருகி இனிது வாழ்க.

அன்புக் குமரனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரு தாய் தன் மகனை நீடு வாழ்க குமரா என்று வாழ்த்துவாள். அந்த வாழ்த்தை இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நீடு வாழ்க குமரா! பீடு வாழ்க குமரா!

(அதெல்லாம் சரி.....வாழ்த்தியாச்சுல்ல...டிரீட்டு? பேசாம ஒரு நூத்தம்பது டாலர என்னோட அக்கவுண்ட்டுல ஏத்தீருங்க....உங்க பேரச் சொல்லி ரொம்ப சிம்பிளா நான் ஓட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்.)

ஞானவெட்டியான் said...

இருவரும் எல்லாம் பெற்று இனிதே வாழ்க.

கால்கரி சிவா said...

குமரா,

தங்கள் ஆன்மிக பணி தொடரட்டும். அன்பு குழந்தைக்கு எங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

rv said...

அப்பா, பொண்ணு ரெண்டு பேருக்கும் ஒரே நாள் பிறந்த நாளா...

வாழ்த்துகள் உங்களுக்கும் மகளுக்கும்..

(ஜிரா, சொன்னா மாதிரி பங்குனி உத்திரத்துக்கு உங்க பேரச் சொல்லி ரெண்டு வாய் சாப்பிடுவோம். ஏற்பாடு பண்ணுங்க) :))

தி. ரா. ச.(T.R.C.) said...

குமரனுக்கும் அவன் குமாரிக்கும் என் உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.முருகனை நினைக்கும் போதெல்லாம் குமரன் நினைப்பும் வரும். தி. ரா.ச

பூனைக்குட்டி said...

Happy birthday Kumaran, convey my regards and happy wishes to your daughter also.

கால்கரி சிவா said...

சாரி குமரா,

உங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். செலவு கம்மியப்பா. ஒரே நாள் விருந்தோட முடிஞ்சது.

கால்கரியிலே இருக்கிற தமிழ் ப்ளாக்கர் எல்லாருக்கும் குமரன் சார்பில் ஸ்வீட் காரம் காபி விருந்து என் செலவில் வைக்கிறேன் வருக வருக.

(டேய் சிவா சரியான 1- 1/4 டா நீ. யாரும் இல்லாத இடத்திலே நின்னு சூப்பரா சலம்புறே- இது என் மனசாட்சி)

Unknown said...

கால்கேரி பல்கலைகழகத்தில் ஒரு பட்டாளமே இருக்கு சிவா.சொன்னா பறந்து வந்துருவாங்க.:-)))

குமரன் (Kumaran) said...

உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி எஸ்.கே. சார்.

குமரன் (Kumaran) said...

Thank you very much Jayashree

குமரன் (Kumaran) said...

ஆமாம் கொத்ஸ். கற்றது கைம்மண் அளவுன்னு பெரியவங்க அதனால தானே சொன்னாங்க. நாம தெரிஞ்சுக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கு உலகத்துல. ஒருத்தரை ஒருத்தர் சாடிப்பேசி என்ன சாதிக்கப் போகிறோமோ?

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

அதானே. 6 பதிவுகளில எழுத வேண்டிய விஷயத்தை 3 பதிவுகள்ல எழுதியிருக்கேன். அது தான் ட்ரீட். :-)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கௌசிகன். என் மகள் பெயரை இராகவன் அவருடைய பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறார். என்ன அவர் வடமொழியில் இருக்கும் என் மகள் பெயரைத் தமிழ்ப்படுத்தி அதனை இங்கே கொடுத்திருக்கிறார். அதுவும் நன்றாகத் தான் இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மதுமிதா அக்கா. விருந்து தயாராக இருக்கிறது. எப்ப வர்றீங்க? :-)

ஆமாம் அக்கா. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல (நட்சத்திரப்படி) பிறந்த நாள் வருகிறது.

இந்தப் பாடல்கள் அருணகிரிநாதரின் கந்தரனுபூதியில் வருகின்றன. இராகவனும் இராமநாதனும் இந்தப் பாடல்களுக்குப் பொருள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். படித்திருக்கிறீர்களா?

குமரன் (Kumaran) said...

