ஏப்ரல் மே'யிலே பசுமை ஏன் இல்லே காஞ்சுப் போச்சுடா
அட ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே போரு போருடா
இது தேவையா
அட போங்கையா
ஜூன் ஜூலையா
பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது
கண்ணாமூச்சிகள் நடக்குது நடக்குது
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது
அழகுக் கிளிகள் எனது விழியில் வலம் வருது...
"ரொம்ப நாளாச்சு இந்தப் பாட்டைப் பாடி. கல்லூரியில படிக்கிறப்ப இந்தப் படம் வந்துச்சு. அப்ப மூணு நண்பர்களோட கலசலிங்கத்துல இருந்து சிவகாசிக்குப் போயி இந்தப் படத்தைப் பாத்தேன். இன்னும் அந்த ஒத்தை ரோசாப்பூவு கண்ணுக்கு முன்னாஅல நிக்குது. இப்ப அண்மையில இந்தப் படத்தோட பாட்டுகளை உன்குழல்ல பாத்தப்ப ஐய இந்த மூஞ்சி பாக்க சகிக்கலையேன்னு தோணிச்சு. ஆனா அந்தக் காலத்துல இடம் பொருள் ஏவல் எல்லாம் எங்க தெரிஞ்சது? எங்க பள்ளிக்கூட வாத்தியார் சொல்ற மாதிரி 'வத்தலோ தொத்தலோ **** போதும்'ங்கற மாதிரி தானே கண்ணும் கருத்தும் இருந்துச்சு.
அது ஒரு கனாக்காலம்ன்னு சொல்ல மனசு வரலை. இப்பவும் கனாக்காலத்துல தானே இருக்கோம். அந்தக் காலத்தை நினைச்சுப் பெருசா மூச்சு விடணுமா என்ன?
வெள்ளைவெளேர்ன்னு பெருசா காலணியைப் போட்டுக்கிட்டு பிரபுதேவா ஆடுனது இந்தப் பாட்டுல தானே? இந்த பாட்டு தான் அவருக்கு அறிமுகம்; இல்லை? நல்லா வளைஞ்சு வளைஞ்சு ஆடுவார். கல்லூரி விடுதி தொல்லைக்காட்சியில ஒளியும் ஒலியும் பாக்குறப்ப அந்த வளைஞ்சு நெளிஞ்ச ஆட்டத்தை ஈ உள்ள போறது கூட தெரியாம வாயத் திறந்து வச்சுக்கிட்டு பாத்தது நினைவிருக்கு. இப்பவும் விஜய் டீவியில புத்தம்புது மெட்டுக்கள்ல இளசுங்க வந்து ஆடறதை அப்படித் தானே பாக்குறீங்கன்னு இங்கண இடிக்கிறாங்க. ஒத்தை ரோசாப்பூவைக் கவனத்துல வச்ச காலத்துல இருந்து இப்ப ரொம்ம்ம்ம்ப முன்னேறி இத்தனூண்டு துணி கட்டியிருக்காங்களே அவுந்துருமோன்னு ஒரு கவனத்துல வச்ச கண்ணு வாங்காம பாக்குறோம்னு இவங்களுக்குத் தெரியுமா என்ன? நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைன்னு சிவகுமாரகுமாரன் கிடாரை எடுத்துக்கிட்டு வந்தாலோ எப்படி இருந்த எம்மனசு இப்படி மாறி போகிறதுன்னு வெற்றி ரவி வந்தாலோ இவங்க நல்லா வாய மூடிக்கிட்டு வச்ச கண்ணு வாங்காம பாக்குறது எங்களுக்குத் தெரியாதா என்ன?
