Sunday, August 17, 2008

*நட்சத்திரம்* - இராம.கி. ஐயா, டோண்டு ஐயா, துளசியக்கா, சிந்தாநதி வரிசையில் நானா?


உண்மையாவா? சும்மா விளையாடாதீங்க. உண்மையே தானா? அட போங்க நீங்க வேற. இன்னும் எம்புட்டு பேரு காத்திருக்காங்க. ஏற்கனவே நான் ஒரு தடவை இந்த விளையாட்டை விளையாடியாச்சு. காத்திருக்கிறவங்கள்ல ஒருத்தரைக் கூப்புட்டு ஆடவிடுங்க. என்ன சொல்றீங்க? நான் விளையாடுனதை நீங்க பாக்கலையா? அதனால நான் இன்னொருக்கா ஆடுனா உங்களுக்கு ஒப்புதல் தானா? சரியா போச்சு போங்க. இப்படி சொன்னா வந்த வாய்ப்பை விடுவேனா? விடறதுக்கு நான் என்ன மடையனா?

உங்களுக்கு ஒப்புதல்னா எனக்கும் ஒப்புதல் தானுங்க. என்னங்க இது நீங்களும் இதையே சொல்றீங்க? நான் சொன்னதையே நீங்களும் திருப்பி சொன்னா எப்படி? அட நிறுத்துங்க. நாம இதையே திருப்பித் திருப்பி சொல்லிக்கிட்டு இருந்தா முடிவே இருக்காது. கடைசியா என் முறை இப்ப. கேட்டுக்கோங்க. உங்களுக்கு ஒப்புதல்னா எனக்கும் ஒப்புதல் தான். இந்த வாரம் தமிழ்மணம் விண்மீனா நான் இருந்துக்கிறேங்க.

***

ஆமாங்க ஐயா. அவிங்ககிட்ட இப்படி ஒத்துக்கிட்டு தாங்க இப்ப இந்த விளையாட்டை ஆட வந்திருக்கேன். முந்தி ஒருக்கா 2006 ஜனவரில ஆடறப்ப நீங்க தந்த ஆதரவை இந்த வாரத்துலையும் தரணும்ன்னு வேண்டிக்கிறேங்க. இதுக்கு முன்னாடி இந்த ஆட்டத்தை ரெண்டு தடவை ஆடுன பெரிய மனுசங்க இருக்காங்கன்னு தெரியும். அதான் அவிங்க யாருன்னு பாத்து அந்தப் பட்டியலைத் தலைப்புல போட்டிருக்கேங்க. இவிங்க நாலு பேரு ரெண்டாவது ஆட்டம் படம் பாத்திருக்காங்கன்னு தெரியும். அஞ்சாவதா எனக்கு இந்த வாய்ப்பு வந்திருக்குன்னு நினைக்கிறேன். நான் அஞ்சாவதா ஆறாவதா ஏழாவதா எட்டாவதான்னு நீங்க தான் சொல்லணும். என்ன சொல்றீங்க? நான் கல்லூரி எல்லாம் படிச்சி முடிச்சுட்டு தான் இங்கன குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்னு நினைச்சீங்களா. அட ஆமாங்க. அது உண்மை தான். நல்ல படிப்பு எல்லாம் படிச்சு முடிச்சாச்சு. இப்ப எதுக்கு இந்த ஐயம் உங்களுக்கு? ஓ. அஞ்சாப்பு, ஆறாப்பு, ஏழாப்புன்னு எல்லாம் சொன்னேனா? சரியான ஆளுங்க நீங்க. நான் எப்ப அஞ்சாப்பு, ஆறாப்புன்னு சொன்னேன்? இந்த வாய்ப்பு கிடைச்சவங்கள்ல நான் அஞ்சாவதா ஆறாவது ஆளான்னு கேட்டேங்க. ஏங்க இப்படி குழப்புறீங்க?

இப்படி எல்லாம் குழப்புறதுக்குன்னே எனக்கு நண்பர்கள் சில பேரு இருக்காங்க. அவிங்ககிட்ட சொல்லிவிட்டிருவேன். அவிங்க உங்களை எல்லாம் நல்லா கொழப்பி விட்டிருவாங்க. அப்புறம் கீழ்ப்பாக்கம், குணசீலம்ன்னு அலைய வேண்டியதா போயிரும். என்ன நீங்க அதுக்கும் தயாரா? அப்படி போடுங்க அருவாளை. அப்ப உங்களை விடறதா இல்லை.

போனவாட்டி கேட்ட மாதிரியே இந்த வாட்டியும் தமிழ்மணத்துக்காரங்க அறிமுகம் வேணும்ன்னு கேட்டாங்க. அவங்க கேட்டாங்களேன்னு நானும் கிறுக்கோ கிறுக்குன்னு கிறுக்கித் தள்ளி ஒரு அறிமுகத்தை அனுப்பியிருக்கேன். போனவாட்டி கிறுக்குப் பயலாட்டம் என்னாத்தைக் கிறுக்கியிருக்கேன்னு நிறைய பேருக்குப் புரியலைன்னு சொன்னதுனால ஒரு நண்பர்கிட்ட விளக்கத்தைச் சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டேன். அவரும் விளக்கோ விளக்குன்னு விளக்கித் தள்ளிப்புட்டாரு. தனியா இல்லை. மயிலாருன்னு ஒரு கூட்டாளியோட சேந்துக்கிட்டு. இந்த வாட்டி எங்க வூட்டுல இன்னொரு ஆளு கூடியிருக்காருன்னு நானும் கூடுதலா ஒரு நாலு வரி எழுதிச் சேத்திருக்கேன். அந்த இராகவப் பெருந்தகைக்கிட்டேயே அதுக்கும் விளக்கம் சொல்லுங்கன்னு கேட்டுக்கிறேன். மயிலாரைக் காணோம் அதனால விளக்கம் சொல்லமுடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. நீங்க கொஞ்சம் சொல்லுங்க. நீங்க சொன்னா அவரு கேட்டுக்கிருவாரு.

நான்மாடக் கூடலாம்
மதுரையம்பதியினில்
நாயகனின் திருவருளினால்
நானன்று தோன்றினேன்
நலமுடைக் குமரனெனும்
நல்லபெயர் தனை அருளினான்!