நன்றி செல்வன். ஆமாம் இது ஒரு அரிய நிகழ்ச்சி தான். மருத்துவர் சொல்லியிருந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே அவள் பிறந்து நாங்கள் இருவரும் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் படி செய்துவிட்டாள். :-)

உங்கள் வாழ்த்துக்களுக்கும் வேண்டுதல்களூக்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

//எப்படி இருந்தாலும் நான் 2 தடவை சாப்பிடுவேன்//

எப்படி இருந்தாலும்ன்னா என்ன? நல்லா இருந்தாலும் சரி, இல்லாட்டியும் சரின்னு சொல்றீங்களா? நீங்க உங்க சௌராஷ்ட்ரா நண்பர்கள் வீட்டுல சாப்புட்டதே இல்லையா கார்த்திக்? எங்க வீட்டுலயும் அதே மாதிரி தான் இருக்கும். :-)

அடுத்த விமானம் ஏறி நேரா வாங்க. 2 தடவை என்ன? 2 வாரம், 2 மாதம் கூட இருந்து விருந்து சாப்பிடலாம். :-)

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கார்த்திக் ஜெயந்த்.

குமரன் (Kumaran) said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சிரில் அலெக்ஸ்

குமரன் (Kumaran) said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தருமி ஐயா.

குமரன் (Kumaran) said...

ரொம்ப நன்றி வெளிகண்ட நாதர் சார். ஆமாம் சார். நீங்க சொல்றது ரொம்ப சரி. பங்குனி உத்திரத்தன்று பிறக்க ரொம்ப பாக்கியம் செஞ்சிருக்கணும்.

குமரன் (Kumaran) said...

ரொம்ப நன்றி நாமக்கல் சிபி. நிறைய வேலைகளுக்கு நடுவுலயும் வந்து பதிவைப் படிச்சு வாழ்த்து சொல்றீங்க. ரொம்ப நன்றி.

இல்லையா பின்ன? ரொம்ப விஷேசமான நாள் தான் இன்று.

குமரன் (Kumaran) said...

prEvu Pathy aiyaanu,

tura aasirvaad appaththak mIkin more beti jukku dhee thovrahno. jukku sonthOsh.

Kumaran

குமரன் (Kumaran) said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஹரியண்ணா. எங்கே உங்கள் அடுத்தப் பதிவு? மஹா மோசம் நீங்கள். :-)

குமரன் (Kumaran) said...

ரொம்ப நன்றி நடேசன் சார். இப்பத் தான் 'சுட்டும் விழிச் சுடரே' பாட்டும் 'ரெயின்போ ரெமோ' பாட்டும் பாடத் தொடங்கியிருக்கிறாள். இனிமேல் தான் மற்ற தமிழ்ப் பாடல்களும் இலக்கியங்களும் கற்றுக்கொடுத்து வலைப்பதியச் செய்ய வேண்டும். எங்களுக்கெல்லாம் இராம்பிரசாத் அண்ணா (பச்சோந்தி) தான் வழிகாட்டியாக இருக்கிறாரே!

குமரன் (Kumaran) said...

சிவக்கொழுந்துவிற்கு உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி இராகவன். அவளுக்கு இன்னொரு பெயர் கிடைத்த மகிழ்ச்சியும். :-)

உங்கள் வாழ்த்திற்கு நன்றி அம்மா! :-)

சிம்பிளா ஓட்டல்ல சாப்பிட 150 டாலரா? என் ஒரு மாத சாப்பாட்டிற்கு அது ஆகும். குறைந்தது 2 வாரமாவது ஓடும் அதில். நீங்கள் என்னடான்னா சிம்பிளா ஓட்டல்ல சாப்பிட 150 டாலர் கேக்கறீங்க... ஹும்.... காசோட அருமை உங்களுக்கு இன்னும் தெரியலை. :-)

குமரன் (Kumaran) said...

என்ன ட்ரீட்டைப் பத்தி வாய் திறக்கலையேன்னு பாக்கறீங்களா இராகவன். கொத்ஸ் தான் சரியாச் சொல்லியிருக்காரே ஏற்கனவே விருந்து வச்சாச்சுன்னு. நீங்களே உங்க சொந்தக் காசுல பீடா வாங்கி சாப்பிடுங்க. :-)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஞானவெட்டியான் ஐயா.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி இராமநாதன். எங்கடா ஆளைக் காணோமே. இன்னைக்கும் லீவு சொல்லிட்டுப் போயிட்டாரான்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். வந்துட்டீங்க. ரொம்ப நன்றி.

ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னைக்கு மட்டும் இல்லை. எப்பவுமே என் பெயரைச் சொல்லி ரெண்டு வாயென்ன இருபது வாய் இருநூறு வாய் கூட சாப்பிடுங்க. :-)

குமரன் முருகன் குகன் என்று மொழிந்து ... :-)

குமரன் (Kumaran) said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தி.ரா.ச. சார்.

குமரன் (Kumaran) said...

Thank you very much for your wishes Mohandoss. நீங்க என் பதிவெல்லாம் கூட படிக்கிறீங்களா? ரொம்ப நன்றி. :-)

குமரன் (Kumaran) said...

சிவா அண்ணா, உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. என் சார்பா கால்கரியில இருக்கிற எல்லா தமிழ் இணைய நண்பர்களுக்கும் விருந்து வைக்கிறேன்னு சொன்னதற்கு நன்றி. ஆனால் கொஞ்சம் சுதாரிச்சுக்கோங்க. செல்வன் அங்கே என்னமோ சத்தம் குடுத்துக்கிட்டு இருக்கார்.

கால்கரி சிவா said...

செல்வன்,

நான் எஸ்கேப் ஆகமாட்டேன். கால்கரி யுனிவர்சிட்டி பக்கம் தான் எங்கள் வீடும்

Ram.K said...

குமரன்,

தாங்களும் தங்கள் மகளும் எல்லா நலன்களும் பெற்று நீடூழிவாழ எல்லாம் வல்ல இறைவனை மனமுவந்து வேண்டுகிறேன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

கே.ராமப்ரசாத்.

Unknown said...

எனக்கு கால்கரி பல்கலைகழகத்தில் சீட்டு கிடைத்தது சிவா.க்வீன்ஸ் பல்கலையில் அப்ப்ளிகேஷன் போட்டு கிடைக்கவில்லை.கால்கரியில் சேரலாம் என இருந்தபோது அமெரிக்காவில் கிடைத்துவிட்டது.இங்கு வந்துவிட்டேன்.

கால்கரி பல்கலைகழகத்தில் இந்திய மாணவர்கள் சிலரோடு தொடர்பிருந்தது.இப்போது இரண்டு வருடமாக இல்லை..கால்கரி பல்கலைகழகத்துக்கு அல்பெர்டாவில் மரம் வெட்டும் தொழிலை பற்றி ஒரு கட்டுரை அனுப்பி வைத்திருந்தேன்.இப்படி பழைய பிளாஷ்பேக்குகள் நிரைய இருப்பதால் கால்கரி வரவேண்டும் என்ற எண்னம் நீண்ட நாட்களாக உண்டு.நடக்கத்தான் மாட்டேன் என்கிறது.

குமரன் (Kumaran) said...

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி இராமபிரசாத் அண்ணா.

Geetha Sambasivam said...

i am reading "Maduraiyin Jyothi"koodal kumaranin pathivukal including GRagavan and Sivamurugan and Paranjyothi's stories about gira and ramanathan.Once I put a comment in your kolaru pathigam blog. hope it did not work. i am also from Madurai . i am happy to see you people are writing these aanmeegam matters very clearly.God bless you and your family. My namaskarams to your parents. saw it is your and your daughter's birthday. Happy birthday to you two. I am not feeling well so i did not open e-kalappai. so i typed in English. I'll comment in your blog in Tamil next time. Thank you for your hospitality.

Karthik Srinivasan said...

இந்த சீரிஸ் முடிவுல இப்டி ஒரு பஞ்ச் இருக்கும்னு நெனக்கல! :)

Many more happy returns of the day! To you & your daughter, Kumaran!!

Vacation time now? Any visits to India planned? (We narrowly missed meeting last year, if you remember!)

பூனைக்குட்டி said...

//Thank you very much for your wishes Mohandoss. நீங்க என் பதிவெல்லாம் கூட படிக்கிறீங்களா?//

This is too much. :-)

Santhosh said...

