Wednesday, July 21, 2010

பாட்டி படித்த பள்ளி!

நேற்று டாக்டர். திருஞானம் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்குச் சீருடை வழங்கியதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 21) காலை மதுரை விளக்குத்தூண் அருகில் இருக்கும் நவபத்கானா தெருவில் இருக்கும் சௌராஷ்ட்ர ஆரம்பப் பள்ளியில் படிக்கும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவ மாணவியர் அனைவருக்கும் (மொத்தம் 91 பேர்) சீருடைகளை வழங்கினோம்.

டீம் என்றொரு குழு அமெரிக்காவில் இருக்கிறது. இதில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தார் பலரும் இணைந்து இருக்கிறார்கள். மாதம் பத்து டாலர் என்ற கணக்கில் வருடத்திற்கு நூற்றி இருபது டாலரை ஒவ்வொருவரும் சந்தாவாக இக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். மாதத்திற்கு ஒரு சிலர் என்று தேர்ந்தெடுத்து ஐநூறு டாலரை அவருக்குக் கொடுத்து அவர் விரும்பும் தமிழகப் பள்ளி ஒன்றிற்கு உதவி செய்ய வைக்கிறார்கள். இக்குழுவில் பல வருடங்களாக உறுப்பினனாக இருக்கிறேன் (எத்தனை வருடங்களாக என்று நினைவில்லை). முன்பொரு முறை என்னைத் தேர்ந்தெடுத்து ஐநூறு டாலர்கள் (ஏறக்குறைய 25,000 ரூபாய்) கொடுத்தார்கள். அப்போது சீனா ஐயா, என் மாமனார் போன்று ஏற்பாடுகளைக் கவனித்துச் செய்ய யாரும் கிடைக்காததால் இன்னொரு டீம் உறுப்பினரான நண்பரிடம் அப்பணத்தைக் கொடுத்து சேலம் அருகில் ஒரு சிற்றூரில் இருக்கும் பள்ளிக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்தோம். இப்போது இரண்டாவது முறையாக ஜூன் மாதத்தில் தேர்ந்தெடுத்துப் பணத்தை அனுப்பியிருக்கிறார்கள். இந்த முறை என் மாமனார் மதுரையில் இருந்ததால் அவர் மூலம் இரு பள்ளிகளுக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிட்டியது.

இப்பள்ளியில் படிக்கும் 91 மாணவ மாணவியருக்குச் சீருடையும், தெற்கு வெளிவீதியில் இருக்கும் இன்னொரு சௌராஷ்ட்ர துவக்கப்பள்ளியில் கழிவறையும் டீம் கொடுத்த பணத்தில் வழங்கியிருக்கிறோம்.

இன்றைய நிகழ்ச்சியும் மிக நன்றாக நடைபெற்றது. இப்பள்ளி சௌராஷ்ட்ர பெண்கள் கல்வி அவையினரால் நடத்தப்படுவதால் மேடையில் மகளிருக்கு முதல் மரியாதை. படங்களைப் பார்த்தால் தெரியும். :-)

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள். பின்னர் ஒலிப்பேழையில் செம்மொழிப் பாட்டு வைத்தார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலைஞர் எழுதிய இப்பாடலும் தமிழ்த்தாய் வாழ்த்து அளவிற்கு மரியாதை பெறுகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

இந்தப் பள்ளி என் மாமியார் படித்த பள்ளி என்று சொன்னார்கள். என் அம்மாவும் இங்கே படித்திருக்கலாம். உயிருடன் இருந்திருந்தால் கேட்டிருக்கலாம். பாட்டி படித்த பள்ளி என்பதாலோ என்னவோ இன்று அவளாகவே முன் வந்து சீருடைகளை வழங்கினாள் மகள்.

நேற்று பேசியதையே இன்றும் பேசிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் சரியாகப் பேசவில்லை போல. சொதப்பினேன் என்று பின்னர் சொன்னார் வீட்டரசி. ஆனால் குழந்தைகள் நன்கு சிரித்து என்னிடம் பேசினார்கள். அது போதும் எனக்கு. :-)

நிகழ்ச்சி நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது. (ஆமாம். இறுதியில் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் இனிப்பு வழங்கினார்கள். :-) )

Click here to view these pictures larger

12 comments:

  1. பகிர்வுக்கும் நன்றி, நற்செயலுக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  2. வாழ்க உங்கள் தொண்டு.

    ReplyDelete
  3. நல்லது குமரன்!
    இப்படியே நற்பணிகள் தொடரட்டும்!
    ஊருக்குப் போய் பதிவுகளும் தொடரட்டும்! :)
    அதனால் உங்களுக்குப் பூரிக்கட்டையும் தொடரட்டும்! :)

    //பின்னர் ஒலிப்பேழையில் செம்மொழிப் பாட்டு வைத்தார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலைஞர் எழுதிய இப்பாடலும் தமிழ்த்தாய் வாழ்த்து அளவிற்கு மரியாதை பெறுகிறது என்று நினைத்துக் கொண்டேன்//

    :)
    இளைய தலைமுறைக்கு ரஹ்மான் வேணும்-ல்ல? :))
    இயற்பாவான திருக்குறளை இசைப்பாவாக்கி, போட்டாரு-ல்ல விண்ணைத் தாண்டி வருவாயா படத்துல?

    ReplyDelete
  4. அன்பின் குமரன்

    அருமையான செயல்கள் - தொடரட்டும் - நல்வாழ்த்துகள் குமரன்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  5. தினமும் உதவிகள்... பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். நல்ல பள்ளி க்கு உதவி செய்துள்ளீர்கள் . நவபத் கானா சொளராஷ்ரா பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் என் நண்பர்கள்.அற்பணிப்புடன் வேலை பார்ப்பவர்கள் . மிக்க மகிழ்ச்சி. பாப்பா சீருடை வழங்கி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லவும். ராகவனை பார்க்க வருவீர்கள் என எதிர்பார்த்தேன்.. .

    ReplyDelete
  6. நன்றி வடுவூர் குமார், கோவி.கண்ணன், அப்துல்லா, இராஜேஷ்.

    ReplyDelete
  7. Yes Sivamurugan. kenden poltamuus. Few years ago, we donated generator also as the school authority told us small kids suffer a lot during frequent power outages. Building the latrine is our second installment to this school. Generator was donated through PHL, latrine is through TEAM. Both times they were done through others - I have never visited this school yet - need to make a point to visit this time.

    ReplyDelete
  8. நற்செயல்களும் இடுகைகளும் மட்டும் தொடர்கின்றன இரவி. பூரிக்கட்டை பறக்காமல் பார்த்துக் கொள்கிறேன். மினியாபொலிஸில் என்றால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்; அதனால் இடுகை எழுத நேரம் இருக்காது. இங்கே அப்படி இல்லை - தண்ணி தெளிச்சு விட்ட மாதிரி தான். பக்கத்துல இருந்தா பேசலாம்; தனியா போய் உக்காந்து பதிவு எழுதுறீங்களா? சரி; போயிட்டுப் போங்கன்னு விட்டுட்டாங்க. :-)

    ReplyDelete
  9. நன்றி சீனா ஐயா & சரவணன். கொஞ்சம் முயன்றால் இராகவனைப் பார்க்க வந்திருக்கலாம். வேறு வேலையாகிவிட்டது. மன்னியுங்கள்.

    ReplyDelete