'மாம்ஸ். இந்தப் பாட்டைக் கேட்டியா?'
'எந்தப் பாட்டு ராம்ஸ்?'
'அதான். வெண்மதி வெண்மதியே நில்லு. நீ வானமா மேகத்துக்கா சொல்லு. வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்'
'அருமையாப் பாடறே. நானும் இந்தப் பாட்டு கேட்டுருக்கேன். நல்ல பாட்டு தான்'.
'என்ன நல்ல பாட்டுன்னு சொல்லி நிறுத்திக்கிட்டே. அருமையான பாட்டு இது'
'சரி. அருமையான பாட்டு தான். ஒத்துக்கறேன். ஏன் அருமையான பாட்டுன்னு சொல்றியா?'
'பாட்டோட அர்த்தத்தைப் பாரு. அந்த வரிகளோட அர்த்தம் தெரிஞ்சா இது எவ்வளவு அருமையான பாட்டுன்னு ஒத்துக்குவே'
'அப்டியா. சரி. வரிகளோட பொருளைச் சொல்லு. கேட்டுக்கறேன்'.
'ஒரு காதலன் காதலிக்கிட்ட சொல்ற மாதிரி இந்தப் பாட்டு வருது மாம்ஸ். அந்தப் பொண்ணை ரெண்டு பேரு காதலிக்கிறாங்க. இவனுக்கு அவ யாரைக் காதலிக்கிறான்னு தெரியல. அதான் அந்தப் பொண்ணை வெண்மதின்னு சொல்லி நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லுன்னு கேக்கறான். தன்னை மேகம்ன்னும் அடுத்தவனை வானம்ன்னும் சொல்றான்'.
'சரி. அப்புறம்'.
'நீ அவனைத் தான் காதலிக்கப் போற; என்னை இல்லைன்னா பரவாயில்லை. அத நான் பொறுத்துக்குவேன் அப்படின்னு சொல்றான்'.
'அப்படியா சொல்றான். எனக்கு அப்படி தோணலையே.'
'பின்ன வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் அப்படின்னா என்ன அர்த்தம்?'
'எனக்குத் தெரிஞ்ச மாதிரி பொருள் சொல்றேன் ராம்ஸ். கோவிச்சுக்கக் கூடாது'.
'கோவிச்சுக்க மாட்டேன். சொல்லு மாம்ஸ்.'
'தன்னை மேகம்ன்னும் அடுத்தவனை வானம்ன்னும் பொண்ணை நிலவுன்னும் சொல்றது தான். இந்தப் பாட்டை எழுதுன கவிஞர் ஒரு உட்பொருள் வச்சிருக்கார். நாம இங்க இருந்து பார்த்தா வானத்துல இருக்கிற வெண்மதியை மேகம் மூடுற மாதிரி தெரியுது இல்லையா?'
'ஆமாம்.'
'ஆனா உண்மையிலேயே மேகம் நம்ம பூமிக்கு மேல இருக்கிற காற்று மண்டலத்துல இருக்கு. மதி ரொம்ப தூரத்துல இருக்கு. வானம் என்கிறதோ இல்லவே இல்லை. அது அகண்ட வெட்ட வெளி. அதனால நிலா வானத்தைத் தான் பிடிக்கும்ன்னு சொன்னாலும் மேகத்துக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஏன்னா வானம் தான் உண்மையிலேயே இல்லையே. இல்லாத ஒரு பொருளை பிடிச்சாலும் அதை அடைய முடியாது இல்லியா. அது போல நீ அவனை விரும்பினாலும் எனக்குத் தான் சொந்தம்ன்னு சொல்றான்.'
'பரவாயில்லையே. இந்த அர்த்தம் நல்லாத் தான் இருக்கு'.
'அப்டியா. இதுக்கும் மேல ஒரு பொருளும் கவிஞர் வச்சிருக்கார்'
'என்ன பொருள் அது?'