குமரன்,
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். உலகில் உள்ள எல்லாம் இன்பங்களும் உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கும் ஆண்டவன் அளிக்கட்டும். (அது எப்படின்னு தெரியலை அறிவாளிங்க எல்லாம் இந்த மாசத்துலேயே பிறந்து இருக்குறாங்க).

சிவமுருகன் said...

உங்களுக்கும், உங்கள் மகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி சிவமுருகன்.

Karthik Jayanth said...

குமரன் வீட்டுக்கு கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி.. கண்டிப்பா அந்த பக்கம் வரும் போது வருவேன்.

என்னோட நண்பர்கள் வீட்டில் பல ரவுண்டு பாத்தி கட்டி இருக்கேன். அது ஒரு காலம்.

குமரன் நான் சொன்னது உங்களுக்காக ஒரு தடவை அப்புறம் உங்க மகளுக்காக் ஒரு தடவை. எதுக்குன்னா 2 பேரும் அவங்க பிறந்த நாள் கொண்டாட கூப்பிடுவாங்கல்ல அதுனாலதான். (அப்புறம் பார்சல் வேற தனி கணக்கு சொல்லிட்டேன்) :-)

இலவசக்கொத்தனார் said...

குமரன்,

50-வது பின்னூட்டமாய் இடவேண்டுமென நினைத்தேன். சற்றே தப்பி விட்டது.

நீங்கள் கொடுத்த தொகுப்புரையை ஆசிரியப்பாவில் எழுத முயன்றுள்ளேன். எதுகை, மோனை சரியாக வரவில்லை. அதற்கு மன்னிக்கவும்.

பாரினில் அனைவரும் போற்றிடும் நாளே
பங்குனி உத்திரம் என்றநன் னாளே
பதுமனை வென்ற முருகனுக் குகந்த
நாளிதன் சிறப்பினை பார்ப்போம் நாமே

அரங்கன் அவன்தன் துணையொடு நேர்த்தியாய்
சேர்த்தி சேவை செய்கின்ற நாளே
ஆண்டாள் மன்னாரை மணந்த கோலம்
தன்னில் காட்சி தந்ததின் நாளே

கூடலில் வைகை ஆற்றினில் பெருமாள்
எழுந்து அருள பெற்றதின் நாளே
நாமக்கல் தாயார் நரசிம் மரோடு
தேரினில் பவனி வரும் நாளே

மலையும் பாம்பும் கொண்டே பாற்கடல்
கடைந்து திருமகள் வந்த நாளே
சரண கோஷம் கேட்டு மகிழும்
ஐயன் அவதாரம் கொண்ட நாளே

ஈஸ்வரன் உமையவள் கரம்தனைப் பிடித்து
தன்னுடல் பாதியைத் தந்த நாளே
இந்நாள் நன்நாள் இதுவொரு பொன்நாள்
ஈடும் இல்லை இன்னொரு நாளே

கூடல் குமரன் பிறந்த நாளும்
அவர்தம் மகளின் பிறந்த நாளும்
இந்நாள் யெனவே நாமறிந் தோமே
இதுவும் சிறப்பே நீரறி வீரே

பங்குனி உத்திரப் பெருமை கேட்டீர்
அந்நாள் பிறந்த அன்பர் இருவரும்
ஆண்டுகள் ஆயிரம் வாழ்ந்திட நாமும்
வாழ்த்துவோம் வாழ்வீர் எனவே.

குமரன் (Kumaran) said...

எங்கள் பதிவுகளைப் படிப்பதற்கு மிக்க நன்றி கீதா சாம்பசிவம் அம்மா. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

கார்த்திக் (kay yes) இந்த மாதிரி கடைசியில பஞ்ச் வைத்து எழுத உங்ககிட்ட தான் கத்துக்கிட்டேன்னு சொல்லணும். உங்க கதைகளில் அப்படி தானே முடிவுகள் இருக்கின்றன. :-)

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

அடுத்த முறை எப்போது இந்தியா வருவது என்று இன்னும் நிச்சயமாகவில்லை. அப்படி வந்தால் உங்களுக்குத் தெரியப் படுத்துகிறேன்.