அகவையோ மூவாறுப்
பதினெட்டு; அழகுடைய
அகமுடையாள் மனைமாட்சியாம்!
மகிழ்ச்சியுறத் தேசு பெறும்
மகளுடையேன் மனைமுழுதும்
மன்னன் மகள் அவளாட்சியாம்!

விளையாட்டுத் தோழனாய்
வீட்டிலே அக்கைக்கு
விளைந்தானே மைந்தனவனே!
தளை நீக்கி அடியாரைத்
தான் தாங்கிக் காப்பாற்றும்
சிவகுமரன் சேந்தனவனே!

வாழ்வதுவோ அமேரிக்க
மினசோட்டா மாகாணம்;
வாழ்க தமிழ்! வாழ்க தமிழே!
வாழ்வுபெற நானும் வந்தேன்
தமிழ்மணத்தின் விண்மீனாய்
வாழ்த்திடுவீர்! வாழ்த்துவீரே!


இப்ப போயிட்டு வர்றேங்க. கொஞ்ச நேரத்துக்கப்புறமா பாக்கலாம்.

128 comments:

  1. நட்சத்திர வாழ்த்துக்கள் அ.உ.ஆ.சூ குமரன்!!!
    வாழ்க! வாழ்க!

    ReplyDelete
  2. அதென்ன நானா?
    நீங்களே தான்!
    நீங்களே தான்!
    நீங்களே தான்!

    இரண்டாம் நட்சத்திர வாழ்த்துக்கள்!

    ஆன்மீக விடி-வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று! :))

    ReplyDelete
  3. //விடறதுக்கு நான் என்ன மடையனா?//

    ஆமாம்! :)

    ReplyDelete
  4. அருள் வெள்ளமும்,
    தமிழ் வெல்லமும்
    "மடை" திறந்த வெள்ளமெனப் பாய்ச்சும்,
    "மடை"-உடையன்
    எங்கள் குமரன்
    வாழ்க! வாழ்க!!

    ReplyDelete
  5. //"*நட்சத்திரம்* - இராம.கி. ஐயா, டோண்டு ஐயா, துளசியக்கா, சிந்தாநதி வரிசையில் நானா?"//





    உ - நீங்க உ!
    உலக நாயகன் கமலஹாசன்! ஆன்மீக
    உலக நாயகன் குமர ஈசன்!

    ReplyDelete
  6. //அப்புறம் கீழ்ப்பாக்கம், குணசீலம்ன்னு அலைய வேண்டியதா போயிரும்.//

    சிவ ஸ்தலமான திங்களூரை இந்த லிஸ்ட்டில் வேண்டுமென்றே இருட்டடிப்பு செஞ்சிருக்கீங்க! :-)

    உங்கள் வைணவப் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டுது! பூனைக்குட்டி மட்டுமா? எலிக்குட்டி, மான்குட்டி, கன்னுக்குட்டி எல்லாக் குட்டியும் வெளியே வந்து விட்டுது!

    ReplyDelete
  7. //அப்படி போடுங்க அருவாளை//

    எச்சூஸ் மீ!
    உங்க ஊரு மருதையா? :))

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மீண்டும் மீண்டும் நட்சத்திரம் !

    வாழ்த்துகள் குமரன் !

    ReplyDelete
  10. //போனவாட்டி கிறுக்குப் பயலாட்டம் என்னாத்தைக் கிறுக்கியிருக்கேன்னு நிறைய பேருக்குப் புரியலைன்னு சொன்னதுனால ஒரு நண்பர்கிட்ட விளக்கத்தைச் சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டேன்//

    இப்பவும் கேளுங்க!
    இந்தாங்க கிறுக்குக் கவி continues...
    :))

    வாழ்த்துவோம் வாழ்த்துவோம்
    வானமுது படைத்திடும்
    கூடலை வாழ்த்துவோமே!
    ஊட்டுவோம் ஊட்டுவோம்
    பின்னூட்டம் ஊட்டுவோம்
    கூடல்மீன் மின்னுதாமே!

    முதல்முறை விண்மீன்
    ஒளிர்ந்திட்ட போதிலே
    தேசுப்பெண் ஆடிவந்தாள்!
    இம்முறை விண்மீன்
    ஒளிர்ந்திடும் போதிலே
    சேந்தனும் ஓடிவந்தான்!

    வாழிநீர் செந்தூர்
    வேலவன் வேட்கையில்
    வாழிசெந் தமிழ்ப்பதிவே!
    ஆழிநீர் அறிதுயில்
    ஆயனின் அருளினால்
    வான்தமிழ் வாழியவே!

    இனிய இரண்டாம் விண்மீன் வாழ்த்துக்கள் குமரன்! :)

    ReplyDelete
  11. அடுத்த பதிவு எப்போ குமரன்?

    ReplyDelete
  12. //கோவி.கண்ணன் said...
    மீண்டும் மீண்டும் நட்சத்திரம்!//

    கோவி அண்ணா, அடுத்து நீங்களா? :)

    ReplyDelete
  13. யாரடா மாட்டிவைக்கலாம்னு யோசிக்கிட்டே இருந்தேன். ம்ம்ம்ம்ம் மாட்டிக்கினீங்க ஸ்டார் சார். :)

    எனது சமூகத்தின் ஒரு கோரப்பக்கம் என்ற பதிவில்

    இப்படி சொல்லியிருக்காங்க
    ============
    நானறிந்தவரையில், வேறு எந்தமதமும் சமமின்மையை வலியுறுத்திச்செல்லவில்லை. வேறு எந்த மதமும், பிறப்பால் ஒரு கூட்டத்தாரை உயர்ந்தவர்களென்றும், இன்னொரு கூட்டத்தாரை தாழ்ந்தவர்களென்றும் சொல்லுவதை காணமுடியவில்லை
    =============

    நான் கேட்டுக்கரது என்னான்னா, நீங்க, இந்த ஸ்டார் வாரத்தில்,'இந்து மதம் - சில விளக்கங்கள்' ங்கரமாதிரி எதையாவது போட்டு, புரியாதவங்களுக்கு புரியவைக்கோணும் :)

    ReplyDelete
  14. குமரன் ஐயாவுக்கு நட்சத்திர வார வாழ்த்து(க்)கள்!.

    ReplyDelete
  15. வாழ்த்துகள் குமரன்!