என்னத்தையோ சொல்லத் தொடங்கி வேற என்னமோ பேசிகிட்டு இருக்கேன். இப்ப எதுக்கு இந்தப் பாட்டு நினைவுக்கு வந்துச்சு? வேற ஒன்னுமில்லைங்க. இந்தப் பட்டாம்பூச்சி வட்டாம்பூச்சின்னு ஒரு விருது வட்டமடிச்சுக்கிட்டு இருக்குல்ல; அதை பட்டர்பிரான் கோதையோட தோழர்பிரான் வன்தொண்டர் கண்ணபிரான் இரவிசங்கர் நமக்கு குடுத்திருக்காரு. இந்த வலைப்பின்னல் பதிவுகளை (நன்றி - பழமையைப் பேசுறவர்) நேரத்தோட எழுதித் தள்ளுறதுங்கறது இந்தத் தள்ளாத காலத்துல முடியுதுங்களா என்ன? தொடக்கக் காலத்துல நாளுக்கு குறைஞ்சது ஒன்னுன்னு இடுகை போட்ட காலம் எல்லாம் போயாச்சு. இப்ப குழந்தை குட்டிங்கன்னு வந்து மூத்தப் பதிவர் ஆகி ஒன்னும் எழுதுறதில்லை. வாரத்துக்கு ஒன்னாவது எழுதணும்ன்னு நினைச்சுக்கிட்டு இன்னைக்கி இதை எழுத ஒக்காந்தாச்சு.
சரி விருது குடுத்தவங்களுக்கு நன்றி சொல்லிட்டு அடுத்த வேலையைப் பாக்க வேண்டியது தான? அப்படியே செஞ்சுறலாம். அடுத்த வேலை அடுத்தவங்களுக்கு விருது குடுக்குறது தானே. இந்தாங்கப்பா... கண்ணபிரான் இரவிசங்கர், இராகவப்பெருமாள் ஜிரா கோரா, இலவசக் கொத்ஸ், எல்லோருக்கும் நல்லவர்/கெட்டவர் கோவிக்கண்ணன்,..."
"நிறுத்து நிறுத்து"
"என்னாத்துக்கு நிறுத்தணும்? இவிங்கள்லாம் யாருன்னு தெரியுமா? இவிங்களுக்கு விருது குடுக்காம வேற யாருக்கு குடுக்குறது?"
"எதுக்கு இவிங்களுக்கு விருது குடுக்கணும்?"
"கண்ணபிரான் இரவிசங்கரைப் பத்தி தனியா வேற சொல்லணுமா? ஒங்களுக்கே தெரியாதா?"
"நல்லா தெரியும். கேஆரெஸ்ஸூ வாரத்துக்கு ஒரு குண்டு போடறாரு. ஆனா இந்த ஜீரா ஒன்னுமே எழுதுறதில்லையே. அவருக்கு எதுக்கு விருது?"
"ஆமாம் தான். அவரு ஒன்னும் எழுதுறதில்லை தான். கள்ளியில பாலு கள்ளியில பாலுன்னு இன்னும் பொலம்பிக்கிட்டு தான் இருக்காரு. ஆனா எப்பவோ அவரு எழுதுனதெல்லாம் இன்னும் கண்ணுலயும் காதுலையும் சுத்துதே. அதுக்குத் தேன் அவருக்கு விருது"
"சரி தான். கொத்தனாருக்கு எதுக்கு விருது?"
"ஏனுங்க அவருக்கு என்ன கொறை? மாசத்துக்கு ஒரு தடவை குறுக்கெழுத்து ரீபஸ்ன்னு ஏதோ ஒரு போட்டி வைக்கிறாரே. அப்ப அப்ப பொதசெவிம்பாரு தேன். ஆனா அதுக்கு யாராச்சும் காப்பி ரைட்டுன்னு சொல்லிக்கிட்டு சண்டைக்கு வந்திருக்காய்ங்களா? இல்லியே. அதுனால அவருக்கு இந்த விருது குடுக்கலாம்"
"கோவி.கண்ணன்?"
"ஆகா. அவரைப் பத்தியும் தனியா சொல்லணுமா? கண்ணபிரான் இரவிசங்கரைப் போல இவரும் மகாஞானியாச்சே."
"மகாஞானியா? என்னப்பூ சொல்றீங்க?"
"ஆமாமுங்க. அவரைப் பின்பத்துறவங்க பட்டியலைப் பாத்தாலே தெரியலையா? அவரு ஒரு மகாஞானின்னு"
"ஏனுங்க அவரை திரும்பத் திரும்ப மகாஞானின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க? அவரு மேல பொறாமையா?"