குமரன் (Kumaran) said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சந்தோஷ். நீங்களும் இந்த மாதத்தில் தான் பிறந்தீர்களா? பங்குனியா? ஏப்ரலா? பங்குனி என்றால் என்னையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். ஏப்ரல் என்றால் சாரி; நான் மார்ச்சில் பிறந்தவன். :-)

குமரன் (Kumaran) said...

கார்த்திக் ஜெயந்த், கவலையே வேணாம். எனக்காக ஒரு முறையும் என் மகளுக்காக ஒரு முறையும் எடுப்பு சாப்பாடு இன்னொரு முறையும் நன்றாக சாப்பிடுங்கள் எங்கள் வீட்டில். வருவதற்கு முன் செய்தி மட்டும் சொல்லிவிடுங்கள். :-) (அப்ப தானே தப்பிச்சுப் போக முடியும். :-) கொத்ஸ் கிட்ட கேட்டாத் தெளிவாச் சொல்லுவார்).

குமரன் (Kumaran) said...

கொத்ஸ், உங்கள் வாழ்த்துக்கவிக்கு மிக்க நன்றி. இது வரை எத்தனையோ நண்பர்களுக்கு நான் வாழ்த்துக் கவி எழுதியிருக்கிறேன். இது தான் எனக்கு மற்றவர் கொடுத்த முதல் வாழ்த்துக் கவி. மிக்க நன்றி.

முன்பெல்லாம் என் பிறந்த நாளன்று மதுரை வானொலியில் காலை 8:30 மணிக்குத் தவறாமல் 'எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்; இங்கு நான் வாழ யார் பாடுவார்?' பாடலை ஒலிபரப்புவார்கள். தொடர்ந்து 5 வருடங்கள் கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்; நாம் எத்தனையோ பேருக்கு அவர்களின் பிறந்த நாளன்று வாழ்த்துக் கவிதை எழுதுகிறோம். ஆனால் நமக்கு யாரும் எழுதிக் கொடுப்பதில்லையே என்று. பின்னர் அது தேவைப்படாத ஒன்றாய் மாறி மறந்து போய்விட்டது. இன்று நீங்கள் இந்த வாழ்த்துக் கவியை கொடுத்தவுடன் அது நினைவிற்கு வந்தது. மீண்டும் நன்றிகள். :-)

பங்குனி உத்திரத்தைப் பற்றி அடியேன் மூன்று பதிவுகளில் எழுதியதை மிக அழகாக இந்தப் பாடலில் சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி.

ramachandranusha(உஷா) said...

என்னடா ஆன்மீக பதிவில் அறுபது மறுமொழியா? அனைவரும் ஆன்மீக கடலில் குதித்து முத்தெடுக்க புறப்பட்டு விட்டார்களா அல்லது ஏதாவது வம்பு தும்பு நடக்கிறதா :-)))) என்று ஆவலுடன் ஓடோடி வந்தால் குமரனுக்கு அவர் அருமை மகளுக்கும் ஓரே நாளில் பிறந்த நாளாம். வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். குட்டி பெண்ணிற்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து.

Anonymous said...

அன்புக்குமரனுக்கும்;செல்வமகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
தமிழ்க்கடவுள் முருகனருள் ;தங்களுக்கு மிகவுண்டு.
அன்புடன்
யோகன்
பாரிஸ்

குமரன் (Kumaran) said...

இரட்டை வாழ்த்துக்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்களுக்கும் நன்றி உஷா. அதென்னங்க ஆன்மிகப் பதிவுல அறுபது மறுமொழி வரக்கூடாதா? நம்ம பின்னூட்ட விளையாட்டு விதிகளைப் பத்தித் தெரிஞ்சுமா நம்ப முடியலை? :-) வம்பு தும்பு நடக்கிற மாதிரி ஏதாவது பதிவு போடணும்னு தான் தோணுது; ஆனா இரண்டு காரணங்களால அந்த ஆவலை அடக்கிவச்சிருக்கேன். 1. ஏற்கனவே தமிழ்மணத்துல வம்பு தும்பு நிறைய நடக்குது; 2. மிக முக்கியக் காரணம். இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்க. யாருக்குன்னு கேக்கறீங்களா? எங்க வீட்டம்மாவுக்குங்க. ஏற்கனவே தமிழ்மணத்தையே கட்டிக்கிட்டு அழறீங்களே...வீடு, பொண்டாட்டி, பிள்ளை, வேலை எல்லாம் இருக்குங்கற நினைவாவது இருக்கான்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க :-)

குமரன் (Kumaran) said...

