வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் இரவிசங்கரா!
எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கில்லையோ என்று இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப்பிரானைப் போல் தோன்றிய இரவிசங்கரா இங்கும் இனி இரணியர்கள் இல்லாமல் போகும்படி செய்வாய்!
சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தா? இல்லையே?! அது போல் எங்கள் கண்ணபிரான் இரவிசங்கரின் பெருமையும் ஆராயும் நிலையில் இல்லை. நல்லோரும் அல்லோரும் உள்ளோரும் இல்லோரும் வல்லோரும் வறியவரும் எல்லோரும் அறிவாரே எங்கள் அண்ணலின் பெருமையை!
எம்பெருமான் ஈசன் எழிலார் திருவேங்கடவன் திருவருளால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவாய் இரவிசங்கரா! இன்று போல் என்றும் வாழ்க!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இரவிசங்கர்!
இங்கும் ஒருதரம் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்...
ReplyDeleteபாசமிகு தம்பி, பழகுவதற்கு இனியவர் கண்ணபிரான் ரவிசங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !
ReplyDelete//இங்கும் ஒருதரம் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்...//
ReplyDeleteநானும் :-) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரவி.
படங்கள் புதிதாக இருக்கின்றன... அவர் என்ன சிகரெட் பிடிக்கிறாராமாமா? :-))
//இங்கும் ஒருதரம் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்...//
ReplyDeleteநானும் :)
"தம்மேரே தம்" ஆக்கிட்டீங்களா குமரன்? :))
ReplyDeleteCigarette Posing is injurious to blog-ன்னு டிஸ்கி எல்லாம் போட மாட்டீங்களா? :)
கூடலில் பிறந்த நாளுக்கென்றே தனிப் பதிவா? இதுகாறும் அடியேன் அறியாதது! :)
ReplyDeleteஅன்புக்கு நன்றி-ன்னு சொல்ல முடியாது!
அதுனால, என்றும் வேண்டும் இன்ப அன்பு-ன்னு மட்டும் சொல்லிக்கிறேன்!
மெளலி அண்ணா, கோவி அண்ணா, கவி அக்கா, ஸ்ரீதர் அண்ணாச்சி - dankeees :)
சொல்ல மறந்துட்டேனே...
ReplyDeleteகவிதை நல்லா இருந்துச்சு குமரன்! :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் KRS அவர்களே.
ReplyDeleteஅங்கயற்கண்ணி அருள் பொழியட்டும் தங்களுக்கும் தங்கள் டும்பத்திற்க்கும்.
அட இந்த தம்மரதம் போஸ் இங்க இருக்கா இவ்வளோ நாளா பாக்கவே இல்ல! விராலிமலை போனப்போ வாங்கினதா கே ஆர் எஸ்ஸு:):)
ReplyDeleteகுமரன் ! உங்க அருமை நண்பர்மேல் எழுதி உள்ள பிறந்த நாள்
பாடல்களுக்கில்லை ஈடு! அசத்தல்!
நன்றி கைலாஷி ஐயா!
ReplyDeleteஷைலுக்கா
விராலைமலை-ல முருகனுக்குத் தான் தம் அலவுட்!
கண்ணன் என்னை கண்ணை நோண்டிருவாங்க வீட்டுல! :))
இதெல்லாம் அப்பப்ப அப்படி அப்படி ஒரு சீன் போடறது தான்! :))
//கூடலில் பிறந்த நாளுக்கென்றே தனிப் பதிவா? இதுகாறும் அடியேன் அறியாதது!//
ReplyDeleteஅடியேனும் அறியாதது இரவிசங்கர். எப்படி வந்தது? ஏன் வந்தது? ஒன்றும் புரியவில்லை. :-)
//கவிதை நல்லா இருந்துச்சு குமரன்! :)//
ReplyDelete//குமரன் ! உங்க அருமை நண்பர்மேல் எழுதி உள்ள பிறந்த நாள்
பாடல்களுக்கில்லை ஈடு! அசத்தல்!
//
நன்றி இரவிசங்கர் & ஷைலஜா அக்கா.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Pirantha Naal Valthukkal in Tamil
ReplyDelete