Tuesday, September 09, 2008

உலகத்தின் கடைசி நாளா இன்று?

இதை நான் சொல்லவில்லை. அறிவியலாளர்கள் சொல்லுகிறார்கள். செர்னில் செப்டம்பர் 10ம் தேதி நடக்கும் பரிசோதனையில் கருந்துளைகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதால் நாளை உலகம் அழிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். மேலும் படிக்க

28 comments:

  1. இது முதல் பின்னூட்டம் இல்லை!
    கடைசிப் பின்னூட்டம்-ன்னு சொல்றீங்களா? :)))

    அச்சோ...இன்னும் சரணாகதிப் பதிவு ரெண்டு மூணு பாக்கி இருக்கே குமரன்? ரோமாயணம் வேறக் கீது :)

    ReplyDelete
  2. தினத் தந்தி தலைப்பு மாதிரி குடுக்கறீங்க? உலகமாவது அழியறதாவது!! (I mean இப்போதைக்கு இல்லை :)

    ReplyDelete
  3. இன்னும் நாள் இருக்கிறதாம்

    http://www.youtube.com/watch?v=11iCmzGnOI8

    :)

    ReplyDelete
  4. எனக்கும் அப்படித் தான் தோன்றியது இரவிசங்கர். இன்னும் இடவேண்டிய இடுகைகள் நிறைய இருக்கின்றதே. அதற்குள் உலகம் அழிந்துவிடுமோ என்று. பார்க்கலாம். நாளைக்காலை வரை பிழைத்துக்கிடந்தால் இடுகைகளை இடுவோம்; படிப்போம். :-)

    எல்லாம் அவன் செயல். :-)

    ReplyDelete
  5. அவ்வளவு நம்பிக்கையோட இருக்கீங்களா கவிநயா அக்கா. அப்ப சரி. :-)

    ReplyDelete
  6. நீங்க சொல்றது வேற கோவி.கண்ணன். அதையும் பார்த்தேன். :-)

    ReplyDelete
  7. இன்னும் உலகத்தையே அழிக்கக் கூடிய அளவுக்கு மனிதர்கள் பாவம் செய்துவிடவில்லை என்று கடவுள் பொறுமையாக இருக்கிறார்!

    ஆனா சீக்கிரமே அழிச்சிடுவார் (மே பி 2009)

    ReplyDelete
  8. என்ன சிபி ஜோசியமா? கோவி.கண்ணன் பதிவு பக்கம் போகலையா? உங்களையும் ஒரு வகை சோதிடர்ன்னு போட்டு வறுத்தெடுக்கப் போறாரு. :-)

    ReplyDelete
  9. அண்ணா,
    //கருந்துளைகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதால் நாளை உலகம் அழிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.//

    எந்த உலகம்ன்னு சரியா சொல்ல மறந்துட்டாங்களோன்னு தோணுது.

    பல பால்வெளிகள் கொண்ட அண்டத்தில் எத்தனை எத்தனையோ உலகங்கள் இருக்கலாம், அவற்றில் ஏதேனும் ஒன்று அழியலாம்! :-). நம் உலகிற்க்கு இன்னும் பல லட்சம் ஆண்டுகள் உண்டு.
    (4,32,000 - கலியுக கணக்கு, அதில் வெறும் 5208ஆண்டுகளே முடிந்துள்ளன, ஆக இன்னும் 4,26,792 ஆண்டுகள் உள்ளன).

    ReplyDelete
  10. அச்சச்சோ.. நான் பெங்களூர் வந்தடில இருந்து இன்னும் கிருஷ்ணா கஃபேல கூட சாப்புடலயே.. முதல்ல போய் நல்லா சாப்புடணும். இன்னும் குசேலன் படம் வேற பாக்கல..

    ReplyDelete
  11. உலகம் அழிவதற்கு முன்னாடி உங்களுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன்.

    ஹை.. ஜாலி

    ReplyDelete
  12. உலகம் அழிவதற்கு முன்னாடி உங்களுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன்.

    ஹை.. ஜாலி

    ReplyDelete
  13. ராகவ் : இன்னும் குசேலன் படம் வேற பாக்கல..// உலகம் அழியுற வரைக்கும் காத்திருங்க, அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி?

    ReplyDelete
  14. குமரன்,
    மங்களம் சுப மங்களம் ஆகிவிட்டது போல இருகே, ஒண்ணும் நடக்கலையாம். ம் நாம பதிவு எழுதுகிற பொழப்பை பார்ப்போம் !