    ReplyDelete
  16. //இந்த ஆட்டத்தை ரெண்டு தடவை ஆடுன பெரிய மனுசங்க இருக்காங்கன்னு தெரியும்//

    என்ன சொல்ல வாரீக, குமரன்?
    நீங்க "பெரிய மனுசன்"-ன்னு நாங்க எல்லாரும் சொல்லணுமா? என்ன கொடுமை கோவி அண்ணா!

    ஒரு வேளை இந்த அப்பாவிச் சிறுவன்,
    மெளலி, கோவியை எல்லாம் அண்ணான்னு கூப்பிட்டு
    உங்களை மட்டும் பேர் இட்டுக் "குமரன்"-ன்னு கூப்புடறேன்!

    அதானே "டேய் கேஆரெஸ்ஸூ, நான் பெரிய மனுசன்-டா" ன்னு சொல்ல வந்தீங்க? OMG! நீங்களுமா குமரன் அண்ணா? :)))))))))))

    ReplyDelete
  17. வாருமையா வாரும்.

    அக்காவுக்கேத்த தம்பிதான்னு இன்னொரு முறையும் நிரூபிக்கவேணும்தானே?

    பட்டையைக் கிளப்புங்க.

    கமான்..... ஸ்டார்ட்....ம்யூஸிக்:-)))

    ReplyDelete
  18. //நான் அஞ்சாவதா ஆறாவதா ஏழாவதா எட்டாவதான்னு நீங்க தான் சொல்லணும்//

    கோவி அண்ணா
    ஆன்சர் திஸ் கொஸ்டின் ப்ளீஸ்! :)

    ReplyDelete
  19. //துளசி கோபால் said...
    பட்டையைக் கிளப்புங்க.//

    ஏன் டீச்சர்? ஓசி பட்டை வாங்குறீங்க?
    இன்னிக்கி உங்க வீட்டுல பிரியாணியா? :)

    எனக்கு ரெண்டு ப்ளேட் வித் பொடிசா நறுக்கின வெங்காயப் பச்சடி பார்சேல் ப்ளீஸ்!

    ReplyDelete
  20. //இந்த ஸ்டார் வாரத்தில்,'இந்து மதம் - சில விளக்கங்கள்' ங்கரமாதிரி எதையாவது போட்டு, புரியாதவங்களுக்கு புரியவைக்கோணும் :)//

    என்ன சர்வேசரே
    இன்று உமக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா? :)))

    ReplyDelete
  21. என்னப்பா இது?
    வேர் இஸ் தி கும்மி?

    இவரைச் சீக்கிரம் 40+ ஆக்கி, வலப்பக்க முகப்பில் இருந்து தூக்குங்கப்பு! :)

    ReplyDelete
  22. //மயிலாரைக் காணோம்//

    மயிலார் இப்போது அடியேனுடன் ஏகாந்தமா பேசிக்கிட்டு இருக்காரு!
    மேலும் நாளைய கந்தர் அலங்காரத்தில் மயிலார் ரொம்பவே பிசி! - டோண்ட் டிஸ்டர்ப் மயிலார்! :))

    ReplyDelete
  23. //இப்ப போயிட்டு வர்றேங்க. கொஞ்ச நேரத்துக்கப்புறமா பாக்கலாம்//

    சொன்ன சொல் காப்பாத்துங்க குமரன்!
    கொஞ்ச நேரத்துக்கப்புறமா பாக்கலாம்-ன்னு சொல்லிட்டு வரலீன்னா எப்படி?
    ஒரு நட்சத்திரம்-னா நியாயம், பொறுப்பு வேணாம்?

    வாங்க சீக்கிரம்!

    ReplyDelete
  24. //தமிழ் பிரியன் said...
    குமரன் ஐயாவுக்கு//

    ஓ...குமரனை இப்படி ஐயா-ன்னு தான் கூப்புடுணுமோ!
    இப்போ புரியிது! குமரனுக்கு...ச்சே குமரன் ஐயாவுக்கு என் மேல ஏன் கோபம்-னு! :)

    //வாழ்த்து(க்)கள்!//

    தமிழ்ப்பிரியன்
    நீங்க டீச்சர் வகுப்பிலே தானே படிச்சிஃபையிங்? :))

    ReplyDelete
  25. நட்சத்திர வாழ்த்துக்கள் குமரன்!!
    :)

    ReplyDelete
  26. பாஸ்டன் பாலா வும் இருமுறை நட்சத்திரமாகி இருக்கிறார் என்று நினைக்கிறேன் !

    //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கோவி.கண்ணன் said...
    மீண்டும் மீண்டும் நட்சத்திரம்!//

    கோவி அண்ணா, அடுத்து நீங்களா? :)

    August 17, 2008 11:22 PM
    //

    இல்லை, ஆனால் சென்ற ஆண்டின் இதே வாரத்தில் தான் எனது நட்சத்திர இடுகைகள் வந்தன. நான் எழுதினால் என்ன குமரன் எழுதினால் என்ன ? எல்லாம் ஒண்ணு தானே !
    :)

    ReplyDelete
  27. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //இந்த ஆட்டத்தை ரெண்டு தடவை ஆடுன பெரிய மனுசங்க இருக்காங்கன்னு தெரியும்//

    என்ன சொல்ல வாரீக, குமரன்?
    நீங்க "பெரிய மனுசன்"-ன்னு நாங்க எல்லாரும் சொல்லணுமா? என்ன கொடுமை கோவி அண்ணா!
    //

    நான் வரலை நீங்க சொல்லும் ஆட்டத்துக்கு. குமரன் மதுரை (பழமுதிர்சோலை) குமரானாகவே இருக்கட்டும், நான் எதாவது சொல்லப் போய் சக்தியிடம் வேல்வாங்கி, திருச்செந்தூர் குமரனாகிவிடப் போகிறார். :)

    ReplyDelete
  28. குமரன்,

    நட்சத்திரம் என்றால் மின்னத்தானே வேணும். நீங்களும் அப்படித்தான். இரண்டாவது, மூன்றாவது என மின்னிக்கொண்டேயிருங்கள் என வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  29. //கோவி.கண்ணன் said...
    நான் எதாவது சொல்லப் போய் சக்தியிடம் வேல்வாங்கி, திருச்செந்தூர் குமரனாகிவிடப் போகிறார். :)//

    அப்போ...நீங்க மயிலாக மாற விருப்பம் இல்லை-ன்னு சொல்றீங்க!
    உங்க பூனைக்குட்டியும், எலிக்குட்டியும் கூட வெளியே வந்து விட்டது பாத்தீங்களா? :))

    ReplyDelete
  30. //நான் எழுதினால் என்ன குமரன் எழுதினால் என்ன? எல்லாம் ஒண்ணு தானே !:)//

    ஹா ஹா ஹா!
    சும்மா கற்பனை பண்ணிப் பாத்தேன்!

