Monday, August 18, 2008

*நட்சத்திரம்* - இந்த வார முன்னோட்டம்: எதிர்பார்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

போன வாட்டி தமிழ்மண நாட்காட்டியா (விண்மீனா) இருந்தப்ப பல்சுவையா இடுகைகள் இட்டதா நினைவு. இந்தவாட்டியும் அப்படியே எழுதலாம்ன்னு ஆசை இருந்தாலும் போன தடவை மாதிரி தமிழ்மணமே கதின்னு இந்த வாரமும் இருந்தா கட்டாயம் மணமுறிவும் வேலை இழப்பும் நடக்கும்ங்கறதால கொஞ்சம் அடக்கித் தான் வாசிக்கணும்ன்னு நினைக்கிறேன். இந்த வாரம் தமிழ்மண நாட்காட்டி வாய்ப்பு கிடைக்கப் போகும் தகவல் போன வாரம் செவ்வாய் அன்னைக்குத் தான் தெரிஞ்சது. அதனால நிறைய ஆயத்தமும் செய்ய முடியலை. மேலோட்டமா ஒரு திட்டம் இருக்கு. அந்தத் திட்டத்தை இங்கே தர்றேன். அது படியே, அந்த வரிசையிலேயே இடுகைகள் வரும்ன்னு சொல்ல முடியாது.

1. 'கேட்டதில் பிடித்தது' தலைப்புல ஒரு திரைப்படப் பாட்டு.
2. பரிபாடலின் அறிமுகமா அந்த சங்க இலக்கியத் தொகுப்பில இருந்து சில பாடல் வரிகள்
3. சங்க இலக்கியத்தில் அகலிகைக் கதை
4. சௌராஷ்ட்ரப் பாடல் ஒன்று
5. கண்ணன் என்னும் கருநிறக் கடவுள்
6. பழந்தமிழ் ஆய்வு ஒன்று - இன்னும் இதுக்கு ஆராய்ச்சியைத் தொடங்கலை - அதனால தலைப்பு என்னன்னு இப்ப சொல்றதா இல்லை. :-)
7. சங்க இலக்கியத்தில் இராவணன்
8. மதுரையைப் பற்றி ஒரு இடுகை
9. சங்க இலக்கியத்தை உரையுடன் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
10. அபிராமி அந்தாதி நிறைவு - இரவிசங்கரின் சிறப்பு இடுகை

இந்தப் பட்டியலைப் பத்தி இரவிசங்கர்கிட்ட சொல்லாம இந்த வாரம் சங்க இலக்கிய வாரம்ன்னு மட்டும் சொன்னதுக்கு அவருடைய எதிர்பார்ப்புகள்ன்னு ஒரு பட்டியல் கொடுத்தாரு. அந்த பட்டியல் இதோ:

1. இயல் + இசை + நாடகம் = ஆய்ச்சியர் குரவை
2. சங்கப் புலவர்கள் - சிறு அறிமுகம்
3. சங்க இலக்கியத்தில் வெளிநாடுகளைப் பற்றிய குறிப்புகள்
4. சங்க இலக்கியத்தில் இருந்து சிறுகதைகள்
5. சங்க இலக்கியத்தில் காதலர் திருவிழா

இதுல ஒவ்வொன்னும் எழுத எனக்கு குறைஞ்சது ஒரு வாரமாவது ஆகும். அதனால இந்த வாரம் இந்தத் தலைப்புகள் கிடையாது. வருங்காலத்துல பார்க்கலாம். இந்தப் பட்டியலைப் பார்த்தா இரவிசங்கரோட வருங்கால இடுகைகளோட முன்னோட்டம் போலவும் இருக்கு.

இந்த வாரம் என்ன இடுகைகள் வரும்ன்னு உங்க எதிர்பார்ப்புகளையும் சொல்லுங்க. எல்லாத்தையும் நிறைவேத்த முடியாட்டியும் எதாவது சுளுவா இருந்தா அதனை இந்த வாரப் பட்டியல்ல சேர்த்துக்கறேன். :-)

30 comments:

  1. போட்டுக் கொடுத்தாச்சா?

