வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லும் சில கால வரையறைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் இலக்கியங்கள் சொல்லும் கருத்துகள் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலுவதில்லை. அதனால் கால வரையறைகளைப் பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சில நம்பகமான இணையத்தளங்களை அண்மையில் படித்தேன். அவற்றிலிருந்து சில குறிப்புகளை எடுத்துவைத்துக் கொண்டேன். அவற்றை இங்கே சேமிக்கிறேன்.
***
அரசர்கள்/அரசகுலங்கள்: இரண்டாம் நூற்றாண்டு வரை: சேர சோழ பாண்டியர்களும் வேளிர்களும்.
மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை: களப்பிரர்கள்
ஏழாம்/எட்டாம் நூற்றாண்டு: பல்லவர்களும் பாண்டியர்களும்
ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து: சோழர்கள்
1300 முதல் 1650: விஜயநகரப் பேரரசு/ நாயக்கர்
சிறிது காலம்: மராத்தியர்கள்
பதினேழாம் நூற்றாண்டிலிருந்து: ஐரோப்பியர்கள்
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து: ஆங்கிலேயர்கள்
காலங்கள்: சிந்து வெளி நாகரிகம்: 3300 பி.சி. முதல் 1300 பி.சி. வரை
இரும்பு காலம்: 1200 பி.சி. முதல் 300 பி.சி. வரை (அப்படியென்றால் சிந்து வெளி நாகரிகத்தினர் இரும்பினை அறியவில்லை என்று பொருளா?)
சேரப் பேரரசு: 300 பி.சி. முதல் 200 ஏ.டி.
சோழப் பேரரசு: 300 பி.சி. முதல் 1070 ஏ.டி.
பாண்டியப் பேரரசு: 250 பி.சி. முதல் 1345 ஏ.டி.
சாதவகனர்: 230 பி.சி. முதல் 220 ஏ.டி. (சிலம்பில் இவர்கள் நூற்றுவர் கன்னர் எனப்படுகின்றனர்)
குப்தர்: 280 ஏ.டி. முதல் 550 ஏ.டி.
விஜயநகரம்: 1336 முதல் 1646 வரை
கும்பனி அரசு: 1757 முதல் 1858 வரை
ஆங்கில முடியரசு: 1858 முதல் 1947 வரை
மற்றவை: இறையனார் அகப்பொருள்: 10/11ம் நூற்றாண்டு; நக்கீரரால் இயற்றப்பட்டது. முத்தமிழ்ச் சங்கங்களைப் பற்றி பேசும் ஒரே இலக்கியம்/நூல்.
தொல்பொருள் ஆய்வுகள் தமிழகத்தில் மனிதர்களுக்கு மூத்த இனம் (ப்ரோடோ மனிதன்) 500,000 பி.சி.யிலிருந்து வாழ்ந்ததாகச் சொல்கின்றன. மனிதர்கள் 50,000 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஆதிச்சநல்லூரில் 1000 பி.சியிலிருந்து தொடக்கக் கால தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சங்க காலத்தில் அரசர்களின் வரிசை: வேந்தர் --> அவர்களுக்குக் கீழே --> வேள்/வேளிர் --> அவர்களுக்குக் கீழே --> கிழார் --> அவர்களுக்குக் கீழே --> மன்னர்.
தக்காணம் மூன்றாம் நூற்றாண்டு பி.சியில் மௌரியப் பேரரசின் கீழ் இருந்தது; முதல் நூற்றாண்டு பி.சி. முதல் இரண்டாம் நூற்றாண்டு ஏ.டி வரை நூற்றுவர் கன்னர் (சாதவ கன்னர் - சாதவகனர்) தக்காணத்தை ஆண்டார்கள்.
அசோகரால் வைக்கப்பட்ட தூண்களில் (273 பி.சி. முதல் 232 பி.சி. வரை) சோழ, பாண்டிய, கேரளபுத்திரர்களின் பெயர்கள் இருக்கின்றன. அவர்கள் மூவரும் அசோகருடன் நட்புறவுடன் இருந்திருக்கிறார்கள்.
கேரளபுத்திரர்கள் என்று அசோகரின் தூண்கள் சொல்வதால் கேரளம் என்ற பெயர் தொன்மையானது என்று தோன்றுகிறது. சேரலம் என்ற பெயர் வடக்கே கேரளம் என்று திரிந்து தற்போது சேரலத்திற்கு உரிய பெயராக நிலை நின்றிருக்கலாம்.
கலிங்க அரசன் கரவேலனின் ஹதிகம்பா கல்வெட்டுகளில் 250 பி.சி முதல் 150 பி.சி. வரையில் இருந்த தமிழ் அரசுகளின் கூட்டணி பேசப்பட்டிருக்கிறது.
மலையாள மொழி தனது தனித்தன்மையை 9/10ம் நூற்றாண்டில் பெறத்தொடங்கியது.
பாண்டிய அரசன் ச்ரிமாறன் ச்ரிவல்லபன் 840ம் வருடம் ஆண்டிருக்கிறான். பெரியாழ்வாரின் காலத்தில் மதுரையை ஆண்ட அரசன் இவன்.
இராஜராஜ சோழனின் ஆட்சி 985ல் தொடங்கியது.
ஹொய்சல மன்னன் விஷ்ணுவர்த்தனனின் காலம் 1118.
மாலிக் காபூர் மதுரைக்கு 1311ல் படையெடுத்து வந்தான்.
மதுரை சுல்தான் அரசு: 1311 முதல் 1371 வரை
விஜயநகர அழிவு: 1564 (சௌராஷ்ட்ரர்கள் மதுரைக்கு வந்த காலம். அப்படியென்றால் மதுரையில் சௌராஷ்ட்ரர்கள் ஏறக்குறைய 450 ஆண்டுகளாக வாழ்கிறார்கள்).
திருமலை நாயக்கர் 1659ல் இறந்தார்.
***
இக்குறிப்புகளில் ஏதேனும் தவறிருந்தால் சொல்லுங்கள்.