    கோவி கண்ணன் பாசுரப் பொருளும் அபிராமி அந்தாதியும் பாட,
    குமரன் கீமாயணம், பாமாயணம் எழுத...

    தூங்கப் போறேன்! இன்னிக்கி என் கனவுல என்ன வரப் போவுதோ தெரியலையே! :)))

    ReplyDelete
  31. நட்சத்திர வாழ்த்துக்கள் குமரன்..:)


    அடுத்த ஒரு வாரம் என்னன்ன பதிவுகளை எதிர்பார்க்கலாம் அப்படின்னும் ஒரு டிரைலர் குடுங்களேன்?. :)

    ReplyDelete
  32. KRS கொஞ்சம் தள்ளி நின்னுக்குங்க; நானும் வாழ்த்திக்கிறேன்.

    ரெண்டாவது தடவை நட்சத்திரம் ஆனதுக்காக பெசல் ...

    வாவாழ்ழ்த்த்துதுக்க்ககள்ள்!!

    ReplyDelete
  33. நட்சத்திரமாக ஜொலிக்க உள்ள நண்பர் குமரனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. மனம் கனிந்த வாழ்த்துகள் குமரன்..ஆமா கேஆர் எஸ் என்ன இவ்வளோ பின்னூட்டம் போட்டு.....:):) யார் இப்போ ஸ்டார்னே தெரில்லப்பா:):)

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் குமரன்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  36. நட்சத்திர வாழ்த்துக்கள் குமரன்.
    ஜாமாயுங்கள்!

    ReplyDelete
  37. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் குமரன் அண்ணா. :))

    ReplyDelete
  38. வாழ்த்துகள் குமரன். உங்களோட முதல் நட்சத்திர வாரத்துக்கும் வாழ்த்துகள் தெரிவித்த ஞாபகம் :-)

    இந்தப் பின்னூட்ட காண்ட்ராக்ட் எல்லாம் அவுட்ஸோர்சிங் முறையில கேஆர்எஸ் அண்ணாவுக்கு கொடுத்திட்டீங்களோ?

    பாருங்க தருமி ஐயாவே எட்டிப் பாக்க வேண்டியிருக்கு. நாங்களும் கொஞ்சம் எட்டியே நின்னுக்குறோம் :-))

    //உங்கள் வைணவப் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டுது! //

    வைணவ குரங்குக் குட்டியும் கருடக் குஞ்சும்தான் வெளிவரும் பெரிய திருவடிகளும், சிறிய திருவடிகளுமாக :-)

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள் அண்ணா!

    ReplyDelete
  40. //வைணவ குரங்குக் குட்டியும் கருடக் குஞ்சும்தான் வெளிவரும் பெரிய திருவடிகளும், சிறிய திருவடிகளுமாக :-)//

    ஸ்ரீதர் அண்ணாச்சி...பிழை திருத்தம்...
    வைணவ குரங்குக் குட்டியும்
    கருடக் குஞ்சும் தான் வெளிவரும்
    சிறிய திருவடிகளும், பெரிய திருவடிகளுமாக! :)

    பூனைக்குட்டியும் வைணவத்தில் உண்டு!
    தாய்ப்பூனை-சேய்ப்பூனை கவ்வும் தத்துவம் உண்டு தானே? :))

    சரணாகத நிலையைக் காட்டி அருளும் பூனைக்குட்டி திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  41. 41

    உங்களை 40+ இல் இருந்து தூக்கியாச்சே!

    முகப்பில் மட்டும் ஜொலிப்பீர்களாக எங்கள் நட்சத்திரமே! :))

    ReplyDelete
  42. இனிய குமரா

    வலையுலகின் குமாரா

    தான் பெற்றதை, படித்ததை கனிவோடு படைக்க விரும்பும் குமாரா..

    நீ அறிந்ததை நான் அறிய வைக்கும் உனது பரந்த மனது அந்தப் பரந்தாமனின் மனது..

    சொல்வதை கருத்தோடு, சுருக்கென்று சொல்லி புத்தியில் ஏற்றுவது உனது அந்தக் குமரனின் மனது..

    படைப்புக்கே சிறப்புத் தந்து பதிப்பிற்கும் வாசகர்களைத் தேடித் தரும் உனது அந்த கலைவாணியின் மனது..

    பசியோடு காத்திருக்கிறோம்.. அமுதோடு வா.. அன்போடு கொடு.. சுவைக்கிறோம்..

    நான்மாடக்கூடலின் நற்றமிழன் குமரன் வாழ்க.. வாழ்கவே..

    ReplyDelete
  43. KRS கொஞ்சம் தள்ளி நின்னுக்குங்க; நானும் வாழ்த்திக்கிறேன்.

    ரெண்டாவது தடவை நட்சத்திரம் ஆனதுக்காக பெசல் ...

    வாவாழ்ழ்த்த்துதுக்க்ககள்ள்!!

    ReplyDelete
  44. /
    ஸ்ரீதர் நாராயணன் said...

    இந்தப் பின்னூட்ட காண்ட்ராக்ட் எல்லாம் அவுட்ஸோர்சிங் முறையில கேஆர்எஸ் அண்ணாவுக்கு கொடுத்திட்டீங்களோ?
    /

    ROTFL
    :))))

    ReplyDelete
  45. வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  46. வாழ்த்துக்கள் குமரன் "ஐயா" (இன்னைக்கு மட்டும் ஐயா சொல்லிக்கிறேனே ப்ளீஸ் :)

    ReplyDelete
  47. வாழ்த்து.
    நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  48. இந்த வாரத்தில் இடுகைகள் மழை பெய்கிறதோ இல்லையோ பின்னூட்ட மழையைப் பெய்ய வைக்க நீங்கள் முடிவெடுத்துவிட்டது தெரிகிறது இரவிசங்கர். ரொம்ப குளிரெடுக்கிறது. :-)

    வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

    //உலக நாயகன் கமலஹாசன்! ஆன்மீக
    உலக நாயகன் குமர ஈசன்!//

    வீட்டுல தானே இருக்கீங்க? ஓட்டல்ல ரூம் போட்டு சிந்திக்கலையே? :-)

    ReplyDelete
  49. சிவத்தலமான திங்களூர் கேள்விபட்டிருக்கேனே இரவிசங்கர். அங்கே தானே எல்லா பக்கமும் திருநாவுக்கரசர் திருநாமமே சொலித்தது?! அங்கே பாம்பு தீண்டிய பாலகனுக்கு உயிர் வந்தது தெரியும். மனநலமும் அங்கே பேணப்படுமா? தெரியாம போச்சே. தெரிஞ்சிருந்தா கட்டாயம் பட்டியல்ல போட்டிருப்பேன்ல.