    அடியேனைப் போட்டுக் கொடுக்கறதுன்னா, உங்களுக்கு மதுரை தாஜ் ஹோட்டல் பிரியாணி சாப்புடறாப் போல! :))

    ReplyDelete
  2. //சங்க இலக்கியத்தில் அகலிகைக் கதை//

    ஆவலுடன் அடியேன் காத்துள்ளேன்!

    //சங்க இலக்கியத்தில் இராவணன்//

    ஆவலுடன் பதிவுலகமே காத்துள்ளது! :))

    ReplyDelete
  3. //சங்க இலக்கியத்தில் இராவணன்//

    உங்கள் இராவணனுக்குப் போட்டியாக என் இராவணன் ஒருவன் வலம் வரப் போகிறான்!

    அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :))

    ReplyDelete
  4. நட்சத்திர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. என்னங்க குமரன் அண்ணா/ஐயா, சிறுகதை/கவிதை எல்லாம் ஒண்ணுமில்லையா...:)

    ReplyDelete
  6. ஒரு சந்தேகம்.

    //அபிராமி அந்தாதி நிறைவு - இரவிசங்கரின் சிறப்பு இடுகை //

    அவரோட இடுகையை எப்படி உங்க பட்டியல்ல சேர்க்கலாம்?

    ReplyDelete
  7. காமெடி போஸ்ட் போடுங்க!

    ReplyDelete
  8. ஆன்மிகப் பதிவுகளாகப் போட்டு தாக்கமல் பல்சுவைகளில் பதிவுகள் வருகிறதே !

    வெரி குட் ....!
    :)

    ReplyDelete
  9. எனக்கு தாஜ் ஹோட்டல் பிரியாணி அவ்வளவா பிடிக்காது இரவிசங்கர். :-) அம்சவல்லி, பாண்டியன் ஹோட்டல், தெருவோர கையேந்தி பவன்கள்ன்னு நிறைய பிடிச்ச இடங்கள் இருக்கு. :-)

    நீங்களும் இராவணனைப் பற்றி எழுதப் போறீங்களா? எங்கே? சிவன் பாட்டுலயா?

    ReplyDelete
  10. நன்றிகள் மங்களூர் சிவா.

    ReplyDelete
  11. மௌலி அண்ணா/ஐயா. சிறுகதை முயற்சி செய்றேன். கவிதை தான் முதல் இடுகையிலேயே போட்டாச்சே. :-)

    ReplyDelete
  12. அழகர்களைப் பற்றியும், அழகியை பற்றியும் எதிர்பார்க்கலாமா குமரன் ?

    ReplyDelete
  13. //நீங்களும் இராவணனைப் பற்றி எழுதப் போறீங்களா? எங்கே? சிவன் பாட்டுலயா?//

    வ.வா.சங்கத்துல போடலாமான்னு ரோசிச்சிக்கிட்டு இருக்கேன்! :)

    ReplyDelete
  14. //அவரோட இடுகையை எப்படி உங்க பட்டியல்ல சேர்க்கலாம்?//

    என்னங்க கவிநயா அக்கா இப்படி கேட்டுட்டீங்க. என்னோட நட்சத்திர வாரத்துக்கு நீங்க கண்ணன் மேல ஒரு காவடி பாட்டு எழுதிக் கொடுத்திருக்கீங்களே. அது கண்ணன் பாட்டுல இந்த வாரம் வரப்போகுதே. அதுவும் என் பட்டியல்ல இருக்கு தானே. :-)

    எல்லாம் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் தான். :-)

    ReplyDelete
  15. ஹிஹி. காமெடி போஸ்ட் வேணும்ன்னா நீங்க தான் எழுதித் தரணும் கொத்ஸ். என்னால முடிஞ்சதைத் தானே நான் செய்ய முடியும்? :-)

