Sunday, December 16, 2012

வையத்து வாழ்வீர்காள்!




வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ?! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய் உண்ணோம்! பால் உண்ணோம்! நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம்! மலர் இட்டு நாம் முடியோம்!
செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்று ஓதோம்!
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!


உலகத்தில் வாழ்பவர்களே! நாங்கள் எங்கள் பாவை நோன்பிற்காகச் செய்யப் போகும் செயல்களைக் கேளுங்கள்!

பாற்கடலுள் ஓய்வாகப் படுத்திருக்கும் பரமனின் திருவடிகளைப் பாடுவோம்! நெய் உண்ண மாட்டோம்! பால் உண்ண மாட்டோம்! அதிகாலையில் நீராடுவோம்! கண்களுக்கு மை இட்டு அழகு செய்ய மாட்டோம்! மலர்களைக் கூந்தலில் சூடி முடிய மாட்டோம்! முன்னோர்கள் செய்யாதனவற்றைச் செய்ய மாட்டோம்! தீமை தரும் கோள் சொல்லை சொல்ல மாட்டோம்! (குறளை - கோள் சொல்லுதல்) மாணவர்களுக்கும் (பிரம்மசாரிகளுக்கும்), துறவிகளுக்கும் அவர்கள் வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனதார கையால் காட்டித் தருவோம்! நாம் உய்வதற்கு உரிய வழியான திருமால் திருவடிகளை எண்ணி மகிழ்ச்சியுடன் இருப்போம்!

கேட்க

2 comments:

கூடல் பாலா said...

நல்ல பகிர்வு!

குமரன் (Kumaran) said...

நன்றி கூடல் பாலா.