சிற்றம்
சிறு காலே வந்து உன்னைச்
சேவித்து உன்
பொற்றாமரை
அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம்
மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து
நீ
குற்றேவல்
எங்களைக் கொள்ளாமல் போகாது!
இற்றைப்
பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும்
ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே
ஆவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர்
எம்பாவாய்!
அதிகாலையில்
வந்து உன்னைப் போற்றி வணங்கி,
உன் தங்கத் தாமரைப் போன்ற
திருவடிகளை நாங்கள் போற்றுவதன் நோக்கத்தைக்
கேட்பாய்!
பசுக்களை
மேய்த்து அதைக் கொண்டு வாழும்
குலத்தில் நீயும் நாங்களும் பிறந்ததால்,
நீ எங்களை குற்றேவல் கொள்ளாமல்
இருக்க இயலாது!
இன்று நாங்கள் வேண்டியதைப் பெறுவதற்காக
மட்டும் நாங்கள் வரவில்லை கோவிந்தா!
எப்பொழுதும்
ஏழேழ் பிறவிக்கும் உன்னோடு சொந்தபந்தமாக சுற்றத்தவராக
ஆவோம்! உனக்கே நாங்கள் அடியவர்களாக
இருப்போம்! எங்களுக்கு வேறு ஆசைகள் ஏதேனும்
இருந்தாலும் அவற்றை மாற்றி இந்த
பாக்கியத்தையே நீ அருள் செய்ய
வேண்டும்!
4 comments:
அருமையான திருப்பாவை பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
ஒவ்வொரு நாளும் சிறப்பான படங்களுடன் மிக நேர்த்தியான விளக்கங்களோடும் பதிவுகள் மனதை கவர்ந்தன.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
subbu rathinam
www.vazhvuneri.blogspot.com
அனைவருக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
Post a Comment