மதுமிதா அக்கா வலைப்பூ நண்பர்கள் எல்லாம் மகிழும்படி பட்டம் எல்லாம் கொடுத்தார்கள். அந்த நன்றிக் கடனைத் தீர்ப்பதற்கு என்ன வழி என்று பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர்களே தன்னுடைய ஆராய்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் வலைப்பூக்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். இரு ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் (அவருக்கு உதவி செய்ய நல்ல வாய்ப்புன்னு சொல்றேங்க. நம்புங்க) உடனே செயல்படுத்துகிறேன்.
வலைப்பதிவர் பெயர்: குமரன்
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நண்பர் சிவபுராணம், கீதம் சங்கீதம் சிவராஜா (சிவா)
ஊர்: பிறந்தது மதுரை. வாழ்வது மினெசோட்டா மாநிலத்தில் ஓர் ஊரில்.
நாடு: அமெரிக்கா.
இது எத்தனையாவது பதிவு: 196 (என் எல்லா வலைப்பூக்களையும் சேர்த்து; சில பதிவுகளை பதிவுகளாகவே எண்ணவில்லை; அவற்றை இந்த எண்ணிக்கையில் சேர்க்கவில்லை)
இப்பதிவின் சுட்டி: http://koodal1.blogspot.com/2006/05/196_25.html
சந்தித்த அனுபவங்கள்: நிறைய. எல்லோருக்கும் கிடைக்கும் அனுபவங்கள் தான். வலை பதிக்கத் தொடங்கிய புதுதில் நிறைய எழுதினேன். தமிழ்மண வார நட்சத்திரமாக ஆக்கப்பட்ட போது அதில் கிடைத்த கவனமும் நல்ல ஊக்கம் தந்தது. ஆனால் அதில் என்னையறியாமல் 'நான்' என்னும் எண்ணம் தலைதூக்குவதை அந்த வார இறுதிக்குள் உணர முடிந்தது. அதனால் வலைப்பதிப்பதில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டது. பின்னர் பழைய படி வலைப்பதிப்பதில் வேகம் வந்தது; ஆனால் இந்த சுழற்சி அலையலையாக வந்து கொண்டே இருக்கிறது. மற்ற நண்பர்களிடமும் இது நடப்பதைக் கவனித்தேன். இது நான் மேலும் என்னையே கவனிக்க ஒரு வாய்ப்பும் விழிப்பும் தந்தது.
பெற்ற நண்பர்கள்: நிறைய. உலகெங்கும். குழு மனப்பான்மையுடன் இயங்கும் மனிதனின் இயற்கை குணம் இணையத்திலும் வெளிப்படுவதால் நண்பர்களுக்கு இணையான எண்ணிக்கையில் பிடிக்காதவர்களையும் ஏற்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பை இந்த வலைப்பூக்கள் நல்கும். அதனால் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும்.
கற்றவை: அதனை அனுபவங்களிலேயே சொல்லிவிட்டேன். ஆனால் கற்றது கைம்மண்ணளவு என்பதை தினந்தோறும் உணர்த்தும் இடம் இந்த இணையம்.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: நேரில் முகத்திற்கு முன்னால் சொல்லத் தயங்கும் சில கருத்துகளை (முக்கியமாக நல்ல கருத்துகளை) எழுத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்ல முடிகிறது.
இனி செய்ய நினைப்பவை: தொடங்கிய பதிவுகளில் எல்லாம் தொடர்ந்து எழுதுவது
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. மதுமிதாவுக்குத் தெரிந்ததை ஆராய்ச்சியிலும் நூலிலும் பயன்படுத்தலாம்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: இணையத்தில் வலைப்பதிக்கும் எல்லோரும் தங்கள் சுதந்திரத்தைப் பேணுவதைப் போல் மற்றவர் சுதந்திரத்தையும் பேணவேண்டிய பொறுப்பினை உணர்ந்து செயல்படவேண்டும்.
1.
வலைப்பூ பெயர் : கூடல்
சுட்டி: http://koodal1.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 05/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எழுதுவதிலும் பேசுவதிலும் உள்ள ஆர்வம்; தற்போது வாழும் இடத்தில் தமிழில் பேசவோ எழுதவோ வாய்ப்புகள் குறைவு. அதனால் தமிழில் அறிந்ததையும் மனதில் படுபவைகளையும் எழுதுவதற்காக இந்த வலைப்பூவைத் தொடங்கினேன்.
2.
வலைப்பூ பெயர் : அபிராமி பட்டர்
சுட்டி : http://abiramibhattar.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 03/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.
3.
வலைப்பூ பெயர் : விஷ்ணு சித்தன்
சுட்டி: http://vishnuchitthan.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 03/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வாரின் பாசுரங்களுக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.
4.