'அந்தக் காதலனுக்கும் தெரியாத ஒரு பொருளை மறைமுகமா கவிஞர் இந்தப் பாட்டுல வச்சிருக்கார். வானம் உண்மையில் வெட்டவெளிதான். அதனால் வானத்துக்கு வெண்மதி சொந்தமாக முடியாது. ஆனால் மேகமும் பூமியைச் சுற்றியுருக்கும் காற்று மண்டலத்தை விட்டு வெளியே இருக்க முடியாது. அதனாலும் நிலவை அடைய முடியாது. அதனால் அந்தப் பெண் இந்தக் காதலனுக்கும் கிடைக்க மாட்டாள் என்பதைத் தான் உட்பொருளா வச்சிருக்கார் கவிஞர்.'
'ஐயோ. மாம்ஸ். ஓவரா அர்த்தம் சொல்றியே. ரொம்ப எளிமையா இருக்கிற இந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல்ல ஒன்கிட்ட வந்தேனே. என்னைச் சொல்லணும்'.
'ஏன் ராம்ஸ்? இந்தப் பொருளுக்கு என்ன குறை?'
'என்ன குறை? ஒரு குறையும் இல்லை. அந்தப் பாட்டைப் பாடுன கவிஞரே இந்த அர்த்தத்தை யோசிச்சிருப்பாரோ இல்லையோ. நீ என்னடான்னா வெளிப்படையாத் தெரியுற அர்த்தத்தை விட்டுட்டு ஏதேதோ சொல்லிக்கிட்டுப் போற?'
'ராம்ஸ். நீ தமிழ்மணம் பாக்குறதில்லைன்னு நெனைக்கிறேன். அதுல குமரன்னு ஒருத்தர் பாட்டுக்கெல்லாம் பொருள் சொல்லிக்கிட்டு இருக்கார். அவர் எழுதுறதைப் படிச்சு படிச்சுத்தான் இந்த மாதிரி எல்லாம் தோண ஆரம்பிச்சிருச்சு.'
'ஐயோ. நல்லவேளை சொன்ன. நான் ஜன்மத்துக்கும் அவர் எழுதுறதப் படிக்க மாட்டேனே. பைத்தியம் புடிச்சிரும்'
வெட்டிப்பயல் பாலாஜி, கவிநயா அக்கா இவர்களின் ஆலோசனைப்படி இடப்படும் முதல் இடுகை - இது சென்ற முறை தமிழ்மணம் விண்மீனாக இருந்த போது எழுதிய இடுகைகளில் ஒன்று.
ReplyDeleteஇன்னும் வரும். :-)
//'ஐயோ. நல்லவேளை சொன்ன. நான் ஜன்மத்துக்கும் அவர் எழுதுறதப் படிக்க மாட்டேனே. பைத்தியம் புடிச்சிரும்'//
ReplyDeleteநான் அந்த ராம்ஸைப் பாத்து உடனே கைகுலுக்கணும்! :)
கும்ஸ்,
ReplyDeleteபாட்டை எழுதின கவிஞருக்கே தெரியாத மேட்டர் எல்லாம் தெரிஞ்சா நீர் ஒரு பிநவியாதி. ச்சீ, பின்நவீனத்துவவாதி! ஆனா என்ன வெறும் பொருளை மட்டும் பல அடுக்குகளில் சொல்லாம அதன் பின் இருக்கும் நுண்ணரசியலையும் சொல்லணும். அதுவும் பண்ணிடுங்க.
பிநவா கும்ஸ் வாழ்க வாழ்க!! :))
அதெப்படி மொத பின்னூட்டம் உங்களுது? அதுவும் விண்மீன் வாரத்துல?
ReplyDeleteபி.க எல்லாம் விண்மீன் பண்ணலாமா?
- ஜிரா (எ) கோ.இராகவன்
தேவுடா! இது நூக்கே பாக உந்தியா?
