ஆழி மழைக்கண்ணா! ஒன்றும் நீ கை
கரவேல்!
ஆழியுள்
புக்கு முகர்ந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்
கறுத்து
பாழி அம் தோள் உடை
பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி
போல் நின்று அதிர்ந்து
தாழாதே
சார்ங்கம் உதைத்த சர மழை
போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி
நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
மழை மேகங்களுக்குத் தலைவனே! எதையும் நீ
மறைக்காதே! கடலுக்குள் புகுந்து நீரை முகர்ந்து கொண்டு
மிகுந்த ஒலியுடன் வானத்தில் ஏறி ஊழிக்காலத்தில் அனைவரையும்
அனைத்தையும் படைத்த முதல்வனான இறைவனின்
திருமேனியைப் போல் உன் உடல்
கறுத்து, வலிமையும் அழகும் உடைய பத்மநாபனின்
கையில் இருக்கும் திருச்சக்கரத்தைப் போல் மின்னி அவனது
மற்ற கையில் இருக்கும் வலம்புரி
சங்கைப் போல் எப்போது நின்று
ஒலித்து, தயக்கமே இல்லாமல் அவன்
கையில் இருக்கும் சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து
கிளம்பும் அம்பு மழையைப் போல்
நாங்கள் வாழ மழையாகப் பெய்திடாய்!
நாங்களும் மகிழ்ச்சியாக மார்கழி நீராடுவோம்!
No comments:
Post a Comment