    //குமரன் (Kumaran) said...
    நீங்க சொல்றது வேற கோவி.கண்ணன். அதையும் பார்த்தேன். :-)
    //

    நீங்களெல்லாம் மூட நம்பிக்கைக் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது, கண்டுகொள்ளக் கூடாது என்று எதேனும் சபதமோ, சங்கல்பமோ வைத்திருக்கிறீர்களா ?
    புதசெவி.

    ReplyDelete
  15. குமரன்,
    மங்களம் சுப மங்களம் ஆகிவிட்டது போல இருகே, ஒண்ணும் நடக்கலையாம். ம் நாம பதிவு எழுதுகிற பொழப்பை பார்ப்போம் !

    //
    குமரன் (Kumaran) said...
    என்ன சிபி ஜோசியமா? கோவி.கண்ணன் பதிவு பக்கம் போகலையா? உங்களையும் ஒரு வகை சோதிடர்ன்னு போட்டு வறுத்தெடுக்கப் போறாரு. :-)

    //

    நீங்களெல்லாம் மூட நம்பிக்கைக் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது, கண்டுகொள்ளக் கூடாது என்று எதேனும் சபதமோ, சங்கல்பமோ வைத்திருக்கிறீர்களா ?
    புதசெவி.

    ReplyDelete
  16. இன்று கடைசி நாளா..

    கடவுளே.. என்னைக் காப்...
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    ReplyDelete
  17. சிவமுருகன்.

    நம்ம உலகத்துல இந்த பரிசோதனை நடக்குறதால இந்த உலகத்தைத் தான் சொல்றாங்க. அண்டத்தில இருக்கிற பலகோடி உலகங்கள்ல ஒன்னைச் சொல்லலை.

    கலியுகக் கணக்கெல்லாம் சொல்றீங்க. அதெல்லாம் மிகச் சரியா இருக்குன்னு நினைக்கிறதா தோணுது. எனக்கென்னவோ ஒவ்வொரு புராணத்துலயும் ஒவ்வொரு கணக்கு சொல்ற மாதிரி ஒரு உணர்வு. :-)

    ReplyDelete
  18. குசேலன் பார்க்காட்டியும் பரவாயில்லை. முதல்ல கிருஷ்ணா கபேல போய் சாப்புடுங்க இராகவ். :-)

    ReplyDelete
  19. வாங்க Sharepoint the Great . என்ன Sharepointக்கு விளம்பரமா உங்க பேரு? :-) ரெண்டு தடவை வேற பின்னூட்டம் போட்டிருக்கீங்க? :-)

    ReplyDelete
  20. தாமிரா, என்ன சொல்றீங்க? உலகம் அழிஞ்சாலும் தலைவர் படம் மட்டும் அழியாதுன்னு சொல்றீங்களா? :-)

    ReplyDelete
  21. குமரன் (Kumaran) said...
    தாமிரா, என்ன சொல்றீங்க? உலகம் அழிஞ்சாலும் தலைவர் படம் மட்டும் அழியாதுன்னு சொல்றீங்களா? :‍)///

    யோவ்.. ன்னா வெளாடுறீங்களா? நாம போம்போது அவரை கூட்டிட்டு போலாமே, முன்னாடியே படத்தப்பாத்து தனியாப்போயிடப்படாதேனு ஒரு நல்லெண்னத்துல சொல்லவந்தா.?

    ReplyDelete
  22. கோவி.கண்ணன். ஒன்னும் நடக்கலையாம்ன்னா என்ன பொருள்? பரிசோதனையே நடக்கலை இன்னும்ன்னு சொல்றாங்க - அதை சொல்றீங்களா? இல்லை பரிசோதனை நடந்தும் ஒன்னும் நடக்கலைன்னு சொல்றீங்களா? :-)

    மூட நம்பிக்கைகள் தானே - அவற்றைப் பற்றி தான் நிறைய எழுதுகிறேனே கூடலில். பார்க்கவில்லையா? ஒரு வேளை நீங்கள் மூட நம்பிக்கைகள் என்று நினைப்பதைப் பற்றி நான் எதுவும் எழுதுவதில்லையோ? :-)

    சபதமும் சங்கல்பமும் (சொல் ஒரு சொல்லின் வீச்சு குறைந்துவிட்டதா என்ன? வடசொற்கள் ஓங்கி ஒலிக்கின்றனவே?) எதுவும் இல்லை. எதைப் பற்றி பேசுவது, எதைப் பற்றி பேசாமல் இருப்பது என்று அந்த அந்த நொடியில் தீர்மானித்து அப்படியே செய்கிறேன். அவ்வளவு தான். பேசுவதாலோ பேசாமல் இருப்பதாலோ என் சார்பு நிலைகள் மாறவில்லை; மூட நம்பிக்கைகளுக்கு ஆதரவும் இல்லை.

