Thursday, October 30, 2008

சத்தம் இல்லாமல் ஒரு சாதனை!!!

தீபாவளிக்கு முதல் நாள் தங்க விற்பனை மட்டுமா இன்னொன்றும் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது. தீபாவளிக்கு முந்தைய நாளில் தங்க விற்பனை சென்ற ஆண்டை விட 50 % உயர்ந்ததாக உலக தங்க கவுன்சில் சொல்லியிருக்கிறது. சத்தமே இல்லாமல் இன்னொரு சாதனையும் இந்த தீபாவளியின் போது நடந்திருக்கிறது.

தீபாவளிக்கு முந்தைய நாளில் தமிழ்நாட்டில் இருக்கும் 6700 டாஸ்மாக் கடைகளிலும் மொத்த விற்பனை 100 கோடியைத் தாண்டியதாம். தீபாவளி அன்றும் அதே அளவிற்கு விற்பனை நடந்ததாம். தினந்தோறும் ஏறக்குறைய 50 முதல் 60 கோடி ரூபாய் வரை விற்பனை நடக்கிறது.

தகவல் நன்றி: மின் தமிழ் குழுமத்தில் திரு. ஏ. சுகுமாரன்.

No comments:

Post a Comment