    ReplyDelete
  50. நன்றிகள் திகழ்மிளிர்

    ReplyDelete
  51. நன்றிகள் கோவி.கண்ணன்

    ReplyDelete
  52. வாழ்த்துக்கவிக்கு நன்றிகள் இரவிசங்கர்.

    ReplyDelete
  53. வாங்க சர்வேசன். இரவிசங்கர் கேட்ட மாதிரி இன்னைக்கு உங்களுக்கு வேற இடம் கிடைக்கலையா? :-)

    இந்தக் கேள்வி வர வேண்டிய இடம் இது இல்லை. நான் அறிந்தது மிகக்குறைவு. அதில் வேறு மதங்களில் இந்த ஏற்றத் தாழ்வு இருக்கிறதா என்று எழுதும் அளவிற்கு எதுவுமே தெரியாது. தெரிந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அங்கே அனுப்புங்கள் உங்கள் கேள்வியை. தகுந்த பதில் மிக மிக விவரமாகக் கிடைக்கும். (ஆளை விடுங்கங்கறதை இம்புட்டு நீளமா சொல்ல வேண்டியிருக்கு பாருங்க).

    ReplyDelete
  54. உங்கள் வாழ்த்து(க்)களுக்கு நன்றி தமிழ்(ப்)பிரியன் ஐயா. :-)

    ReplyDelete
  55. //என்ன சொல்ல வாரீக, குமரன்?
    நீங்க "பெரிய மனுசன்"-ன்னு நாங்க எல்லாரும் சொல்லணுமா? //

    இதுக்குத் தான் கோவி.கண்ணனோட ரொம்ப சேராதீங்கன்னு சொல்லணும். இப்புடி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டா எப்படி? ஏதோ எழுதிக்கிட்டு வர்றப்ப 'அவங்க பெரிய மனுசங்க'ன்னு சொன்னா 'அவங்களை மாதிரி ரெண்டாவதா விண்மீன் ஆனதுனால நானும் பெரிய மனுசங்கறீங்க'. அதுவும் கோவி.கண்ணனை வேற துணைக்குக் கூட்டிக்கிறீங்க?! அவரு பாருங்க. வெவரமான ஆளு. எஸ்ஸாகிட்டாரு. :-)

    பெரிய மனுசங்க எல்லாம் தங்களை பெரிய மனுசன்னு சொல்லிக்க மாட்டாங்கப்பா. அதுக்கு ஏத்தமாதிரி ஒரு குறள் இருக்குமே. எடுத்துவுடுங்க.

    ReplyDelete
  56. வாழ்த்துகள் குமரா! எனக்காக மீள்பதிவுகள் இட்டது மாதிரி எனக்காக மறுபடி நட்சத்திரமாயிட்டீங்க போல! (எல்லாம் ஒரு நெனப்புதேன்! :)

    மீண்டும் வாழ்த்துகள்! கலக்குங்க!

    ReplyDelete
  57. ஆமாங்க துளசி அக்கா. அக்காவுக்கு ஏத்த தம்பியா பிரியாணி போடத் தான் ஆசை. அதுக்குத் தான் பட்டையைத் தேடிக்கிட்டு இருக்கேன். ஆனா முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைபட்ட கதையா போயிரும் போலிருக்கு. :)

    ReplyDelete
  58. இரவிசங்கர். துளசி அக்கா வெங்காயப்பச்சடி அனுப்பிருவாங்க. ஆனா உங்களுக்கு பிரியாணி வாசனையும் வேணுமே. அதுக்கு நீங்க நியூசி போனாத் தான் உண்டு. :-)

    ReplyDelete
  59. வலப்பக்க முகப்புல வருதா என்ன இரவிசங்கர்? நான் பாத்தேன். வரலை.

    நாப்பதுக்கு மேல பின்னூட்டம் போனாலும் இப்ப எல்லாம் முதல்பக்கமே வருதுன்னு நினைக்கிறேன் இரவிசங்கர்.

    ஆனாலும் உங்கள் 'நல்லெண்ணத்துக்கு' நன்றிகள். :-)

    ReplyDelete
  60. ஓ. மயிலாரை நீங்க இழுத்துக்கிட்டு போயிட்டீங்களா இரவிசங்கர்? அதான் இனியது கேட்கின்ல பிப்ரவரிக்கு அப்புறம் எதுவுமே எழுதலை. இது முறையா? நீதியா?

    ReplyDelete
  61. வாழ்த்துகள் கும்ஸ்!

    ReplyDelete
  62. நன்றிகள் ஜெகதீசன்

    ReplyDelete
  63. பாபாவும் ரெண்டும் முறை விண்மீனாக இருந்தார் என்ற தகவலைச் சொன்னதற்கு நன்றிகள் கோவி.கண்ணன்.

    அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா?! நீங்கள் அப்போது எழுதியவை இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. :-)

    ReplyDelete
  64. தங்கள் வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றிகள் டி.பி.ஆர். ஐயா.

    ReplyDelete
  65. //அப்போ...நீங்க மயிலாக மாற விருப்பம் இல்லை-ன்னு சொல்றீங்க!//

    அப்ப உங்களோட உக்காந்துக்கிட்டு கந்தர் அலங்காரம் எழுதிக்கிட்டு இருக்கிற மயிலார் இவரில்லையா? :-)

    ReplyDelete
  66. //ஹா ஹா ஹா!
    சும்மா கற்பனை பண்ணிப் பாத்தேன்!