    ReplyDelete
  23. பரிசல்காரரே. இது என்ன கவிதையா? :-)

    ரெண்டு வரியில் நிறைய சொல்லும் முயற்சி போல் தெரிகிறதே. :-)

    ReplyDelete
  24. தாமிரா. நீங்களும் இராகவனும் நண்பர்கள் என்ற வரையில் தான் எனக்குப் புரிகிறது. அவ்வளவு தான். :-)

    ReplyDelete
  25. ம்ம் அழியப்போகுதுனு தெரிஞசதும் இவ்வாருத்தர் பாடும் சூப்பராதா இருக்கு.
    என்ன, இந்த கூத்த பாக்காம நானும் போயிடுவனோனுதா கவலை
    ஹிஹி

    ReplyDelete
  26. //சபதமும் சங்கல்பமும்//

    ஆணை, எண்ணேற்றல் சரியா ?
    ஆணை - இதை சபதம் என்பதற்கும் பயன்படுத்துவார்கள், உத்தரவு, சத்தியம், என்பதற்கும் பயன்படுத்துவார்கள்.

    நான் ஆணையிட்டு கூறுகிறேன், துரியோதனா... உன் தொடையைக் கிழித்து உன்னை கொல்வேன் - பீமனின் ஆணை.

    அரசு ஆணை
    அன்னையின் ஆணை

    சங்கல்பம் - எண்ணேற்றல், செயல்பாட்டிற்கான வடிவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொள்ளுதல்.

    உங்களுக்கு வடமொழி தெரிவதால் சரியான பொருள் புரியும். சில வேளைகளில் சொல்வதை சரியாகச் சொல்வதற்கு பழகத்தின் காரணமான இயல்பு என்பதால் வடமொழியில் சொல்லிவிடுகிறேன். மற்றபடி வீச்சு குறைவதாக நான் கருதவில்லை.

    ReplyDelete
  27. கோவி.கண்ணன்

    சபதம் என்ற சொல் வடசொல்லைப் போல் தோற்றமளிக்கிறது; ஆனால் வடசொல் இல்லை என்றே நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. மாற்றுச்சொல் வேண்டுமென்றால் சூளுரை, சூள், நீண்மொழி என்பவற்றைச் சொல்லலாம். நீண்மொழி என்று மலைபடுகடாம் என்னும் சங்க நூலில் இருக்கிறது; இப்போது கடினமான சொல்லாகத் தோன்றலாம். சூள், சூளுரை என்றால் இன்றைக்கும் நிறைய பேருக்குப் புரியுமே.

    ஆணை என்பதை உத்தரவு, சத்தியம் இவற்றிற்குப் புழங்குவதே சரி என்று நினைக்கிறேன். சபதம் என்பதற்கும் சில இடங்களில் புழங்கியிருப்பதைப் போல் தோன்றும் - ஆனால் கொஞ்சம் இறங்கிப் பார்த்தால் அது வெறும் தோற்றம் மட்டுமே என்று புரிந்துவிடும். பாஞ்சாலி சபதத்தில் பாரதி 'ஆணை' என்ற சொல்லைச் சொல்லியே பாஞ்சால் சபதம் ஏற்கிறாள் என்று காட்டுவார். ஆனால் அங்கும் ஆணை என்ற சொல் 'பராசக்தியின் மேல் சத்தியமாகக் கூறுகிறேன்' என்ற பொருளில் தான் புழங்கியிருக்கும்.

    நீங்கள் சொன்ன பீமனின் சபதத்திலும் வரும் 'ஆணை' என்பது சத்தியமாக என்ற பொருளில் தான் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

    சங்கல்பம் என்பதற்கும் இன்னொரு எளிதான சொல் இருக்கிறது - உறுதிப்பாடு. அதுவும் கடினமாகத் தோன்றினால் - தீர்மானம்.

    என் வடமொழி அறிவெல்லாம் வெறும் கேள்வி ஞானம் தான். :-)

    ReplyDelete
  28. //சங்கல்பம் என்பதற்கும் இன்னொரு எளிதான சொல் இருக்கிறது - உறுதிப்பாடு. அதுவும் கடினமாகத் தோன்றினால் - தீர்மானம். //

    ஓரளவு சரியென்றாலும் முற்றிலும் பொருந்தி வரவில்லை. But
    I will keep it in Mind ! :)

    ReplyDelete