சூப்பரு! :) இல்லாத பொருளை காதலிக்கு பிடிக்குமோ பிடிக்காதோ, ஆனா பாட்டுல (பகிரங்கமா) சொல்லாத பொருளை நீங்க நல்லாவே 'கண்டு' பிடிக்கிறீங்க. நல்லாருங்கப்பு!
ReplyDeleteநீங்க இந்த வேகத்துல எழுதினா, நான் ஓப்பீஸ்க்கு ஜூட் விட்டாதான் படிக்க முடியும் போலருக்கே :(
ReplyDelete////'ஆனா உண்மையிலேயே மேகம் நம்ம பூமிக்கு மேல இருக்கிற காற்று மண்டலத்துல இருக்கு. மதி ரொம்ப தூரத்துல இருக்கு. வானம் என்கிறதோ இல்லவே இல்லை. அது அகண்ட வெட்ட வெளி. அதனால நிலா வானத்தைத் தான் பிடிக்கும்ன்னு சொன்னாலும் மேகத்துக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஏன்னா வானம் தான் உண்மையிலேயே இல்லையே. இல்லாத ஒரு பொருளை பிடிச்சாலும் அதை அடைய முடியாது இல்லியா. அது போல நீ அவனை விரும்பினாலும் எனக்குத் தான் சொந்தம்ன்னு சொல்றான்.'////
ReplyDeleteநல்ல சிந்தனை!
வானம் இல்லையென்று சொல்ல முடியாது.
அதற்கு அண்டவெளி, ஆகாயம், வான வெளி என்று பல
பெயர்கள் உண்டு.
பஞ்சபூதங்களில் அதுவும் ஒன்று
அல்லவா நண்பரே?
இரவி. ராம்ஸைப் பாக்கணும்ன்னா நீங்க மினியாபொலிஸுக்கு வரணும். எங்க வீட்டுல தான் அவர் இருக்கார். ஆனா நானில்லை. :-)
ReplyDeleteகொத்ஸ். எனக்கு பொருள் மட்டுமே பல அடுக்குகள்ல சொல்லத் தெரியும். நுண்ணரசியலைச் சொல்றது எல்லாம் உங்க பொறுப்பு. :-)
ReplyDeleteஇராகவனுடைய பின்னூட்டம் அவருடைய பெயரில் வந்தால் தான் அவருடையது என்று ஏற்றுக் கொள்ளப்படும். போலி இராகவனின் பின்னூட்டம் அனுமதிக்கப்பட்டது. ஆனால் மதிக்கப்படவில்லை. :-)
ReplyDelete:)))))
ReplyDeleteஅட.இந்த விளக்கம் சூப்பரா இருக்கே! ;-)
ReplyDelete//வானம் உண்மையில் வெட்டவெளிதான். அதனால் வானத்துக்கு வெண்மதி சொந்தமாக முடியாது. ஆனால் மேகமும் பூமியைச் சுற்றியுருக்கும் காற்று மண்டலத்தை விட்டு வெளியே இருக்க முடியாது. அதனாலும் நிலவை அடைய முடியாது. அதனால் அந்தப் பெண் இந்தக் காதலனுக்கும் கிடைக்க மாட்டாள் என்பதைத் தான் உட்பொருளா வச்சிருக்கார் கவிஞர்.//
ReplyDelete.. அடேங்கப்பா எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...நல்லா இருக்கு
நல்லா பொருள் கண்டுபிடிக்கிறோமா? நன்றி அக்கா. :-)
ReplyDeleteநேரம் கிடைக்கிறப்ப படிங்க அக்கா.
நல்ல சிந்தனை என்று பாராட்டியதற்கு நன்றிகள் வாத்தியார் ஐயா.
ReplyDeleteஐம்பூதங்களில் ஆகாயமும் ஒன்று தான். அதற்குப் பெயர்களும் உண்டு தான். ஆனால் ஒன்றுமில்லாத ஆனால் எல்லாப் பொருள்களும் அதில் நிலவுகின்ற ஒன்றே தானே வானம். அதனால் தானே வேதங்கள் இறைவனைப் பற்றிக் குறிக்கும் போது ஆகாயமே பிரம்மம் என்கிறது. ஏதுவுமில்லாதவன்; அதே நேரத்தில் எல்லாமும் ஆனவன்; எல்லாவற்றையும் தன்னுள் கொண்டவன்.