    கோவி கண்ணன் பாசுரப் பொருளும் அபிராமி அந்தாதியும் பாட,
    குமரன் கீமாயணம், பாமாயணம் எழுத...//

    நானும் இந்தக் கற்பனை பண்ணிப் பார்த்தேன் இரவி. :-)

    ReplyDelete
  67. நன்றிகள் மௌலி. நீங்க கேட்ட மாதிரி முன்னோட்டம் கொடுத்திருக்கேன். நீங்களும் பாத்துட்டீங்கன்னு அங்கே நீங்க போட்ட பின்னூட்டம் சொல்லுது. :-)

    ReplyDelete
  68. இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க தருமி ஐயா. இந்த கேஆரெஸ் போடற சத்தத்துல ஒன்னுமே கேக்க மாட்டேங்குது. :-)

    வாவாழ்ழ்த்த்துதுக்க்ககளுக்கு நன்றிகள் ஐயா. :-)

    ReplyDelete
  69. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பர் ஜமாலன்.

    ReplyDelete
  70. ஷைலஜா அக்கா. வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

    என்றென்றைக்கும் ஆன்மிக உலகின் முடிசூடா மன்னன் ஆன்மிக சுப்ரீம் ஸ்டார் இரவிசங்கர் தான். :-)

    ReplyDelete
  71. நன்றிகள் சிந்தாநதி.

    ReplyDelete
  72. குமரன், இரண்டாவது முறையா? அசத்துங்க, ஓரத்தில அமர்ந்து நானும் பார்த்துக்கிறேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  73. வாழ்த்துகள்...

    நீங்க முதல் முறை நட்சத்திரமா இருக்கும் போது நான் வலையுலகத்துல இல்லை. அதனால அப்ப எழுதனதுல உங்களுக்கு பிடிச்ச ஒன்றை மறுபதிப்பு செய்ய இயலுமா?

    ReplyDelete
  74. பாலாஜி. அப்படி பார்த்தா அப்ப எழுதுனது எல்லாத்தையும் மறு பதிவு செய்யணுமே. :-) பின்னூட்டங்களோட. :-)

    ReplyDelete
  75. வாழ்த்துக்கள் குமரம், ஒரு சூப்பரான வாரம் தாருங்க. உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கின்றேன்.

    ReplyDelete
  76. மிக்க நன்றி வாத்தியார் ஐயா.

    ReplyDelete
  77. அம்பி. நீங்க பேரை வேணும்னா அம்பின்னு சொல்லிக்கலாம். அதனால மத்தவங்க எல்லாரும் அண்ணா ஆகிட முடியுங்களா? :-)

    வணக்கங்களுடன் கூடிய வாழ்த்துகளுக்கு வணங்கி நன்றிகள் சொல்லிக் கொள்கிறேன். :-)

    ReplyDelete
  78. நட்சத்திர வாழ்த்துக்கள் ததா... :)

    ReplyDelete
  79. நன்றிகள் ஸ்ரீதர் நாராயணன். அப்பவே நீங்க பதிவெல்லாம் படிச்சுகிட்டு இருந்தீங்களா? எனக்கு நினைவில்லை.

    தினமும் ஒரு இடுகை போடறது பெரிசுல்லை. நம்ம வழக்கப்படி வர்ற பின்னூட்டத்துக்கெல்லாம் பதில் மரியாதை செஞ்சாத் தான் நல்லா இருக்கும். அதுக்குத் தான் ராத்திரி பகலா உழைக்கணும்ன்னு இரவிசங்கர்கிட்ட சொன்னேன். அதான் இப்படி பழி வாங்குறார் போல. :-)

    //வைணவ குரங்குக் குட்டியும் கருடக் குஞ்சும்தான் வெளிவரும் பெரிய திருவடிகளும், சிறிய திருவடிகளுமாக :-)//

    அருமையா சொல்லியிருக்கீங்க. ஆனா கொஞ்சம் முறை மாறிப் போச்சு. சிறிய திருவடி தான் குரங்குக்குட்டி; பெரிய திருவடி கருடக் குஞ்சு.

    ReplyDelete
  80. நன்றிகள் சிவமுருகன்.

    ReplyDelete
  81. அட. ஸ்ரீதருக்குப் பிழை திருத்தம் நீங்களும் சொல்லிட்டீங்களா இரவி. நான் கவனிக்காம இன்னொரு முறை சொல்லிட்டேன். :-)

    ReplyDelete
  82. உண்மைத் தமிழரே. என்ன என்னமோ சொல்றீங்க. பாதி புரியுது. பாதி புரியலை. பயமாவும் இருக்கு. :-)

    வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  83. சிறப்பு வாழ்த்துகளுக்கு நன்றிகள் மங்களூர் சிவா. அடுத்த இடுகையிலும் வந்து வாழ்த்துகள் சொல்லியிருக்கீங்க. ரெண்டு தடவை விண்மீன் ஆனா ரெண்டு வாழ்த்துகள் சொல்லுவீங்களோ? :-)

    உங்க வழக்கம் போல ரிப்பீட்ட்டே போடாம தனியா வாழ்த்துனதுக்கு இன்னொரு தடவை நன்றிகள் சொல்லிக்கிறேன். :-)

    ReplyDelete
  84. வாழ்த்துக்கள் குமரன்!

    ReplyDelete
  85. நன்றிகள் இராகவ் ஐயா. அடியேனுக்கு அடியேன். ஐயாவுக்கு ஐயா. அது தானே சரியான பதில் மரியாதை. :-)

    ReplyDelete
  86. நன்றி வசந்தன்.

    நீங்கள் 'வாழ்த்து' என்று ஒருமையில் நிறுத்திக்கொண்டதற்கு ஏதேனும் காரணம் உண்டா? நன்றிகள் என்று சொல்வது பிழை என்று முன்பொரு முறை நீங்கள் எழுதிப் படித்ததாக நினைவு. அதே போல் வாழ்த்துகள் என்று சொல்வதும் தவறு என்று நினைப்பதால் இப்படி எழுதினீர்களா? இயன்ற போது விளக்குங்கள்.

    ReplyDelete
  87. வாங்க கவிநயா அக்கா. எங்கடா மொதோ ஆளா வர்றவங்களை இன்னும் காணோமேன்னு பாத்துக்கிட்டு இருந்தேன். வெட்டிப்பயல் பாலாஜி சொன்ன மாதிரி பழைய நட்சத்திர இடுகைகளையும் மீள்பதிவு செஞ்சுட்டா போச்சு. என்ன சொல்றீங்க? :-)

    ReplyDelete
  88. நன்றிகள் கொத்ஸ்.