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி யோகன் சார். பெரியவங்க ஆசிர்வாதம்.

Geetha Sambasivam said...

மிகவும் அருமையான பதிவு போடுகிறீர்கள். இலவசக் கொத்தனார் ரீபஸ் தான் போடுவார் என்று பார்த்தால் மிக அருமையான கவிதை எழுதி இருக்கிறார். இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மிக அருமையான மனதிற்கு ஆறுதலாகக் குழு அமைத்துப் பதிவுகள் போடுகிறீர்கள். மறுபடியும் உங்கள் எல்லாரையும் மணிவயிறு வாய்த்தவர்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.உங்கள் குழுவிற்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

பாராட்டுக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா சாம்பசிவம்.

இலவசக்கொத்தனார் said...

//ஆனால் நமக்கு யாரும் எழுதிக் கொடுப்பதில்லையே என்று. //

இனிமேல் இந்த கவலை வராதல்லவா? வேண்டுமென்றால் இனி ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு கவிதை(நாந்தான் சொல்லிக்கணும்) அனுப்பறேன்.

என்ன ஒரு வாரம் முன்னாடி ஒரு மெயில் போட்டு ஞாபகப் படுத்திடுங்க. ஓக்கேவா?

இலவசக்கொத்தனார் said...

கீதாம்மா,

உங்க வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி. இப்போதான் இந்த வெண்பா, ஆசிரியப்பா பத்தி எல்லாம் கத்துக்கறேன். அதுக்கும் இந்த வலைப்பூக்கள்தான் உதவியா இருக்கு.

நேரம் இருக்கும்போது இங்க வந்து பாருங்களேன்.

உங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

போலி டோண்டு,

//அஸ்ஸலாமு அலைக்கும்...

எல்லாம் வல்ல அல்லாவின் இறைப்பார்வை எப்போதும் தங்கள்மீதும் தங்கள் குடும்பத்தின்மீதும் செய்தொழிலின்மீது எப்போதும் நிறைந்து இருக்கட்டும்.
//

மிக்க நன்றி.

//எல்லோர் பார்வையிலும் சரியாகாவே எல்லாமும் தெரிந்தால் பின்னர் நீதிமன்றம் என்ற ஒன்று எதற்காக? எனவே நாம் சொல்ல வந்த கருத்தினை மிகவும் நல்ல வழியில் யார் மனதும் புண்படாதவாரு சொல்ல வேண்டும்.
//

இதனை நீங்கள் சொல்கிறீர்களே?!! மிக்க ஆச்சரியமாக இருக்கிறது. உங்களின் அன்புக் (???) கடிதத்தை இருமுறை பெறும் அருமையான வாய்ப்பு பெற்ற என்னிடமே வந்து இதனைச் சொல்கிறீர்களே?!!! தீயினால் சுட்ட புண் உள்ளாறலாம்; ஆனால் ஆறாதய்யா நீங்கள் உங்கள் வாயினால் என்னையும் என் குடும்பத்தாரையும் சுட்ட புண். ஏழேழு பிறவி வந்தாலும் என்னால் உங்களை (நீங்கள் ஒருவரோ ஐவரோ உங்கள் எல்லோரையும்) மன்னிக்க முடியுமா என்று தெரியவில்லை. நீங்கள் சொன்ன எல்லாம் வல்ல அல்லாவின் கருணை தான் உங்களை மன்னிக்க வேண்டும். நானும் முடிந்தால் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

//நான் எழுதிய சில கருத்துக்களால் சிலர் புண்பட்டது உண்மை. அவ்வாறு புண்பட்டவர்கள் ஜாதியை வளர்த்த பிராமணர்கள். எந்த இஸ்லாமியராவது என்னால் பாதிக்கப் பட்டாரா? எந்த கிறிஸ்துவராவது என்மேல் கோபம் கொண்டிருப்பதாக உங்களால் சொல்ல முடியுமா? எந்த புத்த மதத்தினராவது என்னால் பாதிப்புக் குள்ளானார்களா? பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் பிராமனர்கள்.
//