"இப்புடி வெளிப்படையா சொல்லுவாய்ங்க. அதெல்லாம் இல்லீங்க. அவரு ஒரு பேரறிஞர் தானுங்க. அதைத் தேன் மகாஞானின்னு சொல்றேன்"
"அட விடுங்கப்பா. இதெல்லாம் பேசிக்கிட்டு. இவங்களுக்கு எல்லாம் ஏற்கனவே விருது குடுத்தாச்சு. அதனால தான் வேணாம்ன்னு சொல்றோம்ன்னு சொல்லுங்க"
"என்ன இவங்கள்லாம் ஏற்கனவே விருது வாங்கிட்டாங்களா? சொல்லவே இல்லை? நல்ல வேளை இப்பவாச்சும் சொன்னீங்க. அதுவும் இந்த கண்ணபிரான் இரவிசங்கர் இருக்காரே அவருக்கு ஒன்னுக்கு ரெண்டா விருது குடுக்கவே கூடாது; ரொம்பவே ஆடுவார். கேட்டா எங்க அக்கா ஆடச்சொன்னாங்கன்னு பழிய மதுரைக்குத் தெக்கால தள்ளிவிட்டிருவாரு. ரொம்ப சாக்கிரதையா இருக்கோணும் அவருக்கிட்ட.
இவிங்களை எல்லாம் விட்டுறலாம். இவிங்களை விட சிறப்பா இன்னும் நாலு பேரு இருக்காங்க. அவிங்களுக்கு இந்த விருதைக் குடுக்கலாம்.
1. கௌசிகர் தி.ரா.ச.
2. பெண்களூரு மதுரையம்பதி மௌலி
3. எழுத்தாளர் ஏகாம்பரியின் தோழி உஷார் ராமசந்திரன்உஷா
4. வண்ணப்படங்கள் கைலாஷி முருகானந்தம் ஐயா
***
பட்டாம் பூச்சி பறக்கும் முறை:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்
***
அட பாட்டைப் பத்தி ஒன்னும் சொல்லாம விட்டேனே. எங்க ஊருல அக்டோபர்ல இருந்து ஏப்ரல் வரைக்கும் பசுமை இல்லீங்கோ; மேயில இருந்து பசுமை வந்துரும். ஜூன் ஜூலையில ஊரெல்லாம் பச்சைபசேல்ன்னு இருக்கும்; கண்கொள்ளா காச்சிங்கோ. அதுவும் இந்த தீம் பார்க், வாட்டர் பார்க்கெல்லாம் போனீங்கன்னா இன்னும் அம்சமா இருக்கும்.
பட்டாம்பூச்சி விருதா? எந்த ஜென்மத்துப் பதிவுங்க இது? :))))
ReplyDelete//'வத்தலோ தொத்தலோ **** போதும்'//
Fill in the blanks எல்லாம் நீங்க தான் பண்ணனும்? நல்லா கதையா இருக்கே! :)
அடடா, இதென்ன மதுரைக்கு வந்த சோதனை....சரி, சரி...நீங்க எழுதின மாதிரி இன்னும் சில மாதங்கள்ள எழுதிடறேன்...
ReplyDeleteநன்றி குமரன்.
ஆமாம் இரவிசங்கர். புல்லாகிப் பூண்டாகி படிச்சீங்க இல்லை?! பல பிறவிகளா தொடர்ந்து வர்ற தொடர்புகள் தானே இணைய நட்புகளும். அதான் ஏதோ ஒரு பிறவியின் பதிவை இப்போது தொடர்கிறேன். :-)
ReplyDeleteநன்றி பெண்களூராரே. :-)
ReplyDeleteம் என் பதிவுகளைப் படிக்கலைன்னு தெரியுது, எனக்கு ஸ்வாமி ஓம்கார் விருது கொடுத்தார், நானும் பதிவு போட்டுவிட்டேன். அழைப்புக்கு நன்றி
ReplyDelete***
// 'வத்தலோ தொத்தலோ **** போதும்'ங்கற மாதிரி தானே கண்ணும் கருத்தும் இருந்துச்சு.
//
இது வட்டார வழக்கா ? எல்லா வட்டாரத்திலும் அதைப் பற்றி சொல்றாங்க :)
இடுகையைப் படிச்சா நீங்க எழுதியது தானான்னு ஐயமாக இருக்கு.