    ReplyDelete
  89. எதுக்கு ஓரத்துல போயி உக்காந்துகிறீங்க. நல்லா நடுவுல வந்து உக்காந்துக்கோங்க தெகா. கொஞ்சம் முயற்சி செஞ்சா நான் எழுதுறதையும் படிக்க முடியும். முயற்சி செஞ்சு பாருங்க. :-)

    வாழ்த்துகளுக்கு நன்றிகள் தெகா.

    ReplyDelete
  90. வாழ்த்துகளுக்கு நன்றி பாலாஜி. நீங்க சொன்ன மாதிரி ஏதாவது தேறுனா மறு பதிவு செய்கிறேன். :-)

    ReplyDelete
  91. மிக்க நன்றி கைலாஷி. ஐயா.

    ReplyDelete
  92. வாழ்த்துகளுக்கு நன்றிகள் இராம் பபு.

    ReplyDelete
  93. நன்றிகள் ஓகை ஐயா.

    ReplyDelete
  94. //வாழ்த்துகளுக்கு நன்றிகள் இராம் பபு//

    என்னாது இது?
    ததா
    பபு
    றறோ
    ன்னுக்கிட்டு!

    பரிபாஷை எல்லாம் ஸ்டார் வீக்-ல இன்னோரு தபா வெளக்குங்க!
    ராயலு, ராமு, என்னாய்யா இது? :)

    ReplyDelete
  95. // வெட்டிப்பயல் said...
    நீங்க முதல் முறை நட்சத்திரமா இருக்கும் போது நான் வலையுலகத்துல இல்லை. அதனால அப்ப எழுதனதுல உங்களுக்கு பிடிச்ச ஒன்றை மறுபதிப்பு செய்ய இயலுமா?//

    எங்க பாலாஜி கேட்டத ஒடனே நிறைவேத்துங்க குமரன்.
    இல்லீன்னா அடுத்த டெவில் ஷோ நட்சத்திரத்துக்குத் தான்!

    ReplyDelete
  96. //வெட்டிப்பயல் said...
    அதனால அப்ப எழுதனதுல உங்களுக்கு பிடிச்ச ஒன்றை மறுபதிப்பு செய்ய இயலுமா?//

    பழைய நட்சத்திர வாரத்துல எதுனா மீள் பதிவு இருந்துச்சா?
    அப்படீன்னா ஒரு மீள்-மீள் பதிவு போடுங்க குமரன்! :)

    பிகு:
    தம்பி எட்டடி பாஞ்சா, அண்ணன் பதினாறடி பாய்வான்! :)

    ReplyDelete
  97. போன பின்னூட்டத்துல சொன்னது பிகு! நாட் பிக!

    இந்தப் பின்னூட்டம் பிக தான்! :)
    கொத்தனார் தெருவடிகளே சரணம்! :))

    ReplyDelete
  98. 100

    ஏடு கொண்டல வாடா
    வேங்கட ரமணா
    கோவிந்தா கோவிந்தா!
    :))

    ReplyDelete
  99. 101

    இது நட்சத்திர வார மொய்ப் பணம்! :))

    ReplyDelete
  100. 102

    புள்ளையாரப்பா!
    கைத்தல நிறை பின்னூட்டம்!
    அப்பமொடு அவல் பதிவு!
    கப்பிய குமரன் அடி பேணி! :)))

    ReplyDelete
  101. 103

    எங்க முருகன் as usual கொஞ்சம் லேட்டு, அழகரைப் போலவே! :)

    குமர வேல் முருகனுக்கு அரோகரா! :))

    ReplyDelete
  102. வாழ்த்துகள் க்க்மரன். ஈரண்டாம் தடவை என்ன இன்னும் ஒரு பத்ஹினைந்து தடவையாவது நீங்கள் நட்சத்திரமாக இருந்தாலும் உங்களுக்கு அப்பவும் தானம் கொடுக்க விஷயம் இருக்கும்.விசயமோ,விடயமோ????

    ReplyDelete
  103. வாழ்த்துக்கள் இந்த வார நட்சத்திரம் திரு குமரன் அவர்களே!

    தொடரட்டும் உங்கள் பணி!
    அன்பில் என்றும்
    சிங்.செயகுமார்

    ReplyDelete
  104. வாழ்த்துக்கள் இந்த வார நட்சத்திரம் திரு குமரன் அவர்களே!

    தொடரட்டும் உங்கள் பணி!
    அன்பில் என்றும்
    சிங்.செயகுமார்

    ReplyDelete
  105. //இல்லீன்னா அடுத்த டெவில் ஷோ நட்சத்திரத்துக்குத் தான்!
    //

    அட இது கூட நல்லா இருக்கே. எனக்காக பாலாஜிகிட்ட சிபாரிசு பண்ணுங்க இரவி. :-)

    நான் அவரு கோரிக்கையை நிறைவேத்துனாலும் அவர் டெவில் ஷோ ந்டத்தலாம். அவரு நடத்துனா நல்லா இருக்கும். :-)

    ReplyDelete
  106. இரவி,

    போனவாட்டி எந்த மீள்பதிவும் போடலை. அப்பத் தானே எழுத வந்த புதுசு. அப்புறம் எப்படி மீள்பதிவு போடறது. பழம்பெரும் பதிவர் ஆன பின்னாடி தான் மீள் பதிவெல்லாம். ஆனா சில இடுகையெல்லாம் மீள்-மீள் பதிவா போடத் தகுதியுள்ளவை தான். பாக்குறேன். இந்த வாரம் இல்லாட்டியும் வருங்காலத்துலயாவது. :-)

    தம்பியும் அண்ணனும் எப்படியாவது பாய்ஞ்சுக்கோங்க. எம் மேல பாயாத வரைக்கும் எனக்கு கவலையில்லை. :-)

    ReplyDelete
  107. ஏழுமலையானே
    வேங்கடரமணா
    கோவிந்தா கோவிந்தா

    கோவிந்த நமமூஸ் குள்ளெ பொள்ளோ
    கள்ளி கவகா யெமுட் அவ்னா முல்லோ

    gOvindha namamUs gulle pollO
    kalli khavagaa yemud avnaa mullO

    கோவிந்த நாமமே இனிய பழம்
    எடுத்துச் சாப்பிடுங்கள் யமன் வருவதற்குள்

    ReplyDelete
  108. மொய்ப் பணத்திற்கு நன்றி இரவிசங்கர். அவனைச் செய்யச் சொல்லு; நான் செய்யறேன்னு சொல்லாம மொய் எழுதுனதுக்கும் ரொம்ப நன்றி. :-)

    ReplyDelete
  109. புள்ளையாரப்பா....