1. அடியேன் பிராமணனில்லை.
2. ஜாதியை வளர்த்த பிராமணர்கள் மட்டும் தான் உங்கள் கண்களுக்கும் கருத்துக்கும் தெரிந்தனரா? மற்றவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? ஏன் பிராமணர்களை மட்டும் புண்படுத்த குறிவைக்கிறீர்கள்?
3. பிராமணர்களைச் சொன்ன அதே மூச்சில் இஸ்லாமியரையும் கிறிஸ்துவரையும் பௌத்தர்களையும் குறிக்கிறீர்களே? பிராமணர் அல்லாதார் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் உங்களால் பாதிக்கப்பட்டார்களா இல்லையா? அடியேன் நீங்கள் குறிப்பிட்ட எதுவுமே இல்லை. பிராமணன் அல்லாத இந்து. ஏன் என்னைப் பாதித்தீர்கள்?

//எனது ஜாதி மட்டுமே இந்த உலகத்தில் பெரிய ஜாதி என்று மார்தட்டியவர்கள். //

இப்படி சாதி என்று மார் தட்டியவர்கள் பிராமணர்கள் மட்டும் தானா? மற்றவர்கள் எத்தனை பேர் சொல்கிறார்கள்? அவர்களை எல்லாம் என்ன செய்தீர்கள்?

இராகவன் கறுப்பு பதிவில் கேட்டதையே கேட்கிறேன். இன்று சாதி என்ற ஒன்றைச் சொல்கிற நீங்கள், அடுத்து மதம் என்று சொல்பவர்களையும் தாக்குவீர்களா? அடுத்து மொழி, இனம், நாடு என்று இது கூடிக் கொண்டே போகுமா?

அது சரி. பிரம்பை எடுக்க உங்களுக்கு யாரையா உரிமை கொடுத்தது? சிறு குழந்தையாவது பார்த்து பிரம்பை வீசும். நீங்கள் சாராயம் குடித்த குரங்கு போல் அல்லவா எதிரில் பட்டவர்களை எல்லாம் பிரம்பால் விளாசினீர்கள். இன்று எந்த முகத்தோடு இந்த பின்னூட்டத்தை இடுகிறீர்கள். உங்களுக்கு ரசிகர் மன்றம் அமைத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு போய் சேர்ந்து கொள்ளுங்கள். எனக்கு உண்மையான டோண்டுவும் வேண்டாம்; போலி டோண்டுவும் வேண்டாம்.

// ஜாதியை அரசர்கள் காலத்தில் முதலில் அறிமுகப்படுத்தி தண்ணீர் ஊற்றி வளர்த்தது ஆரியர்களாக வந்த பார்ப்பனர்கள்தான். இதனை பலரும் எழுதி உள்ளனர். வரலாற்றில் தகுந்த சான்றுகள் உண்டு. ஜாதியை வளர்த்தவர்கள் தலித்தோ தாழ்த்தப்பட்டவரோ இல்லை.
//

பிராமணரை விட்டால் தலித்தோ தாழ்த்தப் பட்டவரோ தான் உள்ளனரா இந்து மதத்தில்? அவர்கள் யாரும் சாதியை வளர்க்கவில்லையா? எனக்குத் தெரிந்தவரை சாதியைப் பற்றி நிஜ உலகில் அதிகம் பேசுபவர்கள் இடைப்பட்ட சாதியினரே. அவரே இந்த சாதி வெறி கொண்டு அலைபவரும். வலையுலகில் சாதி ஒழிக்க பிரம்பெடுத்த நீர் நிஜ உலகில் என்ன சாதித்தீர்?

உண்மை டோண்டுவுக்கு சோ பிடித்தால் என்ன, இஸ்ரேல் பிடித்தால் என்ன, ராஜாஜியைப் பிடித்தால் என்ன, அமெரிக்காவைப் பிடித்தால் என்ன? எனக்கென்ன வந்தது அதனால்? என்னைப் பொறுத்தவரை அம்பேத்காரை, அண்ணாவை, காந்தியை, காமராஜரை, பெரியாரை, இப்படி எத்தனையோ பேரைப் பிடித்தவர்கள் இருக்கிறார்களே வலையுலகில் அவர்களை நான் எப்படி நடத்துகிறேனோ அப்படியே சோவை, இஸ்ரேலை, ராஜாஜியை, அமெரிக்காவைப் பிடித்தவர்களையும் நடத்திக் கொள்கிறேன். அது என் உரிமை. யாரையும் புண்படுத்தாமல் இருக்கும் வரை அது என் உரிமையே.

