ஒருத்தி
மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி
மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான்
ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப்
பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பு
என்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து
வந்தோம்! பறை தருதியாகில்
திருத்தக்கச்
செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும்
தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
பெருமையில்
சிறந்த ஒருத்தியான தேவகியின் திருமகனாகப் பிறந்து, பிறந்த அன்று இரவே
பெருமையில் சிறந்த இன்னொருத்தியான யுசோதையின்
மகனாக மறைத்து வைக்கப்பட்டு நீ
வளரும் போது, நீர் மறைந்து
வாழ்வதைப் பொறுக்க இயலாமல் உனக்குத்
தீங்கு செய்ய நினைத்து அரக்கர்களை
அனுப்பிய கம்சனின் எண்ணத்தை பொய்யாக்கி, அவனது வயிற்றில் நெருப்பாக
நின்ற நெடுமாலே! கண்ணா!
உன்னைப்
போற்றி வந்தோம்! நீ எங்களுக்கு வேண்டியதை
தருவாய். நாங்கள் உனது பெருமை
மிக்க செல்வத்தையும் புகழையும் பாடி எங்களது வருத்தங்கள்
எல்லாம் தீர்ந்து மகிழ்வோம்!
No comments:
Post a Comment