மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்?!
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்!
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்!
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்!
நாராயணனே நமக்கே பறை தருவான்!
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!
மார்கழி மாதம் முழுநிலவு நாள் இன்று! நீராட வாருங்கள்! வாருங்களேன் சிறந்த நகைகளை அணிந்தவர்களே! செல்வச் சீர் மல்கும் திருவாய்ப்பாடியின் செல்லச் சிறுமியர்களே! கூரிய வேலைக் கொண்டு பகைவர்களை அழிக்கும் நந்தகோபனின் திருக்குமரன், நீண்ட அழகிய கண்களை உடைய யசோதையின் இளஞ்சிங்கம், கரிய திருமேனியும் சிவந்த கண்களும் கொண்டு, சூரியனையும் சந்திரனையும் ஒத்த திருமுகத்தான், நாராயணனே நமக்கே வேண்டியதெல்லாம் தருவான்! உலகத்தவர் புகழ நீராடுவோம்!
http://etemples.net/thiruppavai/tiru01.htm
No comments:
Post a Comment