//இந்திய நாட்டில் படித்து தேறி அமெரிக்காவில் பணிபுரிந்து காசை மூட்டை கட்டுவது என்பது பல பார்ப்பனர்களின் வாடிக்கை. சோறு போடும் நாடு என்பதால் அவர்களுக்கு இந்தியாவைவிட அமெரிக்காவைப் பிடித்து இருக்கிறது. இனிமேல் அவர்கள் அமெரிக்கா என் தாய்நாடு என்று சொல்லிக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! வந்தேறிகுடிகளான ஆரியர்கள் காசுக்காக எதையும் செய்யும் மிருகங்கள். அமெரிக்காவில் வேலை, வசதி என்றால் தம் தாய்நாட்டுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதுதான் உண்மை.
//

உண்மையென்பது தற்போதெல்லாம் மாறாத ஒன்றாக இல்லை. உண்மையென்பது ஆளாளுக்கு மாறுபடுகிறது. இது உங்கள் கருத்து என்று வேண்டுமானால் சொல்லலாம். அவ்வளவு தான்.

இந்தியத் திருநாட்டில் படித்துத் தேறி அமெரிக்காவில் பணிபுரிந்து காசை மூட்டை கட்டுவது பார்ப்பனர்கள் மட்டும் தானா? மற்றவர்கள் யாரும் இல்லையா? இல்லை உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? பிராமணர் அல்லாதார் எத்தனை பேர் அமெரிக்கா வந்து புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். ஏன் உங்களுக்கு பார்ப்பனர்கள் மட்டும் தான் தெரிகிறார்கள்? குதிரைக்குக் கட்டிவிடுவார்களே அது மாதிரி உங்களுக்கும் கட்டிவிட்டார்களா?

ஏற்கனவே சொன்ன மாதிரி உண்மை டோண்டுவும் எனக்கு வேண்டாம்; போலி டோண்டுவும் எனக்கு வேண்டாம்.தயவு செய்து இனிமேல் என் வலைப்பதிவுகள் பக்கம் வராதீர்கள்.

குமரன் (Kumaran) said...

போலி டோண்டுவின் பின்னூட்டம் மூலமாக அவரில் அசிங்கம் பிடித்த பின்னூட்டங்களை சேமித்து வைத்திருக்கும் பதிவுக்கு போக முடிவதால் அவரின் பின்னூட்டத்தை அழித்துவிட்டேன்.

குமரன் (Kumaran) said...

அப்படியே ஆகட்டும் கொத்ஸ். ஒரு வாரம் முன்னாடியே தகவல் சொல்றேன். தவறாம ஒவ்வொரு பிறந்த நாளும் கவிதை அனுப்பிடுங்க. :-)

Amar said...

ஹைய்யா, எப்படியோ தேடி கண்டுபுடிச்சு உங்களோட பங்குனி உத்திர பதிவை மறுபடி கண்டுபுடிச்சிட்டேன்.

Amar said...

ஆனால் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ரொம்ப நாள் ஆகி போச்சே! என்ன செய்யறது?

சரி, இந்தாங்க குமரன் நான் கஷ்டபட்டு பழனிக்கு நடந்த போயி சம்பாரிச்ச புன்னியத்துல ஒரு 50 சதவீதம் எடுத்துகோங்க.

குமரன் (Kumaran) said...

இந்தப் பதிவைக் கண்டுபிடிச்சிட்டீங்களா சமுத்ரா. ரொம்ப நல்லது. :-)

குமரன் (Kumaran) said...

புண்ணியததுல 50 சதவீதமா? உங்களுக்கு ரொம்ப தாராள மனசு சமுத்ரா. மிக்க நன்றி.

கருப்பு said...

வந்து படிச்சு கருத்து சொல்லுங்க ஆன்மீக ஸ்குருசார். நீங்க கேட்டபடி பதிவு எழுதி இருக்கிறேன்.