மேலோட்டமாகவாவது உங்க இடுகைகளை எல்லாம் படிக்கிறதுண்டு கோவி.கண்ணன். அது சும்மாங்காட்டி உங்களை வம்புக்கிழுக்கணும்ன்னு தோணுனதால அப்படி எழுதுனேன். எனக்கு இந்த வட்டாம்பூச்சியைக் குடுத்ததே ஆன்மிக இசுபிரீம் இசுடாரு தான்; அவரு பேரு தானே மொதல்ல போட்டிருக்கேன்.
ReplyDeleteபட்டாம்பூச்சி விருதுக்கும், விருதைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDelete//"இப்புடி வெளிப்படையா சொல்லுவாய்ங்க. அதெல்லாம் இல்லீங்க. அவரு ஒரு பேரறிஞர் தானுங்க. அதைத் தேன் மகாஞானின்னு சொல்றேன்//
ReplyDeleteஞானி, மகாஞானி, பேரறிஞர் - ஆகா என் பதிவை படிச்சிருக்கிங்க நன்றி நன்றி !
//இப்ப ரொம்ம்ம்ம்ப முன்னேறி இத்தனூண்டு துணி கட்டியிருக்காங்களே அவுந்துருமோன்னு ஒரு கவனத்துல வச்ச கண்ணு வாங்காம பாக்குறோம்னு இவங்களுக்குத் தெரியுமா என்ன?//
ReplyDeleteஇதுக்காகத் தான் பாக்குறீங்க-ன்னு எங்களுக்கே இப்பத் தான தெரியுது? அடா, அடா, அடா, என்னவொரு அக்கறை? :)))
// பட்டர்பிரான் கோதையோட தோழர்பிரான் வன்தொண்டர் கண்ணபிரான் இரவிசங்கர்//
ReplyDeleteவன்தொண்டரா? அடியேனா?
இது ஒங்களுக்கே அடுக்குமா?
மெளலி அண்ணனே வ"ண்" தொண்டர்-ன்னு தான் என்னைய கூப்புடுவாரு! :)
எழுத்துப் பிழை தானே பண்ணீங்க குமரன்? :))
//கேஆரெஸ்ஸூ வாரத்துக்கு ஒரு குண்டு போடறாரு//
என்னாது? குண்டா?
அடியேன் எறிவது வெடி குண்டு அல்ல! படி குண்டு! படித்துப் பாழ் மனதை இடி குண்டு!
நானே ஒல்லியா இருக்கேன்! என்னையப் போயி குண்டு-ன்னு சொல்லிட்டீங்களே! ஐயகோ! :((
//ஆனா இந்த ஜீரா ஒன்னுமே எழுதுறதில்லையே. அவருக்கு எதுக்கு விருது?//
என்ன ஆணவம்?
எங்கள் ஜிரா இது வரை எழுதியதற்கே இன்னும் விருது கொடுத்து முடியலை!
இனிமே எழுதறத்துக்கெல்லாம் விருது கொடுக்கணும்-ன்னா...நீங்க மேல் மூச்சு கீழ் மூச்சு தான் வாங்கணும்! தெரிஞ்சிக்கோங்க! :)
கள்ளி மே தூத் - இது ஒன்னே போதும்! முருகன் பாலாபிஷேகப் பதிவு! :)
//அவரு ஒரு பேரறிஞர் தானுங்க. அதைத் தேன் மகாஞானின்னு சொல்றேன்//
ReplyDeleteகோவி அண்ணே,
நீங்க ஞானியா? அறிவாளியா?
நல்லவரா? கெட்டவரா? :))
//அதுவும் இந்த கண்ணபிரான் இரவிசங்கர் இருக்காரே அவருக்கு ஒன்னுக்கு ரெண்டா விருது குடுக்கவே கூடாது;//
ReplyDeleteஅது மக்கள் கொடுத்தது!
மக்கள் தீர்ப்பே மாதவன் தீர்ப்பு! :)
//ரொம்பவே ஆடுவார்.//
ஆடல் காணீரோ? திருவிளை-ஆடல் காணீரோ? :)
//கேட்டா எங்க அக்கா ஆடச்சொன்னாங்கன்னு பழிய மதுரைக்குத் தெக்கால தள்ளிவிட்டிருவாரு//
யக்கா! மீனாட்சி! இதுக்கு நீயே சாட்சி!