ஆகாயமும் இறைவனைப் போல் உண்டு எனலாம்; இல்லை எனலாம். இரண்டுமே ஒவ்வொரு விதத்தில் சரி. :-)
சிரிப்பான்களுக்கு நன்றி ஜெகதீசன். :-)
ReplyDeleteபாராட்டுகளுக்கு நன்றி மை ஃபிரண்ட். உங்களுக்குப் பிடித்த நடிகரை எனக்கும் பிடிக்கும். :-)
ReplyDeleteநல்லா இருந்துச்சு. எனக்கு ராம்ஸ் சொன்ன அர்த்தந்தான் தெரியும். உங்களோட அர்த்தம் ரொம்ப நல்லா இருந்துச்சு.இது போல நிறைய எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஇதே மாதிரி நானும் ஒரு பாட்டுக்கு மொக்கையா அர்த்தம் போட்டிருக்கேன்.பாத்து உங்க கருத்தை சொல்லுங்க.
http://thoughts-sprinkler.blogspot.com/2008/08/blog-post_03.html
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete\\
//'ஐயோ. நல்லவேளை சொன்ன. நான் ஜன்மத்துக்கும் அவர் எழுதுறதப் படிக்க மாட்டேனே. பைத்தியம் புடிச்சிரும்'//
நான் அந்த ராம்ஸைப் பாத்து உடனே கைகுலுக்கணும்! :)
\\
ரிப்பீட்டு..:)
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஇராகவனுடைய பின்னூட்டம் அவருடைய பெயரில் வந்தால் தான் அவருடையது என்று ஏற்றுக் கொள்ளப்படும்//
கண்ணன், இராமன் உருவத்தில் வந்தாலும் ஆரத்தி உண்டு! இராகவன் உருவத்தில் வந்தாலும் ஆரத்தி உண்டு!
இதற்கு தேரின் கொடியே சாட்சி!
இதைக் குமரன் அறிவதே மாட்சி! :))
//போலி இராகவனின் பின்னூட்டம் அனுமதிக்கப்பட்டது. ஆனால் மதிக்கப்படவில்லை. :-)//
ReplyDeleteமதிப்பார் மதிப்பும், மிதிப்பார் மிதிப்பும் போகட்டும் இராகவனுக்கே! :))
பாராட்டிற்கு நன்றிகள் ப்ரசன்னா.
ReplyDeleteஉங்கள் இடுகையை வந்து பார்க்கிறேன் ஆனந்த் குமார்.
ReplyDeleteஇது போல நிறைய எழுதவா? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வராதா? இதுவே மீள்பதிவு தான். முயல்கிறேன். ஆனால் உறுதி தர இயலாது. :-)
சிரிப்பானுக்கு நன்றி தமிழன் தம்பி
ReplyDelete//இதற்கு தேரின் கொடியே சாட்சி! //
ReplyDeleteஇது புரியலையே இரவிசங்கர்?
அன்பின் குமரன்,
ReplyDeleteஇது ஏறகனவே எழுதிய பதிவின் மீள்பதிவா ? இது நன்றாகத்தானே இருக்கிறது - வழக்கம் போல் பலப்பல விளக்க்கங்கள் - ஏன் மொக்கை என்ற குறிச்சொல் ?
நல்ல பதிவினிற்கு நல்வாழ்த்துகள்
வாழ்த்துகளுக்கு நன்றிகள் சீனா ஐயா.
ReplyDeleteசும்மா தன்னிகழ்ச்சியாக எழுதியதால் 'மொக்கை' என்று போட்டேன். :-)
I was all smiles on reading this post. :-)
ReplyDelete:-)))
ReplyDelete