Wednesday, April 29, 2009

இன்றோ திருவாதிரை! எமக்காகவன்றோ ஆசாரியர் அவதரித்தார்!



வைப்பாய வான்பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இருநிலத்தில்
ஒப்பார் இலாத உறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழ்க்கே


நமது நற்கதிக்கு இறைவனாலேயே அனுப்பப்பட்ட பெரும் நிதி என்று நல்ல அன்பர்கள் தங்கள் மனத்தகத்தே எப்போதும் சேமித்து வைத்துக் கொள்ளும் எம்பெருமானார் இராமானுசனை, 'இந்த நீண்ட உலகத்தில் எங்குமே இவனைப் போன்ற தீவினைகளைச் செய்தவர் இல்லை' என்று சொல்லலாம் படிக்கு இருக்கும் நான் என்னுடைய வஞ்சகமான நெஞ்சத்திலும் வைத்து மூன்று வேளைகளிலும் வாழ்த்துகின்றேனே; இதனால் எம்பெருமானரது நீண்ட புகழுக்கு என்ன இழுக்கு ஏற்படுகின்றதோ?

(திருவரங்கத்து அமுதனார் அருளிய இராமானுச நூற்றந்தாதி)



***

குறை நீக்கும் சாத்திரக் குணக்கடலே
உயர்வளிக்கும் உபநிடதக் கதியே
கதியென்றேன் கமலத் திருவடிகள்
சரணடைந்தேன் சங்கர குரு சரணம்


(தோடகாஷ்டகத்தின் முதல் சுலோகத்திற்கு அடியேன் செய்த மொழிபெயர்ப்பு)



***

இன்றோ திருவாதிரை எமக்காக
அன்றோ ஆசாரியர் அவதரித்தார் - குன்றாத
வான்போகம் தனை விட்டு மண்ணவரைக் கடைத்தேற்ற
சங்கர ராமானுசராய்.


சித்திரைத் திருவாதிரைத் திருநாளாகிய இன்று ஆதிசங்கரரின் திரு அவதாரத் திருநாள்; எம்பெருமானார் இராமானுசரின் திரு அவதாரத் திருநாள். அடியேன் ஆசாரியர் இருவரின் திருவடிகளிலும் தஞ்சம் அடைகிறேன்.

11 comments:

  1. சரணடைந்தேன் சங்கர குரு சரணம்!
    சரணடைந்தேன் இராமானுச முனி சரணம்!

    //இன்றோ திருவாதிரை எமக்காக
    அன்றோ ஆசாரியர் அவதரித்தார் - குன்றாத
    வான்போகம் தனை விட்டு மண்ணவரைக் கடைத்தேற்ற
    "சங்கர ராமானுசராய்"//

    சூப்பர்! நீங்களும் அருளிச் செயல்களில் செல்லமா சொந்தமா கை வைக்கத் துவங்கியாச்சா? ஹா ஹா ஹா! :)

    ReplyDelete
  2. நன்றி இரவிசங்கர்.

    ReplyDelete
  3. //சங்கர ராமானுசராய்.//

    அருமை, அருமை குமரன் ஐயா. இரு ஆச்சாரியர்களும் அவதரித்தது ஒரே நட்சத்திரத்தில்.

    ReplyDelete
  4. குமரன்
    காணொளியில் திருமஞ்சனம் செய்விக்கப்படும் ஆச்சார்யர் யார்? சிறிய உருவமாகவும் தெரிகிறது! திருப்பெரும்பூதூர் தானுகந்த திருமேனியாகவும் தெரிகிறதே!

    ReplyDelete
  5. இரண்டு குருஸ்ரேஷ்டர்களையும் நமஸ்கரிச்சுக்கறேன்.

    ReplyDelete
  6. நன்றி கைலாஷி ஐயா.

    ReplyDelete
  7. எந்த ஊர் என்று தெரியாது இரவி. நானும் பார்த்த போது திருப்பெரும்பூதூர் என்று தான் நினைத்தேன்.

    ReplyDelete
  8. நானும் உங்களோட சேர்ந்துக்கறேன் மௌலி.

    ReplyDelete
  9. அன்பு குமரன், கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து. என்ன சொல்லி உங்களுக்கு நன்றி அறிவிப்பது. ஸ்ரிபெரும்புதூர் என்றுதன் நினைக்கிறேன். ஆனால் நம்மாழ்வார் சன்னதி வேறு மாதிரி இருக்கிறது. இதை யூ டியூபில்

    பதிந்திருக்கிற மகானுக்கும் நன்றி.

    ஆசார்யர்கள் திருவடிகளே சரணம். எம்.எஸ். அம்மாவின்'' பவ சங்கர தேசிகமே சாணம்'' காதில் ஒலிக்கிறது.

    ReplyDelete
  10. நன்றி வல்லியம்மா.

    ReplyDelete
  11. ஆசார்யர்களின் திருவடிகள் சரணம்.

    ReplyDelete