வலைப்பூ பெயர் : மதுரையின் ஜோதி
சுட்டி :http://nadanagopalanayaki.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 05/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: மதுரையின் ஜோதி என்று போற்றப்படும் நடனகோபால நாயகி சுவாமிகளின் சௌராஷ்ட்ர, தமிழ்ப் பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.
5.
வலைப்பூ பெயர் : பஜ கோவிந்தம்
சுட்டி :http://bgtamil.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 16/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: வடமொழி நூலான ஆதிசங்கரரின் பஜ கோவிந்தத்திற்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.
6.
வலைப்பூ பெயர் : திருவாசகம் ஒரடொரியொ
சுட்டி :http://oratariothiruvasagam.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 17/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திருவாசகத்தில் சில பாடல்களுக்கு அண்மையில் இசைஞானி இளையராஜா ஒரடொரியொ முறையில் இசையமைத்திருக்கிறார். அந்தப் பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.
7. வலைப்பூ பெயர் : பாட்டுக்கொரு புலவன் பாரதி
சுட்டி :http://nambharathi.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 02/நவம்பர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் சொல்வதற்காக
8.
வலைப்பூ பெயர் : கோதை தமிழ்
சுட்டி :http://godhaitamil.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 24/நவம்பர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: கோதை நாச்சியாராகிய ஆண்டாளின் திருப்பாவை பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் சொல்வதற்காக
9.
வலைப்பூ பெயர் : இந்தியக் கனவு 2020
சுட்டி :http://abtdreamindia2020.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 08/ஜனவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இந்தப் பெயரில் தொடங்கப் பட்டுள்ள ஒரு இயக்கத்தை அறிமுகம் செய்வதற்கும் அதன் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுதற்கும்.
10.
வலைப்பூ பெயர் : சகலகலாவல்லி மாலை
சுட்டி :http://sakalakalavalli.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 31/டிசம்பர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: குமரகுருபரரின் சகலகலாவல்லிமாலைக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.
11.
வலைப்பூ பெயர்: படித்ததில் பிடித்தது
சுட்டி: http://patipiti.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 05/பிப்ரவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இணையத்திலும் வெளியிலும் படித்தவற்றில் பிடித்தவற்றைப் பற்றி எழுத
12.
வலைப்பூ பெயர்: விவேக சிந்தாமணி
சுட்டி: http://vivegasinthamani.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 22/பிப்ரவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: விவேக சிந்தாமணி என்னும் தமிழ் இலக்கியத்திற்குச் சொற்பொருள் விளக்கம் சொல்லுவதற்காக.
13.
வலைப்பூ பெயர்: ஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால்
சுட்டி: http://inbame.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 24/பிப்ரவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திருக்குறளின் இன்பத்துப் பால் குறட்பாக்களுக்குச் சொற்பொருள் விளக்கம் சொல்லுவதற்காக.
14.
வலைப்பூ பெயர்: கோளறு பதிகம்
சுட்டி: http://kolarupathikam.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 27/பிப்ரவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திருஞான சம்பந்தரின் கோளறு பதிகத்திற்குச் சொற்பொருள் விளக்கம் சொல்லுவதற்காக.
15.
வலைப்பூ பெயர்: கேட்டதில் பிடித்தது
சுட்டி: http://kelpidi.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 09/மார்ச்/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: கேட்ட பாடல்களில் பிடித்தவற்றைப் பாடல் வரிகளுடன் தருவதற்காக.
16.
வலைப்பூ பெயர்: லிங்காஷ்டகம்
சுட்டி: http://lingastakam.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 07/ஏப்ரல்/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: வடமொழி நூலான லிங்காஷ்டகத்திற்குச் சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.
17.
வலைப்பூ பெயர்: சொல் ஒரு சொல்
சுட்டி: http://solorusol.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 12/ஏப்ரல்/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தனித் தமிழ் சொற்களையும் பழந்தமிழ் சொற்களையும் அறிமுகம் செய்து புழக்கத்தில் கொண்டுவர ஒரு சிறு முயற்சி.
18.
வலைப்பூ பெயர்: தமிழ் அறிவியல்
சுட்டி: http://tamilariviyal.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 06/மே/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் எழுதுதற்கும் பிறமொழி அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கும்
19.
வலைப்பூ பெயர்: சின்ன சின்ன கதைகள்
சுட்டி: http://chinnakathai.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 23/மே/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: வலைப்பூவின் தலைப்பு சொல்லுவது போல் சின்னச் சின்னக் கதைகளை எழுதுவதற்காக
20.
வலைப்பூ பெயர்: திருநீற்றுப் பதிகம்
சுட்டி:http://thiruneeru.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்: 25/மே/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்திற்குச் சொற்பொருள் விளக்கம் சொல்வதற்காக