கைலாஷி ஐயாவின் அளப்பரிய ஆர்வம், அவர் தரும் புகைப்படங்களிலேயே தெரிந்து விடும்! எந்தப் பிரதிபலனும் இன்றி, படங்களை அள்ளித் தரும் வள்ளல் அவர்!
ReplyDeleteஉஷாக்கா - ஆன்மீகப் பதிவர் கையால இருந்து எல்லாம் விருது வாங்குவாங்களா என்ன? :))
பொற்கிழி தான் வாங்குவாங்க!
மெளலி அண்ணா - விஷய ஞானமுள்ள பதிவுகளை கொட்டித் தருவதில் சமர்த்தர்! அதற்கான உழைப்பும் அவரிடம் உண்டு!
திராச ஐயா! - எங்கள் முருகனருள் வலைப்பூவின் கிருத்திகை நாட்காட்டி!
இசைப் பதிவுகள் இசையாதோ அவரிடம்!
தி.ரா.ச.
மௌலி
உஷாக்கா
கைலாஷி ஐயா-வுக்கு வாழ்த்துக்கள்!
நன்றி கீதாம்மா.
ReplyDeleteநன்றி திகழ்மிளிர்.
ReplyDeleteநன்றி இரவிசங்கர்.
ReplyDeleteஅடியேனையும் விருதுக்கு தேர்ந்தெடுத்ததற்கு மிக்க நன்றி குமரன் ஐயா.
ReplyDeleteஅத்துடன் ஒரு பொருப்பையும் கொடுத்துள்ளீர்கள் அதையும் அவன் அருளால் நிறைவேற்றுகின்றேன்.
//பல பிறவிகளா தொடர்ந்து வர்ற தொடர்புகள் தானே இணைய நட்புகளும்.//
அருமையாக சொன்னீர்கள் குமரன் ஐயா.
மேலும் வாழ்த்துக்கள் கூறிய கீதாம்மாவிற்கும், திகழ்மிளிர் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
//கைலாஷி ஐயாவின் அளப்பரிய ஆர்வம், அவர் தரும் புகைப்படங்களிலேயே தெரிந்து விடும்! //
மிக்க நன்றி KRS ஐயா,
பாரதி நம்க்குத்தொழில் கவிதை என்றது போல அடியேன் எனக்கு தொழில் படம் பிடித்தல் அதை பதிவிடல் என்று தான் கூற வேண்டும்.
எம்பெருமானின் திருவழகைக் காணும் போது இவ்வழகை உலகம் முழுவதும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உணர்வுதான் முந்துகின்றது. இது வரை பல தடவை இனி மேல் ப்டம் எடுக்க கூடாது சுவாமி தரிசனம் மட்டும் செய்தால் போதும் என்று கேமராவை வீட்டிலே வைத்து விட்டு சென்ற பிறகு ஐயனைன் அழகைக் கண்டபின் அய்யோ இவ்வழ்கை எவ்வாறு விடுவது என்று பின் திரும்பி வந்து கேமராவை எடுத்து சென்ற நாட்களும் உள்ளன.
தற்போது சைதை காரணீஸ்வரப் பெருமானின் சித்திரை பெருவிழாவை பதிவு செய்து கொண்டிருக்கிறேன்
http://natarajar.blogspot.com/2009/05/blog-post.html
அவசியம் சென்று தரிசிக்கவும். இன்னும் பல பதிவுகள் வரும் அவைகளையும் வந்து தரிசிக்கவும்.
நன்றி கைலாஷி ஐயா. பதிவெழுதிய பின்னர் சொல்லுங்கள்.
ReplyDeleteஐயா பதிவுகள் முடியப்போகின்றன சுமார் 15 பதிவுகள் உள்ளன சமயம் கிடைக்கும் போது சென்று தரிசனம் செய்யுங்கள்.
ReplyDeleteஐயா தாங்கள் அனுப்பிய பட்டாம் பூச்சியை மீண்டும் பறக்க விட்டுள்ளேன் மீண்டும் நன்றிகள் ஐயா.
ReplyDeleteயார் யார் விருது பெறுகிறார்கள் என்பதை அறிய செல்லுங்கள் விருது
அ.உ.ஆ.சூ. அவர்களுக்கும், அவரிடமிருந்து விருது பெற்றோருக்கும் வாழ்த்துகள் :)
ReplyDeleteநன்றி கவிநயா அக்கா.
ReplyDelete