    ReplyDelete
  16. கோவி.கண்ணன். அவக்கரப்படாதீங்க. பல்சுவைகளில் இடுகைகள் இருந்தாலும் ஒவ்வொன்னும் பாதி ஆன்மிகமாகத் தான் இருக்கும். :-) மனிதன் பாதி மிருகம் பாதி மாதிரி. :-)

    ReplyDelete
  17. எப்பவுமே அழகர்களைப் பத்தியும் அழகிகளைப் பற்றியும் தானே எழுதிக் கொண்டிருக்கிறேன் இராகவ். இந்த வாரத்திலுமா? :-)

    கட்டாயம் அவர்களைப் பற்றி உண்டு இராகவ். கோவி.கண்ணனுக்குச் சொன்ன பதிலைப் பாருங்கள்.

    ReplyDelete
  18. சரி சரி. வ.வா.ச.வுல விரைவா அந்த இடுகையைப் போடுங்க இரவிசங்கர்.

    ReplyDelete
  19. //எல்லாம் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் தான். :-)//

    அலோ...
    இது அடியேன் + எங்க ஆண்டாள் அக்கா பதிப்புரிமை!
    சொல்லிட்டேன்! ஆமா! :))

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. அலோ. உங்களுக்கு முன்னாடியே நான் கோதைத் தமிழ் எழுதத் தொடங்கிட்டேன். எனக்கும் முன்னாடி நம்ம நண்பர் இராகவன் எழுதத் தொடங்கிட்டார். அவரு தூத்துக்குடி. நான் மதுரை. எங்க அக்கா தான் கோதை. தருமமிகு (?) சென்னையில இருந்துக்கிட்டு எங்க அக்காவை நீங்களும் அக்கான்னு சொன்னா சரி போகட்டும்ன்னு விடலாம்; ஆனால் பதிப்புரிமைக்கு உரிமை கொண்டாடினா எப்படி? ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுன மாதிரி? :-)

    ReplyDelete
  23. இரவிசங்கர்.

    ததா, பபு இரண்டிற்கும் எனக்குப் பொருள் தெரியும். றறோ என்றால் என்ன என்று தெரியாது. :-)

    சௌராஷ்ட்ரத்தில் ததா (dhadhaa) என்றால் அண்ணா, பபு (babu) என்றால் தம்பி. அம்புட்டுத் தான்.

    ReplyDelete
  24. உங்ககிட்டேர்ந்து நான் இன்னும் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  25. நட்சத்திர வாழ்த்துகள்.

    பல்சுவையில், நகைச்சுவையும் சேர்த்து (இ.கொ.வை வழிமொழிந்து) கொல்ல்ல்..கொள்ளுமாறு கேட்டுக் கொல்கிறேன்.

    ReplyDelete
  26. இப்படி மொட்டையா சொன்னா எப்படி சிபி? என்ன என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று சொன்னால் தானே இந்த வாரத்தில் இல்லாவிட்டாலும் வருங்காலத்திலாவது எழுத முடியும்? :-)

    ReplyDelete
  27. நகைச்சுவைக்கு ஒரு மீள்பதிவு போட்டுவிட்டேன் கெக்கேபிக்குணி அக்கா. 'வெண்மதி வெண்மதியே நில்லு...' இடுகையைப் பாருங்கள். 'கொல்'லுன்னு சிரிக்கிறீங்களா 'கொல்'லுன்னு கொல்ல வர்றீங்களான்னு பார்ப்போம். :-)

    வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  28. அன்பின் குமரன்,

    வரப் போகிற பதிவுக்ளின் முன்னோட்டம் அருமை. பின்னூட்டமாக வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  29. அன்பின் குமரன்,

    வரப் போகிற பதிவுக்ளின் முன்னோட்டம் அருமை. பின்னூட்டமாக வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  30. வாழ்த்துகளுக்கு நன்றிகள் சீனா ஐயா.

    ReplyDelete