    கற்றிடும் அடியவர்
    புத்தியில் உறைந்திடும்
    இரவிசங்கர் என வினை கடிதேகும்...

    ReplyDelete
  110. இரவிசங்கரேஸ்வரனுக்கு அரோகரா.

    ReplyDelete
  111. தாமதமான வாழ்த்துகள் குமரன், இப்போ தான் பார்த்தேன், உங்க மெயிலை! மனமார்ந்த நல்வாழ்த்துகள், உங்கள் பதிவுகளால் தமிழ் மணம் மேலும் மெருகூட்டப் படும்.

    ReplyDelete
  112. ஆதவனுக்கு நட்சத்திரம் என்று ஒரு பெயர் உண்டு, நீங்கள் என்றுமே சூரிய நட்சத்திரம்.

    வாழ்த்துக்கள் குமரன்அண்ணா!

    தம்பி

    ReplyDelete
  113. மீண்டும் நட்சத்திர வாழ்த்துக்கள் குமரன்!

    ReplyDelete
  114. தங்களுடைய அன்பான சொற்களுக்கு நன்றிகள் வல்லியம்மா. தொடர்ந்து நீங்கள் தந்துவரும் ஊக்கத்திற்கும் நன்றி. அடியேன் சிறிய ஞானத்தன்.

    ReplyDelete
  115. சிங். ஜெயகுமார். எங்கே போய்விட்டீர்கள்? ஆளைக் காணவில்லையே?

    இரண்டு முறை இங்கும் ஒரு முறை மின்னஞ்சலிலும் சொன்ன வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  116. வாங்க கீதாம்மா. என்னடா இன்னும் மின்னஞ்சல் பாக்கலையோ கீதாம்மான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். :-)

    வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  117. தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு தம்பி Srinivasan.

    அன்பாக அண்ணா என்று அழைத்துத் தம்பி என்று கையொப்பம் இடுகிறீர்கள் - ஆனால் யார் என்று தெரியவில்லையே?!

    ReplyDelete
  118. மீண்டும் நன்றிகள் சிபி. :-)

    ReplyDelete
  119. வாழ்த்துக்கள் அண்ணன்...:)

    ReplyDelete
  120. முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தம்பி தமிழன். :-)

    ReplyDelete
  121. ///இந்தக் கேள்வி வர வேண்டிய இடம் இது இல்லை. நான் அறிந்தது மிகக்குறைவு. அதில் வேறு மதங்களில் இந்த ஏற்றத் தாழ்வு இருக்கிறதா என்று எழுதும் அளவிற்கு எதுவுமே தெரியாது./////

    என்ன கொடுமைங்க இது? நான் எங்க ஏற்றத்தாழ்வெல்லாம் எழுதச் சொன்னேன்? அதுவும் மற்ற மதத்தைப் பத்தீ?

    நான் சொன்னது, இந்து மதம்னா இன்னா, மெய்யாவே இந்து மதத்தின் கொள்கைகள் என்னா, அதை பின்பற்றும் மக்களை அது என்ன செய்யச் சொல்கிறது, எதை செய்ய வேண்டாம் என்று சொல்கிறது, இந்த மாதிரி high-levelஆ உங்களுக்கு தெரிஞ்சத சொல்வீங்கன்னு கேட்டேன்.

    நாராயண நாராயண!

    ReplyDelete
  122. //நானறிந்தவரையில், வேறு எந்தமதமும் சமமின்மையை வலியுறுத்திச்செல்லவில்லை. வேறு எந்த மதமும், பிறப்பால் ஒரு கூட்டத்தாரை உயர்ந்தவர்களென்றும், இன்னொரு கூட்டத்தாரை தாழ்ந்தவர்களென்றும் சொல்லுவதை காணமுடியவில்லை
    //

    சர்வேசரே.

    இந்தப் பகுதி தான் உங்கள் பின்னூட்டத்தில் என் கவனத்தை அதிகம் பெற்றுவிட்டது போலும். நீங்க இதைச் சொல்லிட்டு என்ன எழுதச் சொன்னீங்கன்னு இப்ப பாத்தேன். இந்து மதத்தைப் பத்தித் தான் எழுதச் சொல்லியிருக்கீங்க. ஆனா அதையும் மறுக்க வேண்டிய நிலைமை. மன்னிச்சுக்கோங்க. அந்தத் தலைப்பில் எழுதுவதற்குத் தேவையான பரந்த படித்தும் அறிவும் இல்லை. :-)

    ReplyDelete
  123. //இராம.கி
    ☆சிந்தாநதி
    மயிலாடுதுறைசிவா
    ராம்கி
    துளசிகோபால்
    BostonBala
    dondu(#11168674346665545885)
    மு.மயூரன்//

    இருமுறை நட்சத்திராமாய் மின்னியவர்கள்! உம்மோடு நவகிரகம் ஆனது என எதிர்காலம் சொல்லட்டும்.

    ReplyDelete
  124. அன்பின் குமரன்,

    இரண்டாவது முறையாக தமிழ்மண நட்சத்திரப் பதிவராக - பல பெரியவர்களின் வரிசையில் ஒன்பதாகச் சேரும் தங்களுக்கு எங்களின் மனமுவந்த பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்.

    குமரன், 125 மறுமொழிகளுக்குப் பிறகு, நடசத்திர வாரம் முடியும் தறுவாயில் வந்து மறுமொழி இடுகிறேன். கொஞ்சம் வேலை அதிகம். இப்பக்கம் வர இயலவில்லை.

    மற்ற பதிவுகளையும் படித்து விடுகிறேன்.

    மனம் மகிழ்கிறது

    ReplyDelete
  125. தகவலுக்கு நன்றிகள் சிவமுருகன்.

    ReplyDelete
  126. மிக்க நன்றி சீனா ஐயா.

    ReplyDelete