Tuesday, November 04, 2008

அமெரிக்கத் தலைவர் ஒபாமா!!!


பராக் ஒபாமா அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றார். சி.என்.என். மற்றும் மற்ற செய்தி நிறுவனங்கள் ஒபாமாவை அடுத்த அமெரிக்கத் தலைவராக அறிவித்துவிட்டன. வெற்றிக்குத் தேவையான 270 எலெக்டோரல் வாக்குகளுக்கும் மேலாக 297 வாக்குகள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.

அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கன் அதிபருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!!

13 comments:

  1. //அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கன் அதிபருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!!//

    ஒபாமாவுக்கு வாழ்த்துகள் !

    இன வேற்றுமைகள் ஒழியட்டும் !

    இந்தியாவிற்கு ஒரு தலித் பிரதமர் கிடைக்கும் நாளும் வரட்டும் !

    ReplyDelete
  2. ப்ளோரிடாவும் ஒபாமாவுக்கே. மொத்தம் 323 எலக்டோரல் வாக்குகள். இனி மேல் எந்த ஐயமும் இல்லவே இல்லை. அமெரிக்கர்கள் நிறம் என்னும் பிரிவினையை மீறி ஒரு கருப்பரை தங்கள் தலைவராக, உலகத்தின் மிக வலிமையான மனிதராகத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்!!!

    ReplyDelete
  3. இங்கே லைவா ரிஸல்ட்டைக் காமிச்சுக்கிட்டு இருக்காங்க.

    ஒபாமா 306 இடங்கள்.

    புதுத் தலைவருக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  4. ஜான் மெக்கெயின் பராக் ஒபாமாவை தொலைப்பேசியில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டார். இப்போது தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் தனது தோல்வியைப் பொதுவில் ஏற்றுக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  5. ஒபாமா பெற்ற மொத்த வாக்குகள்: 51% (43,892,371)
    மெக்கெய்ன் பெற்ற மொத்த வாக்குகள்: 48% (40,868,398)

    இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை.

    ReplyDelete
  6. இனியாவது அமெரிக்கா திருந்துகிறதா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  7. நேற்று மாலை என் மகள் சொன்னதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் மகளுக்கு ஆறு வயது. பள்ளியில் அவள் நண்பர்களுடன் பேசியதைச் சொன்னாள்.

    'பாபா. ஒபாமா ஜெவிஞ்சரியயா?" (அப்பா. ஒபாமா ஜெயிக்கிறாரா?)

    'அத்தெங்குடுஸ் கலாய். அங்குன் அமெரிக்காம் பூரா எலெக்சன் முசிரிய நீ:' (இனி மேல் தான் தெரியும். இன்னும் அமெரிக்கா முழுசும் தேர்தல் முடியவில்லை) 'தொகோ கோன் ப்ரஸிடென்ட் ஹொனோ?' (உனக்கு யார் அதிபர் ஆகவேண்டும்?)

    'ஒபாமா'

    'ககோ?' (ஏன்?)

    'ஒபாமாக் மொர ஏஜும் தீ பிள்ளல்னு சேத்த. ஜான் மெக்கெய்னுக் அவ்ர டீச்சர் சேரு ஒச்சும் பிள்ளல்னு சேத்த. தெகஹால்தி' (ஒபாமாவுக்கு என் வயசுல ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஜான் மெக்கெய்னுக்கு எங்க டீச்சர் வயசுல குழந்தைங்க இருக்காங்க. அதனால)

    :-)))

    She will be very happy to hear the news after getting up tomorrow morning...

    ReplyDelete
  8. //ஒபாமாவுக்கு என் வயசுல ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஜான் மெக்கெய்னுக்கு எங்க டீச்சர் வயசுல குழந்தைங்க இருக்காங்க//

    சிவக்கொழுந்து! நீ எங்கயோ போயிட்டம்மா! :)))

    ReplyDelete
  9. ஓபாமாவின் வெற்றி மக்களாட்சியின் வெற்றி!

    புதிய அதிபர் அடுத்த ஆண்டு தான் பொறுப்பேற்கப் போகிறார்.
    அதற்குள் பொருளாதாரச் சிக்கல் பற்றிய வீட்டுப் பாடம் எல்லாம் நல்லாச் செய்யட்டும்! வந்தவுடன் அசத்தலா வரணும்!

    டீச்சர்-வீட்டுப் பாடம் கொடுங்க ஓபாமாவுக்கு! :)

    ReplyDelete
  10. //இந்தியாவிற்கு ஒரு தலித் பிரதமர் கிடைக்கும் நாளும் வரட்டும் !//

    ததாஸ்து!
    அப்படியே ஆகட்டும்!
    ஆமென்!
    ஸோ பி இட்!

    ReplyDelete
  11. //இந்தியாவிற்கு ஒரு தலித் பிரதமர் கிடைக்கும் நாளும் வரட்டும் !//

    அப்படி வந்தா மட்டுமென்ன இந்திய வல்லரசாகி பொருளாதாரத்தில் மேல வந்திருமா. ஊழல் பண்ணாத, பண்ணுவதை விரும்பாதவர் எவர் பிரதமர் ஆனாலும் சரி. அது தலித்தாக இருந்தாலும் சரி பார்பணாக இருந்தாலும் சரி

    ReplyDelete
  12. மேலே கூறியது என்னுடைய தனிப்பட்ட கருத்து. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

    ReplyDelete
  13. //ஒபாமாவுக்கு என் வயசுல ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஜான் மெக்கெய்னுக்கு எங்க டீச்சர் வயசுல குழந்தைங்க இருக்காங்க//

    சூப்பர் :) குட்டி பொண்ணுக்கு சுத்திப் போடுங்க :)

    ReplyDelete