Friday, May 01, 2009
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே!!!
எங்கள் ஊரில் குளிர்காலம் முடிந்து இளவேனில் காலம் தொடங்கியிருக்கிறது. மிதமான குளிருடன் கூடிய மாலை வேளையில் வீட்டிற்குப் பின்புறத்தில் இருக்கும் ஓய்விடத்தில் அமர்ந்திருந்தேன். பல நாட்களுக்குப் பிறகு அமைதியாக ஓய்வாக அமர்ந்து வானத்தைப் பார்க்கும் வாய்ப்பு. மனம் சிறிதே ஒடுங்கி கண்ணை நன்கு திறந்து கண்ட காட்சியைத் தான் இங்கே விவரிக்கப் போகிறேன்.
முதலில் கண்ணில் தென்பட்டது வானத்தில் ஆங்காங்கே இருந்த கருநிற மேகங்கள். காலையில் பெய்த மழையின் மிச்சமாக இந்த மேகங்கள். அந்த முகில்களைச் சுற்றிப் பரந்து விரிந்த நீல நிற வானம். வலப்பக்கமாக ஒளிவீசும் மாலைக் கதிரவன். செந்நிறத்துடன் கண்கூசாத சுடர்களை வீசித் திகழ்கிறான். எங்கும் நிறைந்த எந்த நிறமும் இல்லாத எல்லா நிறத்தையும் ஏற்கின்ற வெட்ட வெளி. தரையில் சில நாட்களாகப் பெய்த மழையால் தழைத்து வளர்ந்த பச்சைப் பசும் புல். ஆகா. இது அன்னையின் தோற்றமன்றோ. அன்னையின் திருவுருவமே அன்றோ கண்களுக்குத் தெரிகிறது. அந்த மோன நிலையில் இக்காட்சியைக் கண்டு வாய் தானாகவே அவள் புகழைப் பாடியது...
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே!!!
இடுகையை மனதில் இருத்தி, கண்களை மூடி அகக்கண்கள் கொண்டு பார்க்கையில், நன்றாக இதமாக உள்ளது அன்பரே!
ReplyDeleteசொற்படம்! PIT போட்டிக்கா? :)
ReplyDelete//பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே!!!//
இ.சு.பொ.வி
(இடம் சுட்டிப் பொருள் விளக்குக!)
காக்கை சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தெரியுதடா நந்தலாலா என்று பாரதியார் பாடியபடி எல்லாவற்றிலும் அன்னையை காணும் பக்குவம் வந்து விட்டதே. வாழ்த்துக்கள் குமரன்.
ReplyDeleteநன்றி பழமைபேசியாரே.
ReplyDeleteஇ.சு.பொ.வி. நீங்களே தாங்க இரவி.
ReplyDeleteபக்குவம் எல்லாம் வரவில்லை கைலாஷி ஐயா. ஒரு நொடி தோன்றி மறைந்த வரி. அவ்வளவு தான்.
ReplyDeleteவானத்தின்
ReplyDeleteவண்ணத்தில்
விழ்வதா இல்லை உங்களின்
வார்த்தை
வண்ணத்தில்
விழ்வதா என்று அறியாமல்
விழிக்கின்றேன்
:-)
ReplyDeleteநன்றி திகழ்மிளிர்.
அருமை குமரா.
ReplyDeleteநன்றி அக்கா.
ReplyDeleteபிரமாதம்! எந்த ஊர் பிங்கலை நீலி? ஒரு வேளை வெளியாளா?
ReplyDeleteயாதும் ஊரே யாவரும் கேளிர்! :-)
ReplyDelete