விண்மீன் வாரக் கடைசி நாளில் அந்த வாரத்தில் வந்த இடுகைகளில் எது பிடித்தது என்று அன்பர்களிடம் கேட்டிருந்தேன். அன்பர்களும் வாக்களித்து தங்கள் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். சென்ற வாரமே வாக்குகளைத் தரும் நாள் முடிந்திருந்தாலும் வழக்கமான காரணங்களால் இன்று தான் அவற்றைப் பற்றி எழுத நேரம் வாய்த்தது.
மொத்தம் 34 வாக்குகள் வந்திருக்கின்றன. 'எதுவுமே பிடிக்கவில்லை' என்றொரு வேட்பையும் வைத்திருந்தேன். அந்த வேட்பில் மூன்று வாக்குகள் விழுந்திருக்கின்றன. 34 வாக்குகளில் மூன்றே வாக்குகள் மட்டுமே அந்தக் கருத்தைச் சொன்னதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தான். :-) மற்றவர்கள் பேசாமல் சென்று விட்டார்கள் என்று நினைக்கிறேன். :-)
இராம.கி. ஐயா, டோண்டு ஐயா, துளசியக்கா, சிந்தாநதி வரிசையில் நானா? 8 (23%)
இந்த வார முன்னோட்டம்: எதிர்பார்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன! 5 (14%)
வெண்மதி வெண்மதியே நில்லு... 7 (20%)
இராமனா கிருஷ்ணனா யார் கருணை வேண்டும்? 13 (38%)
தமிழா? ஆரியமா? 17 (50%)
அகலிகைக் கதை சங்க இலக்கியத்திலா? வாய்ப்பே இல்லை! 21 (61%)
நான் தோமா கிறித்தவன் ஆகப் போகிறேன்!!! 9 (26%)
தமிழ் இறைவனுக்கும் முன்னால்... 16 (47%)
கண்ணன் என்னும் கருநிறக் கடவுள் 19 (55%)
எங்கள் அபிராமி தரிசனம் காண வாரீரே! (அபிராமி அந்தாதி நிறைவு) 19 (55%)
இயற்கைக் குணம்? 15 (44%)
பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரைகள் தேவையா? 18 (52%)
எதுவுமே பிடிக்கவில்லை!!!!! :-)) 3 (8%)
Votes so far: 34
Poll closed
மொத்தத்தில் என்னுடைய அடிப்படை வலிமைகளாக நான் எண்ணிக் கொள்ளும் இலக்கியமும் ஆன்மிகமுமே மிகுதியான வாக்குகள் பெற்றிருப்பது அவற்றையே தொடர்ந்து இனிமேலும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.
தொடக்கத்தில் அபிராமி அந்தாதி நிறைவிற்காக நண்பர் இரவிசங்கர் எழுதித் தந்த இடுகைக்கு கூடுதலான வாக்குகள் இருந்தன. ஒரு நேரத்தில் அந்த வேட்பையே நீக்கிவிடுமாறும் இரவிசங்கர் கூறினார். விண்மீன் வாரத்தில் வந்த எல்லா இடுகைகளைப் பற்றியும் தானே கேட்கிறேன்; அதனால் மிகுதியான வாக்குகள் உங்கள் இடுகைக்கே கிடைத்தால் அதில் ஒன்றும் தவறில்லை; கவலை வேண்டாம் என்று கூறிவிட்டேன். அதன் பின்னர் அவர் ஏதோ சதி வேலை செய்துவிட்டார் என்று நினைக்கிறேன். அதற்குப் பின்னர் வந்த வாக்குகள் அகலிகைக் கதை இடுகையையும் கண்ணன் என்னும் கருநிறக் கடவுள் இடுகையையும் மெச்சத் தொடங்கிவிட்டன. நண்பர்களுக்குத் தனி மடலில் அவர் ஏதேனும் வேண்டுகோளை வைத்திருந்தார் என்றால் தேர்தல் அதிகாரியான என்னிடம் தெரியப்படுத்துங்கள். செல்லாத வாக்குகளை நீக்கிவிடலாம். :-)
தற்போது இருக்கும் வாக்குகளின் அடிப்படையில் 'அகலிகைக் கதை' இடுகை 21 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. 19 வாக்குகள் பெற்று அபிராமி அந்தாதி நிறைவு இடுகையும் கண்ணன் என்னும் கருநிறக்கடவுள் இடுகையும் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றன. 18 வாக்குகள் பெற்று பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரைகள் தேவையா என்ற இடுகை மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.
இந்த இடுகைகளைப் பிடிக்கும் என்று வாக்களித்தவர்கள் ஏன் அவை பிடித்தது, அவற்றில் எந்தப் பகுதி பிடித்தது, அவற்றை எந்த வகையில் இன்னும் சுவையாக எழுதலாம் என்று சொன்னீர்கள் என்றால் மிக மகிழ்வேன்.
அடுத்த மூன்று இடங்களை மீள்பதிவுகள் பெற்றிருக்கின்றன. நல்ல இடுகைகள் என்று நான் எண்ணுபவை நண்பர்களுக்கும் பிடிக்கிறது என்பதை இது காட்டுகின்றது என்று நினைக்கிறேன். மகிழ்ச்சி.
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஆனால் சொல்லுவதற்கு கருத்துகள் இருக்கின்றது என்று எண்ணுபவர்களும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளிப்படையாகச் சொல்லுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete//மொத்தத்தில் என்னுடைய அடிப்படை வலிமைகளாக நான் எண்ணிக் கொள்ளும் இலக்கியமும் ஆன்மிகமுமே மிகுதியான வாக்குகள் பெற்றிருப்பது அவற்றையே தொடர்ந்து இனிமேலும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.//
ReplyDeleteஇவ்ளோ கஷ்டப்பட்டு வாக்கெல்லாம் எடுக்காமயே நானே இதை சொல்லியிருப்பேனே :) கண்ணன்ட்ட இருந்து எனக்கெல்லாம் தனிமடல் வரலப்பா...
முதலில் உண்மையாக எனக்கு பிடித்த இடுகைக்களுக்கு ஓட்டளித்தேன்...அப்பறமா கள்ள ஓட்டும் போட்டேன்னு மட்டும் சொல்லிக்கறேன். :)
ReplyDelete//இவ்ளோ கஷ்டப்பட்டு வாக்கெல்லாம் எடுக்காமயே நானே இதை சொல்லியிருப்பேனே :) //
ReplyDeleteயக்கா...கையைக் கொடுங்க!
சும்மா நச்-னு ஒரு பின்னூட்டம்! :)
//அப்பறமா கள்ள ஓட்டும் போட்டேன்னு மட்டும் சொல்லிக்கறேன். :)//
ReplyDeleteஅலோ...
மதுரை மெளலி அண்ணா! கள்ளழகர் ஒங்க ஊரு-ன்னா கள்ள ஓட்டா?
சரி சரி...பாதி உண்மையைச் சொன்னீங்க! மீதி உண்மையையும் சொல்லிருங்க!
இல்லீன்னா அடியேன் தான் model code of conduct மீறிட்டேன்-னு கமிஷன் அனுப்புவாரு குமரன்! :)
// நண்பர்களுக்குத் தனி மடலில் அவர் ஏதேனும் வேண்டுகோளை வைத்திருந்தார்// -ன்னு அதிகாரி கேக்குறாரு பாருங்க!
இவையே என் வரிசை:
ReplyDelete1. அகலிகைக் கதை சங்க இலக்கியத்திலா? வாய்ப்பே இல்லை!
2. இயற்கைக் குணம்?
3. தமிழ் இறைவனுக்கும் முன்னால்...
4. நான் தோமா கிறித்தவன் ஆகப் போகிறேன்!!!
5. தமிழா? ஆரியமா?
ஆறுதல் பரிசு :)
எங்கள் அபிராமி தரிசனம் காண வாரீரே! (அபிராமி அந்தாதி நிறைவு)
அது தான் தெரியுமேன்னு ஒரு பழைய திரைப்பட நகைச்சுவை காட்சியிலே வருமே அதப்போல சொல்லிட்டீங்க கவிக்கா. :-)
ReplyDeleteஎனக்கும் தெரியும் தான். ஆனாலும் இப்படி ஒரு வாக்கெடுப்பு வச்சு உறுதி பண்ணிக்கிட்டா நல்லது தானே. அதனால தான். :-)
கண்ணன் ஆளப் பாத்து தான் தனி மடல் அனுப்புவார். நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு அவருக்குத் தான் தெரியுமே. :-)
மௌலி. கள்ள ஓட்டுலயும் உங்களுக்குப் பிடித்த இடுகைகளுக்குத் தான் வாக்களிச்சீங்க?
ReplyDeleteஉங்க வரிசைப்படி தான் வாக்களிச்சீங்களா இரவிசங்கர்? எத்தனை தடவை வாக்களிச்சீங்க? :-)
ReplyDeleteஏன் இந்த வரிசைன்னு சொல்ல முடியுமா?
குமரன், அனைத்து இடுகைகளும் எனக்கு பிடித்திருந்தது. கள்ள வோட்டு போட சொல்லி எனக்கு ஒரு கடுதாசியும் வரல.. வோட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்துருந்தா யோசிச்சுருப்பேன். :)
ReplyDeleteஆயிரம் ரூபாய் ரொம்ப குறைவாச்சே இராகவ். இரவிசங்கரை நீங்கள் இவ்வளவு குறைவாகவா எடைபோடுவது? லட்சக்கணக்கில் கேளுங்கள்; கொடுக்கப்படும். :